Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shiradiyum, patratrupathan ragasiyangalum
Shiradiyum, patratrupathan ragasiyangalum
Shiradiyum, patratrupathan ragasiyangalum
Ebook388 pages2 hours

Shiradiyum, patratrupathan ragasiyangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மானுடர்கள் மனமாற்றம் பெற்று, ஆசைகளை வேரறுத்துப் பற்றற்று நின்று, 'பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்றி முக்திக்கு முயன்றிட வேண்டும்
தெய்வம், குரு, மானுடம் இவை அனைத்தும் ஒன்றே- இதை உணர்ந்தவன் ஞானி!

Languageதமிழ்
PublisherUkiyoto
Release dateAug 29, 2021
ISBN9781005203504
Shiradiyum, patratrupathan ragasiyangalum

Related to Shiradiyum, patratrupathan ragasiyangalum

Related ebooks

Related categories

Reviews for Shiradiyum, patratrupathan ragasiyangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shiradiyum, patratrupathan ragasiyangalum - Sukumar

    ஷீரடியும் பற்றறுப்பதன் ரகசியங்களும்

    மருத்துவகவிஞர் பெ. தி. சுகுமார்

    Ukiyoto Publishing

    அனைத்து உலகளாவிய வெளியீட்டு உரிமைகளும்

    Ukiyoto Publishing

    சேர்ந்தது

    Published in 2021

    Content Copyright © Sukumar

    ISBN 978-93-5490-025-9

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வெளியீட்டின் எந்த பகுதியும் வெளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, எந்த வகையிலும், மின்னணு, இயந்திர, புகைப்பட நகல், பதிவு செய்தல் அல்லது வேறு எந்த வகையிலும், எந்த வகையிலும் மறுஉருவாக்கம், பரிமாற்றம் அல்லது மீட்டெடுப்பு முறையில் சேமிக்கப்படக்கூடாது. ஆசிரியரின் தார்மீக உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள்நிகழ்ச்சிகள், இடங்கள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை அல்லது கற்பனைகாக உருவாக்கப்பட்டது, யார் மனதையும் புண்படுத்துவதாக எழுதப்படவில்லை. உண்மையான நபர்கள், வாழும் அல்லது இறந்தவர்கள் அல்லது உண்மையான நிகழ்வுகளுடன் உள்ள எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.

    இந்த புத்தகம் வர்த்தகத்தின் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, வெளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, கடன் வழங்கவோமறுவிற்பனை செய்யவோ, பணியமர்த்தப்படவோ அல்லது வேறுவிதமாக புழக்கத்தில் விடவோ கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு விற்கப்படுகிறது.

    இந்த படைப்பு Pachyderm Tales உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது

    www.pachydermtales.com

    அணிந்துரை

    'ஷீரடி' பாரினில், பாரதம் கண்ட தன்னிகரில்லாப் புண்ணிய பூமி. இறைவன் இங்கே தான் மனித வடிவில் வலம் வந்து குலம் காத்துத் தடம் பதித்த வரலாறு இடம் பெற்றது. பின், ஆன்மீக பூமியாக அருள் பெற்றது. ஞாலம் போற்றக் கோலம் கொண்டிருக்கும் சாய் பீடங்கள் அனைத்திற்கும் மூலஸ்தானம் ஷீரடி. பாபா முதன் முதலில் காட்சி அளித்து காலடி பதித்த மண் ஷீரடி. இது ஒரு வரம் பெற்ற மண்.

    அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஔவை மூதாட்டி கூறியுள்ளார். மானிடப் பிறவி, விதி வசத்தால் கிடைத்த அதிர்ஷ்டம். மானுடப்பிறவி, முற்பிறவியில் கோடி புண்ணியம் செய்ததால் எய்திய நிலை. இதற்கு மேலும், ஒரு படியை எய்திட வேண்டும். அதுவே இறைவன் அடி என்னும் முக்தி நிலையாகும்.

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமானே என்று மாணிக்கவாசகர், சிவபெருமானை நோக்கி இறைஞ்சுவதாலும்,

    பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்று வள்ளுவப் பெருமானும், மானுடப் பிறப்பின் பெருமைகளையும், பிறவிப் பெருங்கடலைப் கடப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

    அந்த ஒரு படியையும் பிடித்து விட்டால் முக்தி எனும் பிறவா நிலையும் பேரின்பப் பெருநிலையும் கைகூடும். இவ்வாறு கிடைத்த மானுடப் பிறவியை, அதன் அருமை அறியாமல் குப்பைத் தொட்டியில் வீசிக்கொண்டிருக்க வேண்டாம் என நூலாசிரியர் ஆணித்தரமாகப் பதிவிடுவதுடன், அதற்கேற்ற உபாயங்களைப் பெற ஷீரடி பாபா எங்ஙனம் உதவி அளிக்கிறார் எனவும் தெளிவாக விளக்குகிறார்.

    அந்த உத்திகள் அனைத்தும் எவ்வாறு சித்தர்கள், ஞானிகள், சிந்தனையாளர்கள் கூறியுள்ளவைகளாகவே அமைகின்றது எனவும் ஆய்ந்து மேற்கோள்களுடன் மற்றும் ஆதாரங்களுடன் பகிர்ந்துள்ளார்.

    தெய்வம், குரு, மானுடம் இவை அனைத்தும் ஒன்றே - இதை உணர்ந்தவன் ஞானி! உணராதவன் அஞ்ஞானி.

    பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க குருவின் பார்வையும், உறுதுணையும் இருந்தால் கடந்து கரை சேரலாம். நமது பாரத மண்ணில் பல ஞானிகள் தோன்றி வழி நடத்தி உள்ளனர். அந்த ஞானிகள் வரிசையில் வந்தவர் தான் ஷீரடி சாய் பாபா. மற்ற ஞானிகள், சித்தர்கள், முனிவர்களின் வாழ்வியலில் இருந்து இவர் முற்றிலும் மாறுபட்டவர்.

    நூலாசிரியர் இவர் போன்ற குருமார்களின் முன்னோடிகளின் வரலாற்றோடு, போதனைகளோடு, அமைந்திட பிரத்தியேக தன்மையும் பதிவிடுகிறார். சிறுகதைகள் நிகழ்வுகள் மூலம் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். இது நாள் வரை, இவர் போன்ற அவதார புருஷர் தோன்றவில்லை.

    நூலாசிரியரியரின் ஷீரடி பாபா பற்றிய இந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நூல் ஆய்வுகளுக்குரிய பல நுண்மைக் கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது. எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய சிறப்பை இந்த நூல் பெற்றிருக்கிறது.

    சத்குரு பாபா ஏன் மற்ற குருமார்களிலிருந்து மாறுபடுகிறார்?

    பாபா ஒரு அயோனி ஜென்மர் - அவரது பிறப்பு எப்போது, எப்படி என்று யாரும் அறியாதது.

    பாபா வர்ணாசிரமரும் அல்லர், வானப்பிரத்தரும் அல்லர், அவர் ஒரு துறவி.

    மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்- மும்மூர்த்திகளின் மொத்த வடிவம்- தத்தாத்ரேயர்.

    மதநல்லிணக்கத்தை வலியுறுத்தவே, மதங்களைக் கடந்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்.

    தன் வாழ்நாளில் இறுதி நாட்கள் வரை பிக்ஷை எடுத்தார். அதன் மூலம், தான் பெற்ற உணவை மற்ற ஜீவராசிகளோடு பகிர்ந்துக் கொண்டார்.

    அவர் செய்யும் அற்புதம் எண்ணிலடங்கா.

    அவை, மாய மற்றும் சித்து வேலைகள் அல்ல.

    இன்றும் அந்த அற்புதங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

    அவர் ஜீவசமாதியில் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    அவர் முக்காலமும் உணர்ந்த ஒரு அவதார புருஷர். தான் பிக்ஷை எடுப்பதன் மூலம் இல்லறவாசிகள், துறவிகளுக்கு பிக்ஷை இடுதலின் மகத்துவத்தைச் சொல்லாமல் சொன்னார்.

    அவர், தன் பக்தர்களிடம் தட்சணை கேட்பதன் மூலம் தர்மம் செய்யும் எண்ணத்தை அவர்களிடம் தூண்டினார். 'மக்களே உங்கள் பங்கு எளியோர்க்கு உதவட்டும்' என்று சுட்டிக் காட்டினார்.

    அவர் பக்தர்களிடம், 'நான் உங்கள் கழிவில் இருக்கும் ஒரு புழு' என்று பணிவின் உச்சத்திற்கே சென்று தன்னை நிறுத்திக் கொண்டார்.

    இத்தகைய வரலாற்று முக்கியம் வாய்ந்த பாபாவின் வாழ்க்கையே ஷீரடியின் பதிவுகள்.

    இந்த பதிவுகளே மானுடர்கள் மனமாற்றம் பெற்று, ஆசைகளை வேரறுத்துப் பற்றற்று நின்று, 'பற்றுக் பற்றற்றான் பற்றினை'

    எனும் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்றி முக்திக்கு முயன்றிட வேண்டும் என்பதே ஷீரடிப் பதிவுகள் பகிர்ந்திடும் ரகசியங்கள்.

    இந்த அரிய ரகசியங்களை ஆதாரங்களுடன் தக்கப்படி வழங்கிய மருத்துவக் கவிஞர் திரு.பெதி.சுகுமார் அவர்கள் பாபாவிற்குப் பெரும் தொண்டாற்றி வருபவர்.

    காலங்கள் பல கடந்தும் பாபாவின் புகழோடுச் சேர்ந்து பயணிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    தமிழ்சங்கக் களங்கண்ட

    தரணிபுகழ் கவிஞன்; புகழ் மகுடம் சூடவொரு பொன்னாள் அகழ்ந்தெடுத்து; அற்புதமாய்ச் சுகுமார் அவனியிலே படைத்தார்; அறியாமல் ஆற்றிடநம் வாழ்த்து!

    இவண்,

    டாக்டர். சி. கருணாநிதி,

    ஸ்ரீ ரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன்,

    திருச்சி- 620 005

    அலைபேசி : 94431 24113

    வாழ்த்துரை

    சாயிநாதர் கருணையினை, சாயிநாதர் கருணையினால், ஆட்படுத்துப்பட்ட ஜயா, பெ. தி. சுகுமார் அவர்கள் வார்த்தைகளில், வரிக்கு வரி நிரம்பி வழிகிறது, சர்வம் சாயி மயம்.

    என்னுடைய 25வது வயதில் ஐயாவின் நட்பு கிடைத்தது. இன்றுவரை, என்னுடைய இன்பம் மற்றும் துன்பம் எல்லாவற்றிலும் என்னை வழிநடத்தி, ஆட்கொண்டுள்ளார் ஐயா. இன்றுவரை இந்த நட்பு தொடர்வதும் சாய் கருணையால் மட்டுமே. எண் கணிதம், ஆன்மீகம், நேர் மறை எண்ணம், பொறுமை இவையெல்லாம் நான் கற்றுக் கொண்டது இவரிடம் தான்.

    ஐயா பெ. தி. சுகுமார், அவர்களின் ஷீரடி பாபா பற்றிய இந்த நூல், உலக வாழ்வியலில் பற்றுகளை வேரறுக்க பாபாவின் அரிய வழிகாட்டலாகும். மகத்தான கருத்துகளை உள்ளடக்கி உள்ளது. இந்தக் கருத்துகள் எமது 'சிவ ஒளி' ஆன்மீக இதழில் மாதாந்திரத் தொடராக வெளிவந்து வாசகர்களின் பேராதரைவையும் பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத் தகுந்தது. ஐயா அவர்களின் இந்த நூலின் கருத்துகள் மனித வாழ்வில் இறைவனின் திருவடியை அடைய எளிய நடைமுறை உத்திகளை ஆழ்ந்து உள்ளடக்கியது. இந்நூலைப் படிப்பதால், அனைவரும் பயனுறுவது உறுதி. ஐயாவின் முயற்சிகள் ஷீரடி பாபாவின் திருவுளத்தால், ஆசிர்வாதம் செய்யப்பட்டு வெற்றியுற எனது இதயபூர்வமான வாழ்த்துகள்!

    இவண்,

    ஜெ ரஜினி காந்தன்

    246, கூட்டுறவு நகர்,

    விளமல், திருவாரூர்

    தமிழ் நாடு -- 610 004

    அலைபேசி: 9362710512

    வாழ்த்துரை

    ஷீரடி சாய்பாபா பற்றிய இந்த நூலின் ஆசிரியர் திரு. பெ. தி.சுகுமார் அவர்கள், நான் முகநூலில் நுழைந்து குழுமங்களில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த நாளில் இருந்து, அவரும் என்னைப் போலவே எழுதி வந்த கவிஞர். பல இலக்கிய சந்திப்புகளில் அவரை சந்தித்தும் இருக்கிறேன். இனிதான நட்பினை நல்கும் உயரிய பண்பாளர். இலவச மருத்துவ முகாம்கள் பல நடத்தி, பலருக்கும் தொண்டாற்றிய சேவையாளரும் ஆவார். அவர் சாய்பாபாவின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர் என்பதோடல்லாமல், சாயிநாதரைப் பற்றி எழுதியிருக்கும் இந்த அற்புதக் கட்டுரைகள் சிவ ஒளி எனும் பத்திரிக்கையில் மாதந்தோறும் வெளியானதாகும்.

    பற்றற்ற நிலை என்பது பக்குவப்பட்ட ஒரு நிலையாகும். அனைவருக்கும் இது சாத்தியமா? ஞானியர் நிலையல்லவா இது! ஆனால் பக்குவப்பட்ட நிலையடைய பக்தியும் ஒரு மார்க்கமாகும். சீரடி சாய்நாதரிடம் கொள்ளும் பக்தி நம்மை எப்படி பக்குவப்பட்ட ஒரு நிலைக்கு பக்குவப்படுத்துகிறது என்பதை இக்கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார் கட்டுரையாசிரியர். சிறப்பான இக்கட்டுரைகளை வாசித்து சாய்நாதரின் கருணையில் திளைப்போம்! இக்கட்டுரைகள் ஏற்கனவே பலரது பாராட்டினைப் பெற்றவை. அதை நீங்களும் அறிய வகை செய்த கட்டுரையாசிரியரை வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி! வணக்கம்!

    அனேக பிரியங்களுடன்,

    அனுராஜ்

    போடிநாயக்கனூர்.

    தமிழ்நாடு.

    7010917953

    நூலாசிரியர் உரை

    சத்குருவின் திருவாய் மொழிகளும், திருவருள் பெறுவதற்கான வழிமுறைகளும், திருமண்ணில் அவதரித்துள்ள அனைவரும் அறிந்து வாழ்வியலில் நடைமுறையில் பின்பற்றி, அவசியமாம் பற்றறுப்பதற்கு உதவிட வேண்டும் என எண்ணிய எண்ணத்தின் விளைவே இந்த படைப்பின் பிறப்பாகின்றது. சீரடி சாய் பாபாவின் அருளுரைகளை, நமது சித்தர்களும், ஞானிகளும், சிந்தனையாளர்களும், கூறியுள்ள பேருரைகளுடன் காணும் மிகு ஒற்றுமைகளை எடுத்தியம்பும் முகத்தான் எடுத்துக்கொண்ட சிறு முயற்சியே 'ஷீரடியும் பற்றறுப்பதன் ரகசியங்களும்' என்ற இந்த ஆன்மீக நூல்.

    இந்த ஆன்மீகக் கட்டுரைகள் தொடராக 'சிவ ஒளி' என்ற உன்னத ஆன்மீக மாத இதழில் ஆறாண்டுகள் தொடர்ந்து வெளியாகி, ஆன்மீக உள்ளங்களுக்கு விருந்தாக அமைந்தது. அந்தத் தொடரினைத் தொகுத்து, ஒரே நூலாக வெளியிடல் வேண்டும் என்ற அன்பர் பலரின் ஆவலுக்கிணங்க, இந்த முயற்சியைத் துவங்கினேன். தொடர்கள் அத்தனையும் வெளியிட்டால், நூலின் அளவு பெரிதாகி, வாசகர்களுக்குக் கடினமாகும் என்பதால், பகுதியாக, இந்தத் தொகுப்பினைத் தற்போது வெளியீடு செய்திட முனைந்தேன். அடியேன் என்னுடைய இந்த முயற்சியில், உந்துதலாக, வழிகாட்டியாக, எல்லாம் வல்லான் அமைத்திட்ட திரு உள்ளங்கள் பலவாகும். 'சிவ ஒளி' பத்திரிக்கையைச் சார்ந்த, என்னுயிர் நண்பர், உயர்திரு. ஜெ. ரஜினி காந்தன், அவர்களுக்கு எனது முதற்கண் நன்றிகள்.

    நூல் வடிவாக்கி, உலகளாவிய வாசகர்களுக்கு வாய்ப்பளித்திட, உதவிய பேருள்ளப் பெருங்கவிஞர், சரித்திர நாவலாசிரியர் உயர்திரு. அனுராஜ் அவர்களுக்கும், பெருமதிப்பிற்குரிய Pachyderm Tales, நிறுவனத்தாருக்கும், நான் மருத்துவத் தொண்டாற்றும், ஸ்ரீ ரெங்கசாய் பவுண்டேஷன் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கும், குறிப்பாக அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், எனதுயிர் நண்பர், உயர்திரு. டாக்டர், சி.கருணாநிதி, அவர்களுக்கும், எனது பெருநன்றிகளை உரித்தாக்கி அகம் மகிழ்கின்றேன். ஓம் சாயிராம்!

    இவண்

    'மருத்துவகவிஞர் ‘ பெ.தி.சுகுமார்

    காமாட்சி குடில்

    23, வியாசராச நகர்

    திருவரங்கம்

    திருச்சி - 620 006

    தமிழ்நாடு.

    அலைபேசி எண்கள்:

    9 8 4 2 6 5 6 8 0 2

    6 3 8 3 1 7 2 1 9 1

    ஷீரடி பாபாவின் முற்பிறவி குரு சமாதி!

    முன்னுரை

    ஷீரடியின்‌ மகத்துவம்‌ என்பது, சீரடி கிராமமே செய்த புண்ணியத்தால்‌, கோதாவரி நதிக்கரைக்கு வந்த சாயி நாதரின்‌ தெய்வீக சக்தியால்தான்‌ என்‌பதை அனைவரும்‌ அறிவார்கள்‌.

    சீரடியின்‌ மகத்துவம்‌ பற்றிச் சிந்திக்கும்போது, சீரடியின்‌ அன்றைய நிலை பற்றிச் சற்று காண்போம்‌. மகாராஷ்டிர மாநிலத்தில்‌ உள்ள சிறிய கிராமம்‌ சீரடிஅன்று சீரடியில்‌ பெரும்பாலும் மண்குடிசைகளே இருந்தன. மொத்தம்‌ ஏறக்குறைய 2000 மக்களே வசித்து வந்தார்கள்‌. போக்குவரத்து வசதி எதுவும்‌ இல்லைமின்சாரம்‌ அந்த கிராமத்திற்கு வரவில்லை. காடா விளக்குகளும்‌, பெட்ரோமாக்ஸ்‌ விளக்குகளும்தான்‌ வெளிச்சத்திற்கு உதவின. பொது உபயோகத்திற்கு இரண்டு கிணறுகள்‌. அதில்‌ ஒன்றில்‌ உள்ள தண்ணீர்‌ ௨ப்பாயிருந்தது. இரண்டு பள்ளிக்கூடங்கள்‌, ஒன்று ஆரம்பப்‌பள்ளிக்கூடம்‌மற்றொன்று மராத்தி மிஷன்‌பள்ளிக்கூடம்‌, விவசாயம்தான்‌ அங்கு வசித்து வந்த மக்களுக்கு வாழ்வாதாரம்‌. மிகவும்‌ ஏழ்மை நிலைஇஸ்லாமியரும்‌, இந்துக்களும்‌ அங்கு வசித்து வந்தனர்‌. ஒரு சர்க்கரை ஆலை இருந்ததுஇரண்டோ அல்லது மூன்றோ மளிகைக் கடைகள் இருந்தன. இரண்டு மசூதிகள் இருந்தன. ஒன்றில் தொழுகையே நடக்கவில்லை. பாழடைந்து இருந்தது. சீரடியில்‌ பசுக்களைப் பராமரித்து வரும்‌ கோசாலைகள்‌ நிறைய இருந்தன. மற்ற ஊர்களின் பசுக்களை நன்கொடையாக இங்குக் கொண்டு வந்து விடுவார்களாம். பேருந்து வசதி இல்லை. 18 கி. மீ. தொலைவில்‌ உள்ள கோபர்காவ் என்ற ஊரில்‌ உள்ள இரயில்‌ நிலையத்தை அடைந்து அங்கிருந்து குதிரை வண்டிகள் மூலமாகத்தான் சீரடிக்கு வரவேண்டும்‌. அதை விட்டால் வேறு வழியில்லை. கோபர்காவ்‌ என்ற ஊரில் கோதாவரி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றும் கோதாவரியில்‌ வெள்ளம்‌ அதிகமாயிருந்தால் படகுகள் ‌மூலம்‌ இக்கரைக்கு வந்து குதிரை வண்டியில்‌ஏறி அடுத்துள்ள நிம்காங்வந்ததுமே தொலைவில்‌ சீரடி தெரியும்‌. இது சீரடியின் அன்றைய நிலைஇப்படியிருந்த சீரடியில் வாழ்ந்து வந்த பாபா தன்‌ அடியவரான மகல்சபாபதியிடம் கூறுவாராம்‌. "அரே பக்த்‌, இங்கு மாடமாளிகை, கோபுரங்கள்‌ உருவாகும்‌. மக்கள்‌ ரதங்களில் செல்வார்கள்‌. அதுமட்டுமல்ல. மக்கள் சாரி சாரியாக எறும்பைப்‌போல ஊர்ந்து செல்வார்கள் என்று. யாராக இருந்தாலும்‌, அன்றைய நிலையில் கேலியாகச் சிரிக்கத்தான்‌ செய்வார்கள் பாபா இவ்வாறு கூறியதைக்கேட்டு. ஒரு குக்கிராமத்தில் மாட மாளிகைகள்‌ தோன்றுவதாவது?’ ஆனால்‌ ஞானிகளின்‌ கூற்றுகள் என்றுமே பொய்யாவதில்லை. தீர்க்க தரிசிகள் அல்லவா அவர்கள்? இன்று சீரடியில் மாட மாளிகைகளைக் காணலாம். எண்ணற்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள், தெருக்களில் புதிய மாடல் கார்கள் (ரதம்) மக்கள் சாரி சாரியாக எறும்புகளைப் போல் சாலைகளில் செல்கிறார்கள். பாபாவை சமாதி மந்திரி‌லும், துவாரகாமயியிலும் மணிக்கணக்கில்‌ வரிசையில்‌ நின்றுதான்‌ வணங்கமுடிகிறது. அன்று பாபா கூறியது. உண்மையாயிற்று இல்லையா? எண்ணற்ற தங்கும்‌ விடுதிகள்‌, உணவு விடுதிகள்‌சிறப்பு மருத்துவம்‌ செய்யும்‌ மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள்‌, கல்லூரிகள்‌. அவ்வளவு ஏன்‌? ஒரு இரயில்‌நிலையம்‌கூட இரண்டாண்டுகளுக்கு முன் ‌வந்துவிட்டது. சொகுசுப்‌ பேருந்துகள்‌, விரைவில்‌ விமான நிலையமும்‌ வரும்‌. இரவைப்‌ பகலாக்கும்‌ விளக்குகள்‌. இரவு பகல் ‌என்று பாராமல்‌ வீடுகளில்‌ மக்கள்‌ கூட்டம்‌இதுதான்‌ இன்றைய சீரடி. அன்றைய குக்கிராமம்இன்று தூங்கா நகரம்‌ ஆகிவிட்டது. எந்நேரமும்‌ மக்கள்‌ பேருந்துகளிலும்‌. கார்களிலும்‌ வந்திறங்கிய வண்ணம்‌ உள்ளனர்‌.

    சீரடியின் ஆரம்பக் காலப்‌பெயர்‌ ஷிலாதி, நாளடைவில்‌ ஷிலாதிதான்‌ சீரடி என்று மாறிற்று. 'விசுவநாதருக்கு காசியும்‌, வெங்கடேசருக்குத்‌ திருப்பதியும்‌. விட்டலுக்குப் பண்டரிபுரமும்‌, முகமது நபியை சார்ந்தவர்க்கு மெக்காவும்‌ எப்படியோ… அப்படியே பாபாவுக்கு. சீரடியும்‌ என்பது சாயிபக்தர்களின்‌ துணிபு. சாயி பக்தர்களுக்குச் சீரடியே புனித ஸ்தலம். இத்திருத்தலம்‌, காசிக்கும்‌மெக்காவுக்கும்‌, ஜெருசலத்திற்கும்‌ சமமானது என்பதில்‌ எந்தவித சந்தேகமும் ‌இல்லை.

    இன்று இலட்சோப இலட்சம்‌ மக்களைச் சீரடிக்கு இழுக்கும்‌ சக்தி, ஷீரடி சாயி பாபாவின்‌ தெய்வீக சக்தியென்றால்‌ அவரை சீரடிக்கு இழுத்து வந்தது எந்தச் சக்‌தி? சீரடியில்‌ உ ள்ள அவரது முற்பிறவி குருவின்‌ சமாதிதான். குருவின்‌ அருகாமை அவருக்குத் தேவைப்பட்டது. எத்தகைய குரு பக்தி? இது என்னுடைய குருவின்‌ இடம்‌, எனவே நான்‌ இங்கு வந்தேன்‌ என்று பாபா கூறினார்‌.

    இன்று சீரடியில்‌ பாபாவின்‌ சமாதி மந்திர்‌, அதாவது ஸ்ரீசாயிபாபா 1918ம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (முகரம்‌ 9ம்‌. நாள்‌), மாலை 3 மணிக்கு தன்‌ பூத உடலை நீத்தார்அவரது உடல்‌ அடக்கம் செய்யப்பட்ட பூட்டி வாடா என்ற கருங்கல்‌ கட்டிடம்‌ அமைந்துள்ளதுதான்‌ சமாதி மந்திர்‌.

    மந்திருக்குள்‌ வரிசையாகச்‌ செல்லவேண்டும்‌. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்‌ வரிசையாகச் ‌சென்ற பிறகுதான்‌ பாபாவின்‌ சமாதி அமைந்துள்ள ஹாலை அடைய முடியும்‌இது சாதாரண நாட்களில்‌. இதுவே, சனி, ஞாயிறு மற்றும்‌ வியாழக்கிழமைகளில்‌ நான்கு மணிநேரம்‌ வரிசையில்‌ நிற்க வேண்டி வரும்‌, சாதாரண நாட்களில்‌ 50,000 முதல்‌ 60,000 பக்தர்களும்‌, சனிஞாயிறு, வியாழன்‌ போன்ற நாட்களில்‌ தினமும் ஒரு லட்சம்‌ மக்களும்‌‌ பக்தர்களாகப் பாபாவை தரிசிக்க வருகிறார்கள்‌.

    பாபாவின்‌ ஆளுயரச்‌ சிலை ஒரே கல்லில்‌ செய்யப்பட்டு கிழக்கு நோக்கி பார்க்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுயர உயிரோட்டமுள்ள சிலைக்கு எல்லாவிதமான உயர்‌ மரியாதைகளும்‌ செய்யப்படுகிறது. பாபா இந்தச் சமாதியில்‌ உயிரோட்டத்துடன்‌. அருள்பாலித்துக்‌ கொண்டுள்ளார்‌.

    என்‌ சமாதியில்‌. நான்‌ என்றென்றும்‌ உயிர்த்துடிப்புடன் ‌இருந்து உங்களுக்கு நல்ஆசிகள்‌ நல்குவேன்‌. என்‌ எலும்புகள்‌கூட உங்களுடன்‌ பேசும்‌, என்று உறுதி கூறியவரல்லவா. நமது அகிலாண்‌ட கோடி பிரம்மாண்ட நாயக, ராஜாதி ராஜ, யோகராஜ்பரப்பிரம்ம சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்‌ நாத்‌ மகாராஜ்‌"

    சீரடி பாபாவின்‌ நாமம்‌ மலை போன்ற பாபங்களை அழிக்கும்‌. நாமம்‌ கோடிக்கணக்கான தீய எண்ணங்களை, தீய விருப்பங்களை நாசம்‌செய்யும்‌. பாபாவின் ‌நாமம்‌ காலனின்‌கழுத்தை நெறிக்கும்‌. பிறப்பு, இறப்பு என்ற சூழலிருந்து நம்மை விடுவிக்கும்‌. நம்மைப் பரிசுத்தமாக்கிக்‌ கொள்ளப் பாபாவின்‌ நாம செபத்தை விடச் சுலபமான வழி வேறெதுவும்‌கிடையாது, நாமத்தை கூறுவதற்குக் கூச வேண்டாம்‌. இது சாஸ்திர விதிகள்‌, சடங்குகளுக்கு அப்பாற்பட்டது. நாமம்‌ எல்லா பாபங்களையும்‌ அழிக்கும்‌. மற்ற மதச் சடங்குகளை, பூசைகளைச்‌செய்ய எத்தனையோ விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால்‌ பாபாவின்‌ நாம செபத்தை எந்தக் கட்டுப்பாடும்‌ இன்றி இடைவிடாது செய்யலாம்‌. சுப அல்லது அசுப தீட்டுகள்‌ கூடக் கிடையாதுபாபாவின்‌ நாம செபத்திற்குத் தடங்கல்‌ கிடையாது. வேதங்களை ஓத, ஸ்தோத்திரங்கள்‌. பாராயணம் ‌போன்றவை செய்ய, நாள்‌, கோள்‌பார்க்கவேண்டாம்‌. பாபாவின்செபம்‌செய்ய நாள்‌, நட்சத்திரம்‌ பார்க்க வேண்டாம்‌. பாபாவின்‌ நாம செபத்தை உள்ளடக்கிய நாம சங்கீர்த்தனத்தை விட எளிமையானதும்‌, சுலபமானதும்‌ ஆன வழிபாட்டு முறை வேறு எதுவுமில்லை. பாபாவே கூறியிருக்கிறார்‌, எவர்‌ என்னுடைய நாமசெபத்தை, நாம சங்கீர்த்தனத்தைச் செய்கிறார்களோ அவர்‌ எல்லாப்‌ பாபங்களினின்றும்‌. விடுபடுகிறார்‌ (27. 91) என்ற பாபாவின்‌ வார்த்தைகள்‌ வெறும்‌ சொற்கள்‌ அல்ல, பிரம்மதேவன்‌எழுதும்‌ எழுத்திற்குச்‌ சமம்‌. மனிதனுடைய. வினைகளின்‌ பலனையும்‌ தடுத்து நிறத்தும்‌ சக்தி பெற்றவை (சத்சரிதம்34/86).

    உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உறவு பந்தத்தை வார்த்தைகளால்‌ வர்ணிக்க இயலாது. நான்‌ ஒரு பக்கீர்‌, வீடு வாசல்‌ இல்லாதவன்‌மனைவி மக்களும்‌ இல்லை. என்னை நாடி தன்னை மறந்து தியானத்தில்‌ லயித்து இருப்பேன்‌. அப்படிப்பட்ட தன்‌மயக்க நிலையில்‌கூட உங்களை மறக்கமுடியாமல் ‌இருக்கிறேன்‌. என்கவனம்‌ உங்கள்கவனமாக

    Enjoying the preview?
    Page 1 of 1