Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammaiyapparay Ulagukku Ammaiyappar
Ammaiyapparay Ulagukku Ammaiyappar
Ammaiyapparay Ulagukku Ammaiyappar
Ebook178 pages1 hour

Ammaiyapparay Ulagukku Ammaiyappar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்ற தலைப்பில் வெளிவரும் இக்கட்டுரை தொகுப்பு நூல், சிவசக்தியின் ஐக்கியத்தைப் பற்றி தெரிவிக்க எழுந்தது. இந்லூலில், பல ஆன்மீக சான்றோர் மற்றும் ஆன்றோர் போன்றோர், சிவசக்தி பற்றி பல கோணங்களில் விளக்கம் அளித்துள்ளனர். சிவன் வேறு சக்தி வேறு என்று நினைத்து வழிபடும் மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கதோடு இந்நூல் உருவாகிறது.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580156008917
Ammaiyapparay Ulagukku Ammaiyappar

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Ammaiyapparay Ulagukku Ammaiyappar

Related ebooks

Reviews for Ammaiyapparay Ulagukku Ammaiyappar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammaiyapparay Ulagukku Ammaiyappar - Edaimaruthour Ki Manjula

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்

    Ammaiyapparay Ulagukku Ammaiyappar

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் உரை

    அருளுரை

    1. சிவ சக்தியின் ஐக்கிய ஸ்தானம் - ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி

    2. சிவசக்தி - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

    3. சித்தாந்தம் வழி சிவசக்தி விளக்கம் - சித்தாந்த சரபம் ஞான வள்ளல் கு. வைத்தியநாதன்

    4. பராசக்தியே பரப்பிரும்மம் - டாக். ‘நஜன்’

    5. வாலிழை பாகத்தொருவன் - திரு. மு. அருணாசலம்

    6. கடவுள்(ட்) கொள்கை - டாக். சுப. திண்ணப்பன்

    7. சக்தியும் சிவமும் - மகாவித்வான் ஆறுமுக நாவலர்

    8. சிவசக்தியின் தத்துவங்கள் - மணிகண்டன்

    9. சக்தியை வியந்தது - டாக். அ. கந்தசாமி

    10. அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் - இடைமருதூர் கி. மஞ்சுளா

    11. கடவுளை எப்படி வாழவைப்பது? - தென்கச்சி சுவாமிநாதன்

    12. சிவ சக்தி தத்துவம் - எம்.சி. தம்மண்ண செட்டியார் ‘பிரபஞ்ச சக்தி’ நூலாசிரியர்

    ஆசிரியர் உரை

    "அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக;

    அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்; அம்மையப்பர்

    எல்லா உலகுக்கும் அப்புறத்தார், இப்புறத்தும்

    அல்லார் போல் நிற்பர் அவர்."

    - திருக்களிற்றுப்படியார் (பா-1)

    ‘அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்’ என்ற தலைப்பில் வெளிவரும் இக்கட்டுரை தொகுப்பு நூல், சிவசக்தியின் ஐக்கியத்தைப் பற்றி தெரிவிக்க எழுந்தது. இந்லூலில், பல ஆன்மீக சான்றோர் மற்றும் ஆன்றோர் போன்றோர், ‘சிவசக்தி’ பற்றி பல கோணங்களில் விளக்கம் அளித்துள்ளனர். சிவன் வேறு சக்தி வேறு என்று நினைத்து வழிபடும் மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கம் உருவாகி அது தற்போது பல கண்டு கடுமையான முயற்சிக்குப் பிறகு நூலாக வெளிவருவது அம்மையப்பர் அருள் என்றே கருதுகிறேன்.

    சிவலிங்க உருவமே அம்மையப்பரை உணர்த்தும் உருவம் (வடிவம்) தானே! ‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்’ என்றார் திருமூலர். உயிர்கள் பல என்றாலும் இறை ஒன்றே. அம்மையப்பராக வந்தருளும் இறை, சக்தி சிவம் என இரு தன்மைகளைப் பெற்றாலும் ஒருவரே உலகுக்குத் தாயும், தந்தையும் ஆவார் என்கிறார். எடுத்த எடுப்பிலே ஞானசம்பந்தர், தனது ஐந்தாவது வயதில், ஞானப்பால் உண்டு, தோடுடைய செவியன் என்று அம்மையப்பரை கண்டதை விளக்கியுள்ளார். கடவுள் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல வேறு பொருளுமல்ல. மாயா சக்தியையும் கடந்த மாபெரும் சக்தியே - பிரம்மமாகிய கடவுளாகும். அது பக்தர்களின் பொருட்டு முதலில் பெண் வடிவாகத் தோன்றி பின் பொருள் தன்மை உடையதாய் ஆண் வடிவமாகவும் தோன்றியது. உருவமாகத் தோன்றுவதெல்லாம் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் பொருட்டுடேயன்றி, கடவுள் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, பொருளுமல்ல, பெயருடையல்ல இதை மணிவாசகப் பெருந்தகை,

    பெண்ணாகி ஆணாய், அலியாய்ப் பிறங்கொளி சேர் என்றும். பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன், மாதொரு கூறுடைய பிரான், ஆணோ அலியோ, அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் இப்படி பல பாடல்களில் அம்மையப்பரை சிறப்பித்து பாடியுள்ளது கருதத்தக்கது. இது குறித்து அடியேன் எழுதிய ஒரு கட்டுரையே இந்நூல் உருவாவதற்கு காரணமானது. இந்நூலில், ‘அம்மையப்பர்’ ஆட்சி செலுத்தி வரும் திருச்செங்கோட்டு திருத்தல வரலாறும், தேவாரப் பதிகங்களும் அடங்கியுள்ளன. எந்த சமயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு சைவ சமயத்திற்கு மட்டும் தான் உள்ளது. இறைவனை அம்மையப்பராய் வணங்கும் பெருமையும், சிறப்பும் சைவத்திற்கே உரியது.

    வாழ்வில் இன்புறுவதற்கான வழிகளைச் சிந்தித்தால், அனைத்திலும், அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமான சக்தி ஒன்று செயல்படுவதை உணரமுடியும். அது வற்றாதது எல்லையில்லாதது. முதலும் முடிவும் இல்லாது என்பதன் ஆதாரத்தின் அடிப்படையில் ‘பக்தி’ என்பதை மனதிற்கொண்டு இறைவனை நம்முடைய தாயும் தந்தையுமாக, அம்மையப்பராக பக்தி செலுத்தி வாழ்வது மிகவும் அவசியம் தாய் - தந்தைதான் நம் குற்றங்களைக் கலைந்து நல்ல மேல் நிலைக்கு கொண்டு வருவர்.

    அம்மையப்பனாகிய இறைவனும் கருணையே வடிவானவன். சக்தியை போற்றிய பல அடியார்கள் சக்தி பெற்றிருக்கின்றனர் என்பதை காளிதாசர், கம்பர், அபிராமிபட்டர், இராமகிருஷ்ணர், காஞ்சி மாமுனிவர், பாரதியார் போன்றவர்களால் அறியலாம். அம்மைதான் நம் குறைகளைக் கேட்டு அப்பனிடம் சொல்லி, பரிந்துரைப்பவர். அதனால், அம்மையப்பராக காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரரை சிக்கெனப் பிடித்துக் கொண்டால், பின் நம்மை விட்டு எங்கு செல்வார்! அடியாரின் உள்ளக்கோயிலே அம்மையப்பர் வாழும் கருவரை.

    சி (சிவன்) வ (அருள் - சக்தி) அதனால்தான் சிவகடாக்ஷம் என்று கூறுகின்றனர். சிவ என்ற இரண்டு எழுத்தில் சக்தியும் சிவனும் உள்ளனர்.

    சிவ சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும்; சக்தி கிடைத்தால் சகலமும் கிடைக்கும்!

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    அருளுரை

    இந்த உலகம் அன்பின் திருவுருவமாக விளங்கும் சர்வேஸ்வரனால் உண்டாகியிருக்கிறது. அப்படியிருந்தும் கூட இங்கு வாழும் மக்கள் அறியாமை காரணமாக தங்களுக்குள் பல்வேறு வேற்றுமைகளைக் கற்பித்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான வாதங்களை செய்து கொண்டும் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாமரர்கள் மட்டுமின்றி நன்குப் படித்த அறிவாளிகளும் கூட இந்த அறியாமை மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். தாயிற் சிறந்த கோயிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்கிற அமுத மொழிகளைக் கற்றிருந்தும் கூட அந்த தாய்க்கும், தந்தைக்கும் இரும்புத்திரையிட்டு பிரித்துப் பேசுகிறார்கள். சாக்தம், சைவம் என்று பேதம் கற்பித்து அம்மையையும், அப்பனையும் வேற்றுமை கண் கொண்டு நோக்குகிறார்கள். இந்த வேற்றுமை பாவனை காரணமாகவே கணக்கற்ற இன்னல்கள் இந்த உலகத்தில் தோன்றியுள்ளன. இதனை அகற்ற திருவுளம் கொண்ட சிவபெருமான் சக்திக்கு தம் திருமேனியில் சரிபாதியை அளித்து அம்மையப்பராக திருக்கோலம் கொண்டார். ஈருடல் ஓர் உயிர் என்னும் அன்பு தத்துவத்தை உணர்த்துவதே இந்த அற்புதத் திருக்கோலம். மனித இனத்தில் தோன்றியிருக்கும் ஆண், பெண் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் ஆண், பெண்ணுக்கும் இது பொருந்தும். அதாவது பல கோடி ஜீவராசிகள் பல கோடி வேற்றுமைகள் நிறைந்த உடல்களைப் பெற்றிருந்தாலும் அவை அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஒன்றே ஒன்று தான் என்பதை அம்மையப்பர் உணர்த்திக் கொண்டிருக்கிறார். இந்த எளிய ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் உலகத்தவர் துன்ப சாகரகத்தில் உழன்று கொண்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. இதற்கு மூலகாரணம் மாயை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. இந்திர ஜாலக்காரன் தன் கை ஜாலத்தால் பல பொருள்களை தோற்றுவிக்கிறான். அந்த மாயத்தையே நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியிருக்க மகா மாயாவியான மகேஸ்வரனின் மாயையை நாம் எப்படி வெல்லப் போகிறோம்? என்பதை சிந்திக்க வேண்டும். அந்த சர்வேஸ்வரனை பரிபூரணமாக சரணடைந்து அவன் மகிழும்படி செய்வதே அந்த மாயையை வெல்லும் உபாயமாக உள்ளது. இந்நூலினை அனைவரும் ஆழ்ந்து படித்து அம்மையப்பரின் திருவருளால் இவ்வுயரிய தத்துவ ரகசியத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். அருள்மிகு சிவகாமி அம்மை உடனாய செந்தமிழ் கூத்தன் ஞானமா நடராஜப் பெருமான் திருவருளால் தாங்கள் அனைத்து நலங்களும் பெற்று இன்புற்று இருக்க சிந்திக்கின்றோம்.

    இன்னவண்ணம்,

    என்றும் அன்புடன்,

    ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்.

    1. சிவ சக்தியின் ஐக்கிய ஸ்தானம் - ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி

    ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்

    ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஒளவைப் பாட்டி சொல்கிறார் என்றால், அந்தத் தெய்வமே அன்னையும் பிதாவுமாகி ஒரு பாதி அன்னை, ஒரு பாதி பிதா என்று அர்த்தநாரீசுவரராக உட்கார்ந்திருக்கிறது. இது நமக்குப் பரமலாபம் என்று கிட்டே போகிறோம். போனால் அப்புறம் இதனாலேயே சில குளறுபடிகள், சண்டை கூட உண்டாகி விடுகின்றன. காலில் போய் விழலாம் என்றால், ஒரு கால் ஈசுவரனுடையது, மற்றது அம்பாளுடையது என்று இருக்கிறது. இப்படிக்கு ஒன்றுக்கு மேல் ஆசாமி இருந்தால் உடனே நம்மையறியாமல் இது உசத்தியா அது உசத்தியா என்று ஒப்பிட்டுப் பார்க்கிற எண்ணம் (Comparison) உண்டாகிவிடும். இது உண்டானால் அனர்த்தம்தான். எந்தக் காலில் விழுவது என்றே தெரியாது. அர்ச்சனை செய்யப்போனால் இவருக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்; அவளுக்கு இன்னொன்றால் பண்ண வேண்டும் என்கிறார்களே, இந்தப் பக்கத்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1