Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajesh Kumarin Sirantha Sirukathaigal
Rajesh Kumarin Sirantha Sirukathaigal
Rajesh Kumarin Sirantha Sirukathaigal
Ebook276 pages2 hours

Rajesh Kumarin Sirantha Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well knows for his detective and thriller novels. He had also written excellent short stories in social theme. This is a collection of short stories published in popular magazines.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402118
Rajesh Kumarin Sirantha Sirukathaigal

Read more from Rajesh Kumar

Related to Rajesh Kumarin Sirantha Sirukathaigal

Related ebooks

Reviews for Rajesh Kumarin Sirantha Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajesh Kumarin Sirantha Sirukathaigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ராஜேஷ்குமாரின் சிறந்த சிறுகதைகள்

    Rajesh Kumarin Sirantha Sirukathaigal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனசெல்லாம் பந்தலிட்டு…

    2. நேற்று போல்இன்று இல்லை...

    3. நியூஜெர்ஸி தேவதை

    4. அன்றே! அங்கே! அப்பொழுதே!

    5. அருந்ததியும் 6 தோட்டாக்களும்…

    6. பூவில் செய்த ஆயுதம்

    7. நீயே... நீயே... நானே நீயே...!

    8. அன்புள்ள எதிரி

    9. ஹரிதாவும் 41 கலைகளும்

    10. நுனிப்புல்!

    11. பெண் பார்க்கப் போறேன்…!

    12. ஒரு விடியற் காலையில்…

    13. சத்யம் 1999

    14. இரை!

    15. யார் குற்றம்?

    16. ஒரே சாட்சி

    17. ஜெயிக்க முடியாத நிமிஷங்கள்

    18. சேவக்குத்து

    19. நான் அவனைக் காதலிக்கிறேன்

    20. பூட்டு

    21. மூங்கில் காட்டு பங்களா

    22. வாழ்ந்து பார்க்க வேண்டும்

    23. உன்னைத் தொட்டவன்

    24. ஹோட்டல் சாப்பாடு

    25. சங்ககிரி சாந்தா

    26. நள்ளிரவு வானவில்கள்

    27. தெய்வம் ஒன்று உண்டென்றிரு…

    28. கலிபோர்னியாவும் காயத்ரியும்!

    29. அந்த ஒரு வார்த்தை!

    ராஜேஷ்குமாரின் சிறந்த சிறுகதைகள்

    1. மனசெல்லாம் பந்தலிட்டு...

    யூரோலாஜிஸ்ட் டாக்டர் சூரியநாராயணன் தனக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த அந்த ஐந்து இளைஞர்களையும் ஒரு கவலைப் பார்வை பார்த்துவிட்டு மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

    உங்க அப்பா மஹாதேவ சாஸ்திரிகள் ஒரு பெரிய பக்திமான். மகாபாரதக் கதையை அவர் கதாகாலட்சேபம் பண்ணாத கோயிலே கிடையாது. நூற்றுக்கணக்கான மேடைகளில் ஆன்மீகச் சொற்பொழிவு பண்ணியிருக்கார். இருந் தாலும் அவர்க்கு இப்படி ஒரு பெரிய ஆரோக்யச் சீர்குலைவு ஏற்படும்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்தது இல்லை. ரெண்டு கிட்னியும் இப்போ ஃபெயிலர் கண்டிஷன்ல இருக்கு. உடனடியாய் அவர்க்கு ஒரு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தியாகணும். பஞ்ச பாண்டவர்கள் மாதிரி நீங்க அஞ்சு பேரும் அவர்க்கு மகன்களாய் இருக்கும்போது… இது ஒரு பிரச்னையாய் எனக்குத் தெரியலை… மகாபாரதத்தின் மேல் அவர்க்கு இருக்கிற ஈடுபாட்டின் காரணமாய் உங்க அஞ்சுபேர்க்கும் தர்மலிங்கம், பீமராஜ், அர்ஜூன், சகாதேவன், நகுல்ன்னு பேர்களை வெச்சு, நல்லாவும் படிக்கவெச்சு வேலைகளை வாங்கிக் கொடுத்து அஞ்சு மருமகள்களையும் எடுத்துட்டார். பேரன் பேத்திகளையும் பார்த்துட்டார். இருந்தாலும் அவர் இன்னும் ஒரு பத்து வருஷகாலமாவது உயிரோடு இருந்து கதாகாலட்சேபங்களைப் பண்ணனும்ன்னு ஆசைப்படறார்.

    டாக்டர் பேசப் பேச - தர்மலிங்கம் குறுக்கிட்டான். டாக்டர்! எங்களுக்கு அம்மா இறந்த பிறகு அப்பாதான் எல்லாம்! கோயில் கோயிலாய் சுத்தி மகாபாரத கதாகாலட் சேபம் பண்ணியவர்க்கு கடவுள் இந்தச் சோதனையைக் கொடுத்திருக்கார். நீங்க சொன்ன மாதிரி அப்பாவுக்கு நாங்க பஞ்சபாண்டவர்கள் மாதிரிதான். வீட்டுக்கு மூத்தவன் நான். அப்பாவுக்கு நீங்க என்னோட கிட்னியைத்தான் பொருத்தணும். ஏன்னா அப்பாவுக்கு என் மேலத்தான் மத்தவங்களைக் காட்டிலும் பிரியம் அதிகம்…

    பக்கத்தில் இருந்த பீமராஜ் குறுக்கிட்டான். டாக்டர்! அண்ணன் புரியாமே பேசிட்டிருக்கார். அப்பாவுக்கு நான் இல்லேன்னா எதுவும் ஓடாது. எனக்கு அவர் கல்யாணம் பண்ணி வைக்கிறவரைக்கும் நான் அவர்க்கு ஒரு பி.ஏ. மாதிரி இருந்து எல்லா ஊர் கதாகாலட்சேபங்களுக்கும் போயிட்டு வந்தேன். அப்பாவோடு அதிகமா பழகினது நான் ஒருத்தன் தான். அந்த வகையில் பார்க்கப் போனால் என்னோட கிட்னிதான் அப்பாவுக்கு பொருத்தமாய் இருக்கும். நீங்க உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்...

    மூன்றாவது நபராய் உட்கார்ந்திருந்த அர்ஜுன் இரண்டு அண்ணன்களையும் ஒரு கேலிப் பார்வை பார்த்துவிட்டு டாக்டரிடம் திரும்பினான். டாக்டர்…! என்கிட்டே நீங்களே எத்தனையோ தடவை ‘அர்ஜுன்! உங்கப்பாவுக்கு உன் மேலத்தான் ரொம்பப் பாசம்... நீ ரொம்ப வேகமாக பைக் ஓட்டறியாம்… என்கிட்டே சொல்லிச் சொல்லி கவலைப்படறார். உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர் தாங்க மாட்டார்’ன்னு சொன்னதுண்டா இல்லையா...? ஸோ… என் மேல ரொம்ப ரொம்பப்பிரியம் வெச்சிருக்கிற அப்பாவுக்குநான்தான் கிட்னி கொடுப்பேன்.

    டாக்டர் சின்னப் புன்னகையோடு நகுலையும் சகாதேவனையும் ஏறிட்டார். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?

    டாக்டர்...! எங்களுடைய மூணு அண்ணன்களைக் காட்டிலும் நாங்க யங் அண்ட் எனர்ஜிடிக். எங்ககிட்டயிருந்து ஒவ்வொரு கிட்னியை எடுத்து அப்பாவுக்கு ரெண்டு கிட்னியா வெச்சுருங்களேன்.

    டாக்டர் சூர்யநாராயணன் சிரித்தார். நீங்க இப்படி போட்டி போட்டுகிட்டு கிட்னி கொடுக்க முன் வர்றதை நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கு. உங்க அஞ்சு பேர்ல யாராவது ஒருத்தர்தான் அப்பாவுக்கு கிட்னியைக் கொடுக்க முடியும். அந்த ஒருத்தர் யார்ங்கிறதை திருவுளச்சீட்டு எழுதிப்போட்டு முடிவு பண்ணிக்கலாம்… சொன்ன டாக்டர். ஐந்து துண்டு சீட்டுகளில் அவர்களின் பெயர்களை எழுதி மேஜையின் மேலிருந்த பிள்ளையார்பட்டி விநாயகர்க்கு முன்பாய் குலுக்கிப் போட்டார்கண்களை மூடிக் கொண்டு ஒரு சீட்டை எடுத்தார்… பிரித்துப் பார்த்தார்... அர்ஜுன்.

    அர்ஜுன் நாற்காலியினின்றும் எம்பிக் குதித்து டாக்டரின் கைகளைப் பற்றிக் கொண்டு முத்தமிட்டான்.

    டாக்டர் அப்பாவோட உடம்புக்குள்ளே இயங்கப்போறது என்னோட கிட்னிதான்னு நினைக்கும்போது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு டாக்டர். ஆபரேஷன் என்னிக்கு டாக்டர்...?

    அடுத்த வாரத்துல ஒரு நாள்... ஃபிக்ஸ் பண்ணிக்குவோம்…

    மேலும் ஒரு அரைமணி நேரம் இருந்து பேசிவிட்டு ஐந்து பேரும் கிளம்பிப் போனதும் டாக்டர் சூர்யநாராயணன், அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே இருந்த அறைக்குப் போனார். திரைச்சீலைக்குப் பின்னால் நாற்காலி ஒன்றில் மறைவாய் உட்கார்ந்திருந்த மஹாதேவ சாஸ்திரிகளை நெருங்கினார். கண்ணைச் சிமிட்டிக் கொண்டு கேட்டார்.

    இப்ப... என்ன சொல்றீங்க சாஸ்திரிகளே…! கிட்னி பற்றி பேச்செடுத்தா அஞ்சு மகன்களும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி கிட்னி கொடுக்க மறுத்துருவாங்கன்னு சொன்னிங்களே...? என்ன நடந்ததுன்னு பார்த்தீங்களா...? உங்களுக்குக் கிட்னி கொடுக்க அஞ்சு பேருமே ‘நீ... நான்…'ணு முன்வந்தாங்க. ஒரு சுமுக முடிவு கிடைக்கணும்ங்கிறதுக்காக நான்தான் திருவுளச்சீட்டு எழுதிப் போட்டேன். அர்ஜுன் பேர் வந்தது...

    மஹாதேவ சாஸ்திரிகளின் கண்களில் நீர் கண்ணாடித் தாளாய் பளபளத்தது. டாக்டர்... ஊர் உலகத்துல நடக்கிற மாதிரிதான் என்னோட மகன்களும் நடத்துக்குவாங்களோன்னு பயப்பட்டேன். அந்த பயம் எவ்வளவு பெரிய முட்டாள் தனம்ங்கிறதை இப்பப் புரிஞ்சுகிட்டேன்.

    மகன்களுக்கு பாண்டவர்களோட பெயர்களை வெச்சு இருக்கீங்க. அவங்கதப்பு பண்ணுவாங்களா என்ன...?

    டா… க்… ட... ர்...

    சொல்லுங்க...

    எனக்கு ஒரு கிட்னிதர்றதால அர்ஜூனுக்கு எந்த பாதிப்பும் இருக்காதே?

    நோ… நோ… ஒரு கிட்னி ஆரோக்யமா இருந்தாலே ஒருத்தர் நூறு வயசு வரைக்கும் வாழலாம்... அர்ஜுனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நீங்க அதைப்பத்தியே நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்க வேண்டாம்...

    மறுநாள் காலை பத்துமணி.

    டாக்டர் சூரியநாராயணனின் அறையில் அவர்க்கு எதிரில் தர்மலிங்கம், பீமராஜ், அர்ஜுன், சகாதேவன், நகுல் ஐந்து பேரும் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, பின்னால் அவர்களுடைய மனைவிகள் நின்றிருந்தார்கள்.

    அர்ஜுன் கேட்டான்.

    டாக்டர் அப்பாவுக்கு இப்போ சந்தோஷம்தானே?

    பயங்கர சந்தோஷம்… இப்படிப்பட்ட மகன்களைப் பெத்துக்க போன ஜென்மத்துல நான் ரொம்பவும் புண்ணியம் பண்ணியிருக்கணும்னு பரவசப்பட்டுப் போய்ட்டார்.

    டாக்டர்...! நீங்க முன்கூட்டியே எங்க அஞ்சு பேர்கிட்டே விஷயத்தைச் சொல்லிட்டதால. அப்பா. உள்ளறையில் இருக்கிறது தெரிஞ்சுகிட்டு கிட்னி கொடுக்க போட்டி போடற மாதிரி எங்களால நடிக்க முடிஞ்சுது. அர்ஜுன்தான் உங்க கையை எல்லாம் பிடிச்சு முத்தம் குடுத்து கொஞ்சம் ‘ஓவர் ஆக்ட்’ பண்ணிட்டான் தர்மலிங்கம் சொல்ல –

    ஐந்து பேர்களின் மனைவிமார்களும் சிரித்தார்கள்.

    பீமராஜ் சொன்னான்: டாக்டர்... ஃபேமிலி டாக்டர்ன்னா அது உண்மையிலேயே உங்களுக்குத்தான் பொருந்தும். அப்பாவுக்கும் மனக் கஷ்டம் இல்லாமே எங்களுக்கும் பிரச்னை இல்லாமே ஒரு சீரியஸான விஷயத்தை ரொம்பவும் சுமுகமா ஹேண்டில் பண்ணியிருக்கீங்க... இந்த உதவியை நாங்க என்னிக்குமே மறக்க மாட்டோம்.

    டாக்டர் சிரித்தார். ஒரு குடும்ப டாக்டரோட முக்கியமான வேலையே அந்தக் குடும்பத்தில் இருக்கிறவங்களை சந்தோஷமான மனநிலையில் வெச்சுக்கறதுதான். அதை மனசுல வெச்சுகிட்டுத்தான் இப்படியொரு ட்ராமாவை 'செட்’ பண்ணினேன். மாற்றுக் கிட்னி பொருத்திக்கப் போற அப்பாவுக்கு அது தன்னோட மகனின் கிட்னின்னு தெரிஞ்சா அதுவே அவரோட ஆரோக்கியத்துக்குப் பெரிய பலம். அந்த பலத்திலேயே அப்பாவோட ஆயுள் கூடும்.

    நகுல் கேட்டான். அப்பாவுக்குப் பொருத்தப்போகிற மாற்று கிட்னிக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களா டாக்டர்…?

    புரோக்கர் மூலமா சொல்லிவிட்டிருக்கேன்… நாளை கழிச்சு மறுநாள் தகவல் வந்துடும். எனக்கு தகவல் வந்ததும் உங்களுக்கு போன் பண்றேன். வந்துருங்க… பணத்தையும் கொண்டாந்துருங்க.

    கிட்னிக்கு ரேட் பேசிட்டீங்களா டாக்டர்?

    ம்... பேசிட்டேன்...

    எவ்வளவு டாக்டர்?

    ரெண்டு லட்சம்...

    அதிகமா தெரியுது டாக்டர்.

    ஒரு ஆரோக்கியமான இளைஞனின் கிட்னிக்கு அதுதான் ரேட் அந்த ரெண்டு லட்சத்தை மிச்சம் பண்ணனும்ன்னா உங்கள்ல யாராவது ஒருத்தர் கிட்னி கொடுக்க வேண்டியது தான்.

    'அய்யோ டாக்டர்... அது வேண்டாம்ன்னுதானே இவ்வளவும் பண்ணிட்டிருக்கோம்."

    டாக்டர் குரலைத் தாழ்த்தினார். இந்த அறைக்குள்ளே நடக்கிற எந்த ஒரு விஷயமுமே உங்கப்பாவோட நாலேட்ஜூக்கு போயிடக் கூடாது. இந்த விஷயத்தை ரொம்பவும் ஜாக்கிரதையா டீல் பண்ணனும். இதுல அர்ஜுன் பங்கு அதிகம். அர்ஜுன் கடைசிவரைக்கும் ஒரு கிட்னி டோனர் மாதிரியே நடந்துக்கணும். அதுக்கேத்த மாதிரி அர்ஜூன் முதுகுப் பக்கத்தில் கிட்னி எடுத்ததுக்கு அடையாளமாய் ஒரு தழும்பை ஏற்படுத்திடலாம். இந்த விஷயம் ஆபரேஷன் பண்ணப்போகிற எனக்கும் உங்களுக்கும் தவிர வேறயார்க்கும் தெரியக் கூடாது…

    டாக்டர்! அப்பாவோட காலம் முடிகிற வரைக்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த உண்மைகள் வெளியே வந்துடாது. அதுல நாங்களும் எங்களுக்கு வாய்த்த மனைவிகளும் உறுதியோடு இருப்போம்…

    இது போதும்…

    மூன்று நாட்கள் கழித்து

    டாக்டரிடமிருந்து அழைப்பு வந்தது.

    ‘கிட்னி கிடைத்துவிட்டது. உடனே புறப்பட்டு வரவும்.'

    ஐந்து பேரும் மனைவிகளோடு வந்து டாக்டர்க்கு முன்பாய் உட்கார்ந்தார்கள். டாக்டரின் முகம் இறுகியிருந்தது.

    நகுல் கேட்டான்.

    அந்த கிட்னி டோனர் யார் டாக்டர்?

    டாக்டர் பக்கவாட்டு அறையைத் திரும்பிப் பார்த்துத் தலையசைக்க - அந்த இளைஞன் வெளிப்பட்டான். இருபத் தைந்து வயது இருக்கலாம். மாநிறம். திருத்தமான முகம். டாக்டர் சொன்னார்:

    கிட்னி டோனர் இந்த இளைஞன்தான்.

    இளைஞனை ஏறிட்டு அர்ஜுன் கேட்டான்.

    உம் பேர் என்ன?

    அந்த இளைஞன் சில விநாடிகள் மெளனித்துவிட்டு சொன்னான்:

    கர்ணன்…

    கர்ணனா...?

    ம்… கர்ணன்... அப்பா பேரு மஹாதேவ சாஸ்திரிகள். அம்மா பேரு சாவித்ரி. அம்மா இப்போ உயிரோடு இல்லை…

    நவீன பாண்டவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள நிறைய நேரமாகும். நீங்கள் அடுத்த பக்கத்தைப் புரட்டுங்கள்.

    ***

    2. நேற்று போல்இன்று இல்லை...

    இவந்தான் ஸார்…

    குரல் கேட்டு ஃபைல் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் நிமிர்ந்தார். ஹெட்கான்ஸ்ட பிளின் பிடியில் அவன் சிக்கியிருந்தான். பரட்டைத்தலையும், கை வைத்த பனியனும், பூப்போட்ட லுங்கியும் மண்ணெண்ணெயில் நாறிக் கொண்டிருந்தது.

    கலியபெருமாள் ஃபைலைப் பட்டென்று மூடிவிட்டு அவனைக் கோபமாய்ப் பார்த்தார்.

    ஏண்டா! போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னுக்கு முன்னாடி வந்து தீக்குளிச்சு தற்கொலை பண்ற அளவுக்கு உனக்கு என்னடா பிரச்சனை?

    அய்யா..! பரட்டைத்தலை சேவித்துவிட்டு கண்களில் நீரோடு பேச ஆரம்பித்தான். ‘என்னை ஏமாத்திட்டாங்கய்யா..."

    ஏமாத்திட்டாங்களா… யாரு...?

    இந்தக் கிராமத்துல சிட் பண்ட்ஸ் வெச்சு நடத்திட்டிருக்கிற கிருஷ்ணப் பிள்ளைத்தாங்கய்யா, அவர்கிட்டே இருபத்தஞ்சாயிரம் ரூபாய் சீட்டு போட்டிருந்தேன். மாசம் ஆயிரம் ரூபா வீதம் இருபத்தஞ்சு மாசம் கட்டணும்னு சொன்னாங்க. நானும் கட்டிக்கிட்டு வந்தேன். இருபதுமாசம் கட்டின பிறகு போன வாரம் அஞ்சாயிரம் ரூபாய் தள்ளி சீட்டு எடுத்தேன். அதுப்படி அவங்க எனக்கு இருபதாயிரம் ரூபாய் தரணும். 'ரெண்டுநாள் கழிச்சு வா… பணம் தர்றோம்’னு சொன்னாங்க… அவங்க சொன்ன மாதிரியே ரெண்டு நாள் கழிச்சுப் பணத்துக்காகப் போனேன்... என்னைப் பார்த்ததும் 'எதுக்காக வந்தே?’ன்னு கேட்டாங்க. ‘சீட்டுப்பணம் வாங்கிட்டுப் போக வந்தேன்’னு சொன்னதும் ‘பணமா... பணத்தைத்தான் அன்னிக்கே வாங்கிட்டுப்போயிட்டியே’ன்னு சொல்றாங்கய்யா. ‘பணம் எப்ப கொடுத்தீங்க… ஏன் இப்படி ஏமாத்தறிங்கன்’னு கேட்டதுக்கு அடியாட்களை விட்டு அடிக்கறாங்கய்யா. எனக்கு நியாயம் கிடைக்கிறதுக்காகத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிக்க வந்தேன்யா…

    இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஹெட்கான்ஸ்டபிளை ஏறிட்டார். கிருஷ்ணப்பிள்ளையோட போன் நெம்பர் தெரியுமா?

    தெரியும் ஸார்…

    சொல்லு… டெலிபோனைப் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு ஹெட்கான்ஸ்டபிள் சொன்ன எண்களை டயல் செய்தார் கலியபெருமாள். மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ…

    கிருஷ்ணப்பிள்ளை இருக்காரா...?

    கிருஷ்ணப்பிள்ளைதான் பேசறேன்...

    மிஸ்டர் பிள்ளை… நான் இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் பேசறேன்…

    சொல்லுங்க ஸார்… என்ன விஷயம்?

    பொன்ராஜ்ன்னு ஒரு ஆளு. உங்ககிட்டே சீட்டுப் போட்டவனாம். சீட்டுப்பணம் கொடுக்காமே ஏமாத்திட்டீங்களாம். நியாயம் வேணும்னு சொல்லி ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிக்க வந்துட்டான்.

    மறுமுனையில் கிருஷ்ணப் பிள்ளைபதற்றப்பட்டார்.

    ஸார்... அந்தப் பொன்ராஜ் சொல்றது பொய். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து பணம் இருபதாயிரம் வாங்கிட்டுப் போய்ட்டான்...

    என்னது… வாங்கிட்டுப் போயிட்டானா?

    ஆமா... ஸார்...

    கலியபெருமாள் எதிரே நின்றிருந்த பொன்ராஜைக் கோபமாய் ஏறிட்டார்.

    ஏண்டா...! பணத்தை வாங்கிட்டியாமே?

    அய்யா… ஆ… ஆ… ஆ…! என்று பெரிதாய் அரற்றிவிட்டு தலையில் அடித்துக் கொண்டான் பொன்ராஜ், அவங்க பொய் சொல்றாங்கய்யா. அவங்க பேச்சை நம்பாதீங்கய்யா. பணம் இருக்கிறவங்க பேச்சை நம்பிக்கிட்டு என்னை மோசம் பண்ணிடாதீங்கய்யா…

    கலியபெருமாள் பொன்ராஜைக் கையமர்த்திவிட்டு மறுபடியும் டெலிபோனின் ரிஸீவருக்கு வாயைக் கொடுத்தார்.

    மிஸ்டர் பிள்ளை…! நீங்க பணம் தரலைன்னு அவன் சொல்றானே...?

    பச்சைப் பொய் ஸார்…! லாக்-அப்புல வெச்சு கொஞ்சம் லாடம் கட்டுங்க. உண்மையைச் சொல்லிடுவான்.

    அவன் பணம் வாங்கிக்கிட்டதுக்கு அடையாளமாய் நீங்க ஏதாவது கையெழுத்து வாங்கியிருக்கீங்களா...?

    கையெழுத்து வாங்கல ஸார்... ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்தப் பொன்ராஜ் பணம் வாங்க வந்தப்ப என்னோட சம்பந்தி ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டார்ன்னு போன் வந்தது... அப்ப அந்தப் பதற்றமான நேரத்துல அவன்கிட்டயிருந்து கையெழுத்து வாங்க மறந்துட்டேன். அதைக் காரணமா வெச்சுக்கிட்டு மறுபடியும் பணம் கேட்கிறான்னு நினைக்கிறேன் ஸார்...

    "ஸாரி... பிள்ளை…! நீங்க சொல்ற காரணம் எனக்குச் சரியாப்படலை நீங்க பொன்ராஜுக்குப் பணம் கொடுத்த துக்கான ஆதாரம் ஏதாவது இருந்தாத்தான் சட்டப்படி அவன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். நான் பணம் கொடுத்துட்டேன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1