Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indha Nool Vaangalam - Part 1 & 2
Indha Nool Vaangalam - Part 1 & 2
Indha Nool Vaangalam - Part 1 & 2
Ebook418 pages2 hours

Indha Nool Vaangalam - Part 1 & 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த புத்தகம் எண்ணற்ற எழுத்தாளர்களின் சிந்தனைகளின் தொகுப்பாகும். இதில் நான் தொகுத்துள்ள அனைத்து புத்தகங்களும் வாசிக்கும் போது நம் எண்ணங்கள் மேன்மையடைவதையும், அறியாமை இருள் அகல்வதையும், மனிதத்தை நேசிக்கும் தன்மை வளர்வதையும் காணலாம். மனிதர்களும் வாழ்க்கையும் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்துள்ளனர். அதற்கு நிகரான அனுபவங்களை புத்தகங்களும் எனக்கு தந்துள்ளது. அதுவே வழிகாட்டியாகவும் நிறைய நேரங்களில் இருந்துள்ளது. நான் வாசித்த நூல்களை எனது பார்வையில் விமர்சனங்களாக தந்துள்ளேன். இந்நூல்கள் என்னை வசப்படுத்தியதை போல் உங்களையும் வசப்படுத்தும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580178210989
Indha Nool Vaangalam - Part 1 & 2

Related to Indha Nool Vaangalam - Part 1 & 2

Related ebooks

Reviews for Indha Nool Vaangalam - Part 1 & 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indha Nool Vaangalam - Part 1 & 2 - P. Sarojini Kanagasabai

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்த நூல் வாங்கலாம் - பாகம் 1 & 2

    Indha Nool Vaangalam - Part 1 & 2

    Author:

    ப. சரோஜினி கனகசபை

    P. Sarojini Kanagasabai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sarojini-kanagasabai

    பொருளடக்கம்

    முன்னுரை

    பாகம் - 1

    1. ராஜபேரிகை - சாண்டில்யன்

    2. சந்திரமதி – சாண்டில்யன்

    3. எங் கதெ - இமையம்

    4. செடல் – இமையம்

    5. மண்பாரம் – இமையம்

    6. தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து

    7. வில்லோடு வா நிலவே - கவிஞர் வைரமுத்து

    8. ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - கவிஞர் வைரமுத்து

    9. பாரீஸுக்கு போ - ஜெயகாந்தன்

    10. யுக சந்தி – ஜெயகாந்தன்

    11. யாருக்காக அழுதான்? - ஜெயகாந்தன்

    12. ஏழாவது அறிவு – வெ. இறையன்பு

    13. கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது - எஸ் ராமகிருஷ்ணன்

    14. பகலின் சிறகுகள் – எஸ். ராமகிருஷ்ணன்

    15. புத்தனாவது சுலபம் – எஸ் ராமகிருஷ்ணன்

    16. காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ் ராமகிருஷ்ணன்

    17. காஞ்சனை - புதுமைப்பித்தன்

    18. குறிஞ்சி மலர்- நா. பார்த்தசாரதி

    19. சித்திரப்பாவை - அகிலன்

    20. பால்மர காட்டினிலே - அகிலன்

    21. 16 வயதினிலே (பதின்பருவ வலிகளும், வழிகளும்) - ரமாதேவி ரத்தினசாமி

    22. குகை – ஜெயமோகன்

    23. எப்போதும் பெண் - சுஜாதா

    24. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

    25. முள்முடி - தி. ஜானகிராமன்

    26. கங்கணம் - K பெருமாள் முருகன்

    27. தீர்க்கதரிசி - கலீல் ஜிப்ரான் - தமிழில் கவிஞர் புவியரசு

    28. உலக பெண் விஞ்ஞானிகள்- ஆயிஷா இரா. நடராசன்

    29. கி.மு.கி.பி. – மதன்

    30. அந்தபுரத்தில் ஒரு நந்தவனம் – G. சியாமளா கோபு

    31. வீரயுக நாயகன் வேள்பாரி எழுத்தாளர் - சு. வெங்கடேசன்

    32. நாளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன்

    33. முற்றுப்பெறாத மனு - நெய்வேலி பாரதிக்குமார்

    34. உயரப்பறத்தல் - வண்ணதாசன்

    35. எஸ்தர்  - வண்ணநிலவன்

    36. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

    37. பூக்குழி - பெருமாள் முருகன்

    38. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்

    39. மோகமுள் - தி. ஜானகிராமன்

    40. அபிதா - லா.ச. ராமாமிர்தம்

    பாகம் - 2

    41. மூன்றாம் உலகப் போர் - கவிஞர் வைரமுத்து

    42. கருவாச்சி காவியம் - கவிஞர் வைரமுத்து

    43. தீண்டும் இன்பம் – சுஜாதா

    44. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

    45. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஜெயகாந்தன்

    46. உன்னைப்போல் ஒருவன் - ஜெயகாந்தன்

    47. வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு

    48. பிரிவோம் சந்திப்போம் – சுஜாதா

    49. உறவுகள்  - டாக்டர் ருத்ரன்

    50. துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்

    51. ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை – எஸ். ராமகிருஷ்ணன்

    52. குறத்தி முடுக்கின் கனவுகள் - எஸ். ராமகிருஷ்ணன்

    53. பெண் – அகிலன்

    54. சடாகோவின் கொக்கு - எலினார் கோர் - தமிழில். - ஆதிவள்ளியப்பன்

    55. ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு - ஜெயமோகன்

    56. வெள்ளை யானை – ஜெயமோகன்

    57. யானை டாக்டர் - ஜெயமோகன்

    58. மகாநதி - பிரபஞ்சன்

    59. வணங்கான் – ஜெயமோகன்

    60. ஒரு சிறு இசை - வண்ணதாசன்

    61. புளியந்தளிர் - சிவசங்கரி

    62. அப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்

    63. மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன்

    64. வந்தார்கள் வென்றார்கள் - மதன்

    65. கருக்கு - பாமா

    66. மனுஷி - பாமா

    67. தலையணை பூக்கள்  - பாலகுமாரன்

    68. ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் – ஜெயகாந்தன்

    69. தாயுமானவன் – பாலகுமாரன்

    70. உடையார் பாகம் – பாலகுமாரன்

    71. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

    72. சதுரங்கக் குதிரை - நாஞ்சில் நாடன்

    73. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

    74. சிறகொடிந்த வலசை - புதிய மாதவி

    75. பச்சைக் குதிரை - புதியமாதவி

    76. ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா

    77. என் கதை - கமலா தாஸ் மொழிபெயர்ப்பு: நிர்மால்யா

    78. அனந்தியின் டயறி - பொ. கருணாகரமூர்த்தி

    79. மா-னீ - ஹெப்ஸிபா ஜேசுதாசன்

    80. புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன்

    சமர்ப்பணம்

    என்னுள் என்றும் நீக்கமற

    அழியா நினைவுகளாய்

    நிறைந்து நிற்கும்

    அன்பின் முழு முதல் பரிமாணம்

    நான் பார்த்த மிகச் சிறந்த ஆளுமை

    என்றும் என்னை வழிநடத்தும்

    மறைந்த என் அம்மாவிற்கு...

    நன்றி

    வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுவில் தொடர்ந்து பதிவுகள் எழுத ஊக்கப்படுத்திய வாசகர்கள் மற்றும் குழுவின் தலைவர் தோழர் மந்திர மூர்த்தி அவர்களுக்கும் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    இந்த நூலை எழுதுவதற்கு என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்த என்னுடைய கணவர் திரு கனகசபை அவர்கள் மற்றும் மகன் திரு. ஜீவ ஆதித்யன் ஆகியோருக்கும்,

    கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக என்னை நூல் எழுத தொடர்ந்து வற்புறுத்தி வந்த வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவின் மூலம் எனக்கு கிடைத்த மிகவும் அருமையான என்னுடைய தோழி திருமதி சியாமளா கோபு அவர்களுக்கும்,

    மற்றும் மத்யமர் முகநூல் குழுவின் மூலம் கிடைத்த அருமையான சகோதரர்கள் திரு மகாதேவன் மற்றும் திரு தமிழ்ச்செல்வன் ரத்தினபாண்டியன் அவர்களுக்கும்,

    மேலும் இந்நூல் வெளிவர உதவிய புஸ்தகா பப்ளிகேஷன்ஸ் இயக்குனர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்

    திருமதி சரோஜினி கனகசபை

    முன்னுரை

    அன்புடையீர்,

    வணக்கம்.

    இந்த புத்தகம் எண்ணற்ற எழுத்தாளர்களின் சிந்தனைகளின் தொகுப்பாகும். இதில் நான் தொகுத்துள்ள அனைத்து புத்தகங்களும் வாசிக்கும் போது நம் எண்ணங்கள் மேன்மையடைவதையும், அறியாமை இருள் அகல்வதையும், மனிதத்தை நேசிக்கும் தன்மை வளர்வதையும் காணலாம்.

    சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல வாசிப்பும் ஒரு பழக்கம் தான். ஒருமுறை நாம் வாசிப்பின் சுவையை உணர்ந்து விட்டால் அது நம்மை விடாது. முதலில் நான் படித்த தாய் எனும் நூல் சமூக புரட்சியில் ஒரு தாயின் பங்கு மற்றும் கஷ்டங்களை எதிர்த்து போராடும் அவளுடைய துணிவு குறித்தும், உழைக்கும் மக்கள் மீதான முதலாளித்துவ சுரண்டல்களை அறிந்து கொள்ள விளக்கியது.

    பின்னர் நான் படித்த பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் என் ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இவர்களது கதைகளில் மனிதர்களின் மனங்களும் அவர்களுக்கு எங்கோ ஏற்பட்ட காயங்களும் வேதனைகளும் அதற்கான மருந்துகளும் இருந்தன. இவர்களுடைய எழுத்துக்குள்ளே இருந்ததெல்லாம் வாழ்வு குறித்த கனிவும் பெருங்கருணையும தான்.

    தெளிவான பெண்ணிய சிந்தனைகளை தன் உயிரோட்டமான படைப்புகளின் வாயிலாக பல எழுத்தாளர்கள் எடுத்தியம்பியுள்ளனர். மாமன்னர்களின் வரலாற்று காவியங்களில் நம் மனம் மூழ்கி அந்த காலகட்டத்தில் நாமும் வாழ்வது போன்ற பிரமிப்பை பல நூல்களும் ஏற்படுத்தின.

    வட்டார வழக்கு மொழியில் தான் வாழ்ந்த ஊரின் கதையை மையமாக வைத்து எழுதிய கதைகளை வாசிக்கும் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை நம்மால் அறிந்து கொள்ள முடி ந்துள்ளது.

    குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கும்? அவர்களின் சிந்தனை மற்றும் செயல்களை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும், பதின்பருவ பிரச்சினைகளை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் எதார்த்தமான எழுத்து நடையில் எடுத்தியம்பியுள்ளனர்.

    மனிதர்களும் வாழ்க்கையும் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்துள்ளனர். அதற்கு நிகரான அனுபவங்களை புத்தகங்களும் எனக்கு தந்துள்ளது. அதுவே வழிகாட்டியாகவும் நிறைய நேரங்களில் இருந்துள்ளது.

    இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். தொடர்ந்து படித்துக் கொண்டும் இருக்கிறேன்.

    நான் வாசித்த நூல்களை எனது பார்வையில் விமர்சனங்களாக தந்துள்ளேன். இந்நூல்கள் என்னை வசப்படுத்தியதை போல் உங்களையும் வசப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    வாழ்த்துக்கள்!!

    அன்புடன்

    திருமதி சரோஜினி கனகசபை

    பாகம் - 1

    1. ராஜபேரிகை - சாண்டில்யன்

    1978 -ம் ஆண்டு வெளியானது இந்நூல். குமுதத்தில் இரண்டு வருடங்களாக தொடர்கதையாக வந்த இந்த நாவல் வானதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவல் ‘ வங்க தேசத்து பாரதீய பாஷா பரிஷத்தின் விசேஷ விருது பெற்றதாகும்.

    மன்னர்களின் ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை முறை, கலைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் அரசியல் மாறுதல்கள், போர் முறைகள் என பல சரித்திர பதிவுகளை நமக்கு அள்ளித் தருகிறது. வீரம், காதல், துரோகம் என அனைத்து உணர்வுகளையும்., மிகச் சுவையான திருப்பங்களையும் கொண்டது இந்நூல

    பல மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும், ராணா பிரதாப் சிங், சிவாஜி போன்ற சிறந்த வீரர்களையும் பெற்ற இந்த புண்ணிய பூமி, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது? வியாபாரியாக வந்த சிறு கூட்டத்தினரால் எப்படி பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது என்ற கேள்விகளுக்கு பதில் தான் ராஜபேரிகை.

    இக்கதையில் நிகழும் சம்பவங்கள் சென்னை, காஞ்சி, ஆற்காடு, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சை என நம்மைச் சுற்றியே நடந்திருக்கிறது.

    இக்கதை ஸ்ரீரங்கம் அரங்கனின் கோவிலில் ஆரம்பிக்கிறது. தஞ்சையையும், திருச்சியையும் சுற்றி வருகிறது. இக்கதையின் நாயகன் விஜய குமாரன் ஒரு நோக்கத்துடன் (தனது தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு) தஞ்சை மன்னர் ராஜா பிரதாப்சிங்குடன் சேருகிறான். மன்னனின் ‘வாள் மகள்’ என அழைக்கப்படும் நந்தினியின் காதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிறான்.

    ஆங்கில வீரன் ராபர்ட் கிளைவ்யின் நட்பும் கிடைக்கிறது. ஆங்கிலேயர் காலூன்ற போராடும் அதேநேரம், பிரெஞ்சு ஆதிக்கமும் கவர்னர் டுப்ளே தலைமையில் வேரூன்ற போராடுகிறது. வியாபாரத்திற்கு சரக்கு கொண்டு செல்வதாக வரும் கிளைவ் படிப்படியாக தன் வீர சாகசங்களால் முன்னேறி கேப்டனின் வலதுகரமாகிறான்.

    ஆற்காடு நவாப் சந்தா சாஹிப், ராணி மீனாட்சியின் மரணம், அவள் வளர்ப்பு மகன் கதையின் நாயகன் விஜயகுமாரின் சபதம் என பல கதைகள்... இறுதியில் யாருடன் விஜயகுமார் இணைகிறான். அவன் சபதம் என்ன... அது யார் உதவியால் எவ்வாறு நிறைவேறுகின்றது...என்பதை கதை விறுவிறுப்பாக விளக்குகிறது.

    வியாபார நோக்கத்தோடு வந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், நம்மை அடிமைப்படுத்தியதுடன், நம் கலைச் செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த விஷயமே என்றாலும்...மேலும் சில ஆச்சரியப்படத்தக்க விபரங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

    ராபர்ட் கிளைவ் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு தமிழ் பேசியுள்ளார் என்பது வியப்பிற்குரியது. காஞ்சி வரதராஜனின் மகரகண்டிகையை கைப்பற்றும் கிளைவ், தான் வெற்றி பெற்ற பிறகு தன் வெற்றிக்கு அந்த கடவுளே காரணம் என்பதை உணர்ந்து அந்த மகர கண்டிகையை வரதராஜனுகே காணிக்கையாக்குகிறான்.

    நம் தாய்மொழியும், நம் கலாச்சாரமும், அந்நியரையும் கவர்ந்துள்ளது என்பதற்கு சான்றாக இதைப் பார்க்கிறேன்.

    கிளைவ்- விஜயகுமார் இருவரின் நாடுகளை தாண்டிய நட்பு வீரத்திற்கு வீரம் என்றுமே தலை வணங்கும் என்பதற்கு சாட்சி. அந்நிய மண்ணிலும் நேர்மை நியாயம் உண்டு... சொந்த மண்ணிலும் துரோகம், வஞ்சனை உண்டு எனும் கசப்பான உணர்வுகளை பிரதிபலிக்கும் சில கதாபாத்திரங்கள். குறுக்கு வழியில் ஆற்காட்டு நவாப்பான சந்தாசாகிப், தன் எதிரிகளை முறியடிக்க பிரெஞ்சு காலனியோடு கைகோர்க்க, தஞ்சை ராஜா பிரதாப்சிங்கும், ஆற்காட்டை அடைய நினைக்கும் மற்றொரு நவாப்பான முகமது அலியும், வேறு வழியின்றி பிரிட்டிஷ் படையில் அடிப்படை படைவீரனாக இருந்து படிப்படியாக படைத்தலைவராக உயரும் ராபர்ட் கிளைவோடு கூட்டு சேர்கிறார்கள்.

    பகையாளிகளுக்கு உதவுவது போல எதிரெதிர் அணியில் பிரெஞ்சும், பிரிட்டிசும் நிற்க, உண்மையான போர் என்பது அவ்விரு நாடுகளுக்கிடையிலேயே நிகழ்கின்றது. இறுதியில் ராபர்ட் கிளைவ் மூலம் பிரிட்டிஷ் வெற்றி பெற்று தன்னை இந்தியாவில் நிலைநிறுத்துகின்றது.

    பல்வேறு ஆங்கில, தமிழ் வரலாற்று குறிப்புகளையும், புத்தகங்களையும் ஆராய்ச்சி செய்து இதனை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அதற்கேற்றவாறு தேவையான குறிப்பு புத்தகங்களின் பட்டியலையும் ஆங்காங்கு இணைத்துள்ளவர், முக்கிய போர்களையும் நிகழ்வுகளையும் தேதி மற்றும் ஆண்டோடு திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

    இத்தனையும் தெளிவாக முன்வைத்தவர் இறுதியில் விஜயகுமாரின் வளர்ப்புத் தாய் இறப்பிற்கு பிறகும் ஆவியாக இருப்பதாகவும் பிரிட்டிஷ் படைக்கு உதவி செய்வதாகவும் எழுதியிருப்பது சற்று நெருடலாய் தோன்றுகின்றது.

    மிகுந்த வலிமையும், புத்திக் கூர்மையும் பெற்ற அரசர்களும், வீரர்களும் எண்ணற்றவர்கள் இருந்த பாரதம்... தாயாதி சண்டைகளிலும், இந்து முஸ்லீம் மதப் பிரிவினைகளினாலும் பிளவுபட்டு கிடந்த காரணத்தால் வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷிடம் அடிமைப்பட்டு போனதை அழுத்தமாக பேசுகின்றது ராஜபேரிகை

    மொத்தத்தில் இந்நூல் வாயிலாக நாம் தெரிந்து கொள்வது நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டதற்கு முக்கிய காரணம் சிற்றரசர்களிடையே இருந்த ஒற்றுமையின்மையும், சுயலாபத்திற்காக அந்நியருடன் சேர்ந்து கொண்டு நம்மை காட்டிக்கொடுத்த துரோகிகளுமே.

    2. சந்திரமதி – சாண்டில்யன்

    சாண்டில்யன் தமிழில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட சாகச நாவல்களை எழுதிய எழுத்தாளர். வால்டர் ஸ்காட், சார்லஸ் கிங்ஸ்லி ஆகியோருடைய தாக்கத்துடன் அரண்மனைச் சதிகளும், கடற்பயண விவரணைகளும் கொண்ட நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் தொடராக வெளிவந்த இவருடைய நாவல்கள் பெரும் புகழ் பெற்றவை.

    சாண்டில்யனின் நாவல்கள் அனைத்துமே சாகசத்தன்மை கொண்டவை. இளைஞனாகிய கதைநாயகன் பல்வேறு இடர்கள் வழியாக சென்று வெற்றி பெறுகிறான். கதைமாந்தரின் உருவாக்கத்தில் கற்பனாவாத மிகை உண்டு. பொதுவாகச் சாண்டில்யனின் கதைமாந்தர்களில் எதிர்மறைத் தன்மை கொண்டவர்கள் இல்லை. சரித்திர நாயகர்கள் அனைவரையுமே மாமனிதர்களாகக் காட்டுவது அவருடைய இயல்பு. வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது இதனை இவரது நாவலெங்கும் காணலாம்.

    இனி கதைக்கு வருவோம்.சந்திரமதி என்ற சிறு நாவல் மேவார் ராணா அமரசிம்மன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது.

    மொகலாய ஆட்சியை எதிர்த்து அக்பருடன் போரிட்ட மேவார் அரசன் ராணா பிரதாப சிம்மன் 25 ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர் வெற்றி பெறுகிறான். தன்னைப்போல் போரிட்டு நாட்டை காப்பாற்றுவதற்கு தனது வாரிசுகள் முயல மாட்டார்கள், தனக்கு பின்னால் மேவாரின் சுதந்திரம் பறி போய்விடும் என்று திடமாக நம்பினான். இறக்கும் தருவாயில் தனது படைத் தலைவர்களிடம், சுகத்திற்காக, இன்பத்திற்காக, சுதந்திரத்தை இழக்க மாட்டோம், என்று சத்தியமும் வாங்கிக் கொண்டான். ராணாவின் மறைவிற்குப் பின் அவரது மகன் அமரசிம்மன் பதவி ஏற்றுக் கொண்டதும் உதயப்பூர் ஏரி கரையில் சலவைக்கல் அரண்மனை ஒன்றை கட்டினான். பிரிட்டிஷ் வியாபாரியிடம் இருந்து ஒரு பிரம்மாண்டமான கண்ணாடியை வாங்கி தனது தர்பார் மண்டபத்தை அலங்கரித்தான். நாட்டு மக்களின் நலன் மறந்து சுகபோக வாழ்க்கையில் மூழ்கிப் போனான்.

    இந்த நிலையைத் மாற்ற, சலூம்ப்ரா வம்சத்தைச் சேர்ந்த சந்தசிம்மன், ராணாவின் மகன் அமரசிம்மன் சுகபோகத்தில் திளைத்து இருப்பதை விரும்பாமல், மொகலாயர்களை எதிர்த்து போராட ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சந்திரமதியை அமரசிம்மனுக்குக் திருமணம் செய்து வைத்தால், வீரத்தில் திளைத்த அப்பெண்ணால் மேவார் வம்சத்தின் ஆட்சி சிறக்கும் என்ற எண்ணத்தில்,

    தனது மகன் சத்ருஞ்சயனை அழைத்து ஒண்டாலா என்ற பட்டணம் சென்று கோட்டைக்குள் புகுந்து மல்லிநாதர் என்ற போர் ஆசானை சந்தித்து சந்ரமதியை தூக்கி வந்துவிடு அவளை ராணாவுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். சத்ருஞ்சயன் சந்திரமதியை சிறையெடுத்து வந்தானா? அமரசிம்மன் மணம் முடித்தானா? என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 108 பக்கங்களைக் கொண்ட சிறிய நாவல்தான். விறுவிறுப்பாக செல்கிறது. படியுங்கள்.

    3. எங் கதெ - இமையம்

    திருமண உறவில் இல்லாத ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் வாழ்க்கையின் ஆசை, வலி, கோபம், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என்று அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு ஆணின் பார்வையிலிருந்து சொல்லி உள்ளார். உரிமையில்லா உறவின் போராட்டத்தை வரம்பு மீறிய வாழ்க்கையின் எண்ண ஓட்டத்தையும், சமூகம் அங்கீகரிக்க தயங்கும் வாழ்க்கை முறையையும் மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறார்.

    தினமும் செய்தித்தாளைத் திறந்தால் குறைந்தது ஒரு செய்தியாவது இது மாதிரியான உறவுச்சிக்கல்களையும் அதைத் தொடர்ந்தான கொலைகளைப் பற்றியும் வருவது சாதாரணமாகி விட்டது. பெற்ற குழந்தைகளைக் கொல்லும் கொடுரங்கள்கூட நடந்துகொண்டேதான் இருக்கிறது. எந்த ஒரு ஈர்ப்பு அவர்களை இந்த எல்லைக்குத் தள்ளுகிறது என்பதற்கு விடையேயில்லை.

    எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ள கூடிய ஒரு பெண. எமோஷனலா வாழக்கூடிய ஒரு ஆண். இவர்கள் இருவரின் தவறான உறவை விளக்கும் கதை இது. காதல் மட்டுமே உலகம் என தனக்கான கடமைகளை தவறவிட்டு பின் அதற்காக வருந்தும் இக்கதையின் ஆண் கதாபாத்திரம்…

    உரிமை இல்லாத உறவு என்னென்ன பிரச்சனைகளை உண்டாக்கும், எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும், அவர்களின்மீது சமூகத்தின் பார்வை எப்படி இருக்கும் என்பதே கதையின் கரு.

    33 வயதாகியும் திருமணமாகாத ஒரு படித்த இளைஞன், கிராமத்தில் எந்தவித வேலையும் செய்யாமல் வீட்டிலேயே பொழுதை கழிக்கிறான். அவனது அப்பாவும் அம்மாவும் தோட்டவேலை மற்றும் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.

    இவனுக்கு கீழ் மூன்று தங்கைகள். எவ்வித வேலையும் இவனை செய்யவிடாமல், அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து இவனை ராஜா போல் பார்த்துக் கொள்கிறார்கள். கதை நாயகன் ஒரு நாள் தனது தம்பியின் (சித்தப்பா மகன்) டெலிபோன் கடையில் அமர்ந்திருந்த போது எதிரில் ஒரு வீட்டிற்கு கமலா என்னும் பெண் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் குடி வருகிறார்., அவரின் கணவர் விபத்தில் மரணம் அடைந்து விட, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக வட்டார கல்வி அலுவலகத்தில் வேலைக்கு சேர வருகிறார். அங்கு தொடங்குகிறது நாயகனின் கதை.

    கமலாவை கண்டதும் அவள் மீது மோகம் கொள்கிறான். சில நாட்களில் அவரை தன் வழிக்கு கொண்டு வருகிறான். நினைத்த நேரமெல்லாம் அவளின் வீட்டிற்கு எளிமைதாக சென்று வர அவனால் முடிகிறது. தாலி கட்டாமல் கமலாவுடன் குடும்பம் நடத்துகிறான.

    வீட்டிலும் ஊரிலும் அவன் மேல் சந்ததேகப் படுகின்றனர். ஆனால் ஒருவரும் அவனிடம் எவ்விதமான கேள்வியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கமலா, பதவி உயர்வு அடிப்படையில் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிபுரிய செல்கிறார். தனது ஊரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கடலூர். அப்பொழுதும் கமலாவை விட்டு விடவில்லை அவன். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் கடலூர் சென்று விட்டு வருகிறான்.

    அப்படி ஒரு நாள் கமலா வீட்டிற்கு செல்லும் போது இவனை கடந்து சிஇஓவின் கார் செல்கிறது. அதில் கமலா வந்திறங்குகிறார். கமலாவிடம் வினவுகையில் அவ்வப்போது வேலை நிமித்தம் நேரமாகிப் போவதால் காரில் வந்து இறங்குவதாக தெரிவிக்கிறார். அங்கே மையம் கொள்கிறது சந்தேகம்.

    தனக்குரியவள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கமலாவை காண வேறொருவர் வந்ததால் மனம் தடுமாறுகிறது, புலம்புகிறது. எப்பொழுதும் போல் கமலா இயல்புடன் இருக்கிறார். ஆனால் கதை நாயகனுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. வீட்டிலும் உறக்கம் வர மறுக்கிறது. தன் உயிரே தன்னிடம் இல்லாதது போல உண்ண, உறங்க மறுக்கிறான். ஒரே நாளில் கிழவனாகி விட்டார் தோன்றுகிறது அவனுக்கு.

    இந்நிலையில் என்ன நடந்தாலும் என்ன என்று கமலாவை சந்தித்து அது பற்றி வினவிவிட வேண்டும் என்று அவள் வீட்டிற்கு செல்கையில், முதன்மை கல்வி அலுவலரின் மகனும், அவரின் மனைவியும் கமலா வீட்டிற்கு வந்து, கமலாவை பற்றி அவதூறு கூறி அவளை அவமானப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள். அந்நிலையில் கமலாவிற்கு ஆதரவாக நின்று அவர்களிடம் மன்றாடி கமலாவின் மனநிலையை நிரூபிப்பதற்கு போராடுகிறான்.

    மீண்டும் சில நாட்கள் கழித்து கமலாவுக்கும் அவரின் மேலதிகாரி(சி.இ.ஓ) உடனான தொடர்பு இருப்பதாக நாயகன் சந்தேகிக்கிறான். இப்போது கமலாவின் மீதான ஆசை கோபமாக மாறுகிறது, கோபம் வெறியாக மாறுகிறது. வெறி கமலாவை கொலை செய்து விட்டால் என்ன என்று திட்டம் போடுகிறது.

    கமலாவை கொலை செய்தே தீர்வது என்ற திட்டத்துடன் கமலாவின் வீடு செல்கிறார் நாயகன். அங்கு என்ன நடந்தது? சுமார் பத்து ஆண்டுகள் கமலாவுடன் தொடர்பு இறுதியில் கமலாவை கொலை செய்யும் அளவிற்கு வந்து விடுகிறது அவனது சிந்தனை. கமலா மீது தான் வைத்திருப்பது ஆசையா, காதலா, காமமா என்று இறுதி வரை நாயகனுக்கும் தெரியவில்லை. அதேபோல தன் மீது நாயகன் வைத்திருக்கும் ஆசையை கமலா எவ்வாறு தனக்காக பயன்படுத்திக் கொள்கிறாள் அல்லது தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதை மடை மாற்றுகிறாள் என்பதையும் இக்கதை விளக்குகிறது.

    இந்த இடத்தில் பெண்ணின் மனநிலை எவ்வாறு பதியப்படுகிறது, கணவனை இழந்த பெண்கள் எவ்வித துணையும் இன்றி இந்த உலகில் வெற்றி பெற முடியாதா? அப்படியே ஆண் துணை இன்றி அல்லது ஆண்களின் நட்பு அவர்களுக்கு கிடைத்தால் அதை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதற்கெல்லாம் இக்கதை தெளிந்த நீரோடை போல விடை சொல்கிறது.

    கணவனற்ற பெண் இரு பெண் குழந்தைகளோடு இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், மேலதிகாரிகளின் பாலியல் ரீதியான நெருக்குதலால் எத்தகைய அவமானங்களை சுமக்கிறாள்...ஆண் அனைத்தையும் எப்படி எளிதாகவே கடந்து செல்கிறான், ஆனால் பெண்.?

    கமலாவைப் போலல்லாது எவ்வித சூழலையும், தவறான ஆண்களையும் எதிர்த்து நின்று சாதிக்கின்ற பல பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மனித மனங்களின் நுட்பங்களை தனது கதைகளில் அதிகம் வெளிப்படுத்தும் எழுத்தாளர் இமையம். இந்த மாதிரியான வாழ்க்கையில் உள்ளவர்கள் மீது, அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளின் மனோநிலையையும், பெற்ற குழந்தைகளின் நிலை என அனைத்தையும் அப்பட்டமாகப் பேசுகிறது நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

    4. செடல் – இமையம்

    விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை அவர்களின் மொழி நடையிலேயே சித்தரிப்பதுடன், இந்த சமூகம் பெண்களின் மேல் செலுத்திய அதிகார வன்முறையினையும், அவர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாகி இருப்பத்தையும் இந்நாவல் பேசுகிறது. இனி கதைக்கு செல்வோம்

    வடதமிழகத்தின் தென் பகுதியில் ஒரு மூன்று வருடங்களாக செல்லியம்மனுக்குச் சேவை செய்ய பொட்டுக்கட்டப்பட்ட பெண் யாரும் இல்லாததால் மழை பெய்யவில்லை. என ஊர்‌கூடி ஒரு முடிவு செய்கிறது... கூத்துக்கட்டிப் பிழைப்பு நடத்தி வரும் கோபால் - பூவரும்பு தம்பதியின் கடைசி மகள் செடலுக்கு ஊரார் அனைவரும் சேர்ந்து முப்பது ஊர்ச் செல்லியம்மன்களுக்காகப் பொட்டுக்கட்டி விடுகிறார்கள். சிறு

    Enjoying the preview?
    Page 1 of 1