Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விடியலை நோக்கி...
விடியலை நோக்கி...
விடியலை நோக்கி...
Ebook142 pages49 minutes

விடியலை நோக்கி...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆச்சரியத்துடன் நர்மதா எழுந்தாள்.
 வெளிநாட்டுப் பெண்மணியா? என்னைத் தேடி வந்திருக்கிறாளா?
 யமுனா ஓடிவந்ததைப் பார்த்ததும், தனக்கு ஏதோ வேலைக்கான உத்தரவுதான் வந்து விட்டது என்றுதான் நினைத்தாள். குடும்பத்தை உடனடி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற விசயம் என்றால் அது ஒன்றுதான் இப்போதைக்கு. ஆனால், யமுனா சொல்வது முற்றிலும் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது?
 "நீ கிளம்புக்கா... நான் இந்த வேலையை முடிச்சுக்கிறேன்" என்று பாலு கயிற்றை இழுத்துக்கொண்டான்
 "யமுனா, கொஞ்சம் தம்பிக்கு உதவி பண்ணு... இன்னும் தண்ணி இறைக்கணும்" என்று அவள் கிணற்றங் கரையைவிட்டு நகர்ந்தாள்.
 "நானா?" என்றாள் யமுனா நெஞ்சில் கை வைத்து.
 "என் கை ரொம்ப மென்மையானது... இந்த முரட்டுத் தாம்புக்கயிற்றைப் பிடிச்சு இழுத்தேன்னா, என் உள்ளங்கை நசிஞ்சு இரத்தம் கொட்டும்க்கா..."
 "அபாரமான கற்பனை யமுனா" என்று அவள் தங்கையின் காதைச் செல்லமாகக் கிள்ளினாள்.
 "அழகா இருக்கிறதைவிட முக்கியம் எது தெரியுமா? பயனுள்ளதா இருக்கிறதுதான் யமுனா... உன் கைகள் நல்ல வலுவுள்ளதா, கெட்டியா ஆகும் போது உனக்கே ஒரு தன்னம்பிக்கை வரும் தெரியுமா?"
 "நீ கிளம்புக்கா... இந்த எருமை மாட்டை எப்படி வேலை வாங்கணும்னு எனக்குத் தெரியும்... ஏய் வெள்ளை எருமை, மொதல்ல இந்தக் கயித்தை பிடி" பாலு முரட்டுத்தனமாக யமுனாவை இழுத்துக் கயிற்றைக் கையில் கொடுக்க, "டேய்...டேய்... விடுடா... பாசி வழுக்குதுடா... நானே வர்றேண்டா" என்று பயத்துடன் முன்னேறி வர, நர்மதா கால்களை எட்டிப் போட்டு வீட்டை நோக்கி நடந்தாள்வெள்ளை எருமை என்று யமுனாவை அவன் யதார்த்தமாக வர்ணித்தது காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது. பளிச்சென்று சொன்னாலும் பாலு பொருத்தமாகத்தான் சொல்லி இருக்கிறான். மதமதவென்று வளர்ந்து புஷ்டியாக, சிகப்பாக நிற்கிற யமுனா பார்த்த மாத்திரத்தில் யாரையும் வசீகரிப்பது உண்மை. நேர்த்தியாக அலங்காரம் செய்து கொள்ளவும், நளினமாக நடக்கவும் பேசவும் தெரிந்தவளுக்கு, படிப்பு மண்டையில் ஏறாமல் போனது அதிருஷ்டமா, துரதிருஷ்டமா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். யமுனாவை அப்படியே விட்டுவைப்பது சரியல்ல. வன்முறையும் ஆபாசமும் மலிந்து கிடக்கும் சூழ்நிலைச் சீர்கேட்டில், யமுனா போன்ற அழகும் அப்பாவித்தனமும் நிறைந்த இளம்பெண்ணைச் சரியான பாதையில் திருப்பி விடாமல் இருப்பது தெரிந்தே செய்கிற தவறு.
 ஆனால், என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டுக் கொண்டபோது பக்கென்றிருந்தது. இதுதான் வாழ்க்கையில் மிக வேதனையான விசயம் என்று தோன்றியது. அறிவுடனும் சுயசிந்தனையுடனும் படைக்கப் பட்டுவிட்டு, கூடவே ஏழ்மையையும் கொடுத்துக் கையாலாகாததனத்துடன் ஒரு வெற்று வாழ்க்கையை விரக்தியுடன் தள்ளுவதைவிட உலகத்தில் வேறு கொடிய விசயமே இல்லை.
 தீனா வாசலிலேயே நின்றிருந்தான். பள்ளிக்கூடம் கிளம்பத் தயாராய்த் தலை சீவி அடக்கமாக நின்றான்.
 அக்காவைப் பார்த்ததும் கண்களில் விளக்கெரிந்தது.
 "அறிவியல் புத்தகம் கொண்டு வரலேன்னா சார் தொலைச்சுடுவார்க்கா" என்றான் கைகளைப் பற்றிக் கொண்டு.
 "எப்படியாச்சும் சாயங்காலத்துக்குள்ளே வாங்கி வைச்சுடு. சரியா?"
 "சரிப்பா" என்று அவன் தலையை வருடினாள்.
 "வெள்ளைக்காரப் பொம்பளை ஒருத்தங்க வந்து உக்காந்திருக்காங்க... என்ன அழகா தமிழ் பேசறாங்க தெரியுமா? அதுவும் கலப்படமில்லாத தமிழ். நர்மதா அவர்களைப் பார்க்க வேண்டும், கொஞ்சம் அழைத்து வருவீர்களா?' அப்படின்னு சிரிச்சுகிட்டே கேட்டாங்க... உள்ளே போய்ப் பாருக்கா" என்றான்.
 அதைக் கேட்டதும் ஆர்வம் அவளைப் பற்றிக் கொண்டதுகால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே போனபோது அம்மாவும் அந்தப் பெண்ணும் திரும்பிப் பார்த்தார்கள்.
 "வணக்கம் குமாரி நர்மதா. நலமா? என்னைத் தெரிகிறதா? மேரி ஆண்டர்சன்."
 கைகுவித்து வணக்கம் சொல்லி அந்த வெளிநாட்டுப் பெண்மணி மலர்ச்சியுடன் சிரித்தபோது, தன்னை அறியாமல் அவளும் கைகுவித்து வணக்கம் சொன்னாள்.
 எங்கோ பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால், பேசியது போலவோ பழகியது போலவோ இல்லை. வீட்டுக்கு வந்து உரிமையுடன் பெயர் விளித்துப் பேசுகிறாள். யாரிவள்?
 "வந்து அரை மணி நேரம் ஆச்சு... நர்மதா, நர்மதான்னு உன்பெயரையே சொல்லிட்டிருக்கா... தெளிவா தமிழ் பேசறா... நம்ப குடும்ப நிலைமை பத்தியெல்லாம் கேட்டக்கிட்டா... உடனே நர்மதாவைப் பார்க்கணும், எனக்கு உயிர் கொடுத்தவளே அவள்தான்னு பத்துதடவை சொல்லிட்டா... நீயே பேசுடியம்மா" அம்மா சொல்லிவிட்டு உள்ளே போக, அவள் வியப்புடன் ஏறிட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223148784
விடியலை நோக்கி...

Read more from V.Usha

Related to விடியலை நோக்கி...

Related ebooks

Related categories

Reviews for விடியலை நோக்கி...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விடியலை நோக்கி... - V.Usha

    1

    நர்மதா வாளியையும் கயிற்றையும் கீழே வைத்தாள்.

    வலது தோள்பட்டை வலிக்கத் தொடங்கிவிட்டது. இடதுகை விரல்களால் பிடித்துவிட்டாள். ஆனாலும் வலி தீராததை உணர்ந்து மெல்லிய விரக்திப் புன்னகை இதழ்களில் உருவானது.

    இன்னும் ஐந்து குடங்கள் பாக்கி.

    சீக்கிரம் அக்கா... பாலு அவசரப்படுத்தினான். பத்து குடம் வீதம் மூணு தடவை அடிக்கணும்னு சொல்லி இருக்காங்க... இன்னும் அஞ்சு குடம் நிரம்பினாத்தான் முதல் தடவையே முடியும்... இதை முடிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடணும்..."

    இதோப்பா தம்பி...

    அவள் மறுபடி கயிற்றை கையால் பிடித்துக் கொண்டாள். சரசரவென்று வாளியைக் கிணற்றுக்குள் இறக்கினாள்.

    முதல் வகுப்பே கணக்குதான்... சார் எப்பவும் குச்சியோடதான் வருவார், மூணாவது கை மாதிரி... கொஞ்சம் தாமதமானாலும் விளாசிடுவார்... தெரியுமா அக்கா... என்றான் பாலு இரண்டு பக்கமும் பரபரப்பாகப் பார்த்தபடி.

    ‘மூன்றாவது கை’ என்று குச்சியை வர்ணித்த தம்பியின் புத்திசாலித்தனம் ஆச்சரியமாக இருந்தது. மூன்று வேளை சாப்பாட்டிற்கு நிச்சயம் இல்லாத நிலையிலும் அவன் தன்புத்தியைக் கூர்மையாக வைத்துக்கொண்டிருக்கிறான். மழுங்கிப் போய்விடாமல் மேலும் மேலும் கூராகிப் பளீரிட வேண்டுமானால் ஆரோக்கியமான உணவு, கல்வி எல்லாம் வேண்டும். இல்லையென்றால் இதே புத்திசாலித்தனம், வஞ்சனையாக மாறி அவன் பாதையையே மாற்றி விடக்கூடும்.

    அய்யோ... நர்மதா வாய்விட்டுச் சொல்லி விட்டதை பாலு கவனித்தான்.

    என்னக்கா, கை வலிக்குதா...? நான் வேணா இழுக்கட்டுமா? என்றான் பக்கத்தில் வந்து.

    இல்லையப்பா... இவ்வளவு புத்திசாலியா இருக்கியே... என்ன செய்யப்போறோம்னு யோசிச்சேன்...

    வேறென்னக்கா? பன்னிரண்டாம் வகுப்பை முடிச்சுட்டு ஏதாவது பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிப்பேன்... டிப்ளமா சான்றிதழை வைச்சுக்கிட்டு வேலை தேடுவேன்... தேடுவேன்... தேடிகிட்டே இருப்பேன். அப்புறம் உன்னைப்போல சான்றிதழை ஓரமா வைச்சுட்டு பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கும். கவுன்சிலர் அம்மா வீட்டுக்கும் தண்ணி இழுத்துக் கொடுப்பேன். காசு வாங்கி அரிசியும் புளியும் வாங்கி சமைச்சு சாப்பிட்டு, அடுத்த நாள், யார் வேலை கொடுக்கப் போறாங்கன்னு வாசல்ல உக்கார்ந்து காத்துகிட்டிருப்பேன்...

    அதிர்ந்துபோனாள் அவள்.

    எழுதி வைத்த மாதிரி எவ்வளவு படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டான்! மனசுக்குள் இவ்வளவு குமுறல்களா? தான் படிக்கிற படிப்பு பெரிய மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை என்ற அவநம்பிக்கைதான் அவன் மனதில் மலிந்துகிடக்கிறதா? அய்யோ...

    பாலு...

    ஏம்ப்பா இப்படி பேசறே.

    உண்மையைத்தான் பேசுறேன் அக்கா...

    எல்லார் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காதுப்பா... என்னைப் போலவே நீயும் வேலை கிடைக்காம, கஷ்டப்படுவேன்னு நீயா ஏன் நினைச்சுக்கறே? அது தப்புப்பா...

    எனக்கு மட்டுமில்லா அக்கா... நடுத்தர, சாதாரண குடும்பத்துப் பசங்க எல்லார் மனசுலேயும் இருக்கிற பயம்தான் இது...

    பாலு...

    ம்...

    சொல்லுக்கா...

    உனக்கு என்னப்பா ஆசை?

    ஆசைன்னா?

    எப்படிப்பட்ட ஆளா வரணும்னு ஆசை?

    அது நெறைய இருக்குக்கா... விமானி ஆகணும், கப்பல் பொறியாளர் ஆகணும், கட்டடவியல் படிக்கணும்... நெறைய... குறைஞ்சபட்சம் கம்ப்யூட்டர் என்ஜினியராகணும்னு ஆசை இருக்குக்கா... என்னமோ சொல்வாங்களே. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படற மாதிரின்னு... பாலு குனிந்து கல்லை எடுத்து விரக்தியில் சுவரில் அடித்தான்.

    நான் ஒண்ணு சொன்னா நம்புவியா?

    சொல்லுக்கா...

    நீ என்ஜினியர் ஆகப்போறே...

    என்னது? என்றான் சிரித்தான்.

    நிச்சயமா... என்று அவன் தோளில் கை வைத்தாள்.

    +2 பரிட்சையில் மட்டும் தொண்ணூறு சதத்துக்கு மேல் வாங்கிடு... யாரையாவது பிடிச்சு இடம் வாங்கிடலாம்."

    என்னதான் மார்க் வாங்கினாலும் பணம் கொடுத்துதானே ஆகணும்...? பாலுவின் குரல் நைந்தது.

    நீ, நான், யமுனா, அம்மா, தீனான்னு நம்ப குடும்பம் பெரிசாச்சேக்கா... என் ஒருத்தன் படிப்புக்கு மட்டுமே செலவழிக்க முடியுமா? நீ தமிழ் எம்.ஏ.வில் முதல் வகுப்பில் ‘பாஸ்’ பண்ணினியே, இன்னிவரைக்கும் வேலை கிடைக்கலியே... மாமாவும் அவர் மகனும் பெரிசா அலட்டிக்கிட்டாங்களே... இந்தக் கல்லூரியில் வேலை வாங்கித் தர்றோம்... அந்தக் கல்லூரியில் வாங்கித் தர்றோம்னு? - என்ன ஆச்சு...? வாளியை எடுக்கா... நம்ப வேலையைப் பார்ப்போம்...

    தண்ணீர் தெளித்ததும் பொங்கி வரும் பால், அடங்கி விடுவதைப் போல் மனம் சுருங்கிப் போனது. அவள் மவுனமாக நீரை இறைத்து ஊற்றினான். குடங்கள் நிறைந்ததும் பாலு மூன்று சக்கர வண்டியைக் கிளப்பினான்.

    அவள் அப்படியே உட்கார்ந்தாள்.

    அப்பாவின் நினைவு வந்தது.

    தமிழ்ச்சுவையை ஊட்டிய அப்பா, நூலறிவே நல்லறிவு என்றே சொல்லிச் சொல்லித் தொல்காப்பியத்தையும், நன்னூலையும், திருவருட்பாவையும் சொல்லித் தந்த அப்பா, படிப்புதான் உயர்ந்தது என்று மூன்று வயதிலேயே மனதில் விதை ஊன்றிவிட்ட அப்பா. தமிழ்ப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று பரிசுகளாக வாங்கிவந்து அவள் குவிக்கும் போது ஆனந்தக் கண்ணீரால் தன் மகிழ்ச்சியை வெளியிட்ட அப்பா. அடுத்தடுத்த கனவுகளின் படிக்கட்டுகளை நினைத்துக் காத்திருந்தவர். அவள் முதல் கால் எடுத்து வைத்தபோதே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்து, குடும்பச் சுமையை அவளின் மெல்லிய தோள்களில் வைத்துவிட்டு மரித்துப்போன அப்பா.

    நீ தயாரா அக்கா...

    பாலு வந்துவிட்டான். அதற்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் போய்த் திரும்பி வந்துவிட்டான். வியர்வை பொங்கும் உடலும் கனவு மிதக்கும் கண்களுமாக, ஆனால் இறுக்கமான முகத்துடன் நிற்கும் தம்பியைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அடிவயிறு கலங்கியது.

    நீ உட்காருக்கா... நான் இழுக்கிறேன்... இப்பவே கை வலிக்கும் உனக்கு... இன்னும் போய் உலக்கையை வேறு பிடிக்கணும். என்னை மாதிரி பசங்களுக்கு டியூசன் - எடுக்கணும்... தள்ளு...

    பலவந்தமாக அவளை உட்கார வைத்துவிட்டு அவன் விறுவிறுவென்று நீரை இழுத்துக் கொட்டினான்.

    அக்கா... அக்கா... நர்மதாக்கா...

    யமுனா ஓடிவருவது தெரிந்தது...

    இளமையின் ஆளுமைக்குள் வந்து கொண்டிருக்கும் கச்சிதமான பதினேழு வயது. கோதுமை நிற முகமும், திராட்சையாய் மிதக்கும் விழிகளும், மினுமினுக்கும் இதழ்களுமாக மான்குட்டி போல் துள்ளி வரும் தங்கையைப் புதிதாகப் பார்ப்பது போலிருந்தது அவளுக்கு.

    என்ன யமுனா...? ஏன் ஓடிவர்றே?

    யாரோ, மேரி ஆன்டர்சன்னாம்... வீட்டுக்கு வந்திருக்காங்க... உடனே உன்னைப் பாக்கணுமாம்... அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க...

    என்ன சொன்னே? என்றாள் குழப்பமாக.

    மேரி ஆண்டர்சன்... ஆஸ்திரேலியாக்காரின்னு சொன்னா...- உன்னைப் பார்க்கணும்னு தவிக்கிறா... வா... மேலும் குழப்பமாய் அவள் எழுந்தாள்

    2

    ஆச்சரியத்துடன் நர்மதா எழுந்தாள்.

    வெளிநாட்டுப் பெண்மணியா? என்னைத் தேடி வந்திருக்கிறாளா?

    யமுனா ஓடிவந்ததைப் பார்த்ததும், தனக்கு ஏதோ வேலைக்கான உத்தரவுதான் வந்து விட்டது என்றுதான் நினைத்தாள். குடும்பத்தை உடனடி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற விசயம் என்றால் அது ஒன்றுதான் இப்போதைக்கு. ஆனால், யமுனா சொல்வது முற்றிலும் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது?

    நீ கிளம்புக்கா... நான் இந்த வேலையை முடிச்சுக்கிறேன் என்று பாலு கயிற்றை இழுத்துக்கொண்டான்

    யமுனா, கொஞ்சம் தம்பிக்கு உதவி பண்ணு... இன்னும் தண்ணி இறைக்கணும் என்று அவள் கிணற்றங் கரையைவிட்டு நகர்ந்தாள்.

    நானா? என்றாள் யமுனா நெஞ்சில் கை வைத்து.

    என் கை ரொம்ப மென்மையானது... இந்த முரட்டுத் தாம்புக்கயிற்றைப் பிடிச்சு இழுத்தேன்னா, என் உள்ளங்கை நசிஞ்சு இரத்தம் கொட்டும்க்கா...

    அபாரமான கற்பனை யமுனா என்று அவள் தங்கையின் காதைச் செல்லமாகக் கிள்ளினாள்.

    "அழகா இருக்கிறதைவிட முக்கியம் எது தெரியுமா? பயனுள்ளதா இருக்கிறதுதான் யமுனா... உன் கைகள் நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1