Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காத்திருந்த காதல்..!
காத்திருந்த காதல்..!
காத்திருந்த காதல்..!
Ebook94 pages33 minutes

காத்திருந்த காதல்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாம்பல் பூத்த வெளிச்சம் வந்து இமைகளைத் தொட்டதும், பரதன் விழித்துக் கொண்டான்.
 நேற்று இரவு படுக்கும் போது இருந்த உடல் வலி இப்போது முழுமையாக காணாமல் போயிருந்தது.
 கிழக்கில் பரவத் தொடங்கியிருந்த வெளிச்சம் இன்று உலகத்திற்கு என்ன செய்திகளைத் தாங்கியிருக்கிறதோ என்று நினைக்கும்போதே, அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல தீயின் ஒளியாக உருமாறத் தொடங்கிற்று. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகி ஜ்வாலை வீசிக்கொண்டு நெருப்பு பற்றிக் கொண்டது.
 அதில் மாட்டிக்கொண்டு ஊர்மிளா 'அண்ணா அண்ணா...' என்று அலறினாள். உடல் முழுக்க பற்றிக்கொண்ட நெருப்பின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் துடித்து இங்கும் அங்கும் ஓடினாள். கடைசியில் கரிக் கட்டையாக தரையில் விழுந்தாள்.
 "அய்யோ... ஊர்மிளா..." என்று அவன் சடாரென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்.
 குப்பென்று கழுத்துப்பக்கம் வியர்த்தது.
 கண் முன்னே விரிந்த காட்சியின் தாக்கம் இன்னும் அதே வீரியத்துடன்தான் இருக்கிறது என்பதை நம்ப முடியாமல் உடலும், மனமும் களைத்தன.
 கண்களை மூடிக்கொண்டான்.
 கடலையும், அலைகளையும் இமைகளுக்குள் கொண்டு வந்தான். கால் பதியப் பதிய ஈரமண்ணில் நடப்பது போல நினைத்துக் கொண்டான். நீண்ட கடற்கரையில் தானும் கட்டு மரமும் இயற்கையும் மட்டும் இருப்பதான அந்த கற்பனை, மெல்ல எண்ணங்களில் அமைதியை விதைத்தது.
 யாரோ கதவைத் தட்டினார்கள்.
 கைலியை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவன் வேகமாக முகத்தை கழுவிக் கொண்டான்கதவைத் திறந்தான்.
 வீட்டுக்காரப் பெரியவர் வீராச்சாமித் தேவர் நின்றிருந்தார்.
 "என்னப்பா ஆச்சு பரதா? திடீர்னு அய்யோ, ஊர்மிளான்னு குரல் கேட்டுச்சா, பதறிட்டா என் பொண்டாட்டி. உடனே போய் பாருங்கன்னு தள்ளி விட்டுட்டா... பரதா என்னப்பா ஆச்சு?"
 என்னது?
 திகைத்துப் போனான் அவன்.
 அவ்வளவு உரக்கவா வெளிப்பட்டிருக்கின்றன என் உணர்ச்சிகள்? கீழே இருக்கிற வீராச்சாமித் தேவருக்கும் அவர் மனைவிக்கும் கேட்கிற அளவுக்கா என் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது?
 "சொல்லுப்பா பரதா... என்ன விஷயம்பா...? உன் தங்கச்சிய நெனைச்சுக்கிட்டியா?"
 பெரியவரின் ஆறுதலான குரல் அவனுடைய செவிகளில் இதமாக விழுந்தது.
 "ஆமாங்கய்யா..." என்றான் உப்பரிகையில் படர்ந்திருந்த முல்லைக் கொடியைப் பார்த்தபடி. "எவ்வளவோ வருஷங்கள் ஓடிப்போச்சு... எத்தனையோ மாற்றங்களும் ஏற்பட்டுப் போச்சு... ஆனாலும் ரணம் இன்னும் குறையலீங்கய்யா..."
 "விடுப்பா பரதா..." என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். "நன்றல்லது அன்றே மறப்பது நன்று... பாவம், எந்த வேளைல யார்கிட்ட வரம் வாங்கிட்டு வந்தாங்களோ உன் தங்கச்சியும், அம்மாவும் படாத பாடுபட்டு போய் சேந்துட்டாங்க... முடிஞ்சு போச்சு... மறக்க முயற்சி பண்ணுப்பா..."
 மறப்பதா!
 முடியுமா!
 வேதனைக்கு உள்ளத்தையும், வெப்பத்துக்கு உடலையும் கொடுத்து, மாண்டு போனாளே அநியாயமாக ஊர்மிளா, அந்த இருபது வயது கோர மரணத்தையா?பெற்ற மகளை, தங்கச்சிலையாக தாரை வார்த்துக் கொடுத்த மகளை, கரிக்கட்டையாக அலங்கோலமாக பார்த்த அதிர்ச்சி தாங்காமல், பத்தாவது நாள் உயிர்விட்ட தாயின் மவுன மரணத்தையா?
 எப்படி? எப்படி?
 "யோகிங்களும், சித்தருங்களும் சொல்லிட்டுப் போயிட்டாங்க, இன்பமும், துன்பமும் கலந்துதான் வாழ்ந்து ஆகணும்னு... வாழ்ந்து பாக்கறப்பதானே தெரியுது, சொல்லு... ஆனா ஒரு விஷயம்பா..." என்றார் அருகில் வந்து.
 அவன் தலைகுனிந்தே இருந்தது.
 "நானும் பறிகொடுத்தவன்தான். அதுவும் வாட்டசாட்டமான ஆம்பிளைப் புள்ளையை இருபத்தாறு வயசு காளைப் பயலை பறிகொடுத்தவன்தான்... பைத்தியம் பிடிச்ச மாதிரிதான் இருந்தது எனக்கும் அவளுக்கும்... சரி, சாதாரண சாவா அது, சரித்திரச் சாவு இல்லையா, நாட்டுக்காக நடந்த சண்டையில உயிரையே தியாகம் செஞ்ச வீர இளைஞனோட சாவு இல்லையான்னு தேத்திக்கிட்டு இப்போ நடமாடிக்கிட்டிருக்கோம்பா பரதா... அந்த தகுதியிலதான் சொல்றேன், மறந்துடுப்பா... துக்கத்தை, துன்பத்தை மறந்துடு... வரட்டுமா...?"
 போய் விட்டார்.
 எழுந்து கொண்டான்.
 நிஜம்தான்.
 ஞாபகசக்தி என்கிற இயற்கையின் வரத்தை ஜெயித்தால்தான் மனிதன், மனிதனாக இருக்க முடியும். எவையெல்லாம் ரத்தத்தில் வலி ஏற்படுத்துமோ அவையெல்லாம் ஒதுக்கப்பட வேண்டும். எது மனதிற்குள் உற்சாகத்தைப் புகுத்துமோ அது மட்டுமே நினைவு முழுக்க ஆக்கிரமிக்க வேண்டும்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223468950
காத்திருந்த காதல்..!

Read more from V.Usha

Related to காத்திருந்த காதல்..!

Related ebooks

Reviews for காத்திருந்த காதல்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காத்திருந்த காதல்..! - V.Usha

    காத்திருந்த காதல்

    1

    "அம்மா..."

    ஏழு வயது ராகுலின் குரல் மெலிதாக அவளை வந்து சேர்ந்தது.

    சக்தி ஓடுகிற மிக்சியை நிறுத்திவிட்டு திரும்பி குரல் கொடுத்தாள்.

    எழுந்து வாய்யா ராகுல்... மணி ஏழடிக்கப் போகுதில்லே?

    இல்லம்மா... மொதல்ல நீ இங்க வாம்மா...

    ராகுல் பழைய மாதிரி இல்லை என்று உடனே தோன்றியது அவளுக்கு. முரண்டு பிடிக்கிறான். முகத்தில் நிறைய யோசனை தெரிகிறது. குழந்தைத்தனம் போய்க்கொண்டே இருக்கிறதா என்ன?

    தலையை ஆட்டிக் கொண்டாள் அவள்.

    சேச்சே, ஏழு வயதுக் குழந்தையைப் பற்றி ஏன் இவ்வளவு யோசிக்கிறேன்?

    கூப்பிடறேனில்லே... வாம்மா... என்று ராகுல் மறுபடி அழைத்தான்.

    சரிப்பா, வந்துட்டேன்... என்றபடி அவள் மகனின் அருகில் வந்தாள்.

    படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த ராகுலைப் பார்த்து புன்னகைத்தாள்.

    உக்காரு... என்று கைகாட்டினான்.

    சரி... உக்காந்துட்டேன்... சொல்லு... எதுக்குப்பா கூப்பிட்டே?

    அப்பா முகம் எனக்கு ஏம்மா ஞாபகத்திலே இருக்கமாட்டேங்குது?

    சக்தி நிமிர்ந்து மகனைப் பார்த்தாள்.

    இதோ பாரும்மா... என்று தலையணைக்குக் கீழே இருந்த புகைப்படத்தை எடுத்து நீட்டினான்.

    கல்யாண ஃபோட்டோ அது!

    அவளும் தேவராஜனும் புகை மண்டலம் சூழ எழுந்து நின்று சோர்வு கவ்விய முகமும் கழுத்து மறைக்கும் மாலைகளுமாக நிற்கிற புகைப்படம்.

    இது எப்படி இவனிடம் வந்தது?

    பாட்டிக்கிட்டே கேட்டேன்... என்றபடி புகைப்படத்தையே பார்ததான்.

    யோசனையுடன் அவன் விழிகள் தேவராஜின் உருவத்தின் மேல் உலவின. ஒற்றை விரலால் தேவராஜின் முகத்தின் மேல் வருடிப் பார்த்து விட்டு விரலை எடுத்துக் கொண்டான். மறுபடி உற்றுப் பார்த்தான்.

    ஃபிஃப்டி டைம்ஸ் பார்த்துட்டேம்மா அப்பாவோட முகத்தை... இதுக்கு முன்னாடிகூட எத்தனையோ தடவை பார்த்திருக்கேன். ஆனா கண்ணை மூடிக்கிட்டா அப்பா முகம் மறந்து போகுதும்மா... ஏம்மா?

    தெளிவான வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து விட்டு, பதிலுக்காக காத்திருக்கும் மகனை சக்தி வியப்புடன் ஏறிட்டாள்.

    கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் இவனைப்பற்றி யோசித்ததற்கு, அர்த்தம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ராகுலிடம் குழந்தைத்தனம் குறையத் தொடங்கியிருக்கிறது.

    சொல்லம்மா... ஏன் அப்படி?

    ஒரு தடவையாவது நேர்ல பார்த்திருந்தா மனசுல பதிஞ்சிருக்கும்பா ராகுல்... உங்கப்பா உயிர் போகும்போது நீ என் வயித்துல எட்டு மாச குழந்தையா இருந்தே... ஜஸ்ட் ஃபோட்டோல மட்டும் பாக்கறே அப்பாவை... அதனாலதான் ஞாபகத்துல வெச்சுக்க முடியலே... சரி, ஏழு மணியாச்சு... எழுந்துக்கோ, இன்னிக்கு ஆஃபிஸ்ல ரத்ததான முகாம் நடக்குது... கொஞ்சம் சீக்கிரம் போகணும் நான்... என்று சொல்லிக்கொண்டே அவள் எழுந்தாள்.

    கொதிக்கத் தொடங்கியிருந்த ரசத்தை இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துவிட்டு, திரும்பியபோது ராகுல் அதே சிந்தனையுடன் அதே படுக்கையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு என்று உறுத்திற்று.

    ராகுல்... என்றாள் அழுத்தம் கொடுத்து. அம்மா பேச்சை கேக்கற பையனா இல்லையா நீ? ம்? கெட் அப்... உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆஃபிஸ் போகணும்... அதுவும் சீக்கிரம் போகணும்... எழுந்து வா...

    ஏன் இப்படி கத்தறே குழந்தைகிட்ட, காலை வேளையில? என்றபடி அம்மா எழுந்து வந்தாள்.

    குப்பென்று நீலகிரித் தைலம், தலைவலித் தைலம் கலந்த வாடை வீசிற்று. பூலான்தேவிபோல நெற்றியைச் சுற்றி பட்டை கட்டியிருந்தாள்.

    என்ன, தலைவலியா? என்றபடி சக்தி மறுபடி பாலை அடுப்பில் வைத்தாள்.

    ஆமாமா, வேறென்ன? இந்த தலை இருக்கிற வரைக்கும் தலைவலியும் என்னை விடாது. நானும் அதைவிடப் போறதில்லே அம்மா முணுமுணுத்தபடி பல் தேய்த்துவிட்டு வந்தாள்.

    உர்ரென்ற முகத்துடன் ராகுல் வந்து எதிரில் நின்றான்.

    என்னடா? பல் தேச்சுட்டு வா, போ...

    ஸ்விம்மிங் கிளாஸ்ல சேத்துவிடு என்னை என்றான் நிமிர்ந்து.

    இப்ப என்ன திடீர்னு ஸ்விம்மிங் கிளாஸ்?

    என் ஃப்ரெண்ட சேந்திருக்கான், விக்னேஷ்

    பத்து நாள் தொடர்ந்து லீவு போடணும் ராகுல்... அப்பதான் உன்னை கொண்டு போய் விட்டுட்டும் கூட்டிட்டும் வர முடியும். லீவ் அப்ளை பண்றேன்... கெடைச்சதும் சேரலாம்... என்றாள் பொறுமையாக.

    இதோட ரெண்டு தடவை சொல்லிட்டே, ஆனா சேரவே இல்லையே...

    இந்த தடவை கட்டாயம் சேரலாம்...

    இல்லேன்னா என் ஸ்கூல் பையை தூக்கி கெணத்துல போட்டுடுவேன்...

    ராகுல் நகர்ந்து விட்டான்.

    திகைப்புடன் அவள் அப்படியே நின்றாள்.

    வார்த்தைகளில் இயல்பாக கலந்துவிட்ட முரட்டுத்தனத்துடன் அவன் எச்சரிக்கிற தொனியில் பேசியதை இன்னும் நம்ப முடியவில்லை. அம்மா, அம்மா என்று பூனைக்குட்டியாக அவள் புடவைத் தலைப்பைச் சுற்றிய ராகுலா இது? நிச்சயமாக இல்லை.

    இன்னிக்கு என்னவோ தலைவலி ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு... காபிகூட வேண்டாம்டி சக்தி... மறுபடி போய் படுக்கப் போறேன்... என்றபடி அம்மாவும் போய்விட்டாள்.

    அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவள் வேலைகளை விரைவாக முடித்தாள். ராகுலிடம் எதுவும் பேசாமலே அவனுக்கான பணிகளை செய்துவிட்டு ஸ்கூலில் அவனை விட்டபோது வயிறு கடபுடா என்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1