Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruvasagathil Magalir Aadal
Thiruvasagathil Magalir Aadal
Thiruvasagathil Magalir Aadal
Ebook269 pages1 hour

Thiruvasagathil Magalir Aadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘திருவாசகத்தில் மகளிர் ஆடல்’ என்பது இந்நூலின் தலைப்பு. மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ள விளையாடல்களையும் பக்தி நிலையையும் புராணச் செய்திகளையும், தத்துவக் கருத்துக்களையும், இலக்கிய நயங்களையும் ஆராய எழுந்த எண்ண வளர்ச்சியே இவ்வாய்வு நூலாகும்.

திருவாசகத்தில் திருவம்மானை, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல் ஆகிய ஏழு பதிகங்களும் ஆய்வுக்குரியவாக அமைகின்றன. திருவாசகத்தில் மகளிர் ஆடல் தலைப்பாக அமைவதால், இன்றைய காலகட்டத்தில் விளையாடல்களை மறந்து வரும் மக்களுக்கு நினைவுகூரும் வகையில் அவ்விளையாட்டுக்களை விளக்குவதே இந்நூலின் முதன்மை நோக்கமாகும்.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580156008627
Thiruvasagathil Magalir Aadal

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Thiruvasagathil Magalir Aadal

Related ebooks

Reviews for Thiruvasagathil Magalir Aadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruvasagathil Magalir Aadal - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருவாசகத்தில் மகளிர் ஆடல்

    Thiruvasagathil Magalir Aadal

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    நன்றியுரை

    சிறப்புரை

    முன்னுரை

    சுருக்கக் குறியீட்டு விளக்கம்

    இயல் ஒன்று

    மகளிர் விளையாடல் ஓர் அறிமுகம்

    இயல் இரண்டு

    மகளிர் விளையாட்டுப் பாடல்களின் அமைப்புமுறை

    இயல் மூன்று

    மகளிர் ஆடல்கள் உணர்த்தும் அரிய கருத்துக்கள்

    இயல் நான்கு

    மகளிர் ஆடல்கள் தரும் சித்தாந்த விளக்கம்

    இயல் ஐந்து

    இலக்கிய நலம்

    முடிவுரை

    மாணிக்கவாசகரது வரலாற்றை உரைக்கும் நூல்கள்

    மணிவாசகரின் (அகப்பொருள்) பக்திநிலை

    திருவாசகத்தில் மகளிர் ஆடல்

    அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (2003-2004ஆம் ஆண்டு தொலைத்தூரக் கல்வி இயக்கத்தின் மூலம் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டத்திற்காக அளிக்கப்பட்டு முதலிடம் பெற்ற ஆய்வுநூல்.

    சைவத் தமிழ் சிந்தையர்

    சிந்தாந்த ரத்தினம்

    படையல்
    C:\Users\asus\Desktop\Screenshot 2022-09-12 171008.png

    தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க

    வாசகனே ஆனந்த வடிவான மாதவனே

    மாசகன்ற நீ திருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்

    ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.

    - வள்ளலார்

    சிவநெறியே முத்திநெறி என்று உணர்த்தி, ஒன்றாய்; வேறாய்; உடனாய் இருந்து என்னை எழுதத்தூண்டிய சிவபரம் பொருளுக்கும் உறுதுணையாய் இருந்த மணிவாசகப் பெருந்தகைக்கும் என் அன்புப் படையல்.

    வாழ்த்துரை

    சுடர்மணிக் கவிஞர்

    வேம்பத்தூர் கிருஷ்ணனின்

    மணிவாசகரின் சீதனம்!

    அண்டசரா சரங்களையே உணர்த்துகின்ற

    ஆத்மார்த்த ஞானத்தை நமக்களிக்கும்

    பண்டுநான் மறைகளுக்கும் மூத்ததான

    பனுவலாம் மாணிக்க வாசகத்தின்

    திருவாச கத்துக்கு உருகா தார்கள்

    ஒருவாச கத்துக்கும் உருகார் என்று

    பெருவாச கம்ஒன்றே நாட்டில் உண்டு

    பிறவான் இறவான் சிவனே கைச்சாத்திட்ட

    காலத்தால் அழியாத வாசகத் தைக்

    கண்மணியாய் போற்றி அதை விளக்கு கின்ற

    சீலத்தை சைவ சித் தாந்தம் கற்றுச்

    சிந்தனையால் இரண்டறக் கலந்து பெற்ற

    திருவாச கத்திலே மகளிர் ஆடல்

    தெளிவான ஆய்வுநூல் செய்து தியானக்

    குருவாச கத்திற்குப் பெருமை சேர்க்கும்

    கோதையாம் திருமதி மஞ்சுளாவின்...

    இந்தநூல் சைவப் பேருல கத்திற்கே

    ஈடில்லா ஒளி மணியாய்ப் பிரகாசிக்கும்

    பந்த பாசம் எல்லாம் சிவமே என்னும்

    பாங்கிலே இல்லறப் புகழைக் காக்கும்

    சிவாயநம சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி

    செந்தமிழின் தனித்தேனாய் இனிக்கும் பக்தி

    மகாப்பெரிய சித்தாந்தம் பாமரர்க்கும்

    மனதிலே பதியுவண்ணம் எழுதியுள்ள...

    சித்தாந்த ரத்தினமாம் இடைமருதூரின்

    ஸ்ரீமதி மஞ்சளாவின் இந்த ஆய்வு

    எத்தனையோ ஆடல்களை விளையாட்டாக

    ஈசனருள் ஞானத்தை ஆரோக்யத்தைக்

    கற்பகமாய் மகளிருக்கு அருளும் பாங்கை

    காவியமாய்ப் பாடியே போற்றலாமே

    இப்பிறவிப் பயன்பெற்ற ஆய்வாளர்க்கு

    என்னிதய நல்வாழ்த்து, வெல்க வாழ்க...

    மாணிக்க வாசகரின் பரிபூர்ண ஆசி...

    மஞ்சுளா அம்மையார்க்கு நாளும் உண்டு

    ஆணுக்குப் பெண்அர்த்த நாரீஸ் வரமென

    அடையாளம் காட்டுகின்ற புதுமைப் பெண்ணாய்

    வாழ்வில் ஓர்லட்சியத்தால் சுழலும் ஞான

    வனிதையாம் மஞ்சுளாவின் மனோ பலத்தால்

    காலத்தை வெல்லும் சித் தாந்த ரத்னம்

    கலியுகத்துக் காரைக்கால் அம்மை தானோ!

    நாம் பாடும் நம்சமயப் பாட்டெல்லாம்

    நலம் தரும் சிவாகமத்தின் மந்த்ரமாகும்

    ஓம்நம சிவாய என்று சொல்லிப் பாரு

    உனக்கு இணை இவ்வுலகில் வேறு யாரு!

    என்று நமை ஊக்குவிக்கும் ஆய்வுநூலாம்

    இதற்கீடு நான் கண்டதில்லை வேறு

    மன்றிலாடும் எம்பெருமான் ஆய்வாளர்க்கு

    மகத்தான நல்வாழ்வை அருளவேண்டும்.

    பெண்மக்கள் ஆடுகின்ற விளையாட்டில் கூட

    பேரின்ப சித்தாந்தத் தத்துவம் யாவும்

    உண்டென்று ஆய்வினால் கண்டறிந்து

    ஊருக்கு வழங்கிடும் சித்தாந்த ரத்னம்

    மஞ்சுளா வைத்தனது அன்பு மகளாக

    மணிவாசகர் சுவாமி சுவீகாரம் செய்து

    கொஞ்சு தமிழால் இந்த நூல் செய்யும் அருளைக்

    கொடுத்ததால் தந்தைவழிச் சீதனம் இதுவே.

    நன்றியுரை

    பல்லாண்டுக் காலமாக மேன்மைகள் பல பொருந்திய தமிழ் அறிஞர்கள் பலரை உருவாக்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு ஆய்வு நிகழ்த்த அனுமதி அளித்த பல்கலைக்கழக மேலாண்மையினர்க்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்தலைப்பில் ஆய்வு செய்ய அனுமதி தந்த தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநருக்கும் தமிழியல் துறைத்தலைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாய்வேடு பலவகையிலும் சிறப்போடு விளங்க நன்முறையில் நெறிப்படுத்தியும், தேவையான நூல்களைத் தந்தும் உதவிய நெறியாளர் முனைவர். பெ. இலக்குமி நாராயணன் அவர்களுக்கும்; நூல்களை இன்முகத்துடன் தந்துதவிய மறைமலை அடிகள் நூலகத்தார்க்கும் இவ்வாய்வுக்குச் சிறந்த முறையில் ஓவியங்கள் வரைந்து தந்த என் இளைய சகோதரி திருமதி. கி. உமா (ஓவிய ஆசிரியை) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நல்ல முறையில் தட்டச்சு செய்து கொடுத்த திருமதி. க. ஷர்மிளாபாய் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிக் கவிமழை பொழிந்த திரு. வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்களுக்கும் சிறப்புரை வழங்கிச் சிறப்பித்த திருப்புகழ் அமுதனார் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் இவ்வாய்வேடு நன்முறையில் பிழை நீக்கம் செய்யப்பட்டு நூல் வடிவில் அச்சேருவதற்குக் காரணமான முனைவர் அ. நாகலிங்கம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாய்வேட்டை நூலாக வெளியிடுவதற்கு உதவித்தொகை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கி. மஞ்சுளா

    சிறப்புரை

    திருப்புகழ் அமுதனார், திருப்புகழ் அரசு, கற்பனைக் களஞ்சிய நம்பி, திருப்புகழ்த்தமிழ்க்கடல், அருள்நெறிக் காவலர், செஞ்சொற்புலவர், செந்தமிழ் மாமணி, செஞ்சொற்கொண்டல், சித்தாந்த சைவச் செம்மணி, முனைவர் சு. திருநாவுக்கரசு, எம்.ஏ., பிஎச்.டி., முதல்வர்

    ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம் - 604 304.

    திண்டிவனம் வட்டம். விழுப்புரம் மாவட்டம்.

    14.04.2006

    சித்தாந்த இரத்தினம். கி. மஞ்சுளா, எம்.ஏ., எம்.ஃபில்., அவர்கள் எழுதிய ‘திருவாசகத்தில் மகளிர் ஆடல்’ என்னும் பெயரில் வெளிவரவுள்ள நூலின் கணினி அச்சுப்படிவங்களைக் காணும் பேறு பெற்றேன்; அளவிடற்கரிய மகிழ்ச்சியுற்றேன்.

    இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்காக அளித்த இத்தலைப்பிலான ஆய்வேடு, பட்டத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, தற்பொழுது நூலாகவும் வெளிவரவிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

    சைவ சமய நெறியில் இடையீடு இல்லாத ஈடுபாடு கொண்டவர்களால்தாம் இத்தகைய ஞான நூல்களில் தோய்வும் ஆய்வும் மேற்கொள்ளவியலும். ‘திருவாசகத்தைத் தேன்’ என்று ஆன்றோர் உரைப்பர். ஆனால் திருவாசகமோ, சிவபெருமானை ஆனந்தத் தேனைச் சொரிபவன் என்று ஏத்தும். ‘ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாகிய தேனினைச் சொரிபவன் சிவபிரான்’ என்பது திருவாசகம்.

    தேனானது தானும் கெடாமல், தன்னைச் சேர்ந்த பொருளையும் கெடவிடாமல் காக்கும் இயல்பினது. அவ்வாறே ‘நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்பொழுதும் அனைத்து எலும்பும் உள்நெக ஆனந்தத்தேன் சொரியும் சிவபெருமானைப் பாடுபொருளாகக் கொண்டு, மாணிக்கவாசகர் அன்பினால் அகம்நெக உருகியும், சிவகுருவாக வந்து தம்மை ஆட்கொண்ட இறைவனையும், அவனுடன் வந்த சிவனடியார்களையும் பிரிந்த பிரிவினால் அல்லலுற்று அழுது தொழுது அரற்றியும் பாடிய பாடல்களே திருவாசகமாகும். இஞ்ஞான நூல் தன்னைச் சேர்ந்தோர்க்கு நலம் பயக்கும் தெய்வத்திரு நூல் என்பதால்தான் இறைவன் தன் திருக்கரங்களால் இந்நூலை எழுதிக் காட்டி மக்கட் பிறப்பினர்க்கு வழிகாட்டுகிறான்.

    சைவ சமய குரவர் நால்வர்தம் வாழ்வியலையும் வாக்கியலையும் அடிப்படையாகக் கொண்டு, தோத்திர சாத்திரக் கருத்துகளின் மாட்சிமை துலங்கும் வண்ணம் திறனாய்வு முறையில் அந்நால்வர் மீதும் முதன்முதல் துதி நூல் பாடிய பெருமை, மயிலம், பொம்மபுர ஆதீன அருட்சீடர் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகளுக்கு உண்டு. இறைவன், மாணிக்கவாசகர் பாடும் பணியைக் கூடும் பொருட்டும் அவர் தம்மைத் தொண்டனாக்கிக் கொள்ளும் பொருட்டும் மதுரை மாநகரில் குதிரை மாறியும், விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும் நீற்றெழில் மேனியில் மாற்றடிபட்டும் ஆடல் புரிந்ததாக சிவப்பிரகாசர், இறைவனின் நிகரற்ற கருணையையும், மாணிக்கவாசகரின் பெருமையையும் குறிப்பிடுகின்றார்.

    இவ்வாறு பாடப்பெற்ற திருவாசகம், பாடிய மாணிக்கவாசகர், பாடுபொருளாகிய சிவபெருமான் என்னும் முத்திறத்தாலும் பெருமைமிக்க திருவாசகத்தில் உள்ளத்தைத் தோயச் செய்து, ஆய்வு செய்து நூலாக வெளியிடும்பேறு இந்நூலாசிரியர்க்கு வாய்த்துள்ளமை முன்னைத்தவத்தின் பயனாகும். பொதுவாக மகளிர்க்கு விளையாட்டில் விருப்பம் மிகுதியுண்டு. யார் யார் எந்தெந்த வடிவத்தில் அமைத்து, எவ்வெப் பெயரிட்டு அழைத்து வழிபட்டாலும் அருளினை வாரி வழங்கும் உமையொரு பாகனைப் போல, திருவாசகமும் எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவர்களுக்கு இறையருளின்பத்தைக் கூட்டுவிக்கும் இயல்புடையது.

    அவ்வகையில் பெண்ணினத்துப் பெருவிளக்கெனத் திகழும் இந்நூலாசிரியர் ‘திருவாசகத்தில் மகளிர் ஆடல்’ என்னும் பொருண்மையில் ஆய்ந்திருப்பது போற்றத்தக்கது.

    இந்நூல் சிவபெருமானின் ஐம்முகம் போலவே ஐந்து இயல்களுடன் விளங்குகின்றது. மகளிர் விளையாடல் ஓர் அறிமுகம், மகளிர் விளையாட்டுப் பாடல்களின் அமைப்பு முறை, மகளிர் ஆடல்கள் உணர்த்தும் அரிய கருத்துகள், மகளிர் ஆடல்கள் தரும் சித்தாந்த விளக்கம், இலக்கிய நலம் என்னும் ஐந்து இயல்களும் ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பகுத்தும் வகுத்தும் ஆற்றொழுக்காகவும் சான்றோர்களின் கருத்துகளை மேற்கோள்களாகவும் கொண்டு அமைந்துள்ளன.

    வினையாட்டின் காரணமாக பிறவிபெற்று உழலும் மக்களுக்கு, மகளிர் விளையாட்டுகள் வாயிலாக, இறைவனின் அருள் விளையாட்டுகளைச் சுட்டிக்காட்டி உணர வைத்து உய்விக்கும் ஆற்றல் படைத்தது திருவாசகம் என்பதை இந்நூலால் உணர்ந்துகொள்ள இயலும்.

    இந்நூலின்கண் மகளிர்தம் எழுவகை விளையாட்டுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளையாடல் பற்றிய விளக்கங்கள் மிகச்சிறந்த தடைவிடைகளுடன் அறிஞர்களின் கருத்துக்களைச் சான்றுகளாகக் கொண்டு விளக்கப் பெற்றுள்ளன. ஆடல் பற்றிய பதிகங்களின் கருத்துகள் ஆய்வு முறையின் விளக்கியும் தொகுத்தும் தரப்பெற்றுள்ளன.

    நூலாசிரியரின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் தோத்திர சாத்திரக் கருத்துகள் வழியாக, இவ்வாடல்கள் பற்றி சித்தாந்தச் செந்நெறியில் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆடல்பற்றிய பதிகங்களின் யாப்பு வடிவங்கள், உள்ளடக்கமாக அமைந்த கருத்துகள், உணர்த்தக் கையாளும் உவமை முதலிய அணிகள், உணர்த்தப் பெறும் நீதிமொழிகள், அறிவுரைகள் முதலானவை குறித்த ஆய்வுகளும், முடிவுகளும் செம்மையாக அமைந்துள்ளன.

    ஆடல்கள் யாவும் உரிய படங்கள் வரையப் பெற்று விளக்கப் பெற்றறுள்ளமை இந்நூலின் தனிச் சிறப்பாகும். பின்னிணைப்பின் மாணிக்கவாசகர் வரலாற்றை உரைக்கும் நூல்கள் தரப்பட்டுள்ளன. இந்நூலில் தோய்வார்க்கும், ஆய்வார்க்கும் மேன்மேலும் ஆராய்ச்சியொளி பரவுவதற்கு இப்பகுதி பயன்படும். கடல்நீரின் தன்மையை அதன் ஒவ்வொரு துளியை ஆய்ந்தாலும் அறிந்து கொள்ளலாம். அதுபோல திருவாசகம் எளிய இனிய உருக்கம் நிறைந்த சொற்களாலும், சொற்றொடர்களாலும் அமைந்து, தன் ஈர்ப்புத் திறத்தால் பயிர்வோர்க்குத் தத்துவத்தை உணர வைத்து, அந்நெறியில் ஒழுக வைத்து பிறவிப் பெரும் பயனாகப் பேரின்பத்தையும் பிறவாப் பெருநிலையையும் அளிக்க வல்லதாகும். மேலும் அகப்பொருள் பக்திநிலை பிற்சேர்க்கையில் மிக சிறப்பாக அமைந்துள்ளது. வரகவி வேம்பத்தூர் கிருட்டினன் அவர்களின் வாழ்த்துக் கவிதை சிகரம் வைத்தது போல் இந்நூலுக்கு அமைந்துள்ளது.

    திருவிளக்கு இறைவனையும் காட்டுகிறது. தானும் இறைநிலையில் மக்களால் வழிபடப் பெறுகிறது. அவ்வாறே திருவாசகமும் இறைவனையே முன்னிறுத்திப் பாடப் பெற்றது. பயில்வோர்க்கு இறைவனாக அமைந்து நன்னெறி காட்டி நலம் பயப்பது. இந்நூல் போலும் நன்னூல்களைப் படிப்பதும், அந்நெறியின் ஒழுகுவதும், பன்னூல்களைப் படைப்பதும் மனிதப் பிறப்பினர்க்கு மாண்புறு செயல்களாகும். ஆன்ம ஈடேற்றம் என்னும் நோக்கத்தையும், அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி நின்று பக்தி நெறி காட்டிப் பழவினைகள் ஓட்டி, சித்தமலம் நீக்கிச் சிவமாக்கி ஆட்கொள்ளும் பயனையும் வழங்கும் திருவாசகத்தைப் பொருளுணர்ந்து ஓதி மெய்ப்பொருளைச் சார்வதற்கு இவ்வாய்வு நூல் வழிகாட்டுகின்றது.

    நிறைவாக தெய்வந்தெளித்தோராகவும், தெளிந்தவர்களைப் பேணுபவராகவும் அமைந்து சமயநெறி சார்ந்து சமுதாயத்திற்கு மெய்ஞ்ஞான ஒளி காட்டும் நூல்களைப் படைக்கும் இந்நூலாசிரியரும், அவர் தம் குடும்பத்தினரும், நூல்களைப் பயில்வாரும் ‘சகல செல்வ யோகமுற்ற பெருவாழ்வு பெறுவார்களாகுக’ என்று

    Enjoying the preview?
    Page 1 of 1