Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayiram Malaril Oru Malar Neeye
Aayiram Malaril Oru Malar Neeye
Aayiram Malaril Oru Malar Neeye
Ebook154 pages1 hour

Aayiram Malaril Oru Malar Neeye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அழகு" அப்படியென்பது சிறிது காலமே நிலைத்திருக்கக் கூடிய ஆணவ ஆட்சி. ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு அழகு முக்கியத்துவம் கிடையாது. நல்ல குணம், பண்புகள், நேர்மை, உண்மை, விடாமுயற்சி இவை இருந்தால் அவள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறாள் பவானி. அழகில்லை என்று மனைவியை உதறிவிட்டு வந்த கைலாசத்தின் அன்பை அவள் மீட்டெடுக்கிறாள் தன்னுடைய செய்கையின் மூலம். அந்த குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவந்து அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துவிட்டு வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு அழகு முக்கியமில்ல என்று நிரூபிப்பது தான் என்னுடைய குறிக்கோளே தவிற உங்கள் வாழ்க்கையில் மீண்டும் குறிக்கிட அல்ல என்று கூறிவிட்டு தன்னை விரும்புபவரை மணந்துகொண்டு நிம்மதியாக வாழத் தொடங்குகிறாள் பவானி.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580101007638
Aayiram Malaril Oru Malar Neeye

Read more from Ga Prabha

Related to Aayiram Malaril Oru Malar Neeye

Related ebooks

Reviews for Aayiram Malaril Oru Malar Neeye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayiram Malaril Oru Malar Neeye - GA Prabha

    https://www.pustaka.co.in

    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

    Aayiram Malaril Oru Malar Neeye

    Author:

    ஜி.ஏ. பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    "சூரியனே சூழொளி தெய்வமே

    வந்தெனைக் காத்திடுவாய்

    வாழ்வில் தீபம் ஏற்றிடுவாய்"

    பளீரென்று ஒளிர்ந்த சூரியனைப் பார்த்து, கண்மூடி கரம் குவித்து நின்றார் கைலாசம்.

    அதிகாலைச் சூரியன் பிரகாசமாக இருந்தது.

    மொட்டை மாடியில் கிளை பரப்பியிருந்த தென்னங்கிளைகள், வேப்பமரக் கிளைகள் சூரிய ஒளியை முழுதாக வாங்கி பிரதிபலித்தது. லேசான குளிர் காற்றும், சூரிய ஒளியும் அந்த அதிகாலைப் பொழுதை அழகாக்கியது.

    கைலாசம் அதைப் பார்த்தபடி நின்றார்.

    உலகம் அழகான விஷயங்களால் நிரம்பி இருக்கிறது. எங்கும் அழகு நிரம்பி இருக்கிறது. அதை அனுபவிக்கவே இந்த மனிதப் பிறவி என்று நினைத்தார் கைலாசம். அவரைச் சுற்றி அனைத்தும் அழகிய விஷயங்களே நிரம்பி இருக்கும்.

    ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசிப்பார் கைலாசம்.

    காலையும், மாலையும் மொட்டை மாடியில்தான் வாக்கிங் போவார். சூரியன் உதிப்பதையும், மறைவதையும் ரசிக்கவே அவரின் இந்த வாக்கிங். தன் உடம்பையும், கட்டுக் கோப்பாக வைத்திருப்பார். கருங்கல் போன்று உறுதியான உடல்வாகு. அதிகப் பருமனும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் பூசிய உடல். சந்தண நிறம், கருகரு என்று கிராப் தலை. அவரைப் பார்த்தால் அம்பது வயது என்று சொல்ல முடியாது.

    இன்னும் தலைக்கு டை அடிக்கவில்லை. கண்ணாடி போடவில்லை. நடந்தால் கம்பீரம், நாலுபேரை திரும்பிப் பார்க்க வைக்கும். ரசனையும், அது சார்ந்த விஷயங்களை மட்டுமே அவர் அறிந்து கொள்வார். சிறிது மனக் கலக்கம் என்றாலும் அதன் அருகில் நெருங்க மாட்டார். உடனே தன்னை விட்டு அதை அப்புறப் படுத்தி விட்டுத்தான் மறுவேலை.

    இப்போதும், வெயிலுக்காக வறண்டு கிடந்த வேப்பங் கிளைகளை ஒடித்துப் போட்டார். கீற்றுகளை வெட்டி எடுத்து ஓரமாகக் குவித்து வைத்தார். மொட்டை மாடி முழுவதும் வறண்ட இலைகள், பூக்கள் விழுந்து கிடந்தது. அவற்றை ஒதுக்கித் தள்ளினார்.

    என்ன சார், நீங்களே கிளீன் வேளையில் இறங்கிட்டீங்க?- பக்கத்து வீடு சபேசன்.

    கொரானா காலம். வேலைக்காரி வரதில்லை. மாடி பூரா அசிங்கமா இருக்கு. அதான் நான் கிளீன் பண்றேன்.

    அந்த வேப்பம்பூக்கள் நல்லது சார். அதை சாதத்துல போட்டு சாப்பிட்டா ரொம்ப நல்லது சுகர் குறையும்

    தேங்க் காட், எனக்கு சுகர் இல்லை.

    ஆனால் உங்களைப் பார்த்தா மத்தவங்களுக்கு சுகர் ஏறுதே. அவ்வளவு ஸ்வீட்டா இருக்கீங்க

    பெருமையாக உணர்ந்தார் கைலாசம். எல்லோரும் சொல்வது அது. உன்னைப் பார்த்தாலே மனசு ஜில்லுனு இருக்கு கைலாசம். உன் தோற்றம், பேச்சு எல்லாமே ஸ்வீட்டா இருக்கு என்பார்கள். அதில் உள்ளூர ஒரு பெருமை உண்டு அவருக்கு.

    ஒரு விதத்தில் தான் அதிர்ஷ்டம் செய்தவன் என்று நினைத்தார் கைலாசம். அழகான ராஜா மாதிரி தோற்றம். நல்ல வேலை. கை நிறைய சம்பளம். அவருக்குப் பொருத்தமான மனைவி. அவரைப் போலவே ஒரு மகன். கிளி மாதிரி ஒரு பெண். நன்றி இறைவா.

    மனம் நன்றி கூறியது எல்லையற்ற பரம்பொருளுக்கு.

    தன் சௌபாக்கியத்தை நினைத்து நன்றி கூறி, பழைய வாழ்க்கையை அவர் மறந்தாலும் பிரபஞ்சம் அதை நினைவு வைத்திருந்தது. அது ஒவ்வொரு நிமிஷமும் அவரின் நேரத்திற்காகக் காத்திருந்தது. மெல்ல நகர்ந்து வரும் மேகம் போல் அந்த சக்தி அவரை நெருங்கி வந்தது.

    அதை அறியாமல் கைலாசம் கீழே இறங்கி வந்தார்.

    வீடு இன்னும் எழுந்திருக்கவில்லை. மகளும், மகனும் அவரவர் ரூமில். மனைவி விஜயம் மட்டும் எழுந்து வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

    போதும், போதும். ரொம்ப ஒல்லிக் குச்சி மாதிரி ஆகிட்டா, அப்புறம் நான் ஊதினா பறந்துடுவே

    க்கும். கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்

    கொஞ்சம்தானே. ஆமாம் மஞ்சு எழுந்துக்கலையா?

    அவ ஏழு மணிக்குத்தானே எழுந்துப்பா? குளிச்சு காலேஜுக்கு கிளம்பினா போதும்.

    அவன் எங்கே, உன் சீமந்தப் புதல்வன்.?

    அவனும் ஏழரைக்கு எழுந்துடுவான்.

    என்ன டிபன் இன்னைக்கு?

    கார்ன் ஃபிளேக்ஸ், பால். ஆப்பிள் இருக்கு.

    ஒகே. நான் கேண்டீன்ல சாப்டுப்பேன்.

    நானும், மஞ்சுவும் இதை சாப்டுப்பேன். குமரேஷ் போறப்போ ஹோட்டல்ல சாப்டுடுவான். நைட் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிடலாம்.

    மதியத்திற்கு என்ன என்று கேட்கவில்லை. அவர் தன அலுவலக கேண்டீனில் சாப்பிடுவார். அங்கேயும் சாப்பாடு சிறிது ருசி இருக்காது. உப்பு, புளி காரம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் விஜயத்தின் சமையலுக்கு அது பிரம்மாதம் என்று இருக்கும்.

    கைலாசம் சிறிது சாப்பாட்டு ரசிகர். நல்ல ருசியுடன், வித விதமாக சாப்பிடப் பிடிக்கும். ஆனால் விஜயத்திற்கு இன்னும் சமையல் பிடிபடவில்லை. முன்பு அம்மா இருந்தாள். அவள்தான் முழுச் சமையலும். உதவிக்குக் கூட விஜயம் சென்றதில்லை என்றாலும் அவளின் வேலைக்காகாக அம்மாவை எதுவும் சொல்லாமல் வைத்திருந்தாள்.

    சென்ற வருடம் அம்மா இறந்த பிறகு அவர் நாவும் ருசிக்கு ஏங்கி விட்டது. நல்ல உணவுக்கு, ருசியும், மனமும் நிறைந்த உணவுக்கு மனம் ஏங்கியது. எவ்வளவு நாள் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்வது?

    ஏம்மா, மஞ்சு நீயானும் சமைக்கக் கத்துக்கோயேன்?

    போப்பா, நான் காலேஜுக்குப் போகணும்.

    கல்யாணமாகிப் போனா அங்க என்ன பண்ணுவே?

    சமையலுக்கு ஆள் இருக்கற வீடாப் பாருங்க

    ஹோட்டல் வச்சிருக்கற ஆளாத்தான் பார்க்கணும்.

    ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா பாருப்பா, வெரைட்டி ஃபுட் கிடைக்கும்

    தலையில் அடித்துக் கொண்டார் கைலாசம். மஞ்சு சொகுசாக வாழ்ந்தவள். கை விரல் நகங்களில் அழுக்கு படியாமல் வாழ்கிறவள். மகன் குமரேஷ் நண்பர்களுடன் ஹோட்டல், கிளப் என்று போகிறவன். என்ஜீனியர். இப்போதுதான் வேலை கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு வருஷத்தில் வெளிநாடு பறந்து விட்டால், பின் இந்தியாவை நினைக்க மாட்டான்.

    அவருக்குள் மெல்லியதாய் கவலை எழுந்தது.

    சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.

    இன்னைக்கு கம்பெனி இல்லையா?- விஜயம்.

    ம். மணி ஏழுதானே ஆகறது. குளிச்சு, ஒன்பதுக்கு கிளம்பினா போதும். ரெண்டு தெரு தள்ளி கம்பெனி அலுவலகம். கைலாசத்திற்கு சிறிது நேரம் அமைதியாக அமர வேண்டும்போல் இருந்தது.

    விஜி ஒரு காபி கிடைக்குமா?

    தரேனே. ஆல்சோ ஐ நீட் ஒன்.

    அப்பாடா என்றிருந்தது. விஜிக்கும் தேவை என்றால்தான் எதுவும் கிடைக்கும். அவளுக்காக ஒரு மூடு வந்தால் சமையலும் அசத்துவாள். மற்றபடி எதிலும் ஒரு ஆர்வம் இல்லை.

    கைலாசம். இருக்கியாப்பா?- வாசலில் குரல்.

    ராமநாதன் வரார். இருங்க அவருக்கும் சேர்த்து எடுத்துட்டு வரேன்

    என்கூட இன்னொருத்தர் இருக்காரும்மா. அவருக்கும் சேர்த்து கொண்டு வா.-ராமநாதன் உள்ளே வந்தார். அவர் பின்னாடியே ஒரு பெண்ணும் உள்ளே நுழைந்தாள்.

    மிகச் சாதாரணமான தோற்றம். நடுத்தர உயரம். பூசின உடல்வாகு. மாநிறம் என்றாலும், சரியான பராமரிப்பு இல்லாமல் வறண்டு போயிருந்தது. வட்ட முகத்தில் கண்கள் மட்டும் கடலளவு இருந்தது. அதில் தெரிந்த ஒரு ஒளி, அவரை ஈர்த்தது. இடுப்பு வரை தொங்கும் கூந்தல்.

    அலங்காரம், பூச்சுவேலை இல்லாமல் சாதாரணமாகத் தெரிந்தவளை தன் மகளுடன் ஒப்புமை படுத்திப் பார்த்தது அவரின் மனம். பளீரென்று பொன்னாக மின்னும் தேவதை போன்ற தன் மகளுடன் வாடிய பயிராய் நிற்கும் இவளையும் கற்பனை செய்து பார்த்தது மனம்.

    பாவம். வறுமை, அழகும் இல்லை. யார் இந்தப் பெண்?

    என் உறவுதான் கைலாசம். திருச்சி பக்கம். ஹோம்சயின்ஸ் படிச்சிருக்கா. ஒரு விஷயம் தெரியுமா? நம் கம்பெனி கேண்டீனை இவங்கதான் காண்ட்ராக்ட் எடுத்திருக்காங்க

    அட,- அதிசயித்தார் கைலாசம்.

    இவளுக்கு சமைக்கவும் தெரியுமா?

    "உருவத்தை பார்த்து எடை போடாதே கைலாசம். திறமை எங்கு வேணாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1