Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjinile Oonjalaai
Nenjinile Oonjalaai
Nenjinile Oonjalaai
Ebook121 pages2 hours

Nenjinile Oonjalaai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466510
Nenjinile Oonjalaai

Read more from Arnika Nasser

Related to Nenjinile Oonjalaai

Related ebooks

Related categories

Reviews for Nenjinile Oonjalaai

Rating: 5 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjinile Oonjalaai - Arnika Nasser

    14

    1

    விடியற்காலை மணி ஐந்து. படுக்கையில் உருண்டு உருண்டு படுத்துக் கொண்டிருந்த பூந்தளிர் எழுந்தாள். இரவு முழுக்க அவளுக்கு சரியான தூக்கமில்லை. எப்போது விடியும் என்கிற பதட்டத்துடன் விடியக் காத்திருந்தாள் பூந்தளிர்.

    பூந்தளிர்க்கு வயது 17. உயரம் 155 செ.மீ. ரோஜா நிறம். நடிகை நதியா சாயல். அழகாக பாடுவாள். சைக்கிளிங் தெரியும்.

    பூந்தளிர் ப்ளஸ்டூவில் ஆயிரத்து இருநூறுக்கு 1100 மார்க் எடுத்திருந்தாள். மணிமேகலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் - மின்னியல் படிக்க விண்ணப்பித்திருந்தாள். முந்தின தினமே அட்மிஷன் கார்டு வந்து விட்டது.

    பூஜையறையில் அட்மிஷன் கார்டு வைக்கப்பட்டிருந்தது.

    குளித்து விட்டு பூந்தளிர் பூஜையறைக்குப் போனாள்.

    அங்கு ஏற்கெனவே குளித்துவிட்டு மகளுக்காக காத்திருந்தனர் பூந்தளிரின் பெற்றோர்.

    பூந்தளிரின் தந்தையின் பெயர் மாதவன். வயது 44. உயரம் 165 செ.மீ. அன்பை புயல் போல் காட்டுபவன். முன்கோபி. அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியனாக பணிபுரிபவன்.

    பூந்தளிரின் தாயின் பெயர் காந்திமதி. வயது 42. உயரம் 150 செ.மீ. ஆன்மீகத்தில் நாட்டம் உடையவள். உணர்வுகளை பதுக்கத் தெரிந்தவள். செவிலியர் நங்கை கண்காணிப்பாளராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவள்.

    மூவருமே கண்ணீர் மல்க சிவபெருமானை வணங்கினர். தீபாராதனை செய்தான். கினிகினியென மணி அடித்தான். மனைவிக்கும் மகளுக்கும் விபூதியும், குங்குமமும் வைத்து விட்டான் மாதவன்.

    பூந்தளிர் பெற்றோரின் கால்களில் விழுந்தெழுந்தாள்.

    அமோகமா படிக்கணும்மா நீ...

    அப்படியே செய்றேன்ப்பா!

    மாதவன் தனது மனைவியை அர்த்தபுஷ்டியாய் வெறித்தான். உடனே அவள், மகளிடம் பேச ஆரம்பித்தாள்.

    அப்பாவுக்கு உன்னை படிக்க வைக்கவே பயம்!

    ஏன்ம்மா?

    மீதமிருக்கிற ஒரே மகளையும் இழந்திரக் கூடாதுன்னுதான்!

    ம்மா!

    உன் அக்கா மீனாட்சியை விவசாயம் படிக்க அனுப்பினோம். படிக்கப் போன முதல் வருஷத்திலேயே ஒரு பய்யனை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா. விஷயம் தெரிஞ்சு கண்டிச்சோம். எல்லாம் படிப்பு முடிஞ்சதும் பாத்துக்கலாம்னு சொன்னோம் அவ கேக்கலை. காதலனோட ஓடிப்போய் பதிவுத் திருமணம் செஞ்சுக்கிட்டா. ‘மைனர் பெண்ணின் திருமணம் செல்லாது. மகளை மீட்டுத் தாருங்கள்’ என அப்பா போலீஸில் புகார் செய்தார். காவல் நிலையத்துக்கு உன் அக்காவும் அவளது கணவனும் வரவழைக்கப்பட்டனர். எட்டு மணி நேரம் பேசியும் உன அக்கா மனசு மாறல. வலுக்கட்டாயமாய் போலீஸ் தன்னை பெற்றோருடன் அனுப்பிவிடும் என பயந்து விஷத்தைக் குடிச்சிட்டா. மகளை தூக்கிக்கிட்டு மருத்துவமனைக்கு ஓடினோம். முப்பத்தியாறு மணி நேர போராட்டத்துக்கு பின் உன் அக்கா இறந்து போனாள்

    எல்லா கதையம் எனக்குத் தெரியுமே...

    நீ சொல்லு... படிக்கப்போன எடத்ல காதல்ல ஈடுபட்டது உன் அக்கா... மகளின் எதிர்காலத்துக்காக அவளின் காதலையும், திருமணத்தையும் எதிர்த்தோம்... அவ எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா நடந்தத சீர்தூக்கிப் பாத்து சொல்லு... யார் மேல தப்பு? எங்க மேலயா? அக்கா மேலயா?

    தீர்ப்பு சொல்ற வயசும் பக்குவமும் எனக்கில்லைம்மா!

    அட்மிஷன் கார்டு வந்ததிலிருந்து எனக்கும் உன் அப்பாவுக்கும் ஒரே சண்டை. அவருக்கு உன்னைப் படிக்க வைக்க பயம்!

    ஏனாம்?

    நீயும் படிக்கப் போற எடத்ல காதல் கீதல்னு இறங்கிருவியோன்னு! தந்தையை அண்ணாந்தாள் பூந்தளிர் சுருக்கென்று அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. மூத்தமக தற்கொலை பண்ணிக்க நாங்களும் ஒரு காரணமோன்னு குற்ற உணர்ச்சியால தத்தளிக்கிறோம். தினம்தினம் ராத்திரி நரகவேதனைதான் ஒண்ணுக்கு ரெண்டா தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வர்றதில்லை. தப்பித்தவறி தூக்கம் வந்தாலும் கனவுல உன் அக்கா வந்து முறையிடுறா. ஒரு மகளை இழந்தப்ப என் உடம்புல பாதி செயலிழந்து போச்சும்மா தத்தி தத்தி வேலைக்கு போய்ட்டு வந்துக்கிட்ருக்கேன். இப்ப நீ யுனிவர்சிட்டிக்கு படிக்கப் போற. பாக்றதெல்லாம் கவர்ச்சியாயும், ஈர்ப்பாகவும் தெரிகிற பருவம் உன் பருவம். நீயும் காதல் கீதல்னு போய்ட்டா எங்க கதி?.

    நான் உங்க பொண்ணுப்பா நா தப்பு செய்வேனா?

    இதே டயலாக்கைத்தான்மா காலேஜ் போற மொத நாள் உன் அக்காளும் சொன்னா!

    மௌனித்தாள பூந்தளிர்.

    எனக்கு சாதி விட்டு சாதி திருமணம் செஞ்சிக்கிறது பிடிக்காது. நீ படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பிறகுதான் உனக்குத் திருமணமே!

    அதப்பத்தி நான் யோசிக்கவே இல்லைப்பா. யுனிவர்சிட்டி போய் படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன் சிறப்பா படிச்சு பெரிய வேலைக்கு போவேன்ப்பா!

    இருந்தாலும் எனக்கு பயமாய் இருக்கும்மா!

    காதல் சரியா தப்பான்னு எனக்கு சொல்லத் தெரியலை. அக்கா செஞ்ச காதல் பத்தியும் அபிப்ராயம் சொல்ல விரும்பல நான். என்னைப் பொறுத்த வரைக்கும் படிக்ற பெண்களுக்கு காதல் தேவையில்லாத ஒன்று என நம்புறேன். எனக்கு மனோதிடம் அதிகம். ஒருமித்த கவனத்துடன் - அங்குமிங்கும் பார்வையை சிதறவிடாமல் படிப்பேன்ப்பா

    நீ சொல்றதை கேக்க நல்லாயிருக்கு. நீ சொன்ன மாதிரியே நடந்துப்பன்னு என்ன நிச்சயம்?

    என்ன செஞ்சா என்னை நம்புவீங்கப்பா!

    நான் ஒருபோதும் காதலில் ஈடுபட மாட்டேன் என சத்தியம் செய்து குடும்மா!

    சாமி படத்தின் மீது சத்தியம் பண்ணவா?

    வேணாம் அம்மாவின் மீது சத்தியம் பண்ணு!

    அம்மாவின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தாள் பூந்தளிர்.

    சத்தியத்துக்கு மாறா நீ நடந்துக்கிட்டா அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்... ஜாக்கிரதை!

    நான் சத்தியத்தை மீறினாத்தானே?

    இந்த லேடீஸ் பேக்கும், ஸெல்போனும், பனிரெண்டு கைக்குட்டைகளும், காஸ்மெட்டிக் சமாச்சாரமும், ஆறு சுடிதார் செட்டுகளும், காதிம் செருப்பும் உனக்குத்தான்!

    நன்றிப்பா!

    அரிசி மாவும், சீயக்காய் பவுடரும், பயத்தம் பருப்பு மாவும், கடலை மாவும், செம்பருத்தி இலையும், மருதாணி இலையும், அன்னாசிப்பழமர இலையும், கஸ்தூரி மஞ்சளும் கலந்து அரைத்த குளியல்தூள் ஒரு டப்பால வச்சிருக்கா அம்மா. இதையே குளிக்க யூஸ் பண்ணு. சீப்பை அழுந்த சீவாதே. முடி கொட்ட ஆரம்பிச்சிரும்!

    முறுவலித்தாள் பூந்தளிர்.

    தினம் மூன்று நேரம் பல் துலக்கு. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படி தினம் பத்து புதிய ஆங்கில வார்த்தைகளை அர்த்தம் புரிஞ்சு உச்சரிக்க கத்துக்க. உனது ஹாஸ்டலிலுள்ள நூலகத்திற்குள் புகுந்து தினம் படி. நல்ல நடத்தை உள்ள தோழிகளுடன் பழகு!

    தலையசைத்தாள் பூந்தளிர்.

    "ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொள். வகுப்பின் முதலிரு பெஞ்சுகளில் அமர். வகுப்பில் தெரியாத சந்தேகங்களை நாசூக்காய் கேள். உனது ஆடைகளை நீயே துவை. உனது ஆடைகளை அறைத் தோழிகளுக்கு இரவல்

    Enjoying the preview?
    Page 1 of 1