Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shri Siradi Saibabavin Satya Charitram
Shri Siradi Saibabavin Satya Charitram
Shri Siradi Saibabavin Satya Charitram
Ebook549 pages3 hours

Shri Siradi Saibabavin Satya Charitram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சத்குருநாதர் பகவான் ஷீரடி ஸ்ரீசாயிபாபாவின் வரலாற்றை எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் பரவச மூட்டும். திகட்டவே திகட்டாது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்த புருஷரான ஸ்ரீசாயிபாபா தோற்றத்திற்கு எளிமையானவர். ஆனால் ஆற்றலில் அளவிடற்கரியவர் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை. அவரது வாழ்நாளில் அவரது அருளை நாடி, மக்கள் கூட்டம் கூட்டமாக தரிசனத்திற்கு வருவார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சிற்றூரான ஷீரடி, அவர் வசித்த பேறுபெற்ற காரணத்தால் அகில உலகப் புகழ் அடைந்துவிட்டது. அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் ஆயிரமாயிரம்.

Languageதமிழ்
Release dateMar 9, 2023
ISBN9788179503799
Shri Siradi Saibabavin Satya Charitram

Read more from R Ponnammal

Related to Shri Siradi Saibabavin Satya Charitram

Related ebooks

Reviews for Shri Siradi Saibabavin Satya Charitram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shri Siradi Saibabavin Satya Charitram - R Ponnammal

    ஸ்ரீ ஷீர்டி ஸாயிபாபாவின் ஸத்ய சரித்திரம்

    ஆர். பொன்னம்மாள்

    GIRI

    பதிப்புரிமை © 2023 GIRI

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை

    இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்பட நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.

    ISBN-13: 9788179503799

    கவர் வடிவமைப்பு: GIRI

    www.giri.in    |   sales@giri.in

    என்னுரை

    ஜெய் சாய்ராம்! வணக்கம்!

    ஸ்ரீ சாயிபாபாவின் திருமலரடிகளை வணங்கி இப்புனித சரிதத்தை எழுதத் தொடங்கினேன். அதற்கு முதலும் முக்கிய மானவரும் அமரரான ஸ்ரீ டி. எஸ். ஐயப்பன் அவர்கள். அவர் தான் சாயிசரிதத்தை எழுதும்படி ஊக்குவித்தார். இதிலிருக்கும் சிறப்பான அமைப்புகளெல்லாம் ஷீர்டி மகானையும், பிழைகளெல்லாம் என்னையும் சாரும். இந்நூல் வெளிவர ஸ்ரீ டி.வி.எஸ். கிரி அவர்களின் புதல்வர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பெருமையெல்லாம் கிரி குடும்பத்தினருக்கே உரியதாகும். இதைப் படிக்கும் அன்பர்களின் துன்பங்களையும், சங்கடங்களையும் நீக்கி சந்தோஷமும், வெற்றியும், லாபமும் அளிக்க சாயிபாபாவைப் பிரார்த்திக்கின்றேன்.

    சாயிபாபாவைப் பணிவோம்!   சாந்தியைப் பெறுவோம்!

    ஆர். பொன்னம்மாள்

    • • • • •

    பதிப்புரை

    ஜெய்சாய்ராம்

    சத்குருநாதர் பகவான் ஷீரடி ஸ்ரீசாயிபாபாவின் வரலாற்றை எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் பரவச மூட்டும். திகட்டவே திகட்டாது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்த புருஷரான ஸ்ரீசாயிபாபா தோற்றத்திற்கு எளிமையானவர். ஆனால் ஆற்றலில் அளவிடற்கரியவர் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை. அவரது வாழ்நாளில் அவரது அருளை நாடி, மக்கள் கூட்டம் கூட்டமாக தரிசனத்திற்கு வருவார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சிற்றூரான ஷீரடி, அவர் வசித்த பேறுபெற்ற காரணத்தால் அகில உலகப் புகழ் அடைந்துவிட்டது. 

    மதவேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்று சேர அம்மகானு பாவரை நேசித்தது, பாரத நாட்டின் பாரம்பர்ய தத்துவமான மதநல்லிணக்கத்திற்கு நல்ல எடுததுக்காட்டாக அமைந்திருந்தது. ஏழை, பணக்காரர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற பேதமின்றி சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் நல்வழிகாட்டி வந்த சத்குருவே ஸ்ரீசாயிநாதர்.

    அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் ஆயிரமாயிரம். எண்ணெய் இல்லாமல் வெறும் தண்ணீரை ஊற்றி இறைவன் திருக்கோயிலில் விளக்கெறிய வைத்த அதிசயம், தீராத நோய்களால் பாதிக்கப் பட்டவர்களும் அவரது அருட்பிரசாதத்தால் குணமடைந்தது போன்ற பல்வேறு சிறப்பான செய்திகள் கொண்ட ஸ்ரீசாயி பாபாவின் வாழ்க்கை வரலாற்றை ஆன்மீக எழுத்தாளர் ஸ்ரீமதி ஆர். பொன்னம்மாள் எளிய தமிழில் எல்லோரும் படிப்பதற்கு ஏற்ற முறையில் இந்நூலில் அழகுபடத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஸ்ரீசாயிநாதரின் அருளைவேண்டி, அவரது திருக்கோயில்களுக்கு செல்லும் அன்பர்கள் அவசியம் படித்துப் பயன் பெற வேண்டிய தகவல்கள் இந்நூலில் நிறைய உள்ளன.

    ஸ்ரீசாயிநாதர் வாழ்ந்த திருத்தலமாகிய ஷீரடி பற்றியும் சென்னை, திருமயிலையில் சாயிபாபாவின் திருவடிச் சேவைக்காகவே தன்வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட சீலர் அமரர் நரசிம்ம சுவாமிஜியின் முன் முயற்சியால் எழுப்பப்பட்டிருக்கும் ஸ்ரீசாயிநாதர் ஆலயம் பற்றியும் பல சிறப்பு செய்திகள் கொண்டிருக்கும் இந்நூல் இளம் தலைமுறையினருக்கும் மிகவும் பயன்தரக்கூடியது.

    பகவான் சத்குரு ஸ்ரீசாயிநாதரின் திருவரலாற்றை நல்ல தமிழில் படித்து தெரிந்து கொள்ள ஏற்ற முறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் அனைவருக்கும் ஸ்ரீசாயிநாதரின் திருவருள் என்றென்றும் கிட்டவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

    - பதிப்பகத்தார்

    • • • • •

    முன்னுரை

    ஒரே வீச்சில் படிக்க முடியாத புத்தகங்கள் என்று சில உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பக்கங்களையோ வேறு எந்த வேலையும் இல்லாமல் இருந்தால், அதிகபட்சம் பத்துப் பதினைந்து பக்கங்களையோ தான் படிக்க முடியும். அப்புத்தகம் சொல்லும் செய்தியின் கனம், மனதில் தங்கி ஆழமாய் ஊடுறுவி அந்த விஷயம் பற்றி தொடர்ந்து மனம் சிந்திக்கத் தொடங்கி விடும். அப்போது படிப்பு தடைபடும்.

    இந்தச் சம்பவம் அல்லது இந்த விஷயம் என்ன சொல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இதுபோல் நமக்கு நிகழ்ந்திருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? நமக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருந்தால் நம்முடைய மனோநிலை என்னவாக இருந்திருக்கும்? இப்படியொரு அனுபவம் நமக்கு ஏற்பட்டிருக்கிறதோ, வேறு எவரிடமாவது நடந்திருக்கிறதோ, இது என் புத்தியோ என்று பல்வேறு கிளைகள் விட்டு மனம் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை ஆராய ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட புத்தகங்கள் மிகச் சிலவே. 

    அவைகளின் ஒன்று இதோ நீங்கள் கையில் வைத்திருக்கின்ற ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் சாய் ஸத் சரிதம். இது மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து ஜொலித்த ஒரு மகானின் வாழ்க்கை வரலாறு. அவர் செய்த லீலைகள், அவருடைய லீலைகள் மூலம் அவர் நேரடியாகவும், மறைமுகமாகவும், மிகத்தெளிவாக உபதேசம் செய்த செய்திகள் என்று மிக எளிமையான தமிழில், சுவையான நடையில் விதம் விதமான சம்பவங்களைக் கொண்ட சரிதமாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தை ஒரே வீச்சில் படிக்க என்னால் இயலவில்லை.

    ஒரு மகானோடு வாழ்வது போன்ற ஒரு உணர்வை இந்தப் புத்தகம் தருவதால் உரைக்கப்பட்ட அனுபவம் நம் அனுபவமாகி நமக்கு இது நேர்ந்திருந்தால், என்ற கேள்வி எழுப்பி நம்மை இந்தப் புத்தகத்தின் சம்பவங்கள் யோசிக்க வைத்து விடுகின்றன. ஸ்ரீஷீர்டி சாயிபாபா சத்ய சொரூபம். அவரின் ஒவ்வொரு அசைவும், பேச்சும், சத்யத்தின் வெளிப்பாடு. எனவே, இந்தப் புத்தகம் முழுவதும் சத்யமே விதம்விதமாய் நமக்குக் காட்டப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ள சற்று கால இடைவெளியும், அறிய கடினமான முயற்சியும் தேவைப்படுகின்றன.

    சாதாரண ஜனங்களை துன்பத்திலிருந்து மீட்டல் என்பது தான் மகான்களின் வாழ்க்கையாக இருக்கிறது. அப்படிப்பட்ட மகானின் உள்ளம் மற்றவர் வேதனையைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க இயலாது. பெற்ற தாயைவிட மிக வேகமாக ஓடிவந்து உதவிகள் செய்ய மகான்கள் தயங்குவதேயில்லை.

    ஜனங்களுக்கு உலக வாழ்க்கையில் ஏற்படுகின்ற முதல் மிகப் பெரிய துன்பம் நோய்தான். எனவே, நோய் தீர்த்தல் என்பதை பாபா இடையறாது செய்து கொண்டிருக்கிறார். பெரிய பெரிய வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோய் ஷீர்டி சாய்பாபாவின் கரம் பட்டவுடன் வினாடி நேரத்தில் நீங்குகிறது. ஒரு சிட்டிகை விபூதியில் குணமாகிறது. ஒரு பார்வையில் நோய் நகர்ந்து விடுகிறது. ஞானத்தின் முன்பு விஞ்ஞானம் மண்டியிட்டு வணங்க வேண்டியதாகிறது. எப்படி இந்த நோய் போயிற்று என்று வைத்தியர்களும், மற்றவர்களும் வியப்போடும், மரியாதையோடுமே ஸ்ரீ ஷீர்டி சாயிபாபாவை வணங்குகிறார்கள்.

    பாபாவின் வேலை வெறும் நோய் தீர்த்தல் தானா?

    இல்லை. வறுமை விலகுகிறது. இயற்கைச் சீற்றத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. எதிர்பாராத விபத்திலிருந்து மீள முடிகிறது. நல்ல விதமாய் திருமணம் நடக்கிறது. பல வருடங்களாய் குழந்தைகள் இல்லாதவருக்கு மகப்பேறு ஏற்படுகிறது.

    வெறும் அதிசயங்கள் நிகழ்த்துபவர்தானா பாபா?

    இல்லை. மிக அற்புதமாக ஆழ்ந்த உபதேங்களை சொல்கிறார். குரு என்பவரின் மகிமையை எடுத்துக் காட்டுகிறார். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்களை படித்தவர்களைக் காட்டிலும் குருவின் பிரேமைக்குப் பாத்திரமானவன் பாக்கியசாலி என்கிறார். தன்னைக் கொண்டாடுபவர்களை நோக்கி அவரே போகிறார். தானே கேட்டு உணர்கிறார். அன்பை அருவியெனப் பொழிகிறார். பாபாவினுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள் வேறு எது பற்றியும் கவலையில்லாது வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். எந்தத் துயர் வந்தாலும் அவருடைய நாமத்தை இடையறாது ஜபிக்கிறார்கள்.

    ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு படிக்கிற போது ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. குரு, கடவுள், இயற்கை, சக்தி எல்லாம் ஒன்றே. மகான்கள் கடவுள் ரூபம்.  இறைவனின் அம்சம். அப்படியானால் மகான்களை வணங்குபவர்கள் கடவுளை வணங்க வேண்டாமா? அவர்களுக்கு மதம் இல்லையா?

    மகான்களை வணங்குபவர்களுக்கு எம்மதமும் சம்மதம் தான். எந்தப்பேதமும் இல்லாதவர்கள்தான். கடவுள் என்பதை ஒரு மதத்திற்குள்ளோ, ஒரு பகுதியாகவோ, ஒரு கண்டத்தின் நாகரீகமாகவோ, ஒரு நாகரீகத்தின் வெளிப்பாடாகவோ பார்க்காமல் பிரபஞ்சம் முழுவதும் பரவிய சக்தியாகவே உணர்கிறார்கள். ஒரு நல்ல குரு சொல்லிக் கொடுப்பது கடவுள் என்பது எந்தவித கட்டுக்குள்ளும் அடங்கும் விஷயமல்ல என்பதைத்தான். அது புரிந்த பிறகு எல்லா உயிர்கள் மீதும் பிரேமை வந்து விடுகிறது.

    ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா அன்னதானம் என்கிற விஷயத்தை மிக முக்கியமாக கருதுகிறார். மற்றவருக்கும் சொல்கிறார். அன்னதானம் என்பது மனிதர்களுக்கு உணவிடும் விஷயம் மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் உணவிடுவதுதான் பாபாவால் உற்சாகப்படுத்தப்படுகிறது. மீன்களுக்குப் பொரி போடுவதும், எறும்புகளுக்கு அரிசி மாவு, சர்க்கரை போடுவதும், நாய்களுக்கு உணவிடுவதும் காக்கைகளுக்கும், குருவிகளுக்கும் வாரித்தெளிப்பதும் அவரும் செய்து மற்றவர்களையும் செய்விக்கிறார்.

    வாழ்க்கை என்பது நான், நீ, இவர், அவர் என்று சில மனிதர்களுக்குள்ளே அடங்கிவிடுவதல்ல. ஒரு ஆயுட்காலத்தை மட்டும் கணக்கிட்டு நம் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடாது. வாழ்க்கை என்பது ஜன்ம ஜன்மாந்திர விஷயம். முற்பிறவியின் பயனாக இப் பிறவி ஏற்பட்டிருக்கிறது. இப்பிறவியில் நல்லது செய்து, மறுபிறவி இல்லாமல் இறையோடு கலப்பாய் என்கிற உலகளாவிய தத்துவத்தைத்தான் பாபா சொல்கிறார். மனித மனம் மிகப் பிரமாண்டமாக வளர்வதைத் தான் உற்சாகப் படுத்துகிறார். அவர் இஸ்லாமியருமல்ல. இந்துவுமல்ல. எல்லாம் தாண்டிய ஒரு மகோன்னதமான மனிதராக இருக்கிறார்.  விக்ரஹ  ஆராதனை செய்வது உயர்த்தியா அல்லது விக்ரஹ ஆராதனை செய்யாதிருப்பது உயர்த்தியா. இரண்டுமே உயர்த்தியல்ல. கபடநாடகம் செய்யாதிரு. அதுதான் முக்கியம் என்கிறார் பாபா. அந்தக் கடவுள் உனக்கு என்ன கொடுக்கிறது என்று பார், என்று தன்னை உற்றுப் பார்க்கச் சொல்கிறார் இந்த மகான். மசூதியில் வாழ்ந்தாலும், இஸ்லாமியராக தோற்றத்தில் காட்சியளித்தாலும் பண்டரீபுரம் போ, என்கிறார். தத்தாத்திரேய ஜெயந்தியை கொண்டாடும்படி சொல்கிறார். இந்துமதகதைகளிலிருந்து நல்ல விஷயங்களை போதிக்கிறார்.

    பாபா, உண்மையில் நீங்கள் யார்? என்று எவரேனும் கேட்டால் அவருக்குக் கடுங்கோபம் வந்து விடுகிறது.

    ‘பார், நன்றாகப் பார்’ என்று ஆடைகளை வீசி எறிகிறார். அதிர்ச்சியூட்டும் இந்த செயலில் கேள்வி கேட்டவர்கள் ஆடிப் போகிறார்கள். தன் அன்பர்கள் யாருக்காவது அடி மனதில் ரகசியமாய் இந்தக் கேள்வி இருந்தால் அதையும் அழித்தொழிக்க இந்த அதிரடி விஷயத்தை பின்பற்றுகிறார்.

    நெருப்புக் கோளமாகி கோபத்தை வெளிப்படுத்துகின்ற பாபா, குளிர் தென்றலாகவும், மழையாகவும் இருக்கிறார். அவரால் ஆட்டுக் குட்டிகளையும், நாய்களையும் இனம் காண முடிகிறது. போன ஜென்மத்தில் அவைகள் என்னவாக இருந்தன என்று சுற்றியிருந்தோருக்கு விளக்குகிறார்.

    ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. உண்மையானவனாக இரு. உழைத்து முன்னேறு. உணர்வுகளின் பின்னே போகாதே. கோபம் மிக மோசமான விஷயம். நல்ல வரை கடவுள் ஒரு நாளும் கைவிடமாட்டார். பொறுமையோடு இரு. நம்பிக்கையோடு இரு என்று தெளிவூட்டுகிறார் பாபா. ஸ்ரீ ஷீர்டி சாயி பாபாவின் சரிதத்தில் நாம் அவருடைய மேன்மையை மட்டும் பார்க்கவில்லை. மனிதர்களின் விதவிதமான முகங்களும் தெரிகின்றன. உற்று கவனிக்க நம்மைப் போன்ற மனிதர்களின் ஆசாபாசங்களும் சொல்லப்படுகின்றன.

    நன்கு படித்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட சில நேரங்களில் அபத்தமாய் நடந்து கொள்கிறார்கள். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சறுக்கும் என்பது இதைப் படிக்கும்போது தெளிவாகப் புரிகிறது. மிகக்கவனமாக வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசியம் புரிகிறது.

    ஒரு பை நிறைய கல்கண்டும், சில காசுகள் தட்சணையுமாய் சாயியைப் பார்க்க ஒருவர் புறப்படுகிறார். அவர் ஷீர்டி புறப்படுவதைப் பார்த்து எதிர் வீட்டுக்காரர் இரண்டு ரூபாய் தட்சணையும் ஐந்து ரூபாய் காசு கொடுத்து கல்கண்டு வாங்கிப் போகும்படியும் சொல்கிறார். கல்கண்டுதான் நிறைய வாங்கிக்கொண்டு போகிறோமே அதில் பாதியைக் கொடுத்துவிட்டால் என்ன, என்று ஷீர்டி போகிறவர் அந்த ஐந்து ரூபாயை பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். தன் கல்கண்டை இரண்டாகப் பிரித்து இவர் கொடுத்தது,  தான் கொடுத்தது என்கிறார். அந்த மகானுக்கு இது எளிதாகப் புரிந்து போகிறது. கண்டிக்கிறார்.

    கொஞ்சம்கூட பயமில்லாமல் இப்படியொரு மகானை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறார்களே. இந்த மனிதர்கள் தான் இந்த வரலாற்றில் மிகப்பெரிய வியப்பு. இதுதான் அறிய வேண்டிய பாடம்.

    இன்று ஊருக்குத் திரும்ப வேண்டாம். இங்கேயே தங்கிவிட்டுப் போ என்று ஆணித்தரமாக பாபா சொன்ன பிறகும் அதைப் புறக்கணித்து வேலை இருக்கிறது போய் விடலாம் என்று முயற்சிக்க பல தடங்கல்கள், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு  அலறும்படி ஆகிறது.

    நான் பிராமணன். நான் சாப்பிடுவதற்கு முன்பு உனக்கு சாப்பாடு கேட்கிறதோ, பிச்சை கேட்கிறவனுக்கு பொறுத்திருக்க முடியாதோ என்று பண்பாளர்கள் கூட உளறி விடுகிறார்கள்.

    அவர்கள் கம்பீரமாய் பாபாவை நோக்கி வருகிறபோது அதேவிதக் கூச்சலால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். நான் அங்கே பேசியது இங்கே இவருக்கு எப்படி தெரிந்தது என்று வியக்கிறார்கள். மிக வேகமாக மிகக்கடுமையாக, கடுஞ்சொற்களின் மூலமாக அவரின் உள்ளுக்குள் குடியிருக்கும் அகங்காரம் அறுபடுகிறது.

    இப்படி ஒவ்வொரு மனிதர் முகத்துக்குள்ளும் நம்முடைய முகம் இருப்பதும் தெள்ளத்தெளிவாக கவனிக்கலாம். நமக்குள்ளும் இந்த விதமான கேவலங்கள் ஒளிந்து கொண்டிருப்பதை கண்டு கொள்ளலாம். அவைகளை எப்படி நீக்க வேண்டும். எப்படி வாழ வேண்டுமென்று தெள்ளத் தெளிவாய் ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா சொல்லித்தருகிறார்.

    வரலாறு ரீதியாக முஸ்லீம்களின் பிடிமானம் பரத கண்டத்தில் மறைந்து ஆங்கிலேயர்கள் ஆட்சி மிக வேகமாக, அழுத்தமாக ஊடுறுவுகின்ற அந்தக் காலகட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே வினோதமான நட்பை பாபா ஏற்படுத்தி யிருக்கிறார்.

    ‘போயும், போயும் இந்த முஸ்லீம் பக்கீரையா நம்புகிறாய்’ என்று மற்றவரை தடுத்தவர்கள் கூட பிற்பாடு மனம் மாறி பாபாவின் பாதங்களில் சரண டைகிறார்கள்.

    பாபா சித்தியான பிறகும் அவருடைய அற்புதங்கள் தொடர்கின்றன. அவர் தரிசனம் பலருக்குக் கிடைக்கிறது. மகானுக்கு மரணமே இல்லை என்பது மறுபடியும் நிரூபிக்கப்படுகிறது. பிரமாண்டமான பேராற்றலை காட்டுபவராக பாபா இருந்தாலும் அன்பென்னும் பிடியில் அகப்படும் மலையாக இருக்கிறார். ‘வீட்டிற்கு சாப்பிட வரமாட்டீர்களா’ என்று கேட்டால் ‘அதற்குத்தானே வந்திருக்கிறேன்’ என்று சர்வசாதாரணமாக பதில் சொல்கிறார்.

    உறக்கத்திற்கு போகிற ஒரு நேரத்தில் விழிப்பும், உறக்க மற்ற ஒரு தருணத்தில் பாபா காட்சியளிக்கின்றார். இது பிரமையா என்று பார்த்தால் அவர் வந்து போனதற்கான  தடயங்கள் காணப்படுகின்றன. 

    பிறர் சொத்துக்கு ஆசைப்படுபவர்களையும், மற்றவர்களுக்கு தீங்கு நினைப்பவர்களையும், ஜனங்களை பேச்சு சாமர்த்தியத்தால் ஏமாற்றி விடமுடியும் என்று நினைக்கிறவர்களையும், காசு காசு என்று புலம்பி தன் காசு தன் கையை விட்டுப் போகக்கூடாது என்று உலோபியாய் நினைக்கிற வர்களையும், விஷமத்தமனமான, பேச்சையும் வாழ்க்கையையும் கொண்டவர்களையும் பாபா கடுமையாகக் கண்டிக்கிறார். தண்டிக்கிறார்.

    புத்தகத்தை படித்து முடிக்கும்போது தானம் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் நிச்சயம் ஏற்படும். தான், தன் சுகம், தன் உணவு என்று இல்லாது எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும் குணம் நிச்சயம் வரும்.

    பாபாவின் சரித்திரம் படித்தால் மிகப்புண்ணியம். பிள்ளைக்கு வேலை கிடைக்கும். பெண்ணுக்கு கல்யாணமாகும் என்று சாதாரண லாபங்கள் கருதி படிக்க ஆரம்பித்தாலும் அந்த வரலாற்றுச் சம்பவங்களைப் படிக்கப்படிக்க படிப்பவர் மனம் மாறுவார் என்பது நிச்சயம். படிப்போர் உள்ளத்தை விசாலமாக்கி நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கின்ற இந்த மகான் ஸ்ரீ ஷீர்டி சாயிபாபாவின் சரிதம்  மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருக்கிறது. இறை மீது நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவரால் இதை எழுதவே முடியாது.

    இதைத் தொகுத்த எழுத்தாளர் திருமதி. பொன்னம்மாள் அவர்கள் மிகச் சிரத்தையோடு இதைச் செய்திருக்கிறார். தெளிவான மனதோடு எழுதியிருக்கிறார். தேவையற்ற வர்ணனைகளை நீக்கி மிகச் சுருக்கமாக பல சம்பவங்களைச் சொல்லும்போது விஷயம் நேரடியாய் மனதில் தைக்கிறது. இப்புத்தகத்தை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    பரதகண்டத்தின் நாகரீகம் மகான்களாலேயே வளர்க்கப்பட்டது. மகான்களால் பாதுகாக்கப்பட்டது. ரிஷி பரம்பரையில் கடவுளின் அவதாரமாக இதோ ஸ்ரீ ஷீர்டி சாயிபாபாவும் ஒளிர்கிறார். குரு என்ற அமிர்தத்தை அருந்துவதற்கு இதோ கிரி டிரேடிங் கம்பெனியார் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நேர்த்தியான காகிதம் பிழையில்லாத அச்சு நேர்த்தி, மிக எளிமையான சிறப்பான படங்கள் என்று ஒரு ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். அவசியம் இந்தப் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி விடுங்கள். இது உங்கள் வீட்டில் இருக்கட்டும். யாராவது எப்போதாவது படித்து இதனுள் மூழ்கி தன்னைத் தேடுதலில் ஈடுபட்டு ஆன்மீக வாசலின் பெருங்கதவு திறந்துகொண்டு ஜ்வால்யமான பயணத்தைத் தொடர இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும். 

    வீட்டில் ஒருவருக்கு ஆன்மீக விழிப்பு ஏற்பட்டாலும் அது மற்றவர்களையும் மெல்ல மாற்றி அது அவர்களையும் நல்ல மனோநிலைக்கு கொண்டு வரும். பாகவதம் படிக்கவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிக்கவும் வற்புறுத்திய பாபாவின் சரிதத்தை படிக்கிறபொழுது இந்து மதத்தின் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் சீரும் சிறப்பும் புரிந்து அவைகளையும் 

    நாம் படிக்கத் துவங்குவோம். வாழ்க்கைப்பாதை வெகு நிச்சயமாய் செம்மையாகும். கடவுள் தரிசனம் நிச்சயம் கிட்டும். ஏனெனில் குரு, கடவுள், இயற்கை, சக்தி எல்லாம் ஒன்றே. இப்புத்தகம் பல பிரதிகள் வாங்கி தானம் செய்யுங்கள். வருங்கால சந்ததியினர் வளமாவார்கள்.

    இப்புத்தகத்தை எழுதிய ஆர்.பொன்னம்மாள் அவர்களுக்கு வணக் கங்கள். வெளியிட்ட கிரி டிரேடிங் நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள். 

    ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் திருவடிகளே சரணம்.

    பாலகுமாரன்

    • • • • •

    ஆரத்தி

    "ஓ சாயிபாபா! ஆத்மாக்களுக்கு இன்பத்தைத்தரும் உங்க ளுக்கு தீபங்களால் ஆரத்தி செய்கிறோம். உங்களது தாசர்களும், பக்தர்களுமான எங்களுக்கு உங்கள் திருவடி நிழலில் இளைப்பாற அனுமதிக்க வேண்டும். ஆசையைச் சுட்டெரித்தவரே! முயற்சியும், நம்பிக்கையும் கொண்டவர்களுக்கு பகவானைக் காட்டுகிறீர்கள்! ஒருவரது நல்ல உணர்ச்சிகள் எந்த அளவுக்கு ஆழமானதாக, தீவிரமாக கடைபிடிக்கப் படுகின்றதோ அந்த அளவுக்கு அனுபவங்களையும், வெற்றியையும் தருகின்றீர்கள்! கருணா சமுத்திரமே! சம்சார பயத்தைப் போக்கும் வல்லமை கொண்டது உங்களது நாம பாராயணம்! நீங்கள் செயல்படுவது எப்படி என்று யாராலும் நிர்ணயிக்க முடியாது! நீங்கள் எப்போதும் ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவுகின்றவர்! இந்தக் கலியுகத்தில் எங்கும் வியாபித்துள்ள தத்தாத்ரேயரே நீங்கள்தான்! உங்களை தரிசிக்க குரு வாரம்தோறும் வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தந்தருள வேண்டும். தெய்வத்துக்கெல்லாம் தெய்வமாயிருப்பவரே! உங்கள் பாதகமலங்களுக்கு சேவை செய்வதே எங்கள் பிறவிப்பயன்! அதுவே அழியாத செல்வம்! மேகங்கள் சாதகப்பறவைக்குத் தூய நீரை ஊட்டுவதைப் போல நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருவீராக! ஜெய் சாய்ராம்!

    • • • • •

    பாபாவின் பால பருவம்

    ஷீரடி பாபாவின் பிறப்பு வளர்ப்பு பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் சில சமயம் தாமே முன்வந்து சிலவற்றைக் கூறியிருக்கிறார். சிலசமயம் பக்தர்களின் வினாக்களுக்கு விடையாகச் சொல்லியவை சில. செவிவழிச் செய்திகள் பல.

    மராட்டிய மாநிலத்தில் பத்ரி என்ற சிற்றூர். அங்கே ஹரிசாடே என்ற அந்தணர் தம் மனைவியோடு வாழ்ந்து வந்தார். தாம்பத்யத்தின் அர்த்தமே பிள்ளைச் செல்வம்தானே! அது இல்லாமல் தம்பதிகள் வாடி பகவானைப் பிரார்த்தித்தனர்.

    மெய்யான பக்தி தோற்றுப் போவதில்லையே! ஒரு நன்னாளில் வம்சம் விளங்க ஆண் குழந்தை பிறந்தது.

    ஹரிசாடேயின் சினேகிதர் பலர் குழந்தையைப் பார்க்க வந்தனர். அதில் ஒருவர் ஜோதிடக் கலையில் வல்லவர்.

    சாடேயிடம் ஹரி, குழந்தையில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தேன். பிரமாதமாயிருக்கிறது. கோடானுகோடிபேர் வணங்கி பூஜிக்கும் அற்புதமான பாதங்கள். ஆனால் பெற்றோருக்கு அற்பாயூள். தத்துபோக வேண்டிய ஜாதகம் என்றார்.

    பெற்றோர் கலங்கினர். தத்துக் கொடுப்பதற்கா? தவமிருந்து பெற்றோமென்று. ஒருநாள் இருவருக்கும் ஒரேமாதிரி கனவு வந்தது. லக்ஷ்மீ,  உன் மகனை அனாதையாக அலைய விடாமல் நாளை வரும் பக்கிரியுடன் அனுப்பிவை என்று!

    மறுநாள் பக்கிரி வந்தார். அம்மணி! எனக்கு மகப்பேறில்லை! உங்கள் மகனை எடுத்துச் சென்று வளர்க்கும்படி அல்லா உத்தரவு என்றார்.

    கண்ணீர் மல்க பிள்ளையை அவரோடு அனுப்பி வைத்த தம்பதிகள் அதிகநாள் உயிரோடு இல்லை! பிராம்மண குலத்தில் பிறந்த பாலகன் முஸ்லீம் குடும்பத்தில் வளர்ந்தான்.

    அவனுக்கு ஸ்ரீராமநவமிக்கும், ரம்ஜானுக்கும் வேறுபாடு தெரியவில்லை! குழந்தைக்கு ஐந்து ஆண்டுகள் முடிந்தன. குழந்தையை வளர்த்த பக்கிரி வயதானவர். அதனால் நாளுக்கு நாள் ஆரோக்கியம் நலிந்தது.

    தன் மனைவியிடம் நான் அதிக காலம் உயிர் வாழ மாட்டேன். சேலு என்ற ஊரில் கோபால்ராவ் தேஷ்முக் என்ற ஜமீந்தார் இருக்கிறார். தெய்வபக்தி மிகுந்த தருமவான். அவரிடம் இவனைச் சேர்த்து விடு எனக்கூறினார். அப்படியே செய்வதாக வாக்களித்தாள் பீபி.

    பக்கிரி மடிந்ததும் சேலு நகர் சென்று கோபால் ராவிடம் தன் நிலையைக் கூறினாள். பாலகன் பாபா தன் முற்பிறவியில் குருவாக இருந்த இராமானந்தரே இவர் என்பதை உணர, தன் சீடனாயிருக்க படிக்கட்டில் படுத்துக்கிடந்து திருவடி தீட்சைபெற்ற கபீர்தாஸரே இச்சிறுவன் என தேஷ்முக்கும் புரிந்து கொண்டார்.

    தானே பாலகனை வளர்ப்பதாக மனமுவந்து ஏற்றுக் கொண்டார் ஜமீன்தார். திருப்பதிப் பெருமாளான வெங்கடேசரிடம் கோபால் ராவுக்கு அளவற்ற பக்தி. அதனால் மக்கள் வெங்கடேச சாமி என்றே அவரைக் குறிப்பிடுவர். அது ஜனங்கள் வாக்கில் மருவி வெங்குசாமியாகி விட்டது.

    கோபால்ராவ் பாபாவிடம் தனிப்பிரியம் காட்டுவதை அறிந்த மற்ற சீடர்கள் ஒரு நாள் தோட்டத்தில் பாபா குருநாதரோடு உரையாடும் போது செங்கல்லை எடுத்து வீசினர். ஆனால் செங்கல் பாபாவின் மேல் விழாமல் அந்தரத்தில் நின்றது. அடுத்து ஒரு செங்கல்லை வீச அது கோபால்ராவின் தலையைத் தாக்கி உதிரம் கொட்டியது. பாபா மேல்துண்டால் தலையில் கட்டுப்போட்டார்.

    பாபா கண்ணீர் மல்க குருவே, தாங்கள் என்மீது தனிப்பாசம் காட்டுவதால் தானே இந்தத் துன்பம். நான் இங்கிருந்து போகிறேன் என்றார். குழந்தாய்! நாளை நான் இந்த உலகத்தை விட்டே போகப் போகிறேன். அதற்குள் ஏன் பிரிய நினைக்கிறாய்? என்றார் தேஷ்முக்.

    அப்போது ஒரு மலட்டுப் பசுவை ஓட்டிக் கொண்டு ஒருவன் வந்தான். அவனிடம் தன் கமண்டலத்தைக் கொடுத்து இது நிறையப் பால் கறந்து கொடு என்றார்.

    ஐயா! மலட்டுப பசு பால் கறக்குமா? என்றான் அவன்.

    வெங்குசா மாட்டைக் கொம்பிலிருந்து வால்வரை மூன்று முறை தடவிக்கொடுத்தார். இப்போது கற, பால் சுரக்கும் என்றார்.

    மாட்டுக்காரன் காம்பைத் தடவ பால் சுரந்தது. அந்தப் பாலைக் கையில் வைத்துக்கொண்டு, ஏழுமலையானை தியானித்தார். பிறகு பாபாவை அருகில் அழைத்து, என் தானம், தவம், பக்தி, புண்ணியம், ஞானம், சக்தி அனைத்தையும் உனக்குத் தத்தம் செய்கிறேன் என்று பாலால் தாரை வார்த்துக் கொடுத்தார். அதே சமயம் செங்கல்லை வீசியவன் பயத்தால் நடுங்கிக் கீழே விழுந்து மடிந்தான். மற்ற சீடர்கள் ஓடி வந்து கோபால்ராவின் பாதங்களில் விழுந்து அவனை மன்னித்து உயிர்ப்பிக்கும்படி வேண்டினார்.

    என் பலத்தையெல்லாம் பாபாவிடம் கொடுத்து விட்டேன். அவன் இரங்கினால் மாண்டவன் எழுவான் என்றார் வெங்குசா. அவர்கள் பாபாவின் காலில் விழ பாபா கமண்டலத்திலுள்ள பாலை இறந்தவன் மேல் தெளித்து ‘எழுந்திரு’ என்றார். என்ன ஆச்சரியம்! மாண்டவன் தூங்கி விழித்ததுபோல் எழுந்து பாபாவைப் பணிந்தான்.

    தன் குருநாதர் மறைந்ததும் அந்தரத்தில் நின்ற செங்கல்லோடு மேற்குதிசை நோக்கிப் பயணமானார் பாபா. அவர் தங்கியிருந்த வேப்பமரத்தில் சில கிளையின் இலைகள் கசப்பாகவும், சில இலைகள் கசப்பின்றியும் இருந்தன. அதை இனிய வேம்பு என்றே மக்கள் அழைத்தனர்.

    ‘சூரியனின் எந்த பாகம் இருட்டு? ஆகாயத்தில் எந்த பாகம் நீலமானது? அக்னியில் எந்தப் பகுதிக்கு உஷ்ணமில்லை? இதைத் தெரிந்து கொண்டால் பாபா வரலாற்றில் எந்த அத்தியாயத்தைப் படித்தால் புண்ணியம் என்று சொல்ல முடியும்! சர்க்கரை பொம்மையில் எதைக் கடித்தாலும் இனிக்கும். உங்கள் நெஞ்சுக்குள் பாபா குடிபுக நாங்கள் முயன்றிருக்கிறோம். உங்கள் பிரச்னைகள் தீர, வெற்றிகள் குவிய இப்புத்தகத்தைப் பாராயணம் செய்ய எளிய நடையில் அவரது வரலாற்றினைத் தந்திருக்கிறோம். குழந்தை தவழும்போது தடுக்கி விழுவதைப் போல இதில் குற்றம் குறைகள் இருக்குமானால் பாபா மன்னிக்க வேண்டும்.  இனி பாபாவின் அற்புதங்களில் நீங்கள் மூழ்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. 

    அன்புடன்

    - ஆர். பொன்னம்மாள்

    • • • • •

    1. ரோஹில்லாவின் கூச்சல்

    "எல்லோரும் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்! என்ன சமாசாரம்?"

    அந்தச் சிவந்த கம்பீரமான உருவத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

    தைரியத்தைத் திரட்டிக் கொண்டு ஒரு பெண் சொன்னாள்.

    பாபா! கல்மாவை (திருக்குரான் பாடல்கள்)த் தானே பாடுகிறான் என்று ரோஹில்லாவின் கத்தலை இத்தனை நாளாய் பொறுத்துக் கொண்டோம்.  பகலெல்லாம் நிலத்திலே வேலை செய்யும் நாங்கள் இரவிலாவது நிம்மதியாகத் தூங்க வேண்டாமா? பகவான், இனிமையானவர் அல்லவா? ‘அல்லாஹு அக்பர்’ என்று இத்தனைக் கத்திக் கூப்பிட்டால் தான் வருவாரா? இறைவன் நெஞ்சுக்குள் இருக்கிறார் என்பீர்களே! ரோஹில்லாவின் மனசில் இல்லையா? அவனைக் கட்டுப்படுத்தாமல் ரொம்பதான் இடம் கொடுக்கிறீர்கள்! எங்கள் குழந்தைகள் இவனது கொடூரமான கூச்சலைக் கேட்டு பயந்து அழுகிறார்கள்! இந்தத் துன்பம் எப்போது முடியும்?

    இவளுக்கு எல்லோரும் பின்பாட்டுப் பாடினார்கள். ஸுஷ்மா! நேற்று அரிச்சந்திரன் நாடகம் நடந்ததே! ஒரு தப்பு நடந்தது. நீ நாடகத்தைக் கூர்மையாக கவனிப்பவளாயிற்றே! அதை இப்போ சொல்லு

    பாபாவின் கேள்விக்கு ஸுஷ்மா நாணிக்கோணியபடி நேற்று என் சினேகிதியை நாடகக் கொட்டகையில் பார்த்தேனா! அவளைப் பார்த்து அஞ்சு வருஷமாச்சு. அவளோடு பேசிட்டிருந்ததில் நாடகத்தைப் பார்க்கல்லே! என்றாள்.

    பார்த்தீங்களா! அஞ்சு வருஷம் பார்க்காதவளைப் பார்த்த வுடனே ஸுஷ்மா காசு கொடுத்து சீட்டு வாங்கின நாடகத்தையே மறந்து விட்டாள். ரோஹில்லா கடவுளைப் பார்க்கணும் என்கிற வெறியிலே கூப்பாடு போடறான்.  தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உணர்ச்சிகளை மறந்து விடுகிறான். அவன் கல்மாவைப் பாடும் போது அவன் மனசிலே கெட்ட எண்ணங்கள் நுழையறதில்லையாம். மெதுவாச் சொன்னா தீயவை மனசுக்குள்ளே புகுந்துடுமோன்னு பயமாக இருக்கிறதாம்! ராணி, உன் குழந்தை சொன்னதைப் புரிஞ்சுக்காமல் வீல்வீல்னு அழும் போது நீ என்ன பண்ணுவே?  ராணி முன்னால் வந்து கன்னா பின்னான்னு கத்துவேன். அது பயந்து வாயை மூடிக்கும் என்றாள்.

    "பார்த்தீர்களா? ரோஹில்லா கன்னா பின்னான்னு கத்தலே! ஆண்டவனை சத்தமா வழிபடறான்! அப்போதான் சாத்தான்களை அவனால் விரட்டமுடிகிறதாம்!

    விபுல்! அடுக்கடுக்காய் ஏழு குழந்தைகள் பிறந்த பிறகும் எட்டாவதை உன் மனைவி சுமந்திட்டிருக்கிறா. இது எப்படி சாத்தியமாச்சு! ரோஹில்லாவை ஒன்பதாவது குழந்தையா நினைச்சிருந்தா நீ இங்கே வந்திருக்கவே மாட்டியே! ரோஹில்லாவுக்கு இறைவன் அருள் செய்யும் போது உங்களையும் கவனிக்காமல் விடமாட்டான். மழை பெய்யும் போது நதியும், வயலும் மட்டுமா வளம் பெருகிறது. உங்கள் வீட்டுக் கிணற்றிலும் தண்ணீர் மேலே வரவில்லையா? ரோஹில்லாவின் இரைச்சல் சில நாட்களில் மறைந்துவிடும். அதுவரை என் பொருட்டு சகித்துக் கொள்ளுங்கள்" பாபாவின் உருக்கமான பேச்சு கூட்டத்தைக் கலைத்தது.

    • • • • •

    2. எல்லையில் கொட்டப்பட்ட கோதுமை மாவு

    "விபுல்! பாபா கோதுமை மாவு திரிக்கிறார்" ராணி விபுலிடம் மட்டுமல்ல. அந்த கிராமம் முழுவதும் இச்செய்தியைப் பரப்பினாள்.

    மசூதியில் பாபாவைச் சுற்றி சிறு கூட்டம். சாக்கிலே திருவைக்கல் இருந்தது. முறத்திலே இருந்த கோதுமையை சிறிது சிறிதாகப் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா.

    பாபாவுக்கு குடும்பமோ, உற்றார் உறவினரோ கிடையாது. அப்படி இருக்க பாபா எதற்காக மாவு அரைக்க வேண்டும்? என்பதே கூடியிருந்தவர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஆனால் இதைக் கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை.

    சீதாவும், ராணியும் நடுத்தர வயதுப் பெண்கள். தைரியமாக பாபா அருகில் வந்து, பாபா! எழுந்திருங்கள். கோதுமையை நாங்கள் அரைக்கிறோம். கை வலித்தால் ருக்மாவும், ஸுஷ்மாவும் தயாராக இருக்கிறார்கள். பிட்சை எடுத்துச் சாப்பிடும் உங்களுக்கு இந்த சிரமம் எதற்கு? என்று முளைக்குச்சியைப் பற்றி இருந்த கரத்தை கட்டாயமாக விலக்கினார்கள். பாபா கோபமாக உழைக்காதவனுக்கு உணவுண்ண அதிகாரம் கிடையாது. என்னை வேலை செய்யக் கூடாதென்று தடுக்க நீங்கள் யார்? எனக் கேட்க, 

    நாங்கள் உங்களின் தொண்டர்கள். அன்றைக்கு என் பிள்ளையைக் காய்ச்சலிலிருந்து காப்பாற்றினீர்களே! அதற்கு நான் என்ன கைம்மாறு செய்தேன்? ஸுஷ்மாவின் கணவருக்கு வாந்தி பேதிக்கு மருந்து கொடுத்தீர்களே! அதற்கு அவள் உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஆகாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதற்கு பதில் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் என்று சீதா பதில் சொல்ல, பாபா சாந்தமானார்.

    நான்கு பெண்களுமாக கோதுமையை மாவாக்கி விட்டார்கள். திருகையை நகர்த்தி கோதுமை மாவை நான்கு பங்காக்கிக் கட்டினார்கள்.

    பாபா கோபத்துடன் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார்.

    "ஆளுக்கொரு பங்கு எடுத்துக் கொள்ளப் போகிறோம். அரைத்தது நாங்கள்தானே? சப்பாத்தி, பூரி செய்யும்போது உங்களுக்கும் கொடுத்தனுப்புகிறோம்’ என்றாள் ஸுஷ்மா.

    அரைத்ததற்கு அன்பும், நன்றியும் கூலி என்றீர்கள்! கோதுமை உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்ததா? அல்லது எனக்கு முன்னால் கடன் கொடுத்தீர்களா? போய் மரியாதையாய் கிராமத்தின் நான்கு திசைகளுக்கும் சென்று இந்த மாவால் கோடு போட்டு விட்டு வாருங்கள் என்று அதட்டினார்.

    ‘பைத்தியம்! மறுத்தால் சபித்து விடும்’ எனப் பயந்த பெண்கள் அவர் சொன்னபடி செய்தனர்.

    அன்றிலிருந்து அந்த கிராமத்தில் காலராவால் யாரும் சாகவில்லை!

    தாஸ்கணு மஹாராஜா காகாசாஹேப் தீக்ஷித் சாயி பாபாவை தரிசிக்க வந்தார். சாயி! நான் கிருஷ்ணனைத் தரிசிக்க துவாரகா செல்ல வேண்டும் என்றார்.

    பாபா புன்னகையுடன், இங்கேயே கிருஷ்ணன் தரிசனம் தருவார். ‘அல்லாமாலிக்’ (இறைவனே பெரியவர்) என்று சொல்லிக் கொண்டிருங்கள். குளிக்கும், சாப்பிடும் நேரம் தவிர தூங்காமல் ஏழு நாட்கள் நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும். விட்டலன் தரிசனம் நிச்சயம் கிடைக்கும்என்றார் சாயிபாபா நெஞ்சில் கை வைத்து. சாப்பிடக் கூட எழுந்திராமல் திரவ ஆகாரமே  உண்டு ‘நாம சப்தம்’ செய்தார் மகாராஜா. ஏழாவது நாள் காலை கனவா, நிஜமா என்ற மயக்கத்தில் விட்டல தரிசனம் கிடைத்தது. மதியம் பாபாவைப் பார்க்கச் சென்றபோது,

    விட்டல தரிசனம் ஆயிற்றா? விட்டலன் ஏகநாதர் வீட்டில் ஒரு மாமாங்கம் சேவை செய்தும் ஓடி வந்து விட்டார். ராமராஜாவை ஏமாற்றிய குறும்புப்பிள்ளை. யசோதையையே விட்டு விட்டுப் போன விளையாட்டுச் சிறுவன். அடுத்த முறை வரும் போது பக்தியால் கட்டிப் போட்டு விட்டு வாருங்கள் என்றார் பாபா.

    மகாராஜா அவரது ஞான திருஷ்டியைக் கண்டு பிரமித்தார். பண்டரிநாதர் படம் வேணுமா? என்ற குரல் கேட்டு வெளியே வந்தார் தீக்ஷித். படத்தை வாங்கிப் பார்த்த மகாராஜாவுக்கு மற்றுமொரு ஆனந்த அதிர்ச்சி.

    அவருக்குக் காட்சி கொடுத்த அதே பண்டரிநாதன் முப்பது படங்களிலும் சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு படத்தை வாங்கிக் கொண்டார் அரசர்.

    அப்போது அங்கு வந்த 95 வயதுக் கிழவரான கௌலிபுவா நான் பண்டரிக்கு வருஷா வருஷம் போயிக்கிட்டிருக்கேன். அங்கே எட்டு மாதம் தங்கி பாண்டுரங்கனைத் தரிசனம் பண்ணினேன். ஆடி முதல் கார்த்திகை வரை கங்கா ஸ்நானம் பண்ணி காசி விஸ்வநாதரையும், அன்னபூரணியையும் தரிசனம் பண்ணினேன். ஆனா சாயி தரிசனம் பண்ணினா தான் க்ஷேத்ராடனம் பூர்த்தியானா மாதிரி மனசு நிறைகிறது என்றார். கிழவரின் வாக்கை ஆமோதித்தார் தீக்ஷித்.

    திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாட வேண்டும் என்று தாஸ்கணு மகராஜ் ஆசைப்பட்டார். பாபாவை விட்டுப் பிரியவும் மனமில்லை. 

    பாபாவை நமஸ்கரித்து அனுமதி கேட்டபோது தனது பாதத்தை அவரது சிரசில் வைத்தார் பாபா. வலதுகால் கட்டை விரலிலிருந்து கங்கை பெருகி தாஸ்கணுவை நனைத்தது. இடது பாதத்தை வைக்க இடது கட்டை விரலிலிருந்து கறுப்பான யமுனை பெருகி தாஸ் கணுவை நீராட்டினாள். தாஸ்கணு பேச்சு மூச்சற்றிருந்தார். பாபாவின் புகழை உணர்ச்சி பொங்கும் கவிதைகளாய் பாடி பரவசமுற்றார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

    பகவன்தாரோ ஷீர்சாகர் பாபா பக்தர். ஒருமுறை தரிசனத்திற்கு வந்தபோது பாபா அவரிடம், "ஷீர்சாகர், உன் தந்தை விஷ்ணு பக்தர். அந்த ஷீரசாகரனின் பெயரை உனக்கு ஆசையாய் வைத்தார். வருடம் தவறாமல் பண்டரிபுரம் போவார். ஏகாதசி உற்சவமும், அன்னதானமும் செய்வார். நீ வீட்டில் செய்து வந்த பூஜையையும் நிறுத்தி விட்டாய்! நைவேத்யம் இல்லாமல் பகவானைப் பட்டினி போடுவது மகாஅபசாரம். பகவான் எதையும் சாப்பிடுவதில்லை. பார்க்கிறார். ஒன்று செய். பகவானுக்கு நைவேத்யம் செய்வதை மட்டுமே சாப்பிடுவதென்ற கொள்கையைக்

    Enjoying the preview?
    Page 1 of 1