Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennam Pola Kannan Vanthaan
Ennam Pola Kannan Vanthaan
Ennam Pola Kannan Vanthaan
Ebook120 pages1 hour

Ennam Pola Kannan Vanthaan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateOct 1, 2020
ISBN9781043466640
Ennam Pola Kannan Vanthaan

Read more from R.Sumathi

Related to Ennam Pola Kannan Vanthaan

Related ebooks

Reviews for Ennam Pola Kannan Vanthaan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennam Pola Kannan Vanthaan - R.Sumathi

    23

    ஆசிரியர் அறை

    பாடும் நிலா பாலு

    எஸ்.பி.பி.யின் இறப்பு... இசையை யாரெல்லாம் ரசிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தன் வீட்டில் ஒரு இறப்பு ஏற்பட்டது போல் எண்ணுகிறார்கள்.

    இந்தக் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும்... அவர் நல்லபடியாக மீண்டு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தொகை எண்ணில் அடங்கா. இப்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாத போனபோது மக்கள் திரண்டு பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் பலனாக அவர் அப்போது பிழைத்துக் கொண்டார். அதேபோல் எஸ்.பி.பி.க்கும் மக்கள் அவர் குணமாகி வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எல்லோருமே அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.

    அவருக்குக் கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளால் அவர் குணமாகி வந்தாலும் பாட இயலாது.

    ஒரு போர்வீரன் போரிலே வீரமர ணம் அடைந்தது போல் கடந்த 50 ஆண்டுகளாக ஒரே குரல்வளத்துடன் பாடிய ஓர் அபூர்வ மனிதநேயப் பாட கர்... கடைசிவரை பாடி அதோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். ஒருவேளை அவருக்கு இந்தக்

    கொடிய கொரோனா நோய்த் தொற்று வராமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் பாடிக் கொண்டுதான் இருந்திருப்பார்.

    எதிரிகளே இல்லாது வாழ்ந்த மனிதர் எஸ்.பி.பி. இவரது சாதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல...

    திரையுலகில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார். இந்தியத் திரையுலகில் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், முகம்மது ரஃபி என்று பலர் இருக்கலாம். அவர்கள் செய்யாத சாதனை என்னவென்றால் இவர் 14 மொழிகளில் பாடியிருக்கிறார்.

    இளையராஜா, பாரதிராஜா இவர்களின் ஆரம்பக்கால நண்பராக இருந்த எஸ்.பி.பி. அவர்களிடம் மிகுந்த நெருக்கம் கொண்டவர். அதனால்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வயதையும் பார்க்காமல் எஸ்.பி.பி.யின் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தார்கள்.

    மூன்று தலைமுறைப் பாடகர். மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படத்தில் பாடத் தொடங்கி சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், அஜீத், விஜய் என இந்தத் தலைமுறை நடிகர்களுக்கும் பாடியுள்ளார்.

    நானும் பலமுறை சபரிமலை போயிருக்கிறேன். அங்கே டோலி தூக்குபவர்களை, அது அவர்களது தொழில் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தேன். ஆனால் எஸ்.பி.பி.யின் ஒரு பதிவில் பார்த்தேன். தன்னை டோலியில் சுமப்பவர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி கூறி ஏறுகிறார். இதுபோல் பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    அன்புடன்,

    ஜி.அசோகன்.

    அசோகனின் ஆத்திச்சூடி

    தினமலர்

    உண்மையின் உரைகல்

    அழகு படங்கள்! அசத்தும் செய்திகள்!!

    ஆச்சரியத் தலைப்புகள்! அதிர்ச்சித் தகவல்கள்!!

    இது யாருக்கும் அடங்காத தாமரை மலர்!

    ஈரோட்டில் எம்.ஜி.ஆர். திறந்த இதழ்!

    உண்மைச் செய்திகளின் உரைகல்!

    ஊருக்காகப் போராடிய வரலாற்று இதழ்!

    எவருக்கும் தலை வணங்காமுடி!

    ஏற்றமும் மாற்றமும் கொண்ட உன்னதம்!

    ஐயர் டி.வி.ஆரின் அற்புதப் படைப்பு!

    ஒருவருக்கும் அஞ்சாத தமிழ் நெஞ்சம்!

    ஓய்வறியாது உழைக்கும் உத்தம இதழ்!

    ஔவை தமிழில் அழகு அச்சில்...

    ஃப்ளாஷ் நியூஸுக்குப் பெயர் பெற்றது!!

    எஸ்.பி.பி.

    அற்புதக் குரலுக்குச் சொந்தக்காரர்!

    ஆண்டவனால் படைக்கப்பட்ட பாட்டுக்காரர்!

    இறவாப்புகழ் கொண்ட சாதனைக்காரர்!

    ஈராயிரம் நூற்றாண்டின் இசைப் புதல்வர்!

    உச்சத்தில் இருந்தாலும் உச்சிகனம் இல்லாதவர்!

    ஊக்கமூட்டும் உள்ளம் கொண்ட உன்னதம்!

    எந்த மொழியும் உன் சொந்த மொழி!

    ஏற்றம் இறக்கம், மாற்றம் இல்லா மனிதம்!

    ஐம்பதை ஆண்ட பாடல் அரசன்!

    ஒருக்காலும் இறக்காது உன் புகழ்!

    ஓய்வு உயிருக்குத்தான், குரலுக்கு அல்ல!

    ஔதிய மனம் கொண்ட அற்புதம்!

    ஃக்கடான்னு விட்டுவிட்டு அநியாயமாகப் புறப்பட்டாயே!

    எண்ணம் போலக் கண்ணன் வந்தான்

    1

    விவேக் வீட்டிற்குள் நுழைந்தபோது அலைபேசி மூலம் யாரிடமோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள் ஆனந்தவள்ளி.

    பேச்சின் சாரம் புரிய ஆரம்பித்தபோது அது தரகர் பொன்னுசாமி என புரிந்தது.

    இதப் பாருங்க பொன்னுசாமி... எனக்கு இந்த மேட்ரிமோனியல் மூலம் பொண்ணு பார்க்கறதெல்லாம் பிடிக்கலை. யாரு என்னன்னு தெரியாத எங்கோ இருக்கிற பெண்ணை பிடிச்சு கட்டி வைக்கறதெல்லாம் பின்னால சரிப்பட்டு வராது. எந்த வகையிலாவது பொண்ணு நமக்கோ நம்ம சொந்தக்காரங்களுக்கோ தெரிஞ்சிருக்கணும். விவேக்கின் மனக் கண்ணில் நியதி வந்து நின்றாள்.

    ‘தெரிஞ்ச பொண்ணாயிருக்கணும்.’

    ‘அம்மா நியதி எனக்கு அஞ்சு வருஷமா தெரிஞ்ச பொண்ணும்மா. சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்ச பொண்ணைவிட எனக்கே தெரிஞ்ச பொண்ணு பெட்டர் இல்லையாம்மா.’

    மனதிற்குள் பேசினான்.

    பொண்ணு படிச்சிருக்கணும். ரொம்ப நல்லா படிச்சிருக்கணும். தன் சொந்தக் கால்ல நிக்கறவளாயிருக்கணும். பொண்ணு வேலைக்குப் போறவளாயிருக்கணும்கறதுக்காக இல்லை. சம்பாதிக்கிற பொண்ணுங்கறதுக்காக... சம்பாதிக்கிற பொண்ணுக்குத்தான் காசோட அருமை தெரியும். ஒவ்வொரு காசையும் யோசிச்சு யோசிச்சு செலவழிப்பா."

    ‘அட...டா அம்மா நீ எதிர்பார்க்கற தகுதி நியதிக்கிட்டே நிறையவே இருக்கு. நியதி மாதிரி ஒரு கஞ்ச பிசினாறிய பார்க்கவே முடியாதும்மா. ஆசை ஆசையாய் ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போய் பர்கர் பீசான்னு ஆர்டர் பண்ணினா அத்தனையைம் கேன்சல் பண்ணிட்டு டீக்கு ஆர்டர் பண்ணுவாம்மா.’

    உட்கார்ந்து ஷூவைக் கழட்டியவாறே அம்மாவையே பார்த்தான்.

    "அப்புறம் பொண்ணுக்கு நல்லா சமைக்கத் தெரியணும். வேலை பார்க்கிறேன் பேர்வழின்னு வரும்போதே ஹோட்டல்லர்ந்து டிபனை வாங்கிக்கிட்டு உள்ள நுழையக் கூடாது. ஏன்னா... ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். குடும்ப ஆரோக்கியம்கறது பொண்ணோட கையிலதான் இருக்கு. புருஷனுக்கு பார்த்து பார்த்து சமைச்சுப் போடனும்.

    அட...டா இந்த தகுதியும் நியதிக்கு பொருந்தி வருதே. ஆரோக்கியத்துக்கு அவளைத் தவிர பெரிய ஆளா இந்த உலகத்துல வேற யாருமே இருக்க முடியாதும்மா என்ன சாப்பாடுன்னு நான் போன் பண்ணி கேட்கும்போதெல்லாம் தயிர் சாதம் வல்லாரை துவையல், பொன்னாங்கண்ணி கூட்டும்பாம்மா. அவ பெரும்பாலும் சாப்பிடறதெல்லாம் முடக்கத்தான் தோசை, கேழ்வரகு களி இப்படித் தாம்மா. அவ எனக்கு பொண்டாட்டியா கிடைச்சா எனக்கு எதிர்காலத்துல சுகர், பி.பி.ன்னு எதுவுமே வராதும்மா.

    "இதப் பாருங்க பொன்னுசாமி...

    Enjoying the preview?
    Page 1 of 1