Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காத்திருப்பேன் கண்ணா
காத்திருப்பேன் கண்ணா
காத்திருப்பேன் கண்ணா
Ebook114 pages41 minutes

காத்திருப்பேன் கண்ணா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த நீண்ட ஒற்றை வரப்பில் ஒரு கையில் புத்தகத்தோடும் இன்னொரு கையில் கேரியரோடும் நடந்து கொண்டிருந்தாள் விசாலி. உச்சி வெயில் சுள்ளென தலையில் அடித்தாலும் வரப்பின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலின் ஈரப்பதத்தால் கால்களில் சூடு தெரியவில்லை. வரப்பு வகிடாக, இருபுறமும் பச்சைக் கூந்தல் அலைபாய வயல் மங்கை கூந்தல் உலர்த்துவதைப் போலிருந்தது, நீண்ட வரப்பில் சூரிய ஒளியில் விசாலி நடந்து வந்தது. வயல் மங்கை நெற்றி சுட்டி போட்டதைப் போலிருந்தது. விசாலியின் கொலுசு ஓசையில்
 வாய்க்காலில் நீந்திய மீன் குஞ்சுகள் துள்ளி அவளை எட்டிப் பார்த்துவிட்டு நிம்மதியாக மறுபடி நீந்தின. காற்றில் வளைந்து நெளிந்த நாணல்கள் அவளுடைய இடையின் வளைவைக் கண்டு வேல் போல் நிலைகுத்தி நின்றன.
 பெற்ற மகளின் கூந்தலை சீவி சிக்கெடுத்து சிங்காரிக்கும் தாயைப்போல் பெண்கள் நிலமகளின் பச்சைக் கூந்தலில் இச்சைக் கொண்டு இடுக்கிடுக்கே வளர்ந்த களைகளை பிடுங்கிக் கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை உழவர்கள் நெசவர்களாகி பச்சை சேலையை நெய்து போட்டிருந்தனர்.
 அந்த வரப்பில் நடப்பது இதமாகயிருந்தது. ஐம்புலன்களும் ஆசை கொண்டு ரசித்தன. மெல்லிய சூடு கலந்த இதமான காற்றும் கண்ணுக்கு பசுமையையும் புத்துணர்வையும் தந்தன அந்த வயலையும் அதனை சீர்படுத்துவதையே முழுமூச்சா! கொண்ட உழவர்களையும் பார்க்கின்ற போது படித்துக் கொண்டிருந்த "கரிசல்" நாவலைக் கண்ணெதிரே பார்ப்பதை போலிருந்தது.
 'என்ன ஒரு புரட்சிகரமான நாவல்? நில உடமையை எதிர்த்துப் போராடும் உழவர்களின் உள்ளக் கொந்தளிப்பை உயிர் வளர்க்கப் போராடும் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே சித்தரித்திருக்கிறார். அடிமைத்தளையைஅறுத்தெறிய அவல வாழ்க்கையிலும் அஞ்சா நெஞ்சம் கொண்ட அந்த உழவர்களை கண்ணெதிரே காண்பதைப் போலிருந்தது.'
 'முதலாளி என்பவனிடம் என்னதான் செல்வ வளம் இருந்தாலும் நிலமங்கையை கருவுற செய்யும் உழைப்பென்னும் ஆண்மை நிறைந்தவன் உழவன்.'
 'உண்மைதான்.'
 அந்தப் பேராண்மை மிக்க உழவர்களை பெருமையோடு பார்த்தாள். உழைத்துக் கருத்து உறுதி கொண்ட அவர்களின் வலிமைவாய்ந்த தேகத்தைக் கண்டாள்.
 ''என்ன புள்ள... மாமனாருக்கு சாப்பாடா?'' ஒருத்தி இடுப்பை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி நிற்பதைப் போல் நின்று கேட்டாள்.
 "ஆமா செல்லக்கா."
 "ஏந்தாயி... நீ இப்படி வெயில்ல வர்றே? கருத்துப் போய்டமாட்டியா? உன் புருஷன் என்ன பண்றார்?''
 ''என்னது புருஷனா? ஊருக்கெல்லாம் பத்திரிக்கை வச்சு உங்களுக்கெல்லாம் விருந்து வச்சு யாருக்கு கழுத்தை நீட்டினேன்? யாரு என்னோட புருஷன்?'' முற்றி காய்ந்த பருத்தியாக வெடித்தாள் விசாலி.
 ''பத்திரிக்கையடிச்சு பந்தல் போட்டு பண்ணினாதான் கல்யாணமா? நீயும் உன் அத்தைமகனும்தான் கல்யாணம் செய்துக்க போறீங்கங்கறதே ஊரறிஞ்ச விஷயமாச்சே. அதை மனசுல வச்சுத்தானே உன் ஆத்தா உன்னைச் சின்னப் புள்ளையிலேயே இங்க கொண்டு வந்துவிட்டுட்டு போச்சு, நீ மகாராணி மாதிரி இருப்பேங்கற நம்பிக்கையில தானே வருஷத்துக்கு ஒருதரம் வந்து பார்த்தா போதும்னு நினைச்சுக்கிட்டிருக்கு.''
 மூக்காயி நீட்டி முழக்கி சொல்லவும் விசாலியின் முகம் சட்டென்று வாடிப் போனது. தலை தரையை நோக்கி தாழ்ந்தது. கண்கள் கலங்கி விழட்டுமா எனக் கேட்டது. காலை நேர நெற்பயிரின் மீது துளிர்த்த பனியாக விழியோர் இமைகளில் முத்து துளி குத்திட்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223372356
காத்திருப்பேன் கண்ணா

Read more from R.Sumathi

Related to காத்திருப்பேன் கண்ணா

Related ebooks

Related categories

Reviews for காத்திருப்பேன் கண்ணா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காத்திருப்பேன் கண்ணா - R.Sumathi

    1

    விசாலி...

    அறை வாசலில் மங்கையர்கரசியின் குரல் கேட்க திரும்பினாள் விசாலி.

    விசாலி... மாமாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர்றியா? என்றாள் அத்தை.

    படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் மீது ஒரு முறை பார்வையைப் பதித்து எடுத்து விசாலி,

    அத்தை... எனக்கு நாளைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு அதுக்காக நான் படிச்சுக்கிட்டிருக்கேன். குமணனை போக சொல்லுங்க என்றாள்.

    அதே நேரம் உள்ளே வந்தான் குமணன். வாட்ட சாட்டமான அத்தைமகன். ஆணழகன் போட்டிக்குத் தகுதி பெற அம்சம் கொண்டவன் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் படலத்தில் இறங்கியிருக்கிறான்.

    அம்மா... பொய் சொல்றாம்மா. டெஸ்ட்டெல்லாம் சும்மா கப்சா. அவ என்ன புத்தகம் படிச்சுக்கிட்டிருக்கான்னு பாரும்மா. கதைப் புத்தகம், கதைப் புத்தகம் படிச்சுக்கிட்டிருக்காம்மா என்று அவளுடைய புத்தகத்தை எடுத்து அம்மாவின் முகத்திற்கெதிரே காட்டினான்.

    ஐய்யோ... என எழுந்து தாவிப் பிடுங்கினாள் விசாலி. அம்மா அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தாள்.

    பொன்னீலனின் கரிசல் அது.

    உனக்கு அது வெறும் கதைப் புத்தகமாத்தான் தெரியும். அது எனக்குப் பாடம். எழுத்தாளர் பொன்னீலனோட நாவல்களையெல்லாம் நான் ஆராய்ச்சி பண்ணப்போறேன். அதுக்காகத்தான் படிச்சுக்கிட்டிருக்கேன் தெரிஞ்சுக்க தனது பெரிய விழிகளில் கோபத்தை நிரப்பி அவனை கொன்று விடுவதைப் போல் பார்த்தாள்.

    இதைக் கேட்டு குமணன் குபீரென சிரித்தான்.

    அம்மா... இப்படி ஒரு கதை விட்டுக்கிட்டு இவ ஊர்ல உள்ள புத்தகத்தையெல்லாம் வாங்கறா... எவ்வளவு காசு வேஸ்ட் பண்றா தெரியுமா? அது மட்டுமா... சும்மா லைப்ரரிக்கு போறேன் லைப்ரரிக்கு போறேன்னு தினமும் வீட்டுக்கு லேட்டா வர்றா. நீ இதையெல்லாம் கொஞ்சமானும் கண்டிக்கறியா? இவ லைப்ரரிக்கு போறாளா இல்லே... யாரையாவது சைட்டடிக்கப் போறாளா?

    யூ... கோபமாக அத்தையின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி அவன் தலையில் அடிப்பதற்காக ஓங்கினாள் விசாலி.

    பாரும்மா... உண்மையைச் சொன்னா எவ்வளவு கோபம் வருது இவளுக்கு.

    ப்ச் என்னடாயிது? எப்பப்பாரு சண்டை. என்னைக்குத் தான் இந்த சண்டை நிக்கப் போகுதோ? அவதான் ஏதோ படிக்கணும்கறாளே! நீ சும்மாதானேயிருக்கே. நீ போய் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வாயேண்டா

    என்னது சும்மாயிருக்கேனா? இங்க ஏதோ பேச்சுக் குரல் கேட்டுதேன்னு என் வேலையை விட்டுட்டு நான் சும்மா எட்டிப்பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். உடனே நான் சும்மாயிருக்கறதா முடிவு பண்ணிடறதா? எனக்கு முக்கியமான வேலையிருக்கு.

    ஆமா! பெரிய வேலை, கிரிக்கெட் பார்ப்பே. அதானே உன் வேலை... அத்தை அவனைப் போகச் சொல்லுங்க.

    அம்மாதாயே பெரிய கும்பிடு ஆளைவிடுங்க. நான் போறேன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான் குமணன்.

    அவன் ஓடுவதைப் பார்த்து கலகலவென சிரித்தாள் அத்தை. விசாலி... அவனைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே! ஒரு வேலை தொடமாட்டான். அவன்கிட்ட எதுக்கு போட்டி போடறே? கிளம்பு. காத்தாடப் போய் கொடுத்துட்டு வா. எப்பவும் இந்த அறைக்குள்ள படிச்சுக்கிட்டேயிருந்தாலும் மூளை மரத்துப் போய்டும். ஒரு மாற்றம் வேணும். அவன் போனா கேரியரை களத்து மேட்ல வச்சுட்டு எவனையாவது பார்க்கப் போய்டுவான். நீ அமைதியா மாமா வர்றவரைக்கும் காத்திருந்து சாப்பாடு போட்டுக் கொடுத்துட்டு வருவே, அதனாலதான் நான் உன்னை அனுப்பறேன் என்று கேரியரை விசாலியின் கைகளில் கொடுத்தாள்.

    அத்தை தன்னை பொறுப்பு மிக்கவள் என்று சொன்னதும் விசாலிக்கு மகிழ்ச்சி முகத்தில் பரவியது.

    மகிழ்ச்சி பரவிய அந்த முகத்தைப் பார்த்து ரசித்தாள் மங்கையர்க்கரசி.

    உரம் போட்டு வளர்த்த பயிரைப்போல் செழுமையாக இருந்தாள். அழகிய விழிகள் ஆயிரம் கவிதைகளை உள்ளடக்கி ஒளிரும் புத்தகம் போலிருந்தது. கார்த்திகை மாத தீப ஒளிக் குழம்பில் உருவானதைப் போல் ஜொலித்த முகம். முத்துப் பதித்த ஜிமிக்கி சிவந்த காதில் ஆடியது. கழுத்தில் நீளமாக போடப்பட்ட மீன் டாலர் வைத்த சங்கிலி. ஒற்றை வளையலை சுமந்து நீண்டிருந்த கைகள். கொல்லைப்புறத்தில் முதன் முதலாக குலைதள்ளிய தென்னையை நினைவூட்டும் தேக அமைப்பு.

    மனதிற்குள் பெருமிதம் பொங்கியது.

    என்ன அத்தை அப்படிப் பார்க்குறீங்க? கொடுங்க. நான் போறேன் என கேரியரை கையில் வாங்கிக் கொண்டு துள்ளி ஓடினாள் விசாலி.

    ம்... கல்யாணம் பண்ணும் வயது. ஆனால் இன்னும் சின்னஞ்சிறுமியைப் போல் அவனிடம் சண்டை போடுகிறாள். அவனுக்கு கழுத்தை நீட்டி குடும்பம் நடத்தும் போதும் இப்படித்தான் சண்டை போடுவாளோ... என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் மங்கையர்க்கரசி.

    என்ன நினைத்தாளோ சட்டென்று மகனுடைய அறையினுள் நுழைந்தாள்.

    குமணன் இரு கைகளையும் தாடையில் தாங்கி டிவி திரையில் ஐக்கியமாகியிருந்தான்.

    அம்மாவைக் கண்டதும், என்னம்மா... அவளை அனுப்பிட்டியா? நீ அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதம்மா. அப்பறம் அவ உன்னையே ஏய்ச்சிடுவா? என்று சிரித்தான்.

    ‘‘போதுண்டா உன்னோட அறிவுரை. அவ முன்னாடி உன்னைத் திட்டக்கூடாதேன்னுதான் கம்முன்னு இருந்தேன் நீ அவள் கிட்ட சதா வம்பு பண்ணிக்கிட்டிருக்கே. அவளைத்தான் நாளைக்கி நீ கட்டிக்கப் போறே, ஞாபகம் வச்சுக்க, இப்படி சின்ன பையன்மாதிரி நடந்துக்கிட்டா தாலி கட்டின பிறகும் அவ உன்னை மதிக்கமாட்டா. தெரிஞ்சுக்க.

    என்னது? நான் இவளைக் கட்டிக்கப் போறேனா? இந்தப் பிசாசையா? கடவுளே நான் ஒழிஞ்சேன். இவளைக் கட்டிக்கிட்டு எவன் குடும்பம் நடத்துவான்?

    ஏன்டா... அவளுக்கு என்னடா குறைச்சல்?

    எதுவும் குறைச்சல் இல்லை, எல்லாம் அதிகமாத்தான் இருக்கு. திமிரு. அகம்பாவம், கொழுப்பு, வாய் இப்படி எல்லாமே அவளுக்கு அதிகம்தான்.

    மங்கையர்க்கரசி சிரித்தாள்.

    "உனக்கு எப்பவும் விளையாட்டுதான். வயசு வந்த பொண்ணை இப்படி உச்சி நேரத்துக்கு வெளியில் அனுப்பறது தப்புடா. வீட்ல நீ இருக்கும்போது அவளை அனுப்பலாமா?

    ஏன்... பேய் பிசாசு ஏதாவது அவளைப் பிடிச்சுக்குமா?

    அப்படி ஏதாவது ஒண்ணு அவளைப் பிடிக்கும்னு நினைச்சு பயப்படாதேம்மா. அவளே ஒரு பேய், அவளை எந்தப் பேய் பிடிக்கும்?

    விளையாடாதேடா பேய் பிசாசைப் பத்தியா நான் பயப்படறேன். தோப்பு துரவைத்தாண்டிப் போறா. ஆள்வேற கண்ணுக்கு லெட்சணமாயிருக்கா. எவனாவது ஏதாவது பண்ணிட்டா வருமா?

    "அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1