Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Malar Madiyile
En Malar Madiyile
En Malar Madiyile
Ebook138 pages51 minutes

En Malar Madiyile

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466466
En Malar Madiyile

Read more from R.Sumathi

Related to En Malar Madiyile

Related ebooks

Reviews for En Malar Madiyile

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Malar Madiyile - R.Sumathi

    19

    1

    அன்றைய காலைப்பொழுதை அழகான கோலம் போட்டு வரவேற்றாள் சுரபி.

    வாசலை அடைத்த கோலத்தை தன்னை மறந்து ரசித்தவளின் மனதில் பளிச்சென அம்மா வந்து போனாள். ‘அம்மா... உன்னுடைய வாழ்க்கையும் இந்தக் கோலத்தைப் போல்தானே சிக்கலாகிப் போனது’ - கையில் கோலமாவுக் கிண்ணத்துடன் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள்.

    பால்கனியிலிருந்து அபர்ணா குரல் கொடுத்தாள்.

    அண்ணி... கோலம் சூப்பர்.

    நிமிர்ந்து பார்த்தாள் சுரபி. மார்போடு அணைத்த புத்தகத்துடன் அபர்ணா.

    அதே நேரம் ‘வாக்கிங்’ வந்த ராணியம்மாள், மாடியில் நின்ற மகளைப் பார்த்தாள்.

    வெறுமனே பாராட்டினா மட்டும் போதாது. மத்தவங்ககிட்டே இருந்து திறமையைக் கத்துக்கணும். ஒரு நாலு புள்ளிக் கோலம் கத்துக்கிட்டா போற இடத்துல மானம் போகாம இருக்கும்.

    அம்மா, இந்தக் கம்ப்யூட்டர் யுகத்துல உலகம் எவ்வளவோ மாறிப் போயிட்டு. நீ இன்னும் கோலம் போடறதைப் பத்திப் பேசறே?

    உலகம் மாறினாலும் கம்ப்யூட்டர்ல கோலம் போட முடியுமே தவிர கம்ப்யூட்டரே வாசலில் வந்து கோலம் போடாது.

    போதும்... ஆளை விடுங்க. எனக்கு இன்னைக்குப் பரீட்சை இருக்கு. நான் படிக்கணும்.

    ராணியம்மாள் உள்ளே வந்தாள்.

    சுரபி, ரொம்பக் களைப்பா இருக்கு. சீக்கிரமா காப்பி கொண்டா.

    இதோ கொண்டு வர்றேன் அத்தை - சுரபி அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

    ராணியம்மாள் சோபாவில் அமர்ந்தாள். காப்பியுடன் வந்தாள் சுரபி.

    இந்தாங்க அத்தை.

    வாங்கிக் கொண்ட ராணியம்மாள், சுரபி... வேலைக்காரி லெட்சுமி வந்துட்டாளா? என்றாள்.

    இன்னும் வரலை அத்தை. இப்ப வந்துடுவா! - சுரபி சொன்ன அதே நிமிடம் - படி ஏறிக் கொண்டிருந்தாள் லெட்சுமி. அபர்ணாவைவிட அவள் இரண்டு வயது மூத்தவள். கருப்பாக இருந்தாலும் அழகாக இருந்தாள்.

    அவள் உள்ளே நுழைந்ததுமே ராணியம்மாள், தன் கம்பீரமான குரலில் அழைத்தாள்.

    லெட்சுமி... இங்க வா. அவள் எதிரே வந்து நின்றாள்.

    சொல்லுங்கம்மா...

    நீ நாளையிலேர்ந்து வேலைக்கு வரவேணாம்.

    கட்டளையைப் போல் வந்த அந்த வார்த்தைகளை லெட்சுமி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    சுரபிக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. லெட்சுமி செய்யும் வேலையை திருந்தச் செய்வாள். சுரபி - அபர்ணாவிடம் சகோதரியைப் போல் பழகுவாள். ராணியம்மாவிடம்தான் பயம்.

    இன்னும் சொல்லப்போனால், இதுவரை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்தாள் லெட்சுமி. திடீரென வேலையை விட்டு நிற்கச் சொன்னதும் திகைப்பாக இருந்தது.

    அம்மா... எதுக்கு என்னை வேலையை விட்டு நிறுத்தறீங்க? - சற்று கோபமாகவே கேட்டாள் அவள்.

    இந்தக் கேள்வியெல்லாம் எனக்குத் தேவையில்லை. வேலையை விட்டு நின்னுக்கன்னு சொன்னா நின்னுக்க. சுரபி, இவளுக்கு இன்னைய தேதி வரைக்கும் கணக்கை செட்டில்’ பண்ணி அனுப்பிவிடு.

    அதெல்லாம் முடியாதும்மா. எனக்குக் காரணம் வேணும். இத்தனை வருஷத்தில் என் வேலையில என்ன குறை கண்டீங்க... சொல்லுங்க.

    குறைதானே வேணும். இப்ப சொல்றேன். சுரபி, டிரைவர் கண்ணையனைக் கூப்பிடு.

    சுரபிக்கு இன்னும் அதிர்ச்சி கூடியது. ‘அவன்தான் லெட்சுமியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் கொடுத்திருப்பானோ?’

    சந்தேகமாக வாசலுக்கு வந்தவள் - காரைத் துடைத்துக் கொண்டிருந்த கண்ணையனை அழைத்தாள். ராணியம்மாள் கூப்பிடுவதாகச் சொன்னதும், பணிவுடன் அங்கே வந்து நின்றான்.

    அம்மா... கூப்பிட்டீங்களா?

    ராணியம்மாள் அவனை ஒருமுறை ஏறிட்டுவிட்டு, சுரபியைப் பார்த்தாள்.

    சுரபி, இவன் கணக்கையும் சரி பார்த்து பணத்தைக் கொடுத்துடு. கண்ணா... நீயும் நாளையிலே இருந்து வேலைக்கு வர வேண்டாம்.

    சுரபிக்கு இது மேலும் திகைப்பாக - மாமியாரைப் பார்த்தாள்.

    கண்ணையன் கலவரம் பூசிய விழிகளுடன் நின்றான்.

    ராணியம்மாள் நடுக்கமாக நின்ற லெட்சுமியைப் பார்த்தாள்.

    இப்ப என்ன காரணம்னு உனக்குப் புரிஞ்சிருக்குமே?

    சுரபி எதுவும் புரியாமல் அனைவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

    லெட்சுமி தலை குனிந்தாள்.

    லெட்சுமி... சுரபியைப் பாரு. எதுவும் தெரியாம முழிக்கிறா. என்ன காரணம்னு சொல்லேன். அவளும் தெரிஞ்சுக்கட்டும்.

    லெட்சுமி அமைதியாக இருக்கவே - ராணியம்மாள் எழுந்தாள்.

    நானே சொல்றேன், சுரபி. இதுங்க ரெண்டையும் நாம வேலைக்கு வச்சா, ஒழுங்கா வேலையைப் பார்க்காம ஒருத்தரை ஒருத்தர் பார்க்கறதும்... சிரிக்கிறதும்... விளையாடுறதுமா இருக்குது. இதுக்குத்தான் நாம சம்பளம் கொடுக்கிறோமா?

    கண்ணையன் தைரியமாகவே பேசினான்.

    அம்மா, நாங்க காதலிக்கிறது உண்மைதான். கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கோம். பெரியவங்களா இருந்து எங்க காதல் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் செய்யாம, இப்படி வேலையை விட்டு நிறுத்துறீங்களேம்மா?

    "என்ன ஆசீர்வதிக்கணுமா? என்னைப் பொறுத்தவரை இந்தக் காதல் கண்றாவியெல்லாம் ஒழுக்கக்கேடான விஷயம். இந்த வீட்ல வயசுப் பொண்ணு ஒருத்தி இருக்கா.

    அவ எதிரே நீங்க ரெண்டு பேரும் இப்படித் தப்புத்தாளம் பண்ணிக்கிட்டிருந்தா அவ மனசு கெட்டுடாதா? அதான் இந்த முடிவு."

    ராணியம்மாள் குரலை உயர்த்திக் கத்த - இருவரும் மிரண்டு போய் வெளியேறினர்.

    அதே நேரம் மாடியில் இருந்து வந்த அபர்ணா அத்தனையையும் கேட்டு விட்டாள். அவளுடைய முகம் ஏனோ நிறமிழந்து போனது.

    லெட்சுமிக்கும், கண்ணையனுக்கும் அன்றைய தேதி வரைக்குமான சம்பளத்தைக் கொடுத்தபோது சுரபிக்கு நெஞ்சை அடைத்தது.

    லெட்சுமிக்காகவோ, கண்ணையனுக்காகவோ அவளால் வாதாட முடியாது. எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான ராணியம்மாளுக்கு மகன் சோழனும், அபர்ணாவுமே பயந்து பின்வாங்கும்போது மருமகளான அவள் எம்மாத்திரம்?

    கண்கலங்கிச் சென்ற லெட்சுமியின் முகம் நெஞ்சை அழுத்த - சுறுசுறுப்பு இல்லாமல் சமையலறைக்குள் நுழைந்தாள் சுரபி. ராணியம்மாள் எந்தவித உறுத்தலும் இல்லாமல் குளித்து முடித்துக் கோவிலுக்குப் போய் விட்டாள்.

    சிற்றுண்டிக்காக அபர்ணாவும், சோழனும் சாப்பாட்டு மேசைக்கு வந்தபோது லெட்சுமி, கண்ணையன் இருவரைப் பற்றிய பேச்சு எழுந்தது.

    அண்ணா... இந்த அம்மா ஏன் இப்படிப் பண்ணுறாங்க? கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாம... ச்சே!

    சோழன், தங்கையைப் பார்த்தான்.

    அம்மா சுபாவம்தான் தெரிஞ்ச விஷயமாச்சே? எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். என்ன பண்ணுறது? ஏதாவது கேட்டா அவங்களுக்குக் கோபம் வந்துடுது! - விழிகள் பனிக்க அவளைப் பார்த்தான்.

    உணவு பரிமாறிய சுரபிக்கு கை நடுங்கியது. கையில் பிடித்திருந்த கரண்டியில் இருந்த சாம்பார் தளும்பி, மேசையில் சிந்தியது. அபர்ணா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். கேலியாகச் சிரித்தாள்.

    என்ன ரெண்டு பேரும் பேய்முழி முழிக்கிறீங்க?

    அபர்ணா, நீ யாரையாவது... - சுரபி மென்று விழுங்கினாள்.

    காதலிக்கிறேனான்னுதானே கேட்கறீங்க? இதுவரைக்கும் இல்லை. நாளைக்கே என் மனதைக் கவரும் ராஜகுமாரன் என் எதிரே வந்து நின்னா, நான் காதல்ல விழாம என்ன செய்வேன்? விழுந்துட்டா...?

    உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா? - சோழன் கேட்க,

    என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா? என அபர்ணா பதிலுக்குத் தாக்க, சுரபி சந்தேகமாகக் கணவனைப் பார்த்தாள்.

    அபர்ணா, உங்க அண்ணன் கல்யாணத்துக்கு முந்தி யாரையாவது காதலிச்சாரா? அம்மாவுக்குப் பயந்து என் கழுத்துல தாலி கட்டினாரா?

    அபர்ணா... பார்த்தியா? உன்னால வீணா குடும் பத்துல குழப்பம் உண்டாகுது.

    "அண்ணி, அண்ண னாவது... காதலிக்கிறதாவது? சரியான பயந்தாங்கொள்ளி. ஆனா, மனசுல பயங்கர ஆசை. அதிகம் படிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும். பொண்டாட்டி வேலைக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1