Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhvenum Nathi
Vazhvenum Nathi
Vazhvenum Nathi
Ebook267 pages1 hour

Vazhvenum Nathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100705556
Vazhvenum Nathi

Read more from Indira Soundarajan

Related to Vazhvenum Nathi

Related ebooks

Reviews for Vazhvenum Nathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhvenum Nathi - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    வாழ்வெனும் நதி

    Vazhvenum Nathi

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வாழ்வெனும் நதி

    2. நேர்மை எனப்படுவது யாதெனில்

    3. ஒரு அலகிலா விளையாட்டு

    4. நான் இருக்கிறேன்!

    5. பெரிய மனிதர்

    6. தமிழன்

    7. ஜெயிக்க முடியாது

    8. காதல் கயிறு

    9. தாய்க்கோழி

    10. குப்பைகள்

    11. பொசசிவ் பூதம்

    12. ஒரு அகலிகை ஒரு இந்திரன்

    13. வினைகள் விடுவதில்லை

    14. தாய்ப்பால்

    15. உயிர்மொய்

    16. கருத்தம்மா

    17. என்னை வென்றேன்

    18. வதம்

    19. மல்லிகாவின் மனசு

    20. ஸ்வப்னப்ரியா

    21. தந்திரமாய் ஒரு கொலை

    22. அந்த நாகலிங்க மரம்

    23. ரசவாதம்

    24. அய்யர் வீட்டு ஆலமரம்

    25. அமைதியும் சூன்யமும்

    மதிப்புரை

    தொட்டுத் தொடரும் ஓர் எழுத்துப் பாரம்பரியம்

    இரா. மோகன்

    தகைசால் பேராசிரியர்

    தமிழியற்புலம்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

    மதுரை - 625 021

    அன்னை இந்திராவின் பெயரைத் தம் பெயரின் முன்னே அரணாகவும் அணியாகவும் கொண்டிருக்கும் படைப்பாளி கெழுதகை நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன். பதினேழாம் நூற்றாண்டுப் பெரும்புலவர் குமர குருபரரால், 'நறை பழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே' எனப் பாடப் பெற்ற அன்னை மீனாட்சியை இமைப் பொழுதும் மறவாத சிந்தையர் அவர். 'தலைநகர் சென்னையில் ஆறு மாதம்; கோயில் மாநகர் மதுரையில் ஆறு மாதம்' என அவர் மாறி மாறி இரு நகரங்களுக்கும் வந்து போவதற்கான காரணம் இதுவே. அவரை ஆளாக்கியது 'டி.வி. சுந்தரம் ஃபாஸனர்ஸ்' என்ற புகழ் பூத்த நிறுவனம். அவர் இப்போதும் அந்த நிறுவனத்தின் TVS சுந்தர இணைப்பு எனும் குடும்ப இதழிற்கு ஆசிரியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திரா சௌந்தர்ராஜன் 'தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்' என்பது போல், திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலராக ஒரு காலத்தில் திறம்படி பணியாற்றிய மூத்த எழுத்தாளர் திரு. ஏ.எஸ். ராகவனின் வழி வந்தவர்; அவரது தம்பி மகன். அவர் எழுத்துலகில் அடியெடுத்து வைத்தது 1978-ஆம் ஆண்டில்; 'கலைமகள்' இதழ் நடத்திய 'அமரர் ராம ரத்னம் நினைவுக் குறுநாவல் போட்டி'யில் அவரது 'ஒன்றின் நிறம் இரண்டு' என்ற குறுநாவல் முதல் பரிசு பெற்றது; தொடர்ந்து 1985-ஆம் ஆண்டிலும் கலைமகளின் இதே குறுநாவல் போட்டியில் மீண்டும் முதல் பரிசினைப் பெற்றார். பின் 1988-ல் 'சுந்தர இணைப்பு', 'அமுதசுரபி' இதழ் நடத்திய குறுநாவல் போட்டியிலும் கலந்துகொண்டு முதல் பரிசினைப் பெற்றார். 1988-ஆம் ஆண்டில் 'இலக்கியச் சிந்தனை' அமைப்பு, இந்திரா சௌந்தர்ராஜனின் 'மாண்பு மிகு மக்கள்' என்ற சிறு கதையைச் சிறந்த கதையாகத் தேர்வு செய்தது. இதுவரை இலக்கியத் திங்கள் இதழ்களில் இயங்கி வந்த இந்திரா சௌந்தர்ராஜனை 'ஆனந்த விகடன்' வெகுசன இதழ் 1990-ஆம் ஆண்டில் இரு கரம் நீட்டி வரவேற்றது; தமிழ்ப் புத்தாண்டு நாளில் அவரது 'கோட்டைபுரத்து வீடு' என்னும் தொடர்கதை வெளிவரத் தொடங்கியது. அடுத்தடுத்து, அவரது மூன்று தொடர் கதைகள் 'விகட'னில் வெளிவந்தன. 'குங்குமம்' இதழிலும் அவரது 'காற்றாய் வருவேன்', 'பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்' என்னும் தொடர்கதைகள் வெளிவந்தன. 'ரகசியமாக ஒரு ரகசியம்' என்னும் தொடர்கதை, தொலைக்காட்சியில் 'மர்ம தேசம்' என்னும் பெயரில் 1997-ஆம் ஆண்டில் தொடராக ஒளிபரப்பாகி இந்திரா சௌந்தர்ராஜன் என்ற படைப்பாளியைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. 'மர்ம தேசம்', 'விடாது கருப்பு', 'என் பெயர் ரங்கநாயகி' என்னும் தொலைக்காட்சித் தொடர்கள் அவருக்கு மயிலாப்பூர் அகாதெமியின் சுழற்கோப்பையைப் பெற்றுத் தந்தன. சிறுகதைத் தொகுப்பிற்காக லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது, 'என் பெயர் ரங்கநாயகி'க்காகத் தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரர் இந்திரா சௌந்தர்ராஜன். 'ருத்ர வீணை' விற்பனையில் சாதனை படைத்த ஒரு நாவல் ஆகும். பாரத மாநில வங்கியின் விருதினைப் பெற்ற அந்நாவல், மலிவுப் பதிப்பாகவும் மாத நாவலாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்து எழுத்துலகில் முத்திரை பதித்தது. 800 சிறுகதைகள், 370 மாத நாவல்கள், 8 மெகா நாவல்கள், 77 பத்திரிக்கைத் தொடர்கள் எனப் பரந்து விரிந்த இந்திரா சௌந்தர்ராஜனின் சாதனைப் பட்டியல் தொடர்ந்து வருகின்றது. ‘கோட்டைப்புரத்து வீடு', 'ஜீவா என் ஜீவா' என்னும் அவரது இரு படைப்புக்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பத்திரிகை, தொலைக்காட்சி என்னும் இரு பெரும் மக்கள் ஊடகங்களிலும், அவற்றின் பல்வேறு அலைவரிசைகளிலும் ஓர் வெற்றியாளராக உலா வந்து கொண்டிருக்கும் இந்திரா செளந்தர்ராஜனின் படைப்புலகச் சாதனைகள் 'விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்' இப்போது நம் கைகளில் தவழும் 'வாழ்வெனும் நதி' என்னும் நூல் அவரது 25 சிறு கதைகளின் தொகுப்பு ஆகும்.

    கட்டிளங் காளையரை விட அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த கதைமாந்தர்களின் உணர்வுகளையே இந்திரா சௌந்தர்ராஜன் தம் சிறுகதைகளில் ஆழ்ந்த அக்கறையோடும், பொறுப்போடும் படைத்துள்ளார். குறிப்பாக, அவரது சிறுகதைகளில் வரும் பாட்டியர் சிறப்பு மிக்கவர்களாக தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். ‘வல்வினை வளைத்த கோலை மன்னவன், செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது' - 'ஊழ்வினையினால் வளைந்த பாண்டியனுடைய கோலை அவன் உடலினின்றும் பிரிந்த உயிர் நிமிர்த்திச் செங்கோல் ஆக்கிவிட்டது.’ (சிலப்பதிகாரம், காட்சிக் காதை:98.99) என்பது போல், 'வாழ்வெனும் நதி'யில் வரும் பட்டுப் பாட்டி தன் உயிரையே தந்து, இந்திய நடுத்தரக் குடும்பங்களை அன்றாடம் அச்சுறுத்தி, அலைகழித்து, ஆட்டிப் படைத்து வரும் பணத் தேவையை ஈடுகட்டுகிறாள்; தனது நீண்டகாலச் சேமிப்புத் தொகையான முதியோர் ஓய்வூதியத்தினை பேர்த்திகளின் வருங்காலப் படிப்புக்காகத் தருகிறாள்; திருமணத்தின் போது தாயார் தனக்குப் போட்ட நகைகளை எல்லாம் விற்றுக் கிடைத்த ஒரு லட்ச ரூபாயை மருமகளுக்கு தனது அன்புப் பரிசாகக் கொடுக்கிறாள்; படுக்கையில் விழுந்து யாருக்கும் எந்தத் துன்பமும் தராமல், காவேரி ஆற்றில் மூழ்கிப் பெருமாளிடம் சென்று சேருகிறாள். 'ஒரு பெண்ணின் முதுமை என்பது இவ்வளவு மோசமானது - சோகமானது' என்பதை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் இக்கதையில் வரும் பட்டுப் பாட்டி, ஜெயகாந்தனின் 'யுக சக்தி' என்னும் சிறுகதையில் வரும் கௌரிப் பாட்டியை நினைவு படுத்துகிறாள்.

    'உயிர் மொய்' என்னும் கதையில் வரும் பெரியநாயகி தொண்ணூறு வயதானவள்; பதினாலு வயதில் திருமணம் ஆகி, பதினெட்டு வயதில் விதவை ஆகிவிட்டவள். ஆசிரியரே குறிப்பிடுவது போல், '72 வருஷமாய் அவள் வாழ்ந்ததெல்லாம் பிறந்துவிட்ட காரணம் ஒன்றிற்காகவே...' சாவும் அவள் வரையில் இழுப்பறியாக அமைந்து பேர்த்தியின் திருமணத்திற்குத் தடையாகி விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்; பாட்டியைக் கருணைக் கொலை செய்துவிடவும் துணிகின்றனர். ஆனால், பாட்டியோ அதற்கு இடம் கொடுக்காமல், 'பாட்டி புறப்பட்டுட்டேன். இனி உன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்... பாவம் உன் அப்பன்! அவனைக் கொலைகாரனாக்க நான் விரும்பலை... உன் கல்யாணத்துக்கு இந்தப் பாட்டியோட மொய் என்ன தெரியுமா? என் உசுர் தான்...' என்னும் கடைசி வார்த்தையோடு தற்கொலை செய்து கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். 'உயிர் மொய்' என ஆசிரியர் இக்கதைக்குத் தந்திருக்கும் தலைப்பு வித்தியாசமானது; இன்றையச் சூழலில் வள்ளுவர் இருந்திருந்தால் 'மொய்ப் பொருள் காண்பது அறிவு' என்று தான் பாடி இருப்பார்

    உலக நாடுகளில் முதியோரை மதிக்காத - மதிக்காதது மட்டுமல்ல, 'பெருசு' என்றும் 'கிழடு' என்றும் இழிவாகப் பார்க்கிற, பேசுகிற, குத்திக் காட்டுகிற - நாடு இந்தியா தான்; தமிழ்நாடு தான். 'குப்பைகள்' என்ற கதையில் இந்திரா சௌந்தர்ராஜன் இந்தக் கசப்பான உண்மையை உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். பாவேந்தர் பாரதிதாசனின் 'குடும்ப விளக்'கில் வரும் முதிர்ந்த இணையர் மணவழகர் - தங்கம் போல, இந்தக் கதையில் வரும் ராமரத்னத்துக்கு 90 வயது; ஜானகிக்கு 85 வயது, "இனி நம்ம விரோதியைக் கூட, 'நூறு வருஷம் ஆயுசோட இருக்கணும்னு' நாம வாழ்த்திடக் கூடாதுங்க. எல்லாம் நல்லாருக்கும் போதே போயிடுங்க. இழுத்துப் படுக்கைல விழுந்து போக மாட்டாம கிடக்காதே'ன்னு தான் வாழ்த்தணும்' என அவர்கள் இருவரும் தமக்குள் பேசிக்கொள்வதும், அடுத்தடுத்துச் சில மணித்துளிகள் இடைவெளியில் மரணத்தைத் தழுவுவதும் படிப்பவர் இதயத்தை கசக்கிப் பிழியும் சோகங்கள். முதியோரை 'மனிதக் குப்பை’களாக மதிக்கும் இன்றைய சமூக நடப்பியலை இக்கதையில் அழுத்தமாகவும் சித்தரித்துள்ளார் ஆசிரியர்.

    'ஜெயிக்க முடியாது' கதையில் வரும் வெள்ளரிப் பிஞ்சு விற்கும் கிழவி, 'தாய்ப்பால்' கதையில் வரும் வேலைக்காரி சின்னம்மினி ஆகிய இருவரும் தன் வாழ்க்கை நிலையால் எளியவர்கள்; ஆனால் தாய்மைப் பணியால் மன்னும் இமயமலை போல் உயர்ந்தவர்கள். இத்தகைய ஏழை எளிய மனிதர்களிடம் கொலுவீற்றிருக்கும் உயரிய பண்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

    வ.வே.சு. ஐயரின் கை வண்ணத்தில் 'குளத்தங்கரை அரச மரம்' அழியா வாழ்வினைப் பெற்றது; சுந்தர ராமசாமியின் படைப்பாளுமையில் 'புனித மரத்தின் கதை' சிறப்பான இடத்தைப் பெற்றது. இருவரையும் போல இந்திரா சௌந்தர்ராஜனும் தம் பங்கிற்கு 'அய்யர் வீட்டு ஆலமர'த்திற்கும், 'நாகலிங்க மர'த்திற்கும் அழகிய கலை வடிவும் தந்துள்ளார்.

    "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று

    அன்னை கூறினள் புன்னையது சிறப்பே"

    என்னும் நற்றிணைப் பாடல், சங்க காலத்தில் இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழரின் பண்பாட்டுப் பெருமையை எடுத்துரைக்கும்; புன்னை மரத்தோடு தமக்கை உறவு கொண்டு வாழ்ந்த சங்கத் தமிழரின் வெற்றியைப் பறைசாற்றும். இதன் தொடர்ச்சியை இந்திரா சௌந்தர்ராஜனின் 'அய்யர் வீட்டு ஆலமரம்', 'அந்த நாகலிங்க மரம்' என்னும் இரு கதைகளிலும் காண முடிகின்றது.

    ஜனா... நான் அந்த மரத்தை ஒரு ஜடமா பார்க்கலைடா... அது ஒரு விருட்சம். எங்கெல்லாம் இப்படி ஒரு பிரம்மாண்ட மரம் இருக்கோ அங்கெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமும் இருந்திருக்குடா... அந்த விருட்சம் தழைப்பா இருக்கற வரை மனுஷக் கூட்டம் நல்ல வாழ்க்கை வாழ்ந்தேத் தீரும். அதுக்கு ஏதாவது ஆனா சமுதாயமும் அழிஞ்சிடும்... என 'அய்யர் வீட்டு ஆலமரம்' கதையில் தாத்தாவின் கூற்றாக வரும் பகுதி ஒட்டுமொத்தத் தமிழினத்தின் தனிப்பெரும் பண்பினைப் புலப்படுத்துவதாகும்.

    அந்த நாகலிங்க மரம்... அடேயப்பா' ஆகாசத்திற்கே ஒட்டடை அடித்தபடி... ஏராளமான கிளைகள் - அதில் அடைக்கலப் பறவைகளின் கும்மாளக் கூக்குரல்கள்... என உயிர்ப்பான மொழியில் நெடிதுயர்ந்து ஓங்கி, நிற்கும் நாகலிங்க மரத்தினை அறிமுகம் செய்யும் ஆசிரியர், இந்த மரம் தான் நான்... இதைப் பார்க்கிறப்பல்லாம் உங்களுக்கு என் ஞாபகம் வரணும். இது வளர வளர நம்ம குடும்பமும் வளரும். இதோட நிழல், இதோட காத்து இந்தச் சூழ்நிலையையே ஆரோக்கியமா வெச்சிருக்கும். இதோட எப்படிவும் பூஜிக்கப் பயன்படும்... என்னும் தாத்தாவின் கூற்றின் வாயிலாக மரம் வளர்த்தலின் மரத்தை வழிபடுதலின், இன்றியமையாமையை அழுத்தமாக உணர்த்துகிறார். மேலும், இந்த மரத்துக்காகவே இந்த இடம் விக்கப்படக்கூடாது. இதை விக்கறதும் ஆத்மாவை விக்கறதும் ஒண்ணு. இதை வித்தா பணம் கிடைக்கலாம். குணம் மட்டும் கிடைக்கவே கிடைக்காது. குணமில்லாத பணமும், குப்பையும் ஒண்ணு தான்! எனத் தாத்தாவின் குரலில் ஆசிரியர் வலியுறுத்தும் வாழ்வியல் விழுமியும் இன்றைய தலைமுறையின் மனங்கொள வேண்டிய ஒன்றாகும். காலங்காலமாகப் பேணிப் போற்றி வளர்க்கப் பெற்று வரும் மரங்கள் வணிக வளாகம் (ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்) கட்டுவதற்காக இன்றைய தலைமுறையினரால் வெட்டப் பட்டு வரும் கொடுமைக்கு எதிராக இவ்விரு கதைகளிலும் அழுத்தம் திருத்தமாகக் குரல் கொடுத்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன்.

    தென்னை மரங்கள் திமிறலோடு வளர்ந்த இடங்களில் எல்லாம் அபார்ட்மென்ட் கட்டிடங்கள், பசுமையான ஒரு காடு கான்க்ரீட் காடாக மாறி நிற்பதை வளர்ச்சி என்று சிலர் சொல்லும் போது வயிறு எரிகிறது என ‘நேர்மை எனப்படுவது யாரெனில்...' என்னும் கதையிலும் இந்த நூற்றாண்டின் தனிப்பட்ட அவலமான விளைநிலங்கள் விலைநிலங்களாக மாறி வரும் கொடுமையை உணர்ச்சி மிக்க நடையில் சாடியுள்ளார் ஆசிரியர்.

    அயல் நாட்டுப் பாதிரியார் ஒருவர் ரசிகமணி டி.கே.சி.யிடம் ஒருமுறை, We Love trees; do you? என வினவினாராம். அதற்கு டி.கே.சி. உடனடியாக, You love trees; but we worship them என்றாராம். மரங்களோடு உறவு கொண்டு வாழ்ந்து, வழிபட்டு வந்த பண்டைத் தமிழ் மரபின் தொடர்ச்சியை இந்திரா சௌந்தர்ராஜன் தம் சிறுகதைகளில் உயிர்ப்புடன் படைத்து காட்டியுள்ளார். மூத்த கதைமாந்தர்கள் வாயிலாக வணிக வளாகங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

    ஒரு படைப்பாளி என்ற முறையில் இந்திரா சௌந்தர் ராஜனின் உள்ளத்தில் ஆன்மிகத்திற்கு, குறிப்பாக சித்தர் இலக்கியத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. அவர் போற்றும் ஆன்மிகம் அற்புதங்களுக்கு - வித்தைகளுக்கு - மாய மந்திரங்களுக்கு முதன்மை தருவது அன்று; ஆழ்ந்த ஞானத்தை - தெளிவான புரிதலை உயிர்ப் பண்பாகக் கொண்டது. 'ஒரு அலகிலா விளையாட்டு' என்னும் சிறுகதை இவ்வகையில் முக்கியமானது. இக்கதையில் வரும் கோவிந்து எனப்படும் கோவிந்தன் - இப்போது ஆராவமுதன் கோவிந்த் - அமெரிக்காவில் பலருக்கும் அவன் மிஸ்டர் கோவ் - முற்போக்கான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரன்; திருஷ்டி கழித்தல், பூனூல் அணிந்து கொள்ளல், மொட்டை போட்டுக் காது குத்திக் கொள்ளல், உண்டியலில் காணிக்கை போடுதல், படையல் படைத்தல் முதலான பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சனம் செய்பவன்; ‘நான் ஒரு சுய சிந்தனையாளன்' என்று தன்னை மார்தட்டிக் கொள்பவன்; 'மனுஷன்... ஆன்மிகம், பக்தின்னு கொஞ்சம் டுபாக்கூராகவும் இருக்கான்' என்றும், 'இந்த பக்திங்கறதே ஒரு ஃபோபியா' என்றும் அறைகூவல் விடுக்கும் பாணியில் முழக்கம் இட்டவன். ஆனால், ஆறு மாத காலத்திற்குள் அமெரிக்காவில் அவனது வாழ்வில் நேரும் தற்செயல் நிகழ்வுகள் அவனை அடியோடு மாற்றிவிடுகின்றன. தலைகீழாக மாற்றிப் போடுகின்றன. கதையின் முடிவில், நான் நாத்திகம் பேசியிருக்கலாம். ஆனால், நான் உண்மையானவன். அதனால்தான் நான் விரும்பின மாதிரியே தன்னை எனக்கு உணர்த்தப் பெருமாள் வந்திருக்கார். உணர்த்தவும் தொடங்கிவிட்டார். நிச்சயமா ஒருநாள் அவரை நான் பூரணமாகவே புரிஞ்சு தரிசனம் செய்வேன்னு நம்பறேன். ஏன்னா, நான் எதைச் செய்தாலும் அதை முழுசா ஈடுபாட்டோட செய்வேன்னுதான் உங்களுக்குத் தெரியுமே? எனக் கோவிந்தனே ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகிறான். 'அலகிலா விளையாட்டுடையான்' என்று பாடியதெல்லாம் இப்படியெல்லாமும் நடக்கக் கூடும் என்பதை உத்தேசித்துத்தானோ? என்னும் சிந்திக்கத் தூண்டும் விரைவுடன் கதையை முடித்து வைக்கிறார் ஆசிரியர்.

    சைவ சித்தாந்தத்தில் முதன்மை இடத்தினைப் பெறும் வினைக் கோட்பாட்டிற்கு இந்திரா சௌந்தர்ராஜன் தந்திருக்கும் எளிய புனைகதை வடிவம் 'வினைகள் விடுவதில்லை.'

    'ரசவாதம்' கதையில் வரும் குமார் இளமையில் பாடப் புத்தகத்தில் நாம் படித்த தொட்டதெல்லாம் பொன்னாக்க விரும்பும் மைதாஸின் மறுவடிவம். சரவண சித்தர் அவனுக்கு 'ரசவாதம்' என்பதன் உண்மைத் தத்துவத்தை உணர்த்துவதாக வரும் பகுதி ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. அப்பகுதி இதோ.

    "ரசவாதம் முதல்ல உனக்குள்ள நடக்கணுமே... யார் என்ன சொன்னாலும், உனக்குள்ள நீ குழந்தையா இருந்தப்ப இருந்த அந்த சந்தோஷம். அப்படியே இருக்கணும். உன்னைச் சுத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1