Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நெஞ்சுக்கு நீ அழகு..!
நெஞ்சுக்கு நீ அழகு..!
நெஞ்சுக்கு நீ அழகு..!
Ebook91 pages32 minutes

நெஞ்சுக்கு நீ அழகு..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போதும்மா! இந்த பெண் பார்க்கற கூத்தெல்லாம் போதும். உனக்கு எத்தனை முறை சொல்றது? அவங்க வந்து பொண்ணோட அப்பா எங்கே? எதுக்கு பிரிஞ்சி வாழறீங்க? அப்படி இப்படின்னு கேட்டுட்டு கடைசியா குடும்பம் சரியில்லைன்னு, பொண்ணு வேண்டாம்னு போறாங்க. எனக்கு எவ்வளவு அவமானமாயிருக்கு தெரியுமா? அப்படியே கூனி குறுகிப் போயிடறேன். எத்தனை பேர்? கிட்டத்தட்ட பத்து பேர் பார்த்துட்டு வேண்டாம்னு போய்ட்டாங்க. ஒரு பொண்ணுக்கு அழகு, அறிவு, படிப்பு, உத்யோகம் இதெல்லாம் மட்டும் கல்யாணத்துக்கான தகுதிகள் இல்லைம்மா! பெற்றோர்கள் இருக்கணும். சரியா இருக்கணும். வாழ்க்கையைத் தொலைச்சுட்டு மூலைக்கு ஒருத்தரா நிக்கற தாய் தந்தையோட குழந்தைகளோட வாழ்க்கையும் இப்படித்தான் கேள்விக்குறியா இருக்கும்... உன் பொண்ணு எல்லாத்திலேயும் முதல்ல வரணும்னு என்னை வளர்த்தே. நானும் எல்லாத்திலயும் முதல்லதான் வந்தேன். ஆனா... கல்யாண விஷயத்துல மட்டும் ரொம்ப பின் தங்கியிருந்தேன். எல்லாத்துக்கும் யார் காரணம்? நீதாம்மா! நீ அப்பாவை விட்டுப் பிரிஞ்சு வந்ததுதான் காரணம்."
 மேகலா பள்ளியிலிருந்து பர்மிஷன் போட்டுவிட்டு வந்து பதற்றத்துடன் கத்தினாள்.
 மல்லிகா மனம் சுருங்கினாள். மறுநிமிடமே அவளும் மகளின் நிலைக்கு மாறினாள்.
 "சும்மா நடந்ததையே பேசிப் புண்ணியம் இல்லை. எப்பவோ நடந்ததை இப்போ கிண்டிக் கிளறிப் பார்க்கக் கூடாது. பொண்ணு பார்க்க வர்றவங்க இப்படி ஏதாவது பேசத்தான் செய்வாங்க. அதுக்காக மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின கதையா கல்யாணமே வேண்டாம்ன்னா என்ன அர்த்தம்? நம்ம குடும்ப சூழ்நிலை தெரிஞ்சு சம்மதம் சொல்றவங்களோட சம்மதம் கலந்துக்கிட்டா போச்சு. உலகம் பலவிதமானது மேகலா. அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்கறதில்லைங்கற மாதிரிதான் மனிதர்களும். உயர்வான மனிதர்களும்மத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறவங்களும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்யறாங்க மேகலா. வர்றவங்க அந்த மாதிரி இருப்பாங்கன்னு நம்புவோமே!"
 "இப்படி நம்பி நம்பித்தான் இத்தனை நாளும் அலங்காரம் பண்ணிக்கிட்டு நின்னேன்."
 "மேகலா, ஆத்திரப்படாதே. இந்தத் தடவை அப்படி எதுவும் ஆகாது. தரகர்கிட்டே மாப்பிள்ளை வீட்டுக்காரங்கக்கிட்டே எல்லாத்தையும் சொல்லி அழைச்சுட்டு வரச் சொல்லியிருக்கேன்."
 "இதப்பாரும்மா! இந்த ஒரு தடவைதான் நான் பெண் பார்க்க வர்றவங்க முன்னாடி நிப்பேன். இந்த இடமும் அமையலைன்னா இந்த வீட்டுக்கு அதுக்குப் பிறகு யாரும் பெண் பார்க்கன்னு வரக்கூடாது. காலம் பூரா நான் இப்படியே கன்னியாவே வாழ்ந்திடறேன்." மேகலா கோபமாகக் கத்த மல்லிகா மகளைப் பாவமாகப் பார்த்தாள்.
 "ஏம்மா இப்படி அபசகுனமா பேசறே? எல்லாம் நல்லபடியாவே நடக்கும். கோபப்படாம போய் குளிச்சுட்டு பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்கிட்டு வா" என்றாள்... மேகலா அம்மாவை முறைத்தபடியே கொடியில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
 மல்லிகா சமையலறைக்குள் சென்றாள். மனக்குழப்பத்தோடு சமைப்பது பிடிபடாத செயலாக இருந்தது. ஆனாலும் வருகின்ற மாப்பிள்ளை வீட்டாருக்கு எதுவும் செய்யாமல் இருக்கமுடியுமா?
 இனிப்பும் காரமுமாகச் செய்து வைத்தாள். நெய் மணம் வீட்டையே கமகமக்க வைத்தது.
 மேகலா குளித்துவிட்டு வந்து ஆடம்பரமாக இல்லாத புடவையாக தேடிக் கட்டிக் கொண்டாள். சந்தன நிறத்தில் மெல்லிய ஜரிகை போட்ட புடவை. பட்டுப்புடவை இல்லை. சாதாரண புடவைதான். அவள் பட்டுப்புடவை கட்டாதது மல்லிகாவிற்கு என்னவோ போலிருந்தது. நகையும் அதிகமாகப் போட்டுக் கொள்ளவில்லை. கட்டி வைத்த மல்லிகைச் சரத்தைக் கூட தலைநிறைய சூடிக்கொள்ளவில்லை. பெயருக்கு கொஞ்சமாக வைத்துக் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றுவிட்டாள். புடவையை மாற்று, அதிகமாக நகையை மாட்டிக் கொள் என்று சொன்னால் கேட்க மாட்டாள். அதனால் மல்லிகா எதுவும் சொல்லவில்லை. சொன்ன நேரத்திற்குச் சற்று முன்னதாக மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223116370
நெஞ்சுக்கு நீ அழகு..!

Read more from R.Sumathi

Related to நெஞ்சுக்கு நீ அழகு..!

Related ebooks

Related categories

Reviews for நெஞ்சுக்கு நீ அழகு..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நெஞ்சுக்கு நீ அழகு..! - R.Sumathi

    1

    மேகலா கண்ணாடி எதிரே நின்றிருந்தாள். கண்ணாடியில் அழகு கோலமிட்டது. ஒரு அழகின் அழகைப் பதித்துக் கொண்ட பெருமையில் கண்ணாடி இன்னும் பள பளத்தது.

    அவளுடைய அழகில் கண்ணாடியே பெருமை கொண்டது. ஆனால் அந்த அழகிற்குரியவள் அந்த அழகிற்காகப் பெருமைப்படவோ நின்று நிதானமாக ரசிக்கவோ இல்லை.

    ஒரு அவசரம் அவளிடம் இருந்தது. அந்த அவசரம் அவளுடைய புடவைக் கொசுவத்திலேயே தெரிந்தது. கொசுவத்தைச் சொருகியவள் சட்டென்று மாராப்பை சரி செய்து கொண்டு கண்ணாடியில் ஒரு வினாடி ஒரே வினாடி தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டவள் திரும்பினாள்.

    அம்மா மல்லிகா சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள். கையில் எவர்சில்வர் டிபன் பாக்ஸ்.

    மேகலா... சாம்பார் சாதமும் பாகற்காய் கறியும் வச்சிருக்கேன்.

    சரி... சரி... கொடு பிடுங்காத குறையாக அந்த டிபன் பாக்ஸை வாங்கி தன் ஹேண்ட் பேகை எடுத்து அதனுள் திணித்தாள்.

    மேகலா... ஏன் இப்படி பரபரப்பா கிளம்பறே. நிதானமா போனா என்ன?

    சொன்ன அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள்.

    அம்மா இதெல்லாம் நீ கத்துக் கொடுத்ததுதானே. படிக்கிற காலத்திலேயே சரியான டயத்துக்கு ஸ்கூலுக்கு போகவும் சரியான டயத்துக்கு வீட்டுக்கு வரவும் நீதானே பழக்கினே. அதேதான் இப்பவும் தொடருது. வேலைக்கு பத்து நிமிஷம் முன்னதாகவே போயிடணும்கற உணர்வு இரத்தத்தோட கலந்துடுச்சு. சரி... நான் கிளம்பறேம்மா.

    ஹேண்ட் பேகைத் தோளில் மாட்டிக் கொண்டு வாசலுக்கு செல்ல முயன்றவளை மீண்டும் அம்மாவின் குரல் அழைத்தது.

    மேகலா.

    என்னம்மா?

    வந்து... சாயந்தரம் ஸ்கூல்ல பர்மிஷன் போட்டுட்டு மூணுமணிக்கெல்லாம் வந்துடறியா?

    ஏன்? யாராவது பொண்ணு பார்க்க வர்றாங்களா? முகம் நிறம் மாறக் கேட்டாள் மேகலா.

    ஆமாம் மேகலா.

    வரச் சொல்லிட்டியா?

    இன்னும் சொல்லலை. நீ ஸ்கூல்லேர்ந்து வர்றேன்னு சொல்லாம எப்படிச் சொல்ல முடியும்?

    அப்போ வரவேண்டாம்னு சொல்லிடு.

    மேகலா... என்னம்மா இப்படிச் சொல்றே? பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்றவங்களை எப்படிம்மா வரவேண்டாம்னு சொல்றது.

    வேற வழி இல்லை. சொல்லித்தான் ஆகணும்.

    மேகலா.

    அம்மா, பொண்ணு பார்க்க வர்றவங்க என்னன்ன பேசறாங்கன்னு தெரிஞ்சும் மறுபடி மறுபடி எதுக்கு இந்தப் பெண் பார்க்கும் கூத்தெல்லாம்? வெட்டிச் செலவு?

    அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமலேயே இருந்துட முடியுமா?

    யார் கண்டா? என்னோட தலையெழுத்து அப்படியிருந்தாக் கூட ஆச்சர்யப்படறதுக்கில்லை.

    மேகலா வெடுக்கென பேசிவிட்டு வாசலுக்கு வந்து செருப்பை மாட்டிக் கொண்டு விடுவிடுவென தெருவில் இறங்கி நடந்தாள்.

    மல்லிகா திகைத்துப் போன முகத்தில் லேசான பயமும் சேர்ந்து படர மகள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

    சில வினாடிகள் மௌனமாக சிலைபோல் நின்றிருந்தவள் அங்கிருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள். மூடிய கண்களுக்குள் கண்ணீர் துளிர்த்துத் ததும்பியது. ஏதேதோ எண்ணங்கள் அவளைச் சூழ்ந்ததில் மண்டை நரம்புகள் வெடிப்பதைப் போலிருந்தது.

    எதையும் யோசிக்கக்கூடாது என்பதைப் போல் சட்டென்று எழுந்து எண்ணங்களை உதறிக் கொண்டவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

    சாப்பிட நினைத்து தட்டை எடுக்க மறுநிமிடமே சாப்பாடு பிடிக்காமல் தட்டை அதனிடத்திலேயே வைத்துவிட்டு தண்ணீரை முகர்ந்து குடித்தாள்.

    அதேநேரம் தொலைபேசி அழைத்தது.

    சமையலறையை விட்டு வெளியே வந்தாள். தொலைபேசியை எடுத்து காதிற்குக் கொடுத்தாள்.

    ஹலோ...

    அம்மா நான் தரகர் யோகலிங்கம் பேசறேன்.

    சொல்லுங்க.

    அதான்... பொண்ணு பார்க்க வர்றதைப் பத்தி கேட்கத்தான் போன் பண்ணினேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னைக்கு சாயந்தரம் வரட்டுமான்னு கேட்டதுக்கு நீங்க சரியான பதில் சொல்லலை. அதான் உங்களுக்குத் தோதான நாளைச் சொன்னா, அன்னைக்கு வரசொல்லலாம்னுதான்.

    அது... வந்து மல்லிகா என்ன சொல்வதென தடுமாறினாள்.

    சொல்லுங்கம்மா மறுமுனையில் தரகரின் குரல் வற்புறுத்தியது.

    சரி வாங்க என்றாள் தன்னையும் மீறி.

    ரொம்ப சந்தோஷம்மா. எத்தனை மணிக்கு அழைச்சுட்டு வர

    நாலு மணிக்கு மேல அழைச்சுட்டு வாங்க. அப்புறம் எங்களைப் பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லி அழைச்சுட்டு வாங்க. இங்க வந்து அவங்க பாட்டுக்கு ஏதாவது கேட்டு வைப்பாங்க.

    சரிம்மா. நான் எல்லாத்தையும் சொல்லியே அழைச்சுட்டு வர்றேன்.

    தரகர் எதிர்முனையில் தொலைபேசியை வைத்ததும் மல்லிகாவும் தொலைபேசியை வைத்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்.

    மதியம் மணி இரண்டானபோது மேகலா வேலை பார்க்கும் பள்ளிக்குத் தொலைபேசி செய்தாள். தொலைபேசியை எடுத்த யாரோ ஒரு ஆசிரியை காத்திருக்கச் சொல்லிவிட்டு ‘மேகலா... மேகலா டீச்சர்’ என குரல் கொடுப்பது கேட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு மேகலாவின் குரல். ஹலோ... என்றது.

    மேகலா, அம்மா பேசறேன்.

    நினைச்சேன். நீயாத்தான் இருக்கும்னு. என்ன... பர்மிஷன் போட்டுட்டு வரணுமா?

    ஆமா! மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லியிருக்கேன்.

    மறுநிமிடம் எதிர்முனையில் மேகலா டங்கென போனை வைத்தாள். மல்லிகாவிற்கு முகத்தில் அறைந்ததைப் போலிருந்தது.

    2

    Enjoying the preview?
    Page 1 of 1