Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aravinda Amudham
Aravinda Amudham
Aravinda Amudham
Ebook194 pages1 hour

Aravinda Amudham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகான்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அசாதாரணத் துணிவு வேண்டும். அதுவும் அண்மையில் வாழ்ந்திருந்தவரைப் பற்றி எழுதுவதென்றால் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும்.
எங்கேனும் ஓரிடத்தில் இடறிவிட்டால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மகானின் சீடர்களிடமும் அன்பர்களிடமும் அகப்பட்டுக் கொள்ளும்படியாகி விடும்.
அதுவும் இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. ‘எனது வரலாற்றை உள்ளபடியே எழுத முடியாது’ என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு.
இந்தச் சரிதத்தை எழுதுவதற்கு இதன் ஆசிரியருக்கு வெறும் துணிச்சல் மட்டுமா இருந்தது? ‘ஸ்ரீ அரவிந்தர் என்ற தெய்வத்தை மன ஊஞ்சலில் வைத்து அசைத்து அசைத்து அழகு பார்க்கும்’ ஆசையல்லவா வந்திருக்கிறது?
அன்புள்ளத்திலிருந்து எழுந்த ஆசை அது. அந்த அன்பின் வலிமை தான் இந்த அரவிந்த அமுதத்திற்கு சுவை மட்டுமல்ல, கம்பீரமும் சேர்த்திருக்கிறது.
நல்ல தூரிகை போன்ற பேனாவை வைத்திருக்கிறார் இந்த திருப்பூர் கிருஷ்ணன். நாளைக்குப் படிக்கலாம் என்று இலேசாகப் பக்கங்களைத் திருப்பினால் இவர் சமைத்துள்ள தோரண வாயிலின் நடையிலேயே நம்மை நிற்க வைத்து விடுகிறது.
எந்த முக்கிய நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் கவனமாக, விழிப்புடன், பொறுப்புணர்ச்சியுடன், தக்க ஆதாரங்களுடன் ஒரு நல்ல நூலைப் படைத்துவிட்டார் இவர்.
படித்துக்கொண்டே போகும்போது நம்மை நிற்க வைக்கும் சில நறுக்குகள்:
எல்லோரும் இதைப் படிக்கவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்கள்தான் வருங்காலத்தின் பொறுப்பாளிகள். ஆன்மிக சாம்ராஜ்யத்தில் செங்கோலோச்சும் பேரரசரான ஸ்ரீ அரவிந்தரை’ அவர்களே சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது நல்ல குடிமக்களாக வாழவேண்டும்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580139006265
Aravinda Amudham

Read more from Dr. Thiruppur Krishnan

Related to Aravinda Amudham

Related ebooks

Reviews for Aravinda Amudham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aravinda Amudham - Dr. Thiruppur Krishnan

    http://www.pustaka.co.in

    அரவிந்த அமுதம்

    Aravinda Amudham

    Author:

    டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்

    Dr. Thiruppur Krishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/dr-thiruppur-krishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    சமர்ப்பணம்

    அம்மாவுக்கும் அப்பாவுக்கும்...

    திருமதி கே.ஜானகி, அமரர் பி.எஸ்.சுப்பிரமணியம்

    முன்னுரை

    கற்பனையல்ல, வரலாறு...

    ஸ்ரீ அரவிந்தரது திருச்சரிதம் கற்பனையல்ல, தெய்வமாய் உயர்ந்த ஒரு மகானின் தேதிவாரியாகப் பதிவாகியுள்ள உண்மை வரலாறு.

    கல்கியில் ‘அரவிந்த அமுதம்’ என்ற இத்தொடரை நான் எழுதிய காலங்கள் என் வாழ்வின் பாக்கியம் நிறைந்த காலங்கள். தொடர் எழுதுவதன் பொருட்டு அரவிந்த சிந்தனையில் தோய்ந்ததும் அந்த மகானின் எழுத்தையும் மகான் பற்றிய எழுத்தையும் கருத்தூன்றி வாசித்ததும் என் மனஉலகில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தின.

    இந்நூல் எழுதத் தேவையான பல குறிப்புகளைக் கொடுத்துதவியவர் சென்னை அரவிந்தர் சொஸைட்டி கிளையின் செயலாளரான ஆழ்வார்.

    நாரண துரைக்கண்ணன் எழுதிய அரவிந்தர் தொடர்பான நூல், சிறந்த எழுத்தாளரான சுப்ர பாலன் மூலம் கிடைத்தது.

    அரவிந்தர் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாங்கிய ஆங்கில நூல்களைத் தந்துதவியவர் இலக்கியச் சிந்தனை அமைப்பின் செயலாளரும் என் நீண்ட நாள் நண்பருமான பாரதி.

    கல்கியில் இத்தொடர் வெளிவரும் போது என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியவர்கள் என் பள்ளித் தோழர் கே. ரங்கராஜன் உள்ளிட்ட பல நண்பர்களும் ஏராளமான வாசகர்களும்.

    தன் பக்திபூர்வமான புள்ளிச் சித்திரங்களால் கல்கியின் அத்தியாயங்களுக்கும் இந்நூலின் அட்டைக்கும் எழில் சேர்த்தவர் ஓவியர் வேதா. கல்கியில் வெளிவந்த ஓவியங்களுக்கான பழைய ஆதாரப் புகைப்படங்களைத் தேடித் தந்து உதவியவர்கள் புதுவைப் பேராசிரியர் சி. சாயி வைத்யநாதன், சுதாகர் ஆகியோர். அனைவருக்கும் என் நன்றி.

    பாண்டிச்சேரிக்கு நேரில் சென்று பல இடங்களைப் பார்த்தும் பல பழைய புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டும் வேதா வரைந்த உயர்ந்த சித்திரங்களின் எழில் பூரணமாகத் துலங்கும் வகையில், கல்கி இதழ் பெரிய அளவில் அச்சித்திரங்களை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. மிகுந்த சிரத்தையோடு தொடரை வெளியிட்ட கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவிக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருமதி விஜயா சங்கரநாராயணன் அவர்கள் அரவிந்த தத்துவத்தில் மனம் தோய்ந்து வாழ்பவர். ஸ்ரீ அரவிந்தர் ஸ்தூல தேகத்தோடு வாழ்ந்த காலத்திலேயே அவரது தரிசனத்தால் பலமுறை அருள்கடாட்சம் பெற்றவர். ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் நேரடி ஆன்மிகக் கல்வி பெறும் பேறுபெற்றவர். அன்னையின் சீடரான அமரர் கபாலி சாஸ்திரியின் நேரடி சிஷ்யை. அவரது அணிந்துரை இந்நூலுக்குக் கிடைத்தது என் பாக்கியம்.

    இந்நூலை வாசிக்கும் அனைவருக்கும் எல்லா வகையான மங்கலங்களும் கிட்ட பகவான்ஸ்ரீ அரவிந்தரைப் பிரார்த்திக்கிறேன்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    அணிந்துரை

    இளைஞர்கள் படிக்க வேண்டிய நூல்...

    விஜயா சங்கரநாராயணன்

    மகான்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அசாதாரணத் துணிவு வேண்டும். அதுவும் அண்மையில் வாழ்ந்திருந்தவரைப் பற்றி எழுதுவதென்றால் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும்.

    எங்கேனும் ஓரிடத்தில் இடறிவிட்டால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மகானின் சீடர்களிடமும் அன்பர்களிடமும் அகப்பட்டுக் கொள்ளும்படியாகி விடும்.

    அதுவும் இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. ‘எனது வரலாற்றை உள்ளபடியே எழுத முடியாது’ என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு.

    இந்தச் சரிதத்தை எழுதுவதற்கு இதன் ஆசிரியருக்கு வெறும் துணிச்சல் மட்டுமா இருந்தது? ‘ஸ்ரீ அரவிந்தர் என்ற தெய்வத்தை மன ஊஞ்சலில் வைத்து அசைத்து அசைத்து அழகு பார்க்கும்’ ஆசையல்லவா வந்திருக்கிறது?

    அன்புள்ளத்திலிருந்து எழுந்த ஆசை அது. அந்த அன்பின் வலிமை தான் இந்த அரவிந்த அமுதத்திற்கு சுவை மட்டுமல்ல, கம்பீரமும் சேர்த்திருக்கிறது.

    நல்ல தூரிகை போன்ற பேனாவை வைத்திருக்கிறார் இந்த திருப்பூர் கிருஷ்ணன். நாளைக்குப் படிக்கலாம் என்று இலேசாகப் பக்கங்களைத் திருப்பினால் இவர் சமைத்துள்ள தோரண வாயிலின் நடையிலேயே நம்மை நிற்க வைத்து விடுகிறது.

    வரலாற்று நூலை எழுதும் போது கற்பனைக்குக் கடிவாளம் போடத்தான் வேண்டியிருக்கிறது. இதிகாச நாயகர்களை வர்ணிப்பதுபோல் வரலாற்று நாயகர்களை வர்ணிக்க முடியாது. எனினும் இந்த ஆசிரியரின் சொல்லாட்சி ரசம் குன்றாமல் கதையை நடத்திக்கொண்டு போகிறது.

    எந்த முக்கிய நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் கவனமாக, விழிப்புடன், பொறுப்புணர்ச்சியுடன், தக்க ஆதாரங்களுடன் ஒரு நல்ல நூலைப் படைத்துவிட்டார் இவர்.

    படித்துக்கொண்டே போகும்போது நம்மை நிற்க வைக்கும் சில நறுக்குகள்:

    வேத நெறி ஜாதி நெறியாய்க் கீழிறங்கியபோது...(!!!)

    சிறையில் ஏன் கண்ணன் பிறந்தான்? பின்னால் ஸ்ரீ அரவிந்தருக்குச் சிறையிலேயே காட்சிதர ஓர் ஒத்திகை போலவா?

    இன்று வீடு தரும் அருளாற்றல் உடையவராய்ப் பலரால் துதிக்கப்படும் ஸ்ரீ அரவிந்தர் வசிப்பதற்கு கொஞ்சகாலம் வீடு தந்த பாக்கியம் செட்டியாருடையது.

    இது வெறும் பொழுதுபோக்குப் புத்தகமல்ல. ‘இப்படியும் ஒரு மகான் இருந்தார், இன்னமும் இருக்கிறார்’ என்பதைத் தமிழுலகிற்குச் சொல்லும் புனிதச் செய்தி இது.

    எல்லோரும் இதைப் படிக்கவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்கள்தான் வருங்காலத்தின் பொறுப்பாளிகள். ஆன்மிக சாம்ராஜ்யத்தில் செங்கோலோச்சும் பேரரசரான ஸ்ரீ அரவிந்தரை’ அவர்களே சிம்மாசனத்தில் அமர்த்தி அவரது நல்ல குடிமக்களாக வாழவேண்டும்.

    வருங்கால இந்தியாவை அல்ல, வருங்கால உலகத்தை, வருங்கால மனித குலத்தை தெய்வ சாம்ராஜ்யமாக ஆக்கும் ஸ்ரீ அரவிந்தரின் பெரும்பணியில் அவர்களே ஒத்துழைக்க வேண்டும்.

    1

    சிறைக் காவலாளிகள், மேலதிகாரியாகிய ஆங்கிலேயரிடம் போய் என் பொருட்டு மன்றாடினார்கள். அரவிந்தபாபுவை வெளியே சில சமயம் நடந்து வரும்படிக்கேனும் செய்யலாகாதா என்று கேட்டார்கள். அவனும் இணங்கிவிட்டான். அந்த ஏற்பாட்டின்படி நான் வெளியே சுற்றி வர இடமுண்டாயிற்று. அப்போது ஈசனுடைய வலிமை என்னுள்ளே புகுந்தது. நான் எங்கும் வாசுதேவனைக் கண்டேன். ஒரு மரத்தடியே நடந்து சென்றேன். அங்கே வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணன் நின்று எனக்கு நிழல் கொடுக்கக் கண்டேன். எனது சிறையின் கதவைப் பார்த்தேன். அதிலும் வாசுதேவனைக் கண்டேன். நாராயணனைக் கண்டேன். நான் படுத்திருக்கும் போது நாராயணன் என்னைத் தனது கைகளால் ஆதரித்துக் காத்தான். அவனது புயங்களினிடையே நானிருப்பது கண்டேன். எனது தந்தை, எனது காந்தன், என்னைத் தன் கையால் கட்டிக் காப்பதைத் தெரிந்துகொண்டேன். சிறையிலிருந்த கைதிகளையெல்லாம் பார்த்தேன். அவர்களெல்லாம் நாராயணனே என்பது கண்டேன். திருடர்கள், கொலையாளிகள், மோசக்காரர்கள் எல்லோரும் வாசுதேவனே...இன்னுமொரு விஷயம் பார்த்தேன்.

    எழுதப் படிக்கத் தெரியாத நம்மவனாகிய ஒரு கிராமவாசி அங்கே இருந்தான். நாம் சாதாரணமாக அவன் போன்ற ஜனங்களைக் கீழ்க் குலத்தாரென்று சொல்கிறோம். அந்த மனிதன் ஒரு ரிஷியாக இருப்பதைக் கண்டேன்.

    (கல்கத்தா உத்தர்பாரா தர்ம ரட்சணி சபை இரண்டாம் ஆண்டு விழாவில் அரவிந்தர் செய்த சொற்பொழிவிலிருந்து: ‘அரவிந்தர் மகிமை’ ஆய்வுத் தொகுப்பு: சீனி விசுவநாதன்.)

    ***

    தோரண வாயில்

    உலகிற்கு இந்தியா அளித்த ஞானியரின் பெயர்ப் பட்டியல்தான் எவ்வளவு நீண்டது! பாரதமே உலகின் பூஜையறை என்று விவேகானந்தர் சொன்னது மெய்யல்லவா!

    தொகுதி பார்த்து, ஜாதி பார்த்து கட்சிகள் நிறுத்தும் தேர்தல் காலத் தற்காலிக வேட்பாளர் பட்டியல் போன்றதல்ல இது! நேரம் பார்த்து காலம் பார்த்து இயற்கை அன்னை சமுதாயத்தின் தேவை கருதிப் படைத்த நிரந்தர அருளாளர் பட்டியல் இது.

    ராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார், ஷீர்டி சாயிபாபா, ராகவேந்திரர், ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பரமாச்சாரியார் என அண்மைக் காலத்தில் வாழ்ந்த இத்தகைய உண்மை ஞானிகளின் நாமம் சொன்னாலே நம் நா மணக்கும். மனம் தேனாய்த் தித்திக்கும். கவலைச் சுமையால் கனத்துப் போயிருக்கும் மக்களின் இதயங்கள் துன்பச் சுமை நீங்கி இலவம் பஞ்சுபோல் இலேசாகும்.

    மனச்சுமைகளைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வாழ்க்கைப் பாதையில் சோர்வுற்றும் நொந்தும் தொடர்ந்து வழிநடக்கும் எளிய மக்கள், இந்த அடியவர்களின் கோட்பாடுகள் என்னும் சுமைதாங்கிக் கல்லில் தானே தங்கள் நெஞ்சச் சுமையைச் சற்று நேரம் இறக்கி வைத்துக் கொஞ்சம் இளைப்பாறுகிறார்கள்!

    இந்த அருளாளர்களின் பாதாரவிந்தங்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு தானே இந்த எளிய மக்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைகிறார்கள்!

    வெய்யில் காலத்தில் மனிதனின் உடலுக்குக் குளுமை தரும் எலுமிச்சையும் தர்ப்பூசணியும் ஏராளமாய் விளைகின்றன. அதனாலேயே இவைகள் மலிவாய்க் கிடைக்கின்றன. ஏழைகளும் தங்கள் உடல் வெம்மையைத் தணித்துக்கொள்ளத் தங்கள் பொருளாதாரத்திற்கு உள்பட்டே இவற்றை வாங்கிச் சாப்பிட்டுப் பயனடைய முடிகிறது. இயற்கை அன்னையின் கங்குகரை அற்ற கருணை வெள்ளத்தின் அன்புப் பெருக்கை மனிதனால் அவ்வளவு எளிதாக அளவிட்டு விட முடியுமா! தேவைப்படும் காலத்தில் தேவைக்கேற்ப வாரி வாரி வழங்குவதில் அவளுக்கு நிகர் அவள் தானே!

    மனிதனின் உடல் நலத்தில் மட்டும்தானா இயற்கை அன்னைக்கு இத்தனை அக்கறை! மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த மனநலத்தைப் பற்றியும் அன்னைக்கு அக்கறை இருக்காதா!

    அதனால் தான் காலந்தோறும் காலந்தோறும் அவள் பல மகான்களைப் படைத்தளிக்கிறாள். அந்தந்தக் காலத்தின் போக்குக்கும் சூழலுக்கும் ஏற்ப மகான்கள் அறவுரைகளை வழங்கி அருள்பாலிக்கிறார்கள்.

    வேதநெறி ஜாதி நெறியாய்க் கீழிறங்கிய போது ஆதிசங்கரர் அவதரிக்கிறார். நான்கு வேதங்களையே நாய்களாகக்கொண்டு சிவபிரான்

    Enjoying the preview?
    Page 1 of 1