Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Octopus Vibareethangal
Octopus Vibareethangal
Octopus Vibareethangal
Ebook55 pages1 hour

Octopus Vibareethangal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Octopus Vibareethangal

Read more from Arnika Nasser

Related to Octopus Vibareethangal

Related ebooks

Related categories

Reviews for Octopus Vibareethangal

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Octopus Vibareethangal - Arnika Nasser

    7

    1

    நிலவைத் தொலைத்துவிட்ட நீக்ரோ ஆகாயம் பூமி மேல் கூடையாய் கவிழ்ந்திருந்தது. அந்தச் சுடுகாட்டுக்குள் சூன்யக்காரக் கிழவி நுழைந்தாள். அவளது இடது தோளில் ஓர் ஆந்தை அமர்ந்திருந்தது. கிழவி நான்கடிதான் உயரமிருப்பாள், இடுப்பில் பூ போட்ட கைலி உடுத்தியிருந்தாள். கேரள மரைக்காயர் பாணி முழுக்கை ஜாக்கட் அணிந்திருந்தாள். மடியில் ஒரு சுருக்குப்பை செருகியிருந்தாள். அபாயகரமாய் காதுகள் வளர்த்திருந்தாள். வளர்த்த காதுகளில் மண்டையோட்டு சாயலில் பாம்படங்கள் தொங்கின. கிழவி முகம் முழுவதும் ஓவியனின் தூரிகை இழுப்பாய் சுருக்கங்கள் சுருக்கங்கள்.

    ஒவ்வொரு கல்லறையாய் நோட்டமிட்டபடி நடந்தாள் கிழவி.

    நான்காவது கல்லறையில் நின்றாள் கிழவி.

    கிழவி முகம் அமான்ஷ்யமாய் மிளிர்ந்தது. தனது வலது கட்டுவிரலை கல்லறை நோக்கி நீட்டினாள். கோரமான விரல் நீண்டு கொண்டே போனது. கல்லறையைத் துளைத்தது. அரை குறையாய் அழுகிப் போயிருந்த பிணத்தின் முகத்தில் விரல் குத்தியது. குத்தப்பட்ட இடத்தில் புழுக்கள் நெளிந்தன, பிணம் அசைந்தது. மெதுவாக மிக மெதுவாக கல்லறையை உடைத்துக் கொண்டு எழுந்து நின்றது!

    டடர்! டடர்!

    பெர்சனல் கம்ப்யூட்டரில் புதிதாக ஒரு ஆவிக்கதை டைப்படித்துக் கொண்டிருந்த டியாரா ராஜ்குமார் காலடி அரவம் கேட்டு நிறுத்தினான்.

    சுழன்று திரும்பினான். ஜுனியருடன் ஜெருஷா!

    விட்ட முகமும் கொழு கொழு உடலும் கொண்ட ஜுனியரை வாங்கி முத்தமிட்டான் டியாரா. மூன்று வயது ஜுனியர் மழலையில் மிழற்றினான்,

    என்னம்மா ஜெரு? வினவினான் டியாரா.

    நிலாவுக்கு இடது காதோரம் சிறு சதை வளர்ச்சி இருக்குல

    ஆமா

    "அத டாக்டர்கிட்ட காண்பிச்சு ஆபரேட் பண்ணிரலாம்னு...

    அதுக்கு இப்ப என்ன அவசரம்?

    பின்னாடி இவன் பெரிய பையனான உடனே மத்தப் பசங்க இத வெச்சே கேலி பண்ணுவாங்க... தேவையா?

    அதனால?

    ரத்தன்லால் ஹாஸ்பிட்டல்ஸ்க்கு ஃபோன் பண்ணி அப்பாய்ன்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்... புறப்படுங்க... போய்ட்டு வந்திரலாம்...

    இன்னைக்கே சர்ஜரியா என்ன?

    ஆமா... டாக்டர் அபிப்ராயப்பட்டா...

    சூனியக்காரக் கிழவி அம்போன்னு நிக்றாளே பரவாயில்லையா? சிரித்தான் டியாரா.

    நிக்கட்டும் நிக்கட்டும்... நீங்க கிளம்புங்க புருஷா...

    பி.சி-யை கோமா நிலை ஆழ்த்திவிட்டு எழுந்தான் டியாரா. கை விரல்களில் சொடக்கு எடுத்தான்.

    பேகிஸ் டவுசரும் கேஸடிஸ் டி சர்ட்டும் உடுத்தியிருந்த ஜூனியரை உப்பு மூட்டை தூக்கியபடி படுக்கையறைக்கு நடந்தான் டியாரா.

    பழுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் கட்டங்கள் கொண்ட முழுக்கை நீல நிற காட்டன் சட்டையும் அணிந்து கொண்டான் டியாரா. சட்டையின் மேல் லெதர் ஜாக்கட் கால்களில் மெஸ்கோஸ் ஷூ கழுத்தில் வெள்ளை ஸ்கார்ட் கண்களில் ரேபான் குளிர் கண்ணாடி.

    Enjoying the preview?
    Page 1 of 1