Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மங்கல இசை
மங்கல இசை
மங்கல இசை
Ebook106 pages37 minutes

மங்கல இசை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காத்திருத்தல்!
 காதலைப் பொறுத்தவரை சுகம்.
 கல்யாணத்தைப் பொறுத்தவரை தவிப்பு! தவம்!
 கர்ப்பத்தைப் பொறுத்தவரை ஏக்கம்? பிரசவத்தைப் பொறுத்தவரை பரவசம்! !
 ஆனால்-
 நினைவை இழந்த மகள் என்றைக்குப் பேசுவாளோ என ஏங்கிக் காத்திருப்பது எத்தனை கொடுமையானது?
 அதை அனுபவித்த மாதவிக்கும் ராஜராஜனுக்கும்தான் அந்த வேதனை தெரியும்! வலி தெரியும்!
 ஆறு மாதமாக அவர்களை உலுக்கிய பூகம்பம் இப்போது நர்ஸ் சொல்லிவிட்டுப் போன இந்த வார்த்தையில், ஒரு நொடியில் விலகிப் போனது.
 இருவரும் படபடப்பு கலந்த உற்சாகத்தோடு நர்சின் பின்னே ஒடினர்.
 'கடவுளே... கண் திறந்தாயே! எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாயே... நன்றி' - இருவரும் ஓட்டத்தின் நடுவே நன்றி நவின்று கொண்டே சென்றனர்.
 நாயகி இருந்த அறையினுள் அவசரமாக நுழைந்தனர். அவளுக்கு அருகே மருத்துவர் நின்றிருந்தார்.
 நாயகி "அம்மா... அம்மா..." என தலையை மெல்ல இப்படியும் அப்படியுமாக அசைத்து, அரற்றிக் கொண்டிருந்தாள்.
 மாதவி பதைபதைப்புடன் மகள் அருகே போய் நின்றாள்"ராஜாத்தி... என் கண்ணே! கண்ணைத் திறந்து பாருடி! அம்மாவைப் பாருடி!" என கண்ணீர் பெருக, மகளுடைய தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு சொன்னாள்.
 அதுவரை நாயகியின் விழிகள் இரண்டும் அங்குமிங்கும் அலைந்தன. அம்மாவின் குரல் கேட்டதும் நிலைகுத்தி நின்றன. அம்மாவையே பார்த்தன.
 இமைகள் படபடத்தன. இமைத்து இமைத்து, பட்டாம் பூச்சியாய் விரிந்தன. விழிகளில் இனம் புரியாத பரவசமும் ஒளியும் மின்னின.
 "அம்மா..." வறண்டு போன இதழ்கள் அதற்குமேல் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் தவித்தன.
 "அம்மாடி..." ராஜராஜன் அன்புடன் மகளுடைய கூந்தலை வருடினார்.
 "அப்பா..." வார்த்தைகள் ஒவ்வொன்றாக அவளுடைய வாயிலிருந்து வந்தன.
 அப்பா உணர்ச்சிவசப்பட்டு உருகிய அதே நிமிடம் 'சட்'டென்று நாயகி கண்களை அவஸ்தையாக மூடி கொண்டாள்.
 "அம்மா ... அம்மா ..." என வலியால் முனகினாள் அதன்பிறகு அவள் கண்களைத் திறக்கவே இல்லை.
 இருவரும் மருத்துவர் பக்கம் திரும்பினர்.
 "லேசா நினைவு திரும்பினாலும் ரொம்ப சோர்ந்துபோன மாதிரி இருக்காங்க. இப்ப தொந்தரவு பண்ண வேண்டாம் அப்படியே தூங்கட்டும். மறுபடியும் நினைவு திரும்பி பேசும்போது தாராளமா பேசலாம்" என்றார்.
 ராஜராஜன் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ச்சியான குரலில் சொன்னார்.
 "ரொம்ப நன்றி டாக்டர். நீங்க அவ்வளவு தூரம் நம்பிக்கை கொடுத்தும் எங்களுக்கு ஒரு பக்கம் பயம் இருந்தது. ஆனா இப்ப எங்கள் மகள் நினைவு திரும்பி எங்களை அம்மா அப்பான்னு கூப்பிட்டதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை டாக்டர்."
 விழிகள், நீர் படலத்தில் மிதக்க, ராஜராஜன் அதற்குமே பேச முடியாமல் திணறினார்.உங்க மகளுக்கு நினைவு திரும்பினது பெரிய விஷயமில்லை. அவங்க மறுபடி பழைய நிலைக்குப் போகக்கூடாது. அப்படிப் போகாத மாதிரி பார்த்துக்கணும். இது ஒரு வித்தியாசமான நோய். அவங்களுக்கு இருக்கிற வினோத தலைவலியால் நினைவை இழந்திருக்காங்க. அந்தத் தலைவலி இனிமே வராம பார்த்துக்கணும். சுருக்கமா சொல்லப் போனா அவங்க மனசும் நினைவுகளும் அமைதியா, ஆனந்தமா இருக்கணும்" அவர் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
 பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு தங்கள் மகளைப் பார்த்தனர். ஒரே நேரத்தில் பெருமூச்சு விட்டனர்.
 "என்னங்க... டாக்டர் சொல்லிவிட்டுப் போனதைப் பார்த்தீங்களா?" ஆதங்கமாகக் கேட்டாள், மாதவி.
 "ம்..." என்றவாறே அறையை விட்டு வெளியே வந்தார், ராஜராஜன்.
 மாதவி மனக் கலக்கத்துடன் நடந்தாள். இருவரும் சுவரோர நிழலில் நின்றனர். பசுமையாய்ப் படர்ந்திருந்த தூங்குமூஞ்சி மரத்தின் கிளைகள், காற்றில் ஆடி அசைந்து அவர்களை வந்து தொட்டது.
 மெல்லிய காற்றுடன் மருந்து வாடை. அதையும் மிஞ்சி மையல் மணம் வந்து நாசியை வருடியது.
 நாக்கில் எச்சிலை ஊறவைக்கும் அந்த மணம் இவர்களுக்குள் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224084289
மங்கல இசை

Read more from R.Sumathi

Related to மங்கல இசை

Related ebooks

Related categories

Reviews for மங்கல இசை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மங்கல இசை - R.Sumathi

    1

    அவர்கள் கவலை படர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். விழிகள் வெளுத்து, சோகம் அப்பி, ‘திக்திக்’கென்ற உணர்வு அவர்களை ஆக்கிரமிக்க... அவஸ்தையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    அவர்கள் மாதவியும், ராஜராஜனும்!

    அவர்களின் முகம் சோகத்தில் சிக்கி சிதைய காரணம், நாயகி.

    நாயகி அவர்களுக்கு ஒரே மகள்.

    தன் நினைவை இழந்து ஒரு பிணம் போல் கிடக்கிறாள்.

    ஆறு மாதமாகிவிட்டது.

    எத்தனையோ வைத்தியம் செய்தும் எந்தப் பலனும் இல்லை.

    இடிந்து போயிருந்தவர்களுக்கு திடீர் என மருத்துவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி, புதிய நம்பிக்கை நட்சத்திரங்களை பூக்கச் செய்தது.

    வேறு மருத்துவர் கொடுத்த சிகிச்சை மூலம் நாயகிக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறினார்.

    தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் அவளுக்கு நினைவு திரும்பும் என்று கூறினார்கள்.

    அந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தனர். தங்கள் அன்பு மகள் மீண்டும் பேசப்போகும் நிமிடங்களுக்காகத் தவமிருந்தனர்.

    மருத்துவர் கொடுத்திருந்த நம்பிக்கையில் உற்சாகமும் எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப் போவதைப் போலவும் உற்சாகம் குன்றி அவநம்பிக்கை சூழ்வதைப் போலவும் தெரிந்தது.

    என்னங்க...

    வெளியே பெஞ்சில் அமர்ந்து, சுவரில் சாய்ந்திருந்த ராஜராஜனை அழைத்தாள், மாதவி.

    மூடியிருந்த இமைகளைத் திறந்தார், ராஜராஜன்.

    ம்... என்றார்.

    என்னங்க... நாயகிக்கு நினைவு இதோ திரும்பும் அதோ திரும்பும்கிறாங்க. நாட்கள்தான் போய்க்கிட்டிருக்கே தவிர, அவளுக்கு நினைவு திரும்பினபாடில்லை. இன்னைக்கு நாளைக்குன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். எனக்கென்னமோ நம்பிக்கை இல்லைங்க. என் பொண்ணு என்கிட்ட பேசுவாளா? என்னை அம்மான்னு மீண்டும் கூப்பிடுவாளா? நாம ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்தது இதுக்குத்தானா? இந்தக் கோலத்துல பார்க்கத்தானா?

    பேசிய மாத்திரத்திலேயே பொல பொலவென கண்ணீர் சிதறியது அவளது கன்னத்தில்.

    வேதனை பொங்க கணவரைப் பார்த்தாள். அவளுடைய கையை ராஜராஜன் ஆறுதலாகப் பற்றினார்.

    மாதவி... நம்பிக்கைதான் மனுஷனுக்கு உயிர்மூச்சு மாதிரி. நம்பிக்கையை இழந்தவன் செத்த பிணத்துக்குச் சமம். டாக்டர் நமக்கு இந்தளவுக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கும் போது நீ இப்படி நம்பிக்கை இழக்கலாமா? அவளுக்கு நிச்சயம் நினைவு திரும்பும். கவலைப்படாதே!

    அவர் சொன்ன அதே நிமிடம் மெல்லிய காலடி ஓசையை எழுப்பிக் கொண்டு வெண்ணிற புறாவைப் போல் ஒயிலாக ஒரு நர்ஸ் வந்தாள்.

    சார்...

    அவளுடைய குரலுக்கு வசப்பட்டு, சட்டென்று ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் இருவரும் எழுந்தனர்.

    சார்... உங்களுக்கு போன்...

    யாரு?

    உங்க மருமகன் சதாசிவம்.

    இதோ வர்றேன் என அவசரமாக வரவேற்பறையை நோக்கி விரைந்தார்.

    அங்கு கிடத்தி வைத்திருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து, வரவேற்புப் பெண் அவரிடம் நீட்டினாள். வாங்கி, அலோ என்றார்.

    மாமா... நான் சதாசிவம் பேசறேன்.

    சொல்லுங்க மாப்பிள்ளை.

    நாயகிக்கு ஏதாவது முன்னேற்றம் தெரிஞ்சுதா?

    இதுவரை இல்ல தம்பி. ஆனா... நிச்சயம் நினைவு திரும்பிடும்னு டாக்டர் சொல்றார். ராஜராஜன் இப்படி சொன்னதும் எதிர் முனையிலிருந்து எந்த பதிலும் இல்லை.

    மீண்டும் அலோ என்றார். அவரிடம் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

    ம்...இன்னைக்கு நாளைக்குன்னு காத்து... காத்து... சதாசிவத்தின் குரல் கம்மியது.

    வருத்தப்படாதீங்க, தம்பி. கடவுள் நிச்சயம் நம்ம மேல் இரக்கப்படுவார். நம்பிக்கையை விட்டுடாதீங்க.

    மாமா ஒரு முக்கியமான விஷயம்.

    என்ன... சொல்லுங்க?

    கம்பெனி விஷயமா நான் அவசரமா வெளியூர் போறேன் வர ஒரு வாரம் ஆகும். நாயகியை நீங்கதான் பார்த்துக்கணும்.

    அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.

    நன்றி மாமா! குழந்தை எப்படி இருக்கான்?

    நல்லா இருக்கான். அவனைப் பத்தி நீங்க ஒண்ணு கவலைப்படாதீங்க...

    மாமா! அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

    சொல்லுங்க தம்பி.

    நாயகிக்கு நினைவு திரும்பினா என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். நினைவு திரும்பின உடனே அவளுக்கு அதிர்ச்சியான செய்தி எதையும் சொல்றது அவ்வளவு நல்லதில்லை.

    புரியுது. நாங்க எதையும் சொல்லலை.

    சரி வச்சுடுறேன் மாமா.

    எதிர்முனையில் தொலைபேசி வைக்கப்பட்டதும், ராஜராஜன் ரிசீவரை வைத்துவிட்டு தளர்வாக நடந்தார். மனைவி உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து சோர்வாக அமர்ந்தார்.

    மாதவி, அவரைப் பார்த்தாள்.

    என்ன சொன்னார்?

    நாயகிக்கு நினைவு திரும்பிடுச்சான்னு கேட்டார். ஆபீஸ் விஷயமா வெளியூர் போறாராம். நாயகியை கவனமா பார்த்துக்கச் சொன்னார்.

    ம்... பாவம் அந்த மனுஷன். நம்ம பொண்ணை கட்டிக்கிட்டு என்ன பாடுபடுறார். எவ்வளவு வேதனை அவருக்கு? தன்னந்தனியா கிடந்துக்கிட்டு கஷ்டப்படுறார். ம்... இவளுக்கு நினைவு திரும்பணும்னு வேண்டிக்கிட்டு அவர் காத்துக் கிடக்கிறார். இந்தப் பொண்ணு, நினைவு திரும்பினாலும் அவரைப் புரிஞ்சுக்கணுமே... அதுதான் என் பயம்!

    புரிஞ்சுப்பா... புரிஞ்சுக்காம எங்கே போவா? ம்... பைத்தியக்காரப் பொண்ணு! யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்ட மாதிரி நோயைத் தேடிக்கிட்டு இந்தளவுக்கு முத்தவிட்டு, இப்ப தன் நினைவை இழந்து புருஷன் பிள்ளையை மறந்து கிடக்கிறா...

    மாதவி... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

    என்ன...?

    நாயகிக்கு நினைவு திரும்பினா அவகிட்ட எதையும் சொல்ல வேண்டாம்னு மாப்பிள்ளை சொல்றார் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே நர்ஸ் அங்கே வந்தாள்.

    சார்... டாக்டர் உங்களைக் கூப்பிடுறார். உங்க மகளுக்கு நினைவு திரும்பிடுச்சு...

    2

    காத்திருத்தல்!

    காதலைப் பொறுத்தவரை சுகம்.

    கல்யாணத்தைப் பொறுத்தவரை தவிப்பு! தவம்!

    கர்ப்பத்தைப் பொறுத்தவரை ஏக்கம்? பிரசவத்தைப்

    Enjoying the preview?
    Page 1 of 1