Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kandan Pugazh Padum Kandar Alangaram
Kandan Pugazh Padum Kandar Alangaram
Kandan Pugazh Padum Kandar Alangaram
Ebook168 pages1 hour

Kandan Pugazh Padum Kandar Alangaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தித்திக்கும் திருப்புகழால் முருகனை பாடிய அருணகிரிநாதர் அவனை, அவனின் வீர தீர பராக்கிரமங்களை தமிழால் அலங்கரித்திருக்கிறார். அதுவே கந்தர் அலங்காரம். அதிலிருந்து சில முத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதனுடன் தொடர்புடைய கோவில்களை இணைத்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580101010690
Kandan Pugazh Padum Kandar Alangaram

Read more from Ga Prabha

Related to Kandan Pugazh Padum Kandar Alangaram

Related ebooks

Reviews for Kandan Pugazh Padum Kandar Alangaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kandan Pugazh Padum Kandar Alangaram - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கந்தன் புகழ் பாடும் கந்தரலங்காரம்

    Kandan Pugazh Padum Kandar Alangaram

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    1) திருவருள் தரும் திருப்பரங்குன்றம்

    2) வளமான வாழ்வருளும் வயலூர்

    3) மன அமைதி தரும் மருதமலை

    4) தீராத வினைகளைத் தீர்க்கும் தீர்த்தகிரி

    5) திருப்பங்கள் தரும் திருச்செந்தூர்

    6) சீரான வாழ்வருளும் சிரகிரி வேலவன்

    7) சித்தர்கள் நிறைந்த சிவன்மலை

    8) விருப்பமான வாழ்வருளும் விராலிமலை

    9) இனிமையான வாழ்வருளும் இரத்தினகிரி முருகன்

    10) பதம் தந்து காக்கும் பழனியாண்டவன்

    11) எளியோரைக் காக்கும் எட்டுக்குடி வேலவன்

    12) குறைகள் தீர்க்கும் கொளஞ்சியப்பர்

    13) குறை தீர்க்கும் கொங்கணகிரி முருகன்

    14) குறைவிலா வாழ்வருளும் குமரமலை

    15) சுகமான வாழ்வருளும் சுவாமிமலை

    16) குறைவிலாத வாழ்வருளும் குன்றக்குடி

    17) இச்சைகளைத் தீர்க்கும் பச்சைமலை முருகன்

    18) பரிவுடன் காக்கும் பவளமலை முருகன்

    19) ஜோதியான வாழ்வருளும் ஜோதிமலை

    20) திருப்பங்கள் அருளும் திருத்தணி

    21) பரிபூரண வாழ்வருளும் பழமுதிர்ச் சோலை

    முன்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

    கந்தன் புகழ் பாடும் கந்தரலங்காரம் என்ற நூல் புஸ்தகாவின் மூலம் வெளியிடுவதில் மிக்க பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவன் முருகன். அழைத்தவர் குரலுக்கு ஏனென்று கேட்காமல் ஓடி வரும் கருணா சாகரம் அவன்.

    முருகன் என்றால் மும்மூர்த்திகளும் அங்கு வந்து நிற்பார்கள். கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

    அவனைத் தன் தமிழால் அலங்கரித்தவர் அருணகிரிநாதர். தேன் தமிழால் தமிழ்க்கடவுள் முருகனை நாவாற, இனிக்கப் பாடினார் அருணகிரியார். திருப்புகழ் அமுதம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம் என்று தமிழ்த் தேன் சொட்டச் சொட்டப் பாடிய அவரின் பாடல்களில் இருந்து சிலவற்றை மட்டும் தொகுத்து எடுத்திருக்கிறேன்.

    ஆயிரக்கணக்கான பாடல்கள். அத்தனை இனிமையான சொற்கள். தமிழின் பெருமையைச் சொல்ல வார்த்தைகள் ஏது? எனக்குத் தெரிந்து சில பாடல்களை மட்டும் அவன் கருணையால் தேர்ந்தெடுத்து மாலையாகக் கோர்த்திருக்கிறேன்.

    இதைத் தொடராக வெளியிட்ட மாலைமலர் நிறுவனத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் இந்த நேரத்தில் என் அன்பான நன்றிகள். முதன் முதலில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுத எனக்கு வாய்ப்பளித்தவர்கள் அவர்கள்தான்.

    இதைத் தொகுத்து, அழகான அட்டைப் படத்துடன் வெளியிட்ட புஸ்தகா நிறுவனத்திற்கு என்றென்றும் என் நன்றியும், மகிழ்ச்சியும்.

    இதைப் படிக்கும் அனைவரும் முருகன் அருளால் சகல சௌபாக்கியம் பெற்று வாழ வேண்டும் என்று அந்த கந்தக் கடவுளை வேண்டுகிறேன்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி ஏ பிரபா

    Mobile 94865 72227

    சமர்ப்பணம்

    என்றும் எனை ஆளும், வழி நடத்தும் வேலும் மயிலும் துணை

    என வரும் ஆறுமுகமான அழகன் முருகனுக்கு.

    1) திருவருள் தரும் திருப்பரங்குன்றம்

    தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில் வேற்

    கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்

    நேரணி இட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்

    பேரணி கேட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே.

    கந்தர் அலங்காரம்.

    தமிழ் என்றால் இனிமை. முருகு என்றால் அழகு.

    அழகும் இனிமையும் அறிவும் கலந்தவன் முருகன். தமிழின் வடிவாக இருப்பவன். கனிவும், கருணையும், அன்பே வடிவாகிய அருள் நெறி அமுதன். தமிழ் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் தமிழவேள் இருப்பான்.பாடும் பாட்டு அமர்ந்தோய் என்கிறது பரிபாடல்.

    "உணர்வோர் படித்த தமிழ்

    செவியார் வைத்தருளும் முருகோனே" என்கிறது திருப்புகழ்.

    சங்ககாலம் முதலே முருகனின் வழிபாடு இருக்கிறது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக சேயோன் எனப் போற்றப் படுகிறான் முருகன். மெல்லினம், இடையினம், வல்லின மெய் எழுத்துக்களோடு உ எனும் உயிர் எழுத்து சேர்ந்து முருகு என்று அழைக்கப் படுகிறான். மெய்யாகிய உடலுக்குள் உயிராக நிறைந்திருப்பவன் முருகன். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்குகிறான்.

    முருகா என்றிட முவ்வினைகளும் தீரும் எனப் போற்றப் படும் அழகன், குன்றிருக்கும் இடமெல்லாம் கோவில் கொண்டு தன் பக்தர்களைக் காக்கிறான். முருகா என்றதும் அழகும், அறிவும் நிறைந்த உருவே, கையில் வேலுடன், யாமிருக்க பயமேன்- என்று அபாயக் கரம் காட்டும் தோற்றமே, நம் கண்முன் வந்து நிற்கும்.

    திருமுருகனின், திருவிளையாடல்களும், தோற்றமும், மனிதர்கள் வாழ்வில் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவங்களைப் போதிப்பதாகவே அமைந்துள்ளது. எளியோரைக் காக்கும் இறைவனுக்கு காணும் இடமெல்லாம் கோவில் இருந்தாலும் ஆறுபடை வீடுகள் சிறப்பாகப் போற்றப் படுகிறது.

    ஏழ்மையில் வாடும் ஒருவருக்கு, பொருள் பெற்றவர், வள்ளல் இருக்கும் திசையைக் காட்டி ஆறுதல் படுத்துவது ஆற்றுப்படுத்தல் என்று அழைக்கப் படுகிறது. உங்கள் குறைகளை எல்லாம் தீர்க்க முருகன் குடியிருக்கும் இந்த தலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் துன்பங்கள் எல்லாம் தீரும் என்று ஆற்றுப்படுத்தினார் நக்கீரர். திருமுருகாற்றுப் படையில் அவர் பாடிய திருத்தலங்களே ஆறுபடை வீடு ஆகிற்று.

    ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக நக்கீரர் குறிப்பிடுவது திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த பின் இந்திரனின் மகள் தேவயானையைத் திருமணம் செய்து கொண்ட தலம் திருப்பரங்குன்றம். கற்று அறிந்த அறிவாளி, என்றாலும், ஈசனும், முருகனும் ஒன்றே என்றாலும் உலக நியதிப்படி நடக்க வேண்டும் என்ற தத்துவத்தை இங்கு உணர்த்துகிறார் பெருமான்.

    ஒருமுறை கைலாயத்தில் ஈசன் பார்வதிக்கு ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருளை விளக்கும்போது தாயின் மடியில் அமர்ந்திருந்த முருகனும் அதைக் கேட்டார். சக்தி வாய்ந்த மந்திரங்களின் பொருளை குரு மூலமாகவே உபதேசம் பெற வேண்டும். மறைமுகமாகக் கேட்பது பாவம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. எனவே தன் தவறுக்கு பரிகாரம் தேடி குமரன் இங்கு வந்து ஈசனை நோக்கித் தவம் இருந்தார்.

    அவரின் கடுமையான தவத்தில் மகிழ்ந்து அம்மையும், அப்பனும் அவருக்குக் காட்சி அளித்து, வரங்கள் தந்தார்.

    குமரனின் அவதாரமே சூரபத்மனை அழித்து, தேவர்களைக் காப்பதற்காகவே. அன்னையிடம் வேல் வாங்கி அசுர சேனையை அழித்து அமராவதியைக் காப்பாற்றி தேவர்களிடம் ஒப்படைத்தார் பெருமான். அதில் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் முருகனைப் போற்றித் துதிக்க, இந்திரன் தன் மகள் தேவயானையை திருமுருகனுக்கு மனம் செய்து கொடுத்தார் இந்தத் தலத்தில்.

    இங்கு மலையே லிங்க வடிவில் காட்சி அளிக்கிறது. 190 மீட்டர் உயரமுள்ள மலை ஈசனின் வடிவம் என்பதால் முருகனுக்காக ஈசனே மலையாக அமர்ந்தார் என்பது நம்பிக்கை. மலையைக் குடைந்து அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளது. கருவறை செல்ல ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இது சடாட்சர படிகள் என்று அழைக்கப் படுகிறது.

    உள்ளே மிகப் பெரிய பாறை அதன் மேற்புறத்தில், மகிஷாசுரமர்த்தனி உருவம், கீழே முருகன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் காலடியில் ஆடும், யானையும் காட்சி அளிக்கிறது தேவயானையைப் பிரிய மனமில்லாத ஐராவதம் யானை, இங்கேயே தங்கி விட்டது என்று புராணங்கள் கூறுகிறது. முருகனின் ஆறுபடை வீடு கோவில்களில் மிகப் பெரியது திருப்பரங்குன்றம்.

    கோவிலின் அடிவாரத்தில் முருகன் தன் வேலினால் உண்டாக்கப் பட்ட சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி கார்த்திகேயனை வழிபட்டால், தீராத வினைகளெல்லாம் தீரும். பரம்பொருளான ஈசன் குன்றாக நின்றதால் திருப்பரங்குன்றம் என்று பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.

    கோபுர வாயிலுக்கு முன் உள்ள ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்ப கலைக் கூடமாக விளங்குகிறது. இங்குள்ள சன்யாசிக் கிணற்றில் மூழ்கி முருகனை வழிபட்டால் நீரிழிவு, வெண் குஷ்டம் போன்ற நோய்கள் நீன்குகின்றான். முருகனின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தமே பயன்படுத்தப் படுகிறது.

    இங்கு தைப்பூசத் திருவிழா மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப் படுகிறது.

    "உனைத்தி னந்தொழு திலனுந தியல்பினை

    உரைத்திலன் பலமலர் கொடுன் அடியிணை

    உறப்பனிந்திலன் ஒரு தவமிலனுன...தருள்மாறா...

    ...

    தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்

    திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமானே."- என்று உருகி போற்றுகிறார் அருணகிரியார்.

    உன்னை தினந்தோறும் தொழுதவனும் இல்லை உன் தன்மைகளை உரைத்தவனும் இல்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளைப் பூஜை செய்ததும் இல்லை. உன்னையே நினைந்து உருகும் என்னைக் காக்க, உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே வருவாயாக என்று அழைக்கிறார் அருணகிரியார். கந்தன் எந்தப் பூஜைகளையும் எதிர்பார்ப்பவன் இல்லை. பக்தர்களின் உள்ளத்தில் பொங்கிப் பெருகும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் அருளாளன்.

    கந்தனின் பெருமைகளை அருணகிரி நாதர், திருப்புகழில் வாய் மணக்கப் பாடினாலும், பக்திச் சுவையும், தமிழ்ச்சுவையும் நிரம்பிய அமுதமாகத் திகழ்வது கந்தர் அலங்காரம். தம் குறைகளைக் கூறி அதை நீக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கும் பாடல்கள் இவைகள்.

    முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் கந்தன் என்று பாடிப் பரவசமாகிறார் அருணகிரியார்.

    தேரணி இட்டுப் புரமெரித்தான் மகன் என்ற பாடலில் முருகன் கிரௌஞ்ச மலையைத் தூள் தூளாக்கியது போல்

    Enjoying the preview?
    Page 1 of 1