Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam
Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam
Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam
Ebook76 pages24 minutes

Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதிபுரி, தர்ப்பாரண்யம், விடங்கபுரம் மற்றும் நளேச்சரம் என்றெல்லாம் போற்றப்படும் திருநள்ளாறு, சனிபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தெய்வீக திருத்தலமாகும். பிரம்மன் முதலான அனைத்து தேவர்களும் வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தின் வரலாறு, சிறப்பு, வழிபாடுகள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் இத்தலத்திற்கு விஜயம் செய்து பேறுபெற்றவர்களின் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியும், நிடத நாட்டு மன்னன் நளனும் காதல் கொண்டு திருமணம் புரிந்ததையும், பிறகு சனீஸ்வரன் நளனைப் பற்றிக் கொண்டதால் அவன் மதிமயங்கி, சூதாடி நாடிழந்து, மனைவி மக்களைப் பிரிந்து துன்புற்றதையும் முடிவில் இறைவன் அருளால் துயர் நீங்கி இன்பம் பெற்றதையும் அழகு படக் கூறப்பட்டுள்ளது.
நமது புண்ணிய புராதன பூமியான பாரத நாட்டின் பெருமைக்கு காரணமானவை அதன் புராணங்களும் இதிஹாசங்களும் தான். அவற்றில் பொதிந்துள்ள நீதி நெறிகள் எக்காலத்துக்கும், எந்நாட்டவருக்கும் ஏற்றவை. நீதி தெரிந்த தருமபுத்திரர் சூதாடி நாட்டை இழந்ததன் காரணமான குருக்ஷேத்திரப் போர் மூண்டதை மஹாபாரதம் விவரிக்கிறது.
அந்த மஹாபாரதக் காவியத்தின் ஒரு அத்தியாயமான ‘நளசரித்திரம்’ சூதாட்டத்தால் நளமஹாராஜன் அனுபவித்த இன்னல்களை தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பாவும், அதிவீர ராமபாண்டியர் எழுதிய நைடதமும் சிறப்பிடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJan 29, 2021
ISBN9788179504574
Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam

Read more from R Ponnammal

Related to Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam

Related ebooks

Related categories

Reviews for Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam - R Ponnammal

    பதிப்புரை

    ஆதிபுரி, தர்ப்பாரண்யம், விடங்கபுரம் மற்றும் நளேச்சரம் என்றெல்லாம் போற்றப்படும் திருநள்ளாறு, சனிபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தெய்வீக திருத்தலமாகும். பிரம்மன் முதலான அனைத்து தேவர்களும் வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தின் வரலாறு, சிறப்பு, வழிபாடுகள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் இத்தலத்திற்கு விஜயம் செய்து பேறுபெற்றவர்களின் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

    விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியும், நிடத நாட்டு மன்னன் நளனும் காதல் கொண்டு திருமணம் புரிந்ததையும், பிறகு சனீஸ்வரன் நளனைப் பற்றிக் கொண்டதால் அவன் மதிமயங்கி, சூதாடி நாடிழந்து, மனைவி மக்களைப் பிரிந்து துன்புற்றதையும் முடிவில் இறைவன் அருளால் துயர் நீங்கி இன்பம் பெற்றதையும் அழகு படக் கூறப்பட்டுள்ளது.

    நமது புண்ணிய புராதன பூமியான பாரத நாட்டின் பெருமைக்கு காரணமானவை அதன் புராணங்களும் இதிஹாசங்களும் தான். அவற்றில் பொதிந்துள்ள நீதி நெறிகள் எக்காலத்துக்கும், எந்நாட்டவருக்கும் ஏற்றவை. நீதி தெரிந்த தருமபுத்திரர் சூதாடி நாட்டை இழந்ததன் காரணமான குருக்ஷேத்திரப் போர் மூண்டதை மஹாபாரதம் விவரிக்கிறது.

    அந்த மஹாபாரதக் காவியத்தின் ஒரு அத்தியாயமான ‘நளசரித்திரம்’ சூதாட்டத்தால் நளமஹாராஜன் அனுபவித்த இன்னல்களை தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பாவும், அதிவீர ராமபாண்டியர் எழுதிய நைடதமும் சிறப்பிடம் பெற்றுள்ளன.

    ‘சனிதோஷ நிவாரணம் அளிக்கும் திருநள்ளாறு தல வரலாறு & நளசரிதம்’ என்ற இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் அன்பர்களுக்கு பகவத் கிருபையால் சர்வ மங்களங்களும் பெருகிடுமாறு பிரார்த்திக்கிறோம்.

    கிரி

    திருநள்ளாறு

    சனிதோஷம் போக்கும் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

    திருநள்ளாறு திருத்தலம் புதுச்சேரி மாநிலத்தில் (யூனியன் பிரதேசம்) காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 55 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத் திலிருந்து நேரடியாக இவ்வூருக்கு பேருந்துகள் செல்கின்றன.

    சிறப்பு: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உலகப்புகழ்பெற்ற ‘திருநள்ளாறு நாயகன்’ சனிபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக எல்லா கோயில் களிலும் சனீஸ்வரர் மேற்கு நோக்கியே இருப்பார். உக்கிர மூர்த்தி யாகிய சனீஸ்வரர் இங்கு அனுக்கிரஹ தேவதையாக கிழக்கு நோக்கி அபய முத்திரையுடன் அருள்பாலித்து வருவது விசேஷம்!

    இத்தலம் சிவபெருமானுக்குரியதாக இருப்பினும் நளமஹாராஜன் வழிபட்டு சனிதோஷம் நீங்கப் பெற்றதனால் இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் சனிபகவானுக்கு ‘மந்தன், சனைச்சரன், பங்கு, கரியன்’ என்று பல திருநாமங்கள் உண்டு. ‘சனைச்சரன்’ என்பதற்கு ‘மெதுவாக சஞ்சரிப் பவன்’ என்று பொருள்.

    இத்தலம் முதல் யுகத்தில் ஆதிபுரி என்றும், இரண்டாவது யுகத்தில் தர்ப்பாரண்யம் என்றும், மூன்றாவது யுகத்தில் விடங்கபுரம் என்றும், நான்காவது யுகத்தில் நளேச்சரம் என்றும் அழைக்கப் பட்டதாகும். ஆதிகாலத்தில் பிரம்மா வழிபட்டு மறுவாழ்வு பெற்றதால் ‘ஆதிபுரி’ என்றும் இப்பகுதி தர்ப்பைகள் நிறைந்த வனமாக இருந்ததால் ‘தர்ப்பாரண்யம்’ என்றும் நகவிடங்கராகிய தியாகேசப் பெருமான் இங்கு கோயில் கொண்டுள்ளதால் நகவிடங்கபுரம் என்றும், இத்தலத்தில் நளன் என்னும் மன்னன் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெற்றதால் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் திருநள்ளாறு என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக உயர்வுபெற்று விளங்குகிறது. சைவத்தின் சால்புடைய தலங்கள் ‘சப்தவிடங்க தலங்கள்’ என்பது பெரியோர் வாக்கு. இங்கு‘நகவிடங்க தியாகராஜர்’ மிகவும் பிரசித்தம். இவருடைய நடனம் உன்மத்த நடனம். நகவிடங்கர் என்பதற்கு ‘மலைமேல் விளங்கும் சுயம்பு மூர்த்தி’ என்று பொருள். அதாவது சீலம் பெருக்கும் சிவநெறிச் செல்வர்களாகிய அடியவர்களின் மனமாகிய மலைமீது, தானே தோன்றி விளங்குவார் என்பது குறிப்புப் பொருள்.

    Tirunallar_Gopuram.jpg
    Enjoying the preview?
    Page 1 of 1