Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சம்சாரப் பூக்கள்..!
சம்சாரப் பூக்கள்..!
சம்சாரப் பூக்கள்..!
Ebook96 pages32 minutes

சம்சாரப் பூக்கள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஆகாஷ்..."
 கடலில் உற்சாகமாய் நான்கு படகுகள். மீன் பிடிக்கப் போகிறோம் என்கிற தொழில் சிரத்தையெல்லாம் இல்லாமல் நான்கு உற்சாகமான இளைஞர்கள் அவர்களின் சந்தோஷ இரைச்சல்கள்.
 "ஆ... கா... ஷ்..." யமுனா கத்தினாள்.
 சட்டென்று திரும்பினான். நடந்து போன இரண்டு சுண்டல் சிறுவர்களும் திரும்பினார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள்.
 "ஏன் கத்தறே?" என்றான் அவன் எரிச்சலுடன்.
 "ரெண்டு தடவை கூப்பிட்டேன்... காதுல விழாத மாதிரி அது என்ன ஆக்டிங்...? வாய்க்குள்ள முணுமுணுத்தாலே கேக்கற டிஸ்டன்ஸ்... கரடியா கத்தினாலும் திரும்பலேன்னா எப்படி?" யமுனா படபடத்தாள்.
 "என்ன ஆகாஷ்... என்ன பாக்கறீங்க அப்படி?"
 "நான் நீயா இருக்கக்கூடாதான்னு தோணுது யமுனா..."
 "ஏன்...? ஏன் தோணுது?"
 "நீ ரொம்ப வசீகரமா இருக்கியே..."
 "அழகுலயா?"
 "அதுலயும்... இன்னும் சில விஷயங்கள்லயும்..."
 "புரியலே ஆகாஷ்..."ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி எவ்வளவு கோபம் வந்தது உனக்கு...? அடிச்ச அடில இன்னும் வலி பாக்கியிருக்கு... இப்ப என்னடான்னா பல் முளைக்காத பாப்பா மாதிரி சிரிக்கறே... நா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறே... ப்ளோ ஹாட் ப்ளோ கோல்ட்னு சொல்வாங்களே."
 யமுனா வெட்கத்துடன் அவனிடமிருந்து விரல்களை விடுவித்துக் கொண்டாள்... அப்போது இன்னும் அழகாகத் தெரிந்தாள்.
 படகுகள் இப்போது தொலைவுக்குப் போய்விட்டன. அந்தி நேரத்து வானம் அற்புதமான ஆரத்திச் சிவப்பில் பளபளத்தது.
 "யமுனா..."
 "ம்..."
 "போன மாசம் எனக்கும். அதுக்கும் முந்தின மாசம் உனக்கும் பார்த்டே வந்தது."
 "நீங்க எனக்கு ரிங் ப்ரசண்ட் பண்ணீங்க... நா உங்களுக்கு ரேமாண்ட் சூட் ப்ரசண்ட் பண்ணினேன்."
 "அதுக்கு சொல்லலே... எனக்கு இருபத்தெட்டு முடிஞ்சது... உனக்கு இருபத்து மூணு..."
 யமுனா தலை உயர்த்தினாள்.
 "ரொம்ப கரெக்டான வயசுல நிக்கறோம் யமுனா... இளமையின் சிகரம்னு சொல்லலாம் கதாசிரியர் பாணியில்..."
 "ம்..."
 "எதுக்காக தள்ளிப் போட்டுக்கிட்டு வரோம்?"
 "பயமர் இருக்கு ஆகாஷ்..."
 "நம்பிக்கையும் இருக்குதானே?"
 "ஃபிஃப்டி... ஃபிஃப்டி..."
 "இன்னிக்கு சொல்லிடலாம் யமுனா...

திடுக்கிட்டாள்.
 "இன்னிக்கா?"
 "அப்பா ஊர்ல இல்லையா?"
 "இருக்கார் ஆகாஷ்... ஆனா..." அவள் குரல் தயங்கியது.
 "ஞாயிற்றுக்கிழமை வெச்சுக்கலாமே... நெறைய நேரம் இருக்கும்..."
 "தள்ளிப் போடறதுனால எந்த சாதகமும் இல்லே யமுனா"
 அவன் ஆதரவுடன் அவள் தோளைத் தட்டினான்.
 "கோபப்படாதே. பொறுமை இழக்காதே... திட்டினா வாங்கிக் கட்டிக்க... முடிந்தவரைக்கும் நிதானமா நம்ப பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்லு..."
 "நீங்க ஆகாஷ்?"
 "நானும்தான்... உனக்கு சொன்னதெல்லாம் எனக்கும்தான்..."
 "நம்பிக்கை இருக்கா...?"
 இல்லை என்று சொல்ல வந்த நாக்கை கட்டுப்படுத்திக் கொண்டான். புன்னகைத்தான்.
 "வலம்புரிஜான் சொல்வாரே..."
 "என்னன்னு?"
 "மனிதர்கள் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை, நம்பிக்கையை சுவாசிப்பதால் வாழ்கிறார்கள்."
 இருவரும், மவுனமாக அமர்ந்திருந்தார்கள்.
 சூரியன் உலகிடமிருந்து விடை பெற்றான்.
 மனித வாழ்நாளில் ஒரு நாள் குறைந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223601098
சம்சாரப் பூக்கள்..!

Read more from V.Usha

Related to சம்சாரப் பூக்கள்..!

Related ebooks

Reviews for சம்சாரப் பூக்கள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சம்சாரப் பூக்கள்..! - V.Usha

    1

    சூரிய வெப்பம் ஜன்னல் வழியே முகத்தைத் தொட்ட போதுதான் விழிப்பே வந்தது, ஆகாஷுக்கு.

    கண்களைக் கசக்கிக்கொண்டு மணி பார்த்தான்.

    எட்டே கால்!

    மைகாட்! இவ்வளவு நேரமாகவா தூங்கியிருக்கிறேன். எழுந்து உட்கார்ந்தபோது யமுனாவின் முகம் உடனே காத்திருந்தாற்போல் நினைவில் வந்தது. ‘என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்... நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்’ என்று இனிய கவிதை உள்ளே ஓடிற்று.

    யமுனா...

    என்னுயிரே...

    எப்படி இவ்வளவு ஆக்கிரமித்தாய் என்னை?

    தீவிரவாதி போல எப்படி என்னை முழுவதுமாய் கொள்ளையடித்தாய்?

    வெறும் அழகால் மட்டும் என்று சொன்னால் அது முழுப் பொய் முனா...

    மென்மையான உன் குரல்...

    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று பள்ளியில் படித்த பால பாடத்தை மறந்து விடாமல் தேடித் தேடி இனிய வார்த்தைகளைப் பேசுவது...

    சின்னச் சின்னக் கோபங்களில் இதழ் துடிப்பது.

    குழந்தையைப் போல நிலாவையும் மேகத்தையும் தென்றலையும் ரசிப்பது ஆகாஷ்... ஆகாஷ்... என்று உச்சரிக்கும் விதத்திலேயே என் பெயரை அழகிய கவிதையாக்கியது...

    மனதில் வருகின்ற எதையுமே மறைக்கத் தெரியாமல் நாசூக்காக விழிகளில் வெளிப்படுத்துவது...

    யமுனா...

    எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்திருக்கிறேன்.

    எத்தனையோ அறிவான பெண்களைச் சந்தித்திருக்கிறேன்.

    எத்தனையோ அன்பான பெண்களைக் கடந்திருக்கிறேன்.

    எல்லாம் சேர்த்து இணைந்திருக்கும் அழகிய தேவதை நீதான் யமுனா...

    உன்னை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பேன்?

    நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது யமுனா...

    ஆகாஷ்... ஏய்... மணி எட்டரைடா... இன்னுமாடா தூக்கம்...? அப்பா கோவில்ல இருந்து திரும்பி வர்ற டயமாச்சு...

    அம்மாவின் குரலில் இருந்த பதட்டம் அவனை நனவுக்கு இழுத்து வந்தது

    யமுனாவை தற்போதைக்கு நெஞ்சுக்கு அடியிலே மறைத்து வைத்தான் எழுந்தான்.

    அம்மா குளித்து முடித்து ஈரம் சொட்டுகிற கூந்தல் நுனி முடிச்சு அசைந்தாட பரபரப்பாய் வீட்டை மெழுகிக் கொண்டிருந்தாள்.

    பல் தேச்சுட்டு வாடா... காஃபி ரெடியா இருக்கு... என்று அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு மறுபடி வேலையைத் தொடர்ந்தாள். சஷ்டி இன்னிக்கு... அப்பா நாலு மணிக்கே எழுந்தாச்சு... ஆறு மணிக்கு போனார் கோவிலுக்கு... திரும்பற நேரமாச்சு... மளமளன்னு வேலையை முடிச்சிட்டு வா...

    ஞாயிற்றுக்கிழமைம்மா... இன்னிக்கு... சாவகாசமா மூச்சுவிட கிடைக்கிற ஒரே நாள்... நிதானமாத்தான் எல்லாக் காரியமும் பண்ணப்போறேன் அவன் பேப்பரை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

    மொதல்ல பல்லைத் தேயேன் ஆகாஷ்... காபிய குடிச்சுட்டு ஒக்காந்து பேப்பரைப் படியேன்.

    பெட் காஃபி குடும்மா... அவன் தலைப்புகளில் மேலோட்டமாக நகர்ந்து விட்டு இரண்டாம் பக்கத்துக்குப் போனான்.

    பல் தேய்க்காமலா? என்றாள் அம்மா அதிர்ச்சி நிறைந்த குரலில் சஷ்டியும் அதுவுமா... முருகா! அப்பா காதுல விழுந்தா அவ்வளவுதான். போடா... போய் பல் தேய்டா ஆகாஷ்...

    ஏன் இப்படி பயந்து சாகிறாள்? அம்மாவின் மேல் பரிதாபத்தை விட அப்பாவின் மேல்தான் கோபம் வந்தது வழக்கம் போல.

    மிலிட்டரி கமாண்டராக இருந்திருந்தால் அவர் ஒரு வேளை வெற்றிகரமான மனிதனாக இருந்திருக்கக் கூடும்.

    சாதாரண சிவிலியன் வாழ்க்கையில் என்ன பெரிய கோட்பாடுகள் வேண்டிக்கிடக்கிறது?

    நியதிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் நாமே அவற்றை சற்று மீறுவது கூட தேவையான விஷயம்தானே?

    மனிதனின் மேம்பாட்டுக்காகத்தான் சட்ட திட்டங்களே தவிர, அவற்றிற்காக மனித வாழ்க்கை என்பது வடிகட்டிய அசட்டுத்தனமில்லையா?

    சீக்கிரம் வாப்பா ஆகாஷ்... காபி ஆறுது...

    பாவம் அம்மா. இயற்கையில் அவளும் புத்திசாலிதான் பதினெட்டு வயதில் சம்சார சாகரத்தில் அவளைத் தள்ளி விட்டு விட்டார்கள். காலைக் கட்டிப் போட்டுவிட்ட அந்தச் சுமை அவளுக்குள் இருந்த சுயத்தன்மையையே முழுதாக அழித்துவிட்டதோ என்று அவனுக்கு அடிக்கடி தோன்றும். அதுவும் அப்பா மாதிரி பிடிவாதக்கார புருஷனாக இல்லாமல் அமைதி நிறைந்த, விட்டுக் கொடுக்கிற பெரிய மனசுக்கார கணவனாக இருந்திருந்தால் அம்மா இன்னும் தன்னை வளர்த்துக்கொண்டு ஏதாவது ஒரு துறையில் தன்னை தடம் பதித்துக் கொண்டிருப்பாள்.

    யமுனாவின் நினைவு வந்தது.

    அவளும் புத்திசாலிதான் ரசனை மிக்கவள்தான். ஆனால் அம்மா மாதிரி அவளால் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட முடியாது.

    தனக்கென்று உருவாக்கி வைத்திருக்கும் எதையும், கொள்கையோ, பொருளோ எதுவானாலும் சரி, தூக்கி தாரை வார்த்து விட முடியாது.

    யமுனா தனித்தன்மை மிக்கவள்.

    2

    "ஆகாஷ்..."

    கடலில் உற்சாகமாய் நான்கு படகுகள். மீன் பிடிக்கப் போகிறோம் என்கிற தொழில் சிரத்தையெல்லாம் இல்லாமல் நான்கு உற்சாகமான இளைஞர்கள் அவர்களின் சந்தோஷ இரைச்சல்கள்.

    ஆ... கா... ஷ்... யமுனா கத்தினாள்.

    சட்டென்று திரும்பினான். நடந்து போன இரண்டு சுண்டல் சிறுவர்களும் திரும்பினார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள்.

    ஏன் கத்தறே?

    Enjoying the preview?
    Page 1 of 1