Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3
Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3
Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3
Ebook250 pages1 hour

Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசகர்களின் கேள்வி - பதில்களும் உருவகங்களாகவும், கவிதைகளாகவும், குட்டிக்கதைகளாகவும், மக்களுக்கு புரியும் சாதாரண பாணியில் தெளிவாகச் சொல்லிருக்கிறார் பாக்யராஜ். இவற்றை வாசிக்கும் ஆர்வத்துடன் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுடன் நாமும் ஒருவராய் வாங்க வாசித்து மகிழ்வோம்...

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580160309359
Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3

Read more from K. Bhagyaraj

Related to Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3

Related ebooks

Reviews for Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3 - K. Bhagyaraj

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    உங்கள் பாக்யராஜின் கேள்வி-பதில்கள் - பாகம் 3

    Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3

    Author:

    கே. பாக்யராஜ்

    K. Bhagyaraj

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-bhagyaraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நம் உபநிஷத்தில் தைத்திரியப் பறவையைப் பற்றி ஒரு விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அது கரடுமுரடான உணவை இயற்கையிலிருந்து எடுத்து சாப்பிட்டுத் தன் வாய்க்குள் வைத்து மென்று பக்குவப்படுத்தி தன் குஞ்சுகள் எளிதில் சாப்பிடுகிற மாதிரியும், எளிதில் ஜீரணிக்கிற மாதிரியும் கொடுக்குமாம். இப்படி எத்தனையோ தைத்திரியப் பறவைகள் பக்குவப்படுத்திய செய்திகளைத்தான் இந்த குஞ்சு மூன்றாம் பாகமாக உங்களோடு பகிரிந்து உண்ணுகிறது.

    முதல் இரண்டு கேள்வி-பதில் பாகங்களுக்கும் பேராதரவு தந்த வாசக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

    என்றும் அன்புடன்

    கே. பாக்யராஜ்

    நாகேந்திரன், மேல்விசாரம்.

    ஜூலை 13-19,1990.

    கேள்வி: என் நண்பன் புத்திசாலி. இருந்தாலும் எந்த ஒரு காரியத்திற்கும், ‘எதுக்கும் என் மனைவிகிட்டே ஒரு வார்த்தை கலந்து சொல்றேன்’ என்கிறான். இந்த முட்டாள்தனத்தை எப்படி மாற்றுவது?

    பதில்: உச்சி வெய்யில் நேரடியா நம்ம உடம்புல பட்டு, தகதகன்னு எரியற மாதிரி கொளுத்தும், இருந்தாலும் சமாளிச்சு நடப்போம். ஆனா அதே வெய்யில், ஆத்து மணல், இல்லே பீச் மணல்ல பட்டு கொதிக்கறப்போ, அதுல நாம காலை வைக்க முடியாம குதிக்கறோம். அதாவது, அதே சூரிய உஷ்ணம் நேரடியா பட்றதைவிட, மணல்ல இறங்கி அது மூலமா படும்போது, உக்கிரம் அதிகமா ஆயிடுது.

    உங்க நண்பர் புத்திசாலிதான். இருந்தாலும், சில விஷயங்கள் பொண்டாட்டிகிட்டே போய் வந்தா இன்னும் கூடுதலான பவர் கிடைக்கும்னு விவரமா வேலை செய்யறார். நல்ல விஷயங்களைக் கெடுக்க வேண்டாம். விடுங்க!

    செந்தில்நாதன், கடையம்.

    ஜூலை 13-19, 1990.

    கேள்வி: யாராவது ஏதாவது தவறு செய்யும்போது, ‘சரியான பட்டிக்காட்டானா இருக்கியே’ என்று கிண்டலடிக்கிறார்கள். பட்டிக்காட்டு வாசிகள் எல்லோருமே விவரமற்றவர்களா?

    பதில்: ஒரு பட்டணத்தான் பட்டிக்காட்டுக்குப் போனான். ஒரு பெரியவர்கிட்டே, ஏங்க! சோலையூர் எது?ன்னான். அடுத்த ஊர்தான் தம்பின்னாரு பெரியவர். அந்த ஊருக்குப் போக எவ்வளவு நேரமாகும்னு பட்டணத்துத் தம்பி கேட்க, பெரியவர், பேசாம நடந்து போன்னாரு.

    அந்த ஊர் போக எவ்வளவு நேரமாகும்னு கேட்டேன்

    அதான் பேசாம நடந்து போன்னு சொல்றன்ல!

    தம்பி சலிப்போட ஒரு பதினைஞ்சு இருபது அடி நடக்க, பெரியவர் இப்ப தம்பியக் கூப்பிட்டு, தம்பி! நீ சோலையூர் போக ஒரு மணி நேரமாகும்ன்னாரு. தம்பி எரிச்சலோட, ஏய்யா! உனக்கென்ன பைத்தியமா? ஒரு மணி நேரம் ஆகும்னு முதல்லயே சொல்ல வேண்டியதுதானே?ன்னு கேட்க, பெரியவர்,

    அதெப்படிப்பா சொல்றது? நீ என்ன வேகத்துல நடக்கறேன்னு பார்க்கத்தான் முதல்ல ‘பேசாம நட’ன்னேன்.. கொஞ்சம் நடந்ததும் உன் வேகம் புரிஞ்சு, ‘ஒரு மணி’ன்னு சொன்னேன். ‘முதல்லயே ஏன் சொல்லலை?’ன்னு நீ முட்டாள்தனமா கேள்வி கேட்டுட்டு, என்னை பைத்தியம்ங்கறேன்னாரு.

    பட்டிக்காட்டுலயும் இப்படி நுணுக்கமானவங்க நிறைய உண்டு.

    ஜி. நல்லசிவம், கவுந்தப்பாடி.

    ஜூலை 13-19, 1990.

    கேள்வி: தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் அண்ணன் தம்பிகள்தான் என்று கலைஞர் பேசியிருக்கிறாரே?!

    பதில்: துரியோதனனும் தர்மரும் கூட அண்ணன் தம்பிகள்தான்!

    தேவிசுந்தர், போடி பாளையம்.

    ஜூலை 13-19,1990.

    கேள்வி: பணக்காரனுக்கு மரியாதை அதிகமா? படித்தவனுக்கு மரியாதை அதிகமா?

    பதில்: மாவீரன் அலெக்ஸாண்டர் பல நாடுகள் மேல படையெடுத்து பல வெற்றிகளைப் பெற்றவர். அப்படிப் படையெடுத்துப் போகும்போது, தன்னோட தனிப்பட்ட உடமைகளா சில பொருட்களைக் கையோட எடுத்துட்டுப் போவாரு...

    அதெல்லாம், நூதனமான சக்தி வாய்ந்த ஆயுதங்களோ, பொன்னோ, மணியோ, வைரமோ வேற எதுவுமில்லை...

    நம்ம ஊர் ராமாயணம், மகாபாரதம் போல, கிரேக்க நாட்டு ‘ஹோமர்’ங்கற கவிஞன் எழுதின ‘இலியட்’ (ILIAD) ‘ஒடிஸ்ஸி’ (ODYSSEY)ங்கற காப்பிய புத்தகங்களைத்தான் கையோட எடுத்துட்டுப் போவாரு.

    ஒரு தடவை போர்ல, விலைமதிப்பற்ற தங்கப்பெட்டி ஒண்ணை அலெக்ஸாண்டர் படை எதிரிகளிடமிருந்து கைப்பற்றியது. அதை அலெக்ஸாண்டர்கிட்டே நீட்டி,

    அரசே! விலை மதிப்பே இல்லாத இந்தத் தங்கப்பெட்டியை எங்கே வைப்பது?ன்னு தளபதி கேட்டாரு.

    A picture containing text Description automatically generated

    அதுக்கு அலெக்ஸாண்டர், நீ நினைக்கிற மாதிரி இது விலை மதிப்பில்லாதது அல்ல... இதோட விலையை யாராவது பொற்கொல்லர்கிட்டே கேட்டா, மதிப்பு போட்டு சொல்லிடுவாங்க.. எங்கிட்டே இருக்கிற காப்பியங்களை பத்திரமா வைக்கறதுக்கு இந்தப் பெட்டியை உபயோகப்படுத்திக்கோங்க அப்பத்தான் இந்த பெட்டிக்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் வரும்..னாரு. அதனால, பணக்காரன்கூட படிப்பறிவுள்ளவனாக இருந்தால், இன்னும் மதிப்பும் மரியாதையும் கூடும்.

    கே, ராஜேந்திரன், பட்டுக்கோட்டை.

    ஜூலை 13-19,1990.

    கேள்வி: தமிழ்நாட்டு ரசிகப் பெருமக்களின் சார்பாகக் கேட்கிறேன். எங்களுக்குப் பிடித்தது இளையராஜாவின் இசையும், டி. ராஜேந்தரின் இயக்கமும். பிடிக்காதது இளையராஜா பாடுவதும், டி. ராஜேந்தர் நடிப்பதும். இது பற்றி தங்கள் கருத்து என்னவோ?

    பதில்: இளையராஜா பாடி லட்சக்கணக்கான கேசட் சேல்ஸ் ஆகுது.

    டி ராஜேந்தர் நடிச்ச படங்கள் கோடிக்கணக்குல வசூல் பண்ணியிருக்கு.

    தனி மரம் தோப்பாகாது. ஒரு சிலருக்குப் பிடிக்கலைங்கறதுக்காக ஊருக்கே புடிக்காதுன்னு நினைக்கறது சரியில்லை.

    கஸ்தூரியம்மாள், சிதம்பரம்

    ஜூலை 13-19,1990.

    கேள்வி: பாக்யராஜ்! நான் எவ்வளவோ பக்தியோடு கும்பிட்டும் தெய்வம் என் கஷ்டத்துக்குக் கை கொடுக்கவில்லையே?

    பதில்: உங்களை மாதிரியே ஒரு அம்மாவுக்கு திடீர்ன்னு ஒரு கனவு. அதுல, அந்தம்மா சின்ன வயசிலேருந்தே சாமி, அந்தம்மாகூட பேசிட்டே நடந்து வர்ற மாதிரி தெரிஞ்சுது... சாமியோட உருவம் தெரியலை... காலடித்தடம் மட்டும் தெரிஞ்சுது. குரல் கேட்டுக்கிட்டே வந்தது. அப்ப, அந்தம்மாவுக்கு 38 வயசு. அந்த 38 வருஷமும் சாமி கூடவே வந்த மாதிரி இருந்தது. ஆனா ‘திடீர் திடீர்’ன்னு பார்த்தா நடுவுல சாமியோட காலடித்தடம் காணலை.. அந்தம்மா யோசிச்சுப் பார்த்தாங்க.. தனக்கு கஷ்டம் வந்த நேரத்துலயெல்லாம் சாமியோட காலடித் தடம் இல்லாம இருந்தது. கனவு கலைஞ்சு அந்தம்மா முழிச்சுட்டாங்க.. நேரா சாமி ஃபோட்டோகிட்டே போய், ஏன் சாமி! 38 வருஷம் என் கூட வந்தியே. கஷ்டமான நிலைமையில மட்டும் அப்பப்ப என்னை ஏன் விட்டுட்டுப் போனே?ன்னு கேட்டாங்க.. அதுக்கு சாமி அசரீரியா குரல் கொடுத்தது. பெண்ணே! நான் எப்பவுமே உன்னைப் பிரியலையே...?

    A picture containing text Description automatically generated

    இல்லை சாமி! என்னுடைய கஷ்டமான காலகட்டத்துல உன்னுடைய காலடிச்சுவடே இல்லை. என்னுடைய காலடிச்சுவடுதான் இருந்தது

    அப்ப சாமி சிரிச்சுட்டு, பைத்தியம்! கஷ்டமான காலத்துல உன்னை நான் முதுகுல தூக்கிக்கிட்டு சுமந்து வந்தேன்.. அதனாலதான் உன் காலடிச் சுவடு இல்லை. நான் உன்னை கஷ்டத்துல முதுகுல சுமக்கலேன்னா, நீ இன்னும் எவ்வளவோ சிரமத்திற்கு ஆளாகி, இந்நேரம் ஏதாவது ஆகியிருக்கும்னது.

    வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வர இருக்குன்னு நம்மளால் கணக்கிட முடியாது. அதனால், வந்த கஷ்டங்களை, நல்லவேளை! இதோட தெய்வம் காப்பாத்துச்சேன்னு நம்பிட்டு, தொடர்ந்து வாழறதுதான் அமைதியைக் கொடுக்கும்.

    ஆர், கே. லிங்கேசன், கிருஷ்ணபுரம்.

    ஜூலை 13-19,1990.

    கேள்வி: ஜால்ரா - தவில் எது பிடிக்கும்?

    பதில்: திருமணத்தில் தவில் பிடிக்கும். பஜனையில் ஜால்ரா பிடிக்கும்.

    என் சண்முகம், பி.ஏ., திருவண்ணாமலை.

    ஜூலை 13-19, 1990.

    கேள்வி: ‘நாத்திகம் ஒரு பிழைப்பு’ என புலவர் கீரன் கூறியுள்ளதை ஒப்பு கொள்கிறீர்களா?

    பதில்: நாத்திகமாவது பரவாயில்லை - பிழைப்பு.

    ஆத்திகம் பிசினஸே ஆகிவிட்டது. புலவர் கீரன் போன்றோர் இதைக் கண்டுக்க வேண்டும் - கண்டிக்க வேண்டும்.

    கண்ணபிரான், சாத்தூர்.

    ஜூலை 13-19, 1990.

    கேள்வி: திருமணத்திற்குப் பின் மனைவியிடம் ஏதோ ஒன்று பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து செய்வது தவறா? (தவறு என்றால், மேல்நாடுகளில் எப்படி அதை ஏற்றுக்கொண்டார்கள்…?)

    பதில்: நீங்க கேட்ட மாதிரி ஒரு பஞ்சாயத்து. புருஷன், ‘இவ எனக்கு வேண்டாம்’னு ஏதோ காரணம் சொல்லி, பொண்டாட்டிய தள்ளி வைக்க நியாயம் கேக்கறான்.

    பஞ்சாயத்தும், இதோ பாரும்மா, புருஷனுக்குப் புடிக்கலேங்கும்போது இனி என்ன பண்றது? உனக்கு ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கிட்டு உன் ஊருக்குப் போன்னு தீர்ப்பு சொல்லுது.

    பொண்டாட்டி யோசிச்சுட்டு,

    நான் இவர் வீட்டுக்கு வரும்போது என்னவெல்லாம் கொண்டு வந்தேனோ, அதைக் கொடுக்கச் சொல்லுங்க.. போறேன்னாள்...

    உடனே புருஷன் ஒரு சாக்கு நிறைய அவ கொண்டு வந்த சீதனத்தைக் கட்டிக் கொடுத்து, இவ்வளவுதான் இவ கொண்டுவந்த சொத்துன்னான்.

    அப்ப,பொண்டாட்டி, இன்னொண்ணு இருக்குன்னா.

    என்ன?ன்னு புருஷனும், பஞ்சாயத்தும் கேட்க, அந்தப் பொண்டாட்டி,

    A picture containing text Description automatically generated

    என் வீட்ல இருந்து வரும்போது நான் கன்னி கழியாத சொத்தோட வந்தேன். அதே மாதிரி என்னை அனுப்பச் சொல்லுங்கன்னு சொல்ல, பஞ்சாயத்தும், புருஷனும் பேய் முழி முழிச்சாங்க…

    நம்ம ஊர் கலாச்சாரமும், பண்பாடும் ‘கற்பை’ ஒரு பெரிய சொத்தா மதிக்குது. ஆனா மேல்நாட்டுல அப்படி இல்லை. ஆனா இப்ப, அங்கேயும் அப்படி இருக்கிறதுதான் மரியாதைங்கற உணர்வு வந்திருச்சு...

    அதனால நம்ம கலாச்சாரப்படி புருஷன் விவாகரத்து பண்றது பொண்டாட்டிய கொலை பண்ற மாதிரி… பொண்டாட்டியே விவாகரத்தை விரும்பினா, அது... அவளே தற்கொலை பண்ணிக்கற மாதிரி…!

    எம். தமிழ்ச்செல்வி, வெள்ளாங்குப்பம்.

    ஜூலை 13-19, 1990.

    கேள்வி: 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதினால் திருமணம் ஆகும் என்கிறார்களே? உண்மையா அண்ணா...?

    பதில்: ஒருத்தருக்கு சரியான காய்ச்சல். பக்கத்து வீட்டுக்குப் புதுசா வந்த ஒரு இளவயசு டாக்டர் ஒரு மாத்திரை கொடுத்தாரு. இரண்டு நாள் கழிச்சும் காய்ச்சல் நிற்கலை… இளவயசு டாக்டர், அந்த நோயாளியை, தானே ஒரு பெரிய டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனாரு. அந்தப் பெரிய டாக்டர் ‘செக்’ பண்ணி, முந்தின டாக்டரை, ‘என்ன மருந்து கொடுத்தீங்க?’ன்னு. கேட்க, அவர் மருந்தைச் சொல்ல,

    பெரிய டாக்டர், அது கரெக்ட் மருந்துதானே! ஏன் காய்ச்சல் நிற்கலை?ன்னாரு.

    அதுக்கு இளவயசு டாக்டர், மருந்து கரெக்ட். ஆனா, நான் சின்ன வயசு. அதனால நான் மருந்து கொடுத்தப்போ, நோயாளி நம்பிக்கை இல்லாமே, சந்தேகத்தோட சாப்பிட்டாங்க. அதுதான் சரியாகலை... இப்ப பிரபலமான உங்ககிட்டே வந்ததும் நோயாளிக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கு... நீங்க அதே மருந்தைக் குடுங்க. உடனே குணம் ஆயிடும்னாரு - குடுத்தாரு. உடனே குணமாச்சு... நான் நடக்கும்னு சொல்லி நீங்க 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதறதை விட, நீங்களா நம்பிக்கை வச்சு, உங்க அம்மா பேரை 1008 முறை எழுதினாலும் நடக்கும்.

    ஹரிபாபு, (உதவி இயக்குனர்) சென்னை.

    ஜூலை 13-19,1990.

    கேள்வி: விஷயமுள்ள டைரக்டர்கூட, நாலு பேரைக் கூட்டி வைத்து ஹோட்டலில் கதை விவாதம் செய்வது தேவையானதா?

    பதில்: நெருப்புக்கு தேவையான மருந்து நெருப்புக் குச்சியிலதான் இருக்கு. ஆனா, வெறுங்குச்சியில நெருப்பு வருமா? குச்சி ஏதாவது ஒண்ணுகூட உரசணுங்க...

    விஷயமுள்ள டைரக்டர்களும் நாலு பேருடன் விவாதம் நடத்தினாத்தான் கதை மெருகேறும்.

    எஸ். சுமதி, குற்றாலம்.

    ஜூலை 20-26, 1990.

    கேள்வி: உலகத்திலேயே அதிக தூரமும், அதிக நேரமும் வாசனை வீசும் பூ எது?

    பதில்: பண்பு. எந்த வாசனையுள்ள பூ என்றாலும், அதனுடைய நறுமணம் காற்றோடு போகுமே தவிர, காற்றை எதிர்த்துச் செல்லாது.

    ‘ஆனால்’ நற்பண்புள்ள ஒரு மனிதனைப் பற்றிய செய்தி, காற்றையும்

    Enjoying the preview?
    Page 1 of 1