Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal Uthirvathillai
Uravugal Uthirvathillai
Uravugal Uthirvathillai
Ebook106 pages41 minutes

Uravugal Uthirvathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதைகள் என்பது வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்பார்கள். எழுத்தாளன் தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, நிகழ்ச்சிகளை , அனுபவங்களை. கற்பனைகளை கதைகள் மூலம் படம்பிடித்து காட்டுவதுண்டு. அந்த வகையில் உறவுகள் உதிர்வதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பல மனிதர்களின் உறவுகளை அடையாளப் படுத்தும் சிறுகதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது. ஒரு சிறுகதை என்பது பிரச்சனைகளை மட்டுமே கூறிச் செல்வது கிடையாது, அதற்கு படைப்பாளியின் தீர்வும் பதிவாகியிருக்க வேண்டும், இந்த சிறுகதைப் தொகுப்பில் மனித வாழ்வின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டிருக்கிறது. மனித நேயத்தை மதிக்கத் தவறும் மனிதனின் குணத்தையும் அவன் தீர்வையும் சொல்வதில் தொடங்கி கபட மனிதர்களின் சூழ்ச்சிகளும், அத/ற்கான பரிகாரங்களும், காதலும், பிரிவும் அதன் வலிகளும் இணைந்ததே இந்த உறவுகள் உதிர்வதில்லை சிறுகதைத் தொகுப்பு நூல். வாசித்தால் வசமாவீர்கள்.

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580153308514
Uravugal Uthirvathillai

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Uravugal Uthirvathillai

Related ebooks

Reviews for Uravugal Uthirvathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal Uthirvathillai - Irenipuram Paul Rasaiya

    s

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறவுகள் உதிர்வதில்லை

    Uravugal Uthirvathillai

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/abibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே…

    1. உறவுகள் உதிர்வதில்லை

    2. அடித்துச் செல்லப்படாத ஆர்வங்கள்

    3. பரிகாரம்

    4. காதல் பாசிகள்

    5. வீட்டுக்காரர்

    6. வானத்தைப்போல

    7. மகன் தந்தைக்காற்றும் உதவி

    8. அவன் தான் நண்பன்

    9. . ஊரில் ஒரு மாதம்

    10 . காத்திருந்து காத்திருந்து

    11. சலவைக்குப் போன மனசு

    12. குழந்தை

    13. பர்தா

    14. தகுதியற்றதொரு தகப்பன்

    15. தங்க மனசு

    16. மகன்

    17. பெரிதினும் பெரிது

    1. உறவுகள் உதிர்வதில்லை

    வானம் பளிச்சென்று இருந்தது. சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படாத வாகனங்களைப் போல மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

    காற்று கூட்டமாக அலைந்து கொண்டிருந்தது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க கூடி நிற்கும் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவது போல, காற்று ஒன்று கூடியதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மரங்களின் உச்சிகள் தள்ளாடின.

    மரத்திலிருந்து ஒரு வயதான இலையின் உயிர் பிரிதல் சப்தம் மெல்லமாய் கேட்டது. காகிதம் ஒன்று காற்றில் பறப்பது போல இலை பறந்து அலைந்து திரிந்து கிளைகளில் மோதி பூமிக்கு வந்து சேர வெகு நேரமானது.

    தரையில் விழுந்த பழுத்த பலா மரத்தின் இலையை எடுத்து முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார் பொன்னுச்சாமி. இலைகளின் மீது படர்ந்திருந்த நரம்புகளைப் போல அவரது சதைகள் சுருங்கி பச்சை நரம்புகள் புடைத்து நின்றன.

    எழுபது வயதின் துவக்கம் பொன்னுசாமியை பந்தாடிக்கொண்டிருந்தது. கையில் சிறு தடி ஊன்றி நடக்கும் கிழப்பருவம் அவருக்கு சுமையாகத் தெரியவில்லை .

    இரண்டு வயது குழந்தையைப் போல வீட்டில் அடங்கிக் கிடக்காமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

    தடி ஊன்றி நடக்கும் சத்தம் சலசலத்தது. சிறிது தூர நடை, பிறகு சற்று நேரம் நின்று மூக்கு வழியாக சுவாசம் வெளியேற காத்திருந்தார்.

    மறுபடியும் நடை. இருபத்தி ஐந்து சென்ட் நிலத்தின் தெற்கு அற்றம் வடக்கு நோக்கி அவரது வீடு இருந்தது. முற்றம் தாண்டி முன்பகுதியில் காய்கறிகளும் பல வகையான மரங்களும் இறுதியில் வாழை மரங்களும் என ஒரு தோட்டமாகவே இருந்தது அவரது வீட்டின் முன்பகுதி.

    மொத்த நிலத்தையும் மதில் சுவர் சுற்றி வளைத்திருந்ததது. மதில் சுவரைத் தாண்டி வெளியே வருவதற்குள் அவருக்கு போதும் போதுமென்றாகியது.

    அவரது வீட்டின் வலப்பக்கத்தில் ஆறுமுகம் வீடு இருந்தது இவரைவிட அவருக்கு இரண்டு வயது தான் குறைவு. பொன்னுச்சாமி தடி ஊன்றிய படி அவரது வீட்டுக்கு நடந்தார்.

    பால்ய வயதில் இருவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவதும் பள்ளிக்கூடம் செல்வதும் வயதாகி, வாலிபர்களாகி திருமணங்கள் செய்து கொண்டதும், நாற்பது வயது வரை நட்பு ஆழமாய் இழையோடி இருந்தது.

    அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பகையில் முப்பது வருடங்கள் நிலைத்திருந்த நட்பு தொலைந்து, பெரும் விரோதம் வளர்ந்தது .

    பொன்னுச்சாமியின் வீட்டு முற்றத்தைத் தாண்டி மூன்றடி நடைபாதை கிழக்கிலிருந்து மேற்காக இருந்தது. பக்கத்திலிருக்கும் ஆறுமுகம் பிரதான சாலைக்கு வர, அந்த நடைபாதை ஒன்றே பொது வழியாக இருந்தது.

    நடைபாதையை தாண்டி சுந்தரத்தின் இருபது சென்ட் நிலம் காலியாக கிடந்தது. சுந்தரத்தின் மகள் திருமண செலவுக்கு அதை விற்பனை செய்ய முன்வந்தபோது பொன்னுச்சாமியும் அவரது அப்பா வேலுத்துரையும் சேர்ந்து நிலத்தை வாங்கிக் கொண்டார்கள்.

    நிலம் கைவசம் ஆனதும் குறுக்கே கிடந்த மூன்றடி நடைபாதை அவரது தந்தை வேலுத்துரையை உறுத்தியது.

    டேய் பொன்னு… மூன்று அடி வீதம் கிட்டத்தட்ட ஒரு சென்ட்க்கு மேல நடைபாதை போகுது, இத மதில் சுவர் கட்டி அடச்சிட்டோம்ன்னா வழிப்பாதை நிலத்தோட சேர்த்துக்கும், மொத்தமா ஒரு மதிலோ இல்ல முள்வேலியோ போட்டுட்டா ஒரே பிளாட்டா நீளமா கிடக்கும்…! தனது மகனிடம் யோசனை சொன்னார் வேலுத்துரை

    நல்ல யோசனை தான்,,, ஆனா குறுக்கே கிடக்கற நடைபாதையை அடைச்சிட்டோம்ன்னா ஆறுமுகம் குடும்பம் மெயின் ரோட்டுக்கு வரணும்னா நாம வாங்கின இடத்தை தாண்டி போய் திரும்ப நடந்து தெற்கே வரணும், அவன் நடந்து போறதுக்கு வேற வழித்தடமும் இல்ல… மனிதாபிமானத்தோடு சொன்னார் பொன்னுச்சாமி.

    அவன் எங்கேயோ சுத்தி போகட்டும் நமக்கென்ன… நம்ம நிலம் வழியா நடைபாதை இருக்கு நாம அடைகிறோம். இதை யார் வந்து கேக்கப் போறா… நீ அடைச்சு மதில் சுவர் கட்டிடு… வேலுத்துரை தீர்க்கமாய் சொன்னார். நீண்ட நேரம் விவாதித்தும் வேலுத்துரை விடுவதாக இல்லை. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக சொன்னான்.

    ஒரு வாரம் கழிந்து கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் நடைபாதையை அடைத்து மதில் சுவர் எழுப்ப வேலையாட்கள் அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

    ஆறுமுகம் நடைபாதை வேண்டுமென்று கேட்டது பிறகு சண்டையானது.

    பரம்பரை பரம்பரையா இந்த வழியாத்தான் போய்க்கிட்டு இருக்கோம்… இந்த வழிய நீங்க அடைச்சா… நாங்க சுத்தி தான் போகணும்… கொஞ்சம் கருணை காட்டுங்க… நடைபாதைய அடைக்காதீங்க…! எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். வேலுத்துரை கேட்பதாக இல்லை. அவரது மனம் இளகவில்லை.

    அஸ்திவாரம் தோண்டி கல் அடுக்கப்பட்டது. அவன் சண்டையிட்டு தளர்ந்து கண்ணீரோடு வீட்டுக்கு நடந்தான். பொன்னுசாமிக்கு அப்பாவின் பேச்சை தட்ட முடியவில்லை.

    நண்பர்

    Enjoying the preview?
    Page 1 of 1