Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral Vanthu Unnai Sudum
Thendral Vanthu Unnai Sudum
Thendral Vanthu Unnai Sudum
Ebook96 pages57 minutes

Thendral Vanthu Unnai Sudum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466824
Thendral Vanthu Unnai Sudum

Read more from Rajeshkumar

Related to Thendral Vanthu Unnai Sudum

Related ebooks

Related categories

Reviews for Thendral Vanthu Unnai Sudum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral Vanthu Unnai Sudum - Rajeshkumar

    1

    சஞ்சய் ப்ரீஃப் கேஸில் பேஸ்ட் ப்ரஷ், ஷேவிங் செட் அடங்கிய டிராவல் கிட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது காலிங் பெல், ப்ளீஸ் ஓபன் த டோர் என்று எலக்ட்ரானிக் குரலில் பேசியது.

    ப்ரீஃப்கேஸைச் சாத்திவிட்டு எழுந்துபோய்க் கதவைத் திறந்தான்.

    ஆச்சர்யம் அவன் கண்கள் பூராவும் நிரம்பிக் கொண்டது.

    கதவுக்கு வெளியே மாலினி தேன் நிற ப்ளெயின் சுடிதாரில் ஒரு சூரியனைப் போல பிரகாசமான நிறத்தோடு நின்றிருந்தாள். கண்ணாடித்தாள் போன்ற துப்பட்டா அவள் கழுத்தைக் கவ்வியிருந்தது.

    மாலினி... வாட் ஏ ஸர்ப்ரைஸ்... உள்ளே வா... உள்ளே வா- உற்சாகத்தோடு அவளை வரவேற்றான்.

    சோபாவில் உட்கார்ந்த மாலினியிடம் அந்த உற்சாகம் பிரதிபலிக்கவில்லை. அவள் முகப்பரப்பில் லேசான பதட்டம் குடியிருந்தது.

    சஞ்சய்... உங்களுக்கு எத்தனை மணிக்கு ட்ரெயின்...?

    எட்டரை மணிக்கு

    இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கு... எனக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்குவீங்களா...?

    ஒய் நாட்? என்ன விஷயம்... சொல்லு... நேத்திக்கு நாம மீட்’ பண்ணினப்போ என்னடோ பிசினஸ் டூர் முடிஞ்சு நான் திரும்பி வந்த பிறகு சந்திக்கலாம்னு சொன்னே... திடீர்னு இன்னிக்கு வந்திருக்கியே…

    இன்னிக்கு உங்களை சந்திச்சே ஆகவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போச்சு.

    இந்த இருபத்திநாலு மணி நேரத்துக்குள்ளே அப்படி என்ன ஆயிடுச்சுன்னு சொல்லு.

    இப்படி வந்து எனக்கு எதிர்ல உக்காருங்க...

    சஞ்சய் அவளுக்கு நேரெதிர் சோபாவில் தன்னை இருத்திக்கொண்டான்,

    ம்... சொல்லு.

    சொல்லப்போறதில்லை... காட்டப்போறேன்...

    சஞ்சய்யின் புருவங்கள் நெளிந்தன.

    என்ன காட்டப்போறே...?

    மாலினி தன்னுடைய கைப்பையின் ஜிப்பைத் திறந்து உள்ளே இருந்து ஒரு வெள்ளை நிறக் கவரை எடுத்தாள்.

    அவளுக்கும் சஞ்சய்க்கும் மத்தியில் இருந்த டீப்பாயின் மேல் அந்த காகிதக் கவரைக் கவிழ்த்தாள்.

    அதிலிருந்து பொலபொலவென நாலைந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் வந்து விழுந்தன.

    அவற்றைக் கையிலெடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தான் சஞ்சய். இருபத்தைந்து வயதுக்கு மதிக்கக்கூடிய இளைஞர்கள் உதடுகளில் மெல்லிய புன்னகையைத் தக்க வைத்து போஸ் கொடுத்திருந்தார்கள்.

    சஞ்சய் மாலினியிடம் நிமிர்ந்து கேட்டான்.

    யார் இவங்க எல்லாம்...?

    இப்ப நீங்க கையில் வெச்சிருக்கிங்களே அவர் ஒரு சிவில் என்ஜினியர்... கண்ணாடி போட்டிருப்பவர் டாக்டர்... நியூரோ ஸ்பெஷலிஸ்ட் நீலக்கலர் ஷர்ட் போட்டிருப்பவர் ஐபி.எம். இண்டர்நேஷனலின் இந்தியன் ரீஜனில் வேலை பார்க்கிற கம்ப்யூட்டர் என்ஜினியர்… இவர்...

    இவங்க போட்டோவையெல்லாம் நீ எதுக்காக வெச்சிருக்கே...?

    அப்பா என்கிட்டே கொடுத்தார்...

    எதுக்காக!

    இவங்க ஜாதகமெல்லாம் என்னோட ஜாதகத்தோட பர்ஃபெக்ட்டா பொருந்துதாம். அவங்க ஃபாமிலியும் திருப்திகரமா இருக்காம்... அதனால இவங்கள்ல உனக்குப் பிடிச்ச ஒருத்தரை செலக்ட் பண்ணி சொல்லும்மான்னு அப்பா இந்த போட்டோக்களை என்கிட்டே நேத்திக்குக் கொடுத்தார்...

    மாலினி...?

    நாம ரெண்டு பேரும் காதலிக்கிற விஷயத்தை இனியும் வீட்டில் சொல்லாம இருக்கமுடியாது...

    சொல்லேன்...

    விஷயத்தை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை... நீங்க வீட்டுக்கு வந்திங்கன்னா... உங்களை அறிமுகப்படுத்தி வெச்சிட்டு... நீங்க பக்கத்திலிருக்கிற தைரியத்தில் நான் உடைச்சி சொல்லிடுவேன்...

    நான் டெல்லிக்குப் போய்ட்டு திரும்பி வந்ததும் முதல் வேலையா உங்க விட்டுக்கு வர்றேன்... உங்க அப்பா அம்மாகிட்டே பேசறேன்...

    நீங்க வர்றதுக்குப் பதினைஞ்சு நாளாகுமே...

    ஆமா.

    அப்பாகிட்டே இன்னிக்கு நான் முடிவைச் சொல்லியாகணும்

    எதையாவது சொல்லி சமாளி... போய்ட்டு வந்து நான் அவர்கிட்டே பேசறேன்...

    வழவழா கொழகொழான்னு அவர்கிட்டே பதில் சொல்லமுடியாது. என்னை துளைச்செடுத்துடுவார்...

    இப்ப வேற வழியில்லையே...

    ஏன் உங்க டெல்லி ட்ரிப்பை ஒருநாள் ஒத்திப்போட முடியாதா...?

    உனக்கே தெரியும்... இது அஃபிஷியல் ட்ரிப் மாலினி... நாம நினைச்ச மாதிரி தள்ளிப்போட முடியாது... என்னோட ப்ரொக்ராம் ஷெட்யூலை நான் சந்திக்கப்போகிற நபர்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸ் பத்து நாளைக்கு முன்னாலேயே அனுப்பி வெச்சிடும்...

    ப்ரீஃப்கேசிலிருந்து ஒரு காகிதத்தை சரக்கென்று கிழித்து அவளிடம் கொடுத்தான்.

    எந்தத் தேதியில் எந்த ஊரில் கேம்ப்ன்னு விபரமா எழுதியிருக்கு பார்... அந்த ஊரில் எங்கே தங்கியிருப்பேன்... காண்டாக்ட் போன் நம்பர் என்ன... எல்லா விபரங்களுமே ப்ரொக்ராம் ஷெட்யூல்ல இருக்கு பாரு...

    தெரியுமே... ஆஃபிஸ் டூர்ல இருக்கிறப்போ எத்தனை தடவை போன்ல உங்ககூட பேசியிருக்கேன்...

    தெரிஞ்சிகிட்டே நீ டூர் ப்ரொக்ராமை போஸ்ட்போன் பண்ணமுடியும்மான்னு கேக்கறியே...

    அப்பாகிட்டே மேட்டரை ஓப்பன் பண்ண துணிச்சல் இல்லாமல்தான் இன்னிக்கு உங்களை பார்க்கவே வந்தேன்...

    சஞ்சய் புன்னகைத்தான்.

    "மேட்டரை

    Enjoying the preview?
    Page 1 of 1