Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivappu Echcharikkai
Sivappu Echcharikkai
Sivappu Echcharikkai
Ebook62 pages49 minutes

Sivappu Echcharikkai

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Sivappu Echcharikkai

Read more from Arnika Nasser

Related to Sivappu Echcharikkai

Related ebooks

Related categories

Reviews for Sivappu Echcharikkai

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivappu Echcharikkai - Arnika Nasser

    12

    1

    இந்தியாவின் கடற்கரையிலிருந்து இருநூற்று ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது அந்தத்தீவு.

    கடந்த ஆறுவாரங்களாக தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் நடந்த போரில் வழக்கத்துக்கு மாறாக ராணுவத்தின் கை ஓங்கியிருந்தது. ஐந்து வருடங்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல பகுதிகளை தீவிரவாதிகள் இழந்திருந்தனர்.

    தீவின் வடக்குப் பக்கம் முழுவதும் அடர்ந்த காட்டுப் பிரதேசம். இராணுவத்தின் அடுத்த இலக்கு அதுதான். அந்த அடர்ந்த காடுதான் தீவிரவாதிகளின் தற்காலிக உறைவிடம்.

    மொத்தம் பத்து கூடாரங்கள் காணப்பட்டன. எட்டில் நானூறு தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். ஒன்பதாவதில் போரில் காயமுற்றோர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். ஜெனரேட்டரும் வயர்லெஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது. பத்தாவது கூடாரத்தில் தீவிரவாதிகளின் தலைவன் தங்கியிருந்தான்.

    தலைவன் தனஞ்செயன் ஆறடி உயர மிடுக்கன் அனைத்து போர் கருவிகளையும் இயக்கத் தெரிந்தவன். கொரில்லா போர் யுக்தியில் அசாத்தியன். வெடிகுண்டுகள் தயாரிப்பதில வல்லுநன்.

    கூடாரத்தின் இருபுறமும் விமானங்களை தாக்கும் ஏவுகணைகள் நின்றிருந்தன.

    ஆறுவார போரில் தன் பக்க இழப்பு அதிகம் என்பதில் மன இறுக்கமாய் காணப்பட்டான் தனஞ்செயன்.

    கையிலிருந்த தேவாங்கு குட்டியை தடவிக் கொடுத்த படி அமர்ந்திருந்தான்.

    ஒரு சகா ஓடி வந்து வணங்கினான்.

    என்ன?

    போரில் இறந்த நம் தோழர்கள் நாற்பது பேர் உடலை செஞ்சிலுவை சங்கத்தினர் கையளித்துவிட்டு போகிறார்கள்!

    ம்! உருமினான் தனஞ்செயன்.

    வீர வணக்கம் செலுத்தி அனைத்து உடல்களையும் தகனம் செய்ய ஏற்பாடு செய்

    சகா தலையாட்டினான்.

    இன்னொரு தகவல்!

    என்ன?

    நமது தற்கொலைப்படை வீரன் இராணுவ தலைமையகத்துக்குள் மனித குண்டாய் ஊடுருவியதில் இருநூறு ராணுவத்தினர் மரணம்!

    சபாஷ்! கொடூரமாய் கண்கள் மிளிர்ந்தான் தனஞ்செயன்.

    போய் தகன ஏற்பாடுகளை கவனி!

    சகா போனான். அவன் போனவுடன் தனஞ்செயன் அமர்ந்திருந்த மற்ற சகாக்களை வெறித்தான்.

    இந்தப் போரில் நாம் அடைந்த அழிவுகளுக்கு முழுக் காரணம் நம் நீலாங்கே ராணுவம் அல்ல. அது ஒரு நீர் பாம்பு அதற்கு மறைமுகமாய் யுக்தி அமைத்துக் கொடுத்து போரில் இறக்கியது இந்திய அரசாங்கம் தான், இல்லையென்றால் இவ்வளவு சீக்கிரம் நம் பிடியிலுள்ள முக்கிய இரு நகரங்களை இழப்போமா? இந்தியத் தலைவர் வன் கொலையில் வன்மம் ஆரம்பித்தது. இந்திய அரசு காஷ்மீர் தீவிரவாதிகளையும் பஞ்சாப் தீவிரவாதிகளையும் வளர்ப்பது நாம் என்று உளவுத்துறை அவர்களுக்கு தூபமிடுகிறது. என்னை பிடிக்க அவர்களின் விசேஷ கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. என்னை பிடிக்க நேரடிடையாய் இந்திய ராணுவம் வராமல் நீலாங்கா அரசு ராணுவத்தை முடுக்கிவிட்டுள்ளது. நம்முடைய பின்னடைவு தற்காலிகம்தான்... நாம் எப்போதுமே சாம்பலிலிருந்து உயிர்ப்பவர்கள்!

    ஒரு நக்ஸலைட் மாரப்பனை பிடிக்க முடியாத அவர்களா நீலாங்கே ராணுவத்தின் முதுகுக்கு பின் நின்று உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்? போன தடவை போலவே மூக்கறுபடப் போகிறார்கள் தலைவரே!

    தனஞ்செயன் முகத்தில் ரௌத்ரம்

    Enjoying the preview?
    Page 1 of 1