Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?
Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?
Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?
Ebook116 pages42 minutes

Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும், எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு, சிறுகதை எழுதுவதற்கான வழிகாட்டி நூலாக மிளிர்கிறது. தான் கற்றதை மற்றவர்களோடு பகிர்வதற்கு பரந்த மனப்பான்மை வேண்டும். அந்த அரிய மனப்பான்மையுடன் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்த திரு. பால்ராசய்யாவுக்கு பாராட்டுக்கள். எஸ். ராமன் எழுத்தாளர்

ஐரேனிபுரம் பால்ராசய்யா ஒரு பக்கக் கதைகள் புனைவதில் உள்ள தம் அனுபவம் கொண்டு, “ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி” என்று ஒரு நூலை எழுதி வழிகாட்டுகிறார். கிட்டத்தட்ட 19 தலைப்புகளில் ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி என விளக்குகிறார். கதைகள் எழுதுவதற்கான வழிமுறைகள் சொல்கிறார். தன்னம்பிக்கைக் கதை முதற்கொண்டு துப்பறியும் கதை, விஞ்ஞானக் கதை வரை பல்வேறு கதைகளால் விளக்குவது எழுத்தாளரின் திறமைக்கு கிடைத்த அடையாளம் இந்த நூல். வாழ்த்துக்கள். இளவல் ஹரிஹரன் மதுரை.

Languageதமிழ்
Release dateMay 2, 2023
ISBN6580153309753
Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?

Related ebooks

Reviews for Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? - Irenipuram Paul Rasaiya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒருபக்கக் கதைகள் எழுதுவது எப்படி…?

    Orupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...?

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாழ்த்துரை

    E:\Priya\Book Generation\oru pakka kathaihal\1-min.jpg

    ஒரு கேள்விக்கு நீட்டி முழக்கி ஒரு பக்கத்துக்கு பதில் சொல்பவரைப் பார்த்திருக்கிறோம். ஒரே வரியில் புரியும் படி நச்சென்று சொல்லும் நபரையும் சந்தித்து இருக்கிறோம். வானில் சட்டென்று ஒளிந்து மறையும் மின்னலாய், மழை நேர வானவில்லாய் இன்று நேரம் சுருங்கிப் போய் இருக்கிறது. மாய்ந்து மாய்ந்து மணிக்கணக்காக எழுதும் கடிதங்களைப் பார்ப்பதே அரிதாகிப் போன நிலையில், மாற்றம் ஒன்றே மாறாததைப் போல மாற்றி யோசிக்கக் கற்றுக் கொடுக்கிறார் நூலின் ஆசிரியர் ஐரேனிபுரம் பால்ராசய்யா. ஒருபக்க கதைகள் என்றாலே இவரின் பெயர் முதலில் நினைவுக்கு வருவது மறக்க இயலாத ஒன்று. நாவல்கள், சிறுகதைகள் என்று களம் விரிந்த போதிலும், இம்மாதிரியான நறுக்குத் தெரித்தாற்போன்ற ஒருபக்க கதைகளின் ஈர்ப்பு குறைவதில்லைதான் இதன் முன்னோடி சுஜாதா என்று ஆரம்பிக்கிறார் தன் முதல் வரிகளை.

    மைக்ரோ கதைகள், மினியேச்சராய் சுருங்கிப்போன புதினங்கள் என இப்புத்தகம் பேச வந்திருப்பதும் இதைப்பற்றித்தான்.

    மற்றவர்களைக் காட்டிலும் ஒரு கலைஞனின் பார்வை எதிலும் கலையையே பிரதிபலிக்கும். ஒன்றுமே இல்லாத விஷயத்தில் கூட தனக்குண்டானதை தேடிக்கொள்ளும் ஆற்றல் அவனுக்கு உண்டு. வழிநெடுக இந்த புத்தகத்தில் அத்தனை டிப்ஸ்கள். புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அத்தனை விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது ஒருபக்க கதைகள் எழுதுவது எப்படி? என்ற இந்த புத்தகம்.

    கதையின் களம், கதையின் போக்கு, தேர்ந்தெடுக்கும் கதை மாந்தர்கள், ஒரு பக்க கதையிலும் கருத்து சொல்லலாம். ட்விஸ்ட் வைக்கலாம். நகைச்சுவை, உணர்வுகள், ஏன் வாசிப்பவர்களை அழக்கூட வைக்கலாம் என்று சொல்கிறார் ஆசிரியர்.

    கதைகளை வெளியே எங்கும் தேடாதீர்கள். நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, நம் முன்னே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள் கதை தன்னால் உருவெடுக்கும், அச்சம்பவங்களைக் கொண்டு கற்பனையையும் சேர்த்தால் கதை ரெடி.

    உதாரணத்திற்கு நான் இந்த புத்தகத்தில் வாசித்த, உண்மையான சம்பவங்களைக் கொண்டு எழுதிய கதை சிலவற்றில் எனைக் கவர்ந்தவற்றைச் சொல்கிறேன்.

    ஒரு கணவனும், மனைவியும் பேசிக்கொள்கிறார்கள். தினமும் அலுவலகத்திற்கு சைக்கிளில் போக வேண்டுமா? இப்போது கொஞ்சம் சேமிப்பு இருக்கிறதே லோன் போட்டு மோட்டர்சைக்கிள் எடுக்கலாமே? என்ற மனைவியின் கேள்விக்கு.....

    வேண்டாம் என்று மறுக்கிறார் கணவர். அதற்கு அவர் சொல்லும் காரணம், லைலன்சு எடுக்கும் வயது நிரம்பாத மகன் இப்போது நான் வண்டி எடுத்தால் அவனின் கவனம் சிதறும், தெரியாமல் வண்டியெடுக்கும் ஆர்வம் வரும் இதனால் தேவையற்ற சிக்கல் என்று தவிர்க்கிறார். தன் மகனின் எதிர்காலம் மற்றும், அவனால் ஏதேனும் தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்ற தந்தையின் அக்கறையைக் அக்கதை உணர்த்தியது.

    மற்றொன்று விழிப்புணர்வு பற்றிய கதை

    ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி உன்னிடம் பேசவேண்டும், உடனே அவள் கோபம் கொண்டு திட்ட தொடங்குகிறாள். வாசிக்கும் நமக்கு ஆறுவரிக்களுக்குள் அந்த பையன் மீது கோபம் வரும். ஆனால் அவனோ இன்டர்நெட் செண்டரில் தன் பயோடேட்டாவை அடிக்கும் பெண் தவறுதலாக தன் அலைபேசி எண்ணை அழிக்காமல் விட்டுவிட அது தவறான மனிதரின் கையில் கிடைத்தால் என்னாகும் என்று அவன் சொல்வதைப் போல முடிந்து போயிருக்கும் கதை. இறுதியில் அந்த பெண் மன்னிப்பும் நன்றியும் ஒரு சேர சொல்லிவிட்டு அடுத்த குறுஞ்செய்திக்கு காத்திருப்பாள்.

    இப்படி கதையின் துவக்கத்திலேயே ஒரு எதிர்பார்பினை நாவல், சிறுகதைகள் மட்டுமல்ல ஒரு பக்க கதைகளும் ஏற்படுத்த முடியும் என்பதை வெகு அற்புதமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

    சமூக அக்கறை மட்டுமல்ல செண்டிமெண்ட் இல்லாத வாழ்வு எங்கிருக்கிறது?

    மொபைல் வந்த காலத்திலும் நண்பர் எப்போதும் லேன் லைனை உபயோகிக்கிறார்? வியந்துபோய் காரணம் கேட்க, என் மகன் ஏழாவது படிக்கும்போது இந்த எண்ணை தேர்வு செய்து வெகு ஆசையாக வாங்கினான். தூக்கத்தில் கேட்டால் கூட சொல்வான். திடுமென்று அவன் காணாமல் போய்விட்டான் இப்போது வரையில் வரவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த லேன் போனுக்கு கால் செய்வான் என்று காத்திருக்கிறோம் என்று அவர் கலங்கிய கண்களோடு சொல்லி முடிக்கும்போது படிக்கும் நமக்கும் கண் கலங்கும்.

    ஒரு பக்க கதைகள் வெற்றியடைய காரணம் அதில் உள்ள மெசேஜ். ஒரு ஹோட்டலில் குடும்பமாக சாப்பிட, அதில் வயதான பெண்மணி ஒரு மீதம் உள்ள உணவுகளை பார்சல் செய்ய சொல்கிறார். குடும்பத்தினர் முகம் சுழிக்க அந்த பார்சல்களை வெளியே காத்திருக்கும் அதாரவற்றோருக்கு தருவதாக கதை முடிகிறது. பசி என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே என்று அந்த தாய் உள்ளம் சொல்வதாக ஒரு மெசேஜ். இப்படி வழி நெடுகிலும் ஒவ்வொரு ஒரு பக்க கதைக்குள்ளும் அநேக உணர்வுகளைக் கொட்டி வைத்திருக்கிறார்.

    சரி... இந்த புத்தகம் கதை எழுத மட்டுமல்ல, அதை பத்திரிக்கைகளுக்கு எப்படி அனுப்ப வேண்டும். அதை எப்படி குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தகவல்களையும் உள்ளடக்கி இருக்கிறது. ஏதோ ஒரு இடத்தில் இருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1