Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thol Serum Poomaalai
Thol Serum Poomaalai
Thol Serum Poomaalai
Ebook108 pages42 minutes

Thol Serum Poomaalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்றாலே தடைகள் வருவது சகஜமே. சில காதலர்கள் தடைகளைத் தாண்டி வெற்றியை முத்தமிடுகின்றனர், சில காதல்கள் தோல்வியில் துவண்டு விடுகின்றன.

தலைப்பிற்கு ஏற்றார் போல் தோள் சேரும் பூமாலை வெற்றியை ருசித்தாலும் அடைந்த தடைகள் ஏராளம்.

ஒவ்வொரு தடைகளையும் தாண்டுகிற போது இன்னொரு தடை குறுக்டுகிறது. காதலுக்கு பெற்றோர்கள் தடையாய் இருப்பது சாதாரண விஷயம் தான் ஆனால் இந்த கதையில் சந்தர்ப்ப சூழ்நிலையில் இன்னொரு பெண்ணின் காதலனை காதலிக்க நேரிடுகிறது ஒரு. காதலன் இரு காதலிகள் இறுதியில் யார் ஜெயித்தார்கள், யார் விட்டுக் கொடுத்தார்கள் யார் கழுத்தில் பூமாலை விழுகிறது என்பதுதான் மீதிக்கதை.

இன்றைய நவீன யுகத்தில் முகப்புத்தகம் பார்த்து மனதை பறிகொடுக்கும் நிறைய காதலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அது உண்மையான காதலா? அல்லது காதலித்து ஏமாற்றும் வேலையா? என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லக்கூடிய நாவல் இது.

குமரி மாவட்டம் தான் கதைக்களம் என்பதால் ஆங்காங்கே தலைகாட்டும் குமரி மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள் வாசிப்பவர்களை வசமாக்கும். வாசியுங்கள் வழக்கம்போல் நாவலை நேசியுங்கள்

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580153310594
Thol Serum Poomaalai

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Thol Serum Poomaalai

Related ebooks

Reviews for Thol Serum Poomaalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thol Serum Poomaalai - Irenipuram Paul Rasaiya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தோள் சேரும் பூமாலை

    Thol Serum Poomaalai

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 1

    சூரியனைத் தேடிக்கொண்டிருந்தது இருள். நேற்று மாலை மறைந்துபோன சூரியனுக்கு இன்னும் வந்துசேர என்ன தாமதம் என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தது...

    காற்று ஓசை எழுப்பாமல் வீசிக்கொண்டிருந்தது. காற்றின் அழுத்தம் குறைந்து போனதால் மரங்கள் அசைய மறுத்து கம்பீரமாய் நின்றது.

    புல்வெளியில் படிந்திருந்த பனித்துளிகள் நல்ல தூக்கத்தில் இருந்தன. சூரியன் வந்துவிட்டால் தங்களின் ஆயுள் முடிந்து போகும் என்ற கவலை இல்லாமல் இருந்தது.

    புல்வெளிகளில் முகாமிட்டிருந்த பனித்துளிகள் போர்வையாய் ஈரத்தை போர்த்தியிருந்தது. அதிகாலை பொழுது அத்தனை ஆனந்தமாக இருந்தது.

    சாலையோர டீக்கடைகளிலிருந்து எழும் மண்ணெண்ணெய் ஸ்டவ்வின் சத்தம் மிகத் துல்லியமாகக் கேட்டது.

    உடல் பருமனைக் குறைக்க, சுகர் வியாதிக்காரர்களின் சுகர் குறைய சாலையோரம் நடக்கும் மனிதர்களின் பேச்சு சத்தம் பலமாக கேட்டது.

    கோவையிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட என் ஜே கே பஸ் தக்கலை தாண்டி வந்து கொண்டிருந்தது. இருக்கை எண் எட்டில் சாய்ந்து படுத்து இருந்த இளமதியனை நல்ல தூக்கம் ஆட்கொண்டிருந்தது.

    இருக்கையில் நேராக இருக்காமல் ஒருக்களித்து கால்களை இருக்கையின் நுனியில் மடக்கி வைத்து அவன் தூங்கும் அலங்கோல காட்சியை வயதுப் பெண்கள் பார்த்தால் சிரிக்காமல் நகர மாட்டார்கள்.

    இளமதியனுக்கு இருபத்தி நான்கு வயது முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மிச்சமிருந்தது. சுருட்டை முடியை கழுத்துக்குப் பின்புறம் சற்று நீளமாக வளர விட்டிருந்தான். அது அவனது பின்பக்க தோள்களை உரசியபடி நின்றது.

    கறுப்பு நிறம் என்றாலும் கலையான முகமாக இருந்தது அவனது முகம். ஒல்லியான தேகம், சிறு கண்கள், கூர்மையான மூக்கு, நீண்ட தாடை, பிளஸ் டூவில் வளரத் துவங்கிய அரும்பு மீசை இளங்கலை முதுகலை படிப்பை முடித்தபோது அடர்ந்த மீசைக்கு சொந்தக்காரனாக இருந்தான்.

    அவன் மீசையைத் தொட்டபடி வளர்ந்திருந்த தாடியை ட்ரிம் செய்து இருந்தது கூடுதல் அழகாக இருந்தது. இதழ்கள் சிவந்திருந்தன. கறுப்பு முகத்தில் இதழ்களின் சிகப்பு வசீகரமாய் இருந்தது...

    ஐந்தரையடி உயரம் அவனுக்கு போதுமானதாக இருந்தது... அவன் இன் செய்து புள் கை சட்டையை மடக்காமல் விட்டபோது ஒரு மார்க்கெட்டிங் எக்ஸிகுட்டிவ் ரேஞ்சில் இருந்தான்.

    மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் எல்லா தகுதிகளும் அவனிடம் இருந்தாலும் அவனுக்கு ஏனோ ஊர் சுற்றும் வேலை பிடிக்கவில்லை.

    பத்து வயதில் அவனது அம்மாவும், பதினொன்றாவது வயதில் அவனது அப்பாவும் போய் சேர பாட்டியின் முயற்சியில் கோவையில் ஒரு அனாதை விடுதியில் பிளஸ் டூ வகுப்பு வரை அவன் படிப்பு தொடர்ந்தது.

    இளங்கலை, முதுகலை இரண்டையும் கோவையில் சிஆர்ஐ பம்ப் நிறுவனம் ஏற்றுக் கொள்ள படிப்பை அங்கே முடித்துவிட்டு சிஆர்ஐ பம்ப் நிறுவனத்தில் கிடைத்த மார்க்கெட்டிங் எக்ஸிகுட்டிவ் வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊரான இட்டகவேலிக்கு வந்து கொண்டிருந்தான்.

    என் ஜே கே பஸ் பம்மம் தாண்டி வந்து கொண்டிருந்தது. பொழுதும் நன்றாக விடிந்திருந்தது.

    மார்த்தாண்டம் இறங்கவேண்டியவங்க எல்லாம் வாங்க கிளீனர் சத்தமாய் சொன்னான். இளமதியன் தூக்கம் கலைத்து கண்களை திருமி ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான்.

    பஸ் மேம்பாலம் ஏறாமல் இடது பக்கமாய் திரும்பி ஓடிக்கொண்டிருந்தது. இருக்கையை விட்டு எழுந்து வலிய வந்த கொட்டாவியை கைகளால் மறைத்து விட்டு பேக்கை தூக்கி தோளில் மாட்டிக் கொண்டபோது பஸ் அப்பாவு நாடார் கடையைத் தாண்டி வந்து நின்றது.

    இளமதியன் பஸ்சை விட்டு இறங்கி பொடி நடையாய் நடந்து குலசேகரம் செல்லும் பஸ் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தான். ஐந்து நிமிடம் தாண்டி பேச்சிப்பாறை செல்லும் பஸ் வர அதில் ஏறி அமர்ந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.

    இட்டகவேலி பஸ்நிறுத்தம் வருவதற்கு முன்னால் அவனுக்கு முழிப்பு வந்தது பஸ்ஸை விட்டு இறங்கி இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரைக்குச் செல்லும் நுழைவு வாசல் வழியாக நடக்க ஆரம்பித்தான்.

    முன்பு சாலை குண்டும் குழியுமாக கிடந்தது தற்பொழுது முடிப்புரை வரை செல்ல வசதியாக தரை ஓடுகள் பதிக்கப்பட்டு சாலை பளிச்சென்று இருந்தது.

    முடிப்ரையில் அவனது சித்தப்பா பூஜை செய்து கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி சத்தமில்லாமல் நடக்க ஆரம்பித்தான்

    அவனது வீடு வந்து சேர்ந்த போது பாட்டி தெய்வானை அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு புன்னகைத்தாள்.

    ஏன் ராசா இம்புட்டு தாமதம்?

    தாமதம் ஒண்ணுமில்ல பாட்டி... சரியான நேரத்தில தான் வந்து இருக்கேன்

    நீ சீக்கிரம் வந்துடுவேன்னு சுடுதண்ணி போட்டு வெச்சிருக்கேன் போய் குளிச்சிட்டு வா... நான் டிபனுக்கு தேங்கா சட்னி தயார் பண்றேன்.

    தேங்கா சட்னி குழம்பா வேண்டாம் எனக்கு துவையல் தான் பிடிக்கும்

    சரி ராசா உனக்கு துவையலே தயார் பண்றேன் இளமதியன் பேகை திறந்து லுங்கி பனியன் எடுத்து உடை மாற்றிக் கொண்டான். பேஸ்டு எடுத்து பிதுக்கி பிரஷ்ஷில் வரவழைத்துக் கொண்டு பாத்ரூம் சென்று பல் துலக்கி குளித்து விட்டு திரும்பிய போது பாட்டியின் கையால் செய்த தோசையும் துவையலும் தயாராக இருந்தது. இளமதியன் ருசி பார்க்க ஆரம்பித்தான்.

    பாட்டி புளி கொஞ்சம் தூக்கலா இருக்கு இந்த டேஸ்ட் கோயம்புத்தூர்ல எங்கேயும் கிடைக்கல தெய்வானை எதுவும் பேசாமல் பேரன் சாப்பிடும் அழகை ரசித்தாள்.

    படிப்பெல்லாம் முடிஞ்சுதுன்னு சொன்ன

    ஆமா பாட்டி... வேலையும் கிடைச்சுது... நான் தான் வேணாம்னு வந்துட்டேன்

    "ஏன் ராசா...?

    நீ ஊர்ல தனிமையில இருக்க இல்ல... அதான் உன் கூட இருந்துடலாம்ன்னு வந்துட்டேன்

    "இந்த ஊருல உனக்கு எங்கப்பா வேலை கிடைக்கப் போகுது...?

    Enjoying the preview?
    Page 1 of 1