Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cherryblossomum Innum Sila Pookkalum
Cherryblossomum Innum Sila Pookkalum
Cherryblossomum Innum Sila Pookkalum
Ebook188 pages3 hours

Cherryblossomum Innum Sila Pookkalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"செர்ரிபிளாஸமும் இன்னும் சில பூக்களூம்" நான் திரும்பிப்பார்த்த மற்றும் எதிர்கொண்ட ஆசாமிகளையும் நிகழ்ச்சிகளையும் சொல்லும் வ்யாசங்கள். இவை எல்லாவற்றிலும் நான் பங்கெடுத்துக்கொண்டு அல்லது ஒரு பார்வையாளனாகவோ இருந்திருக்கிறேன். அந்த சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியும் துக்கமும் கோபமும் கழிவிரக்கமும் அடைந்திருந்தாலும் இன்று அவற்றை எழுதும்போதும் படிக்கும்போதும் விஞ்சி நிற்பது ஒருவித சுகமும் சுவாரஸ்யமுமே.

Languageதமிழ்
Release dateDec 10, 2022
ISBN6580135909280
Cherryblossomum Innum Sila Pookkalum

Read more from Jayaraman Raghunathan

Related to Cherryblossomum Innum Sila Pookkalum

Related ebooks

Reviews for Cherryblossomum Innum Sila Pookkalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cherryblossomum Innum Sila Pookkalum - Jayaraman Raghunathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    செர்ரிபிளாஸமும் இன்னும் சில பூக்களும்

    Cherryblossomum Innum Sila Pookkalum

    Author:

    ஜெயராமன் ரகுநாதன்

    Jayaraman Raghunathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayaraman-raghunathan-1

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    ஜெயராமன் ரகுநாதன்…

    முதலில் சில வார்த்தைகள்

    முன்னுரை

    பாரதியார் இறந்துவிட்டாரா என்ன?

    உன்னதத்தைத்தேடி..!

    கடிகாரம் நகர்த்தும் காலம்

    மழையில் காகிதக்கப்பல்

    நாளை வியாழக்கிழமை… வருகிறீர்களா…!

    கவலை

    நானும் ராஜராஜத்தேவ உடையாரும்

    சுற்றிக்கொண்டிருக்கும் உலகம்

    எஸ் ஆர் ஐயரின் சைக்கிள்

    கோடைக்கானலும் ஸ்விஸ் ஆல்ப்ஸும்

    மாந்துறை

    அரிசி உப்புமா

    ஆர்தர் கானன் டாயிலும் நானும்…

    இலக்கியமாவது எது… டெலிஃபோன் டைரக்டரியா?

    பெங்களூர் ஷதாப்தி

    எஸ் வீ வி என்னும் அழகியல்வாதி

    இழப்பு

    டெட்டால்

    எல்டாம்ஸ் ரோடுல, ஈவினிங் ட்ராஃபிக்குல…!

    யாராவது… ஏதாவது…!

    ஜப்பானீஸ் கேக்

    லார்ஸ் லெண்டால்

    அம்புலி மாமா

    பாஸ் போர்ட் விவகாரம்

    1984 அக்டோபர் மாதம் 25 தேதி வாக்கில்.

    ஈடு

    இந்தியாவின் தலைநகரமாம்

    எட்ரா வண்டிய..? வுட்றா தில்லக்கேணிக்கு?

    கிளாஸிக்

    காத்திருப்போர் பட்டியலில் நான்

    காலம் செல்லச்செல்ல மனித சுபாவங்கள் மாறுமா?

    செர்ரி பிளாஸம்

    தி ஜாவுடன் சந்திப்பு

    பரிட்ச்சார்த்தமான ஒரு ஞாயிற்றுக்கிழமை

    சாகசமெல்லாம் என்னால் செய்ய முடியாது!

    அம்மாவின் சிரிப்பு

    ரயில் பயணங்களில்…

    குரோனோஸெப்ஷன் – இரு வேறு நேரங்களா இல்லை ஒரே நேரம் தானா?

    அது சைஸ் நாப்பது. என்னுது இல்லை

    முடிவின்றி சில வார்த்தைகள்

    சமர்ப்பணம்

    நான் மறந்துபோகும் சம்பவங்களை ஒன்று விடாமல் நினைவுறுத்தி என் கூடவே நடைபயிலும்

    என் பெஸ்ட் ஃப்ரெண்ட் மற்றும் மனைவி

    லதா ரகுநாதனுக்கு

    ஜெயராமன் ரகுநாதன்…

    E:\Priya\Book Generation\Cherryblossomum\1.-min.jpg

    இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்த சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டான ஜெயராமன் ரகுநாதன் இப்போது சில கம்பெனிகளில் நிர்வாக இயக்குனராக பணி புரிகிறார். நண்பர்களுடன் இவர் ஆரம்பித்த Knowledge Capital Investment Group என்னும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை அதிகரிக்கும் பயிற்சி அளித்து வருகிறார். நிர்வாக இயல், செயற்கை அறிவுத்திறன் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார்.,

    பல முன்னணி இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளி வந்திருக்கின்றன. கல்கியில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு தகவல் தொழில் நுட்பக்கட்டுரைகள், 18ஆம் நூற்றாண்டு மெட்ராஸ் சரித்திர விவரங்கள், aஇரோப்பிய ஓவியங்கள் பற்றிய பார்வை, ஞான ஆலயத்தில் 108 திவ்ய தேசங்கள், வலம் இதழில் பொருளாதாரக்கட்டுரைகள், தென்றல், விருட்சம், அமுதசுரபி, ராணி மற்றும் பல பத்திரிகைகளிலும் மின்பதிப்பு இதழ்களிலும் ஏராளமான சிறுகதைகளையும் மேடை ஏற்றப்பட்ட நான்கு நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.

    வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பிரபல எழுத்தாளர்களான சுஜாதா மற்றும் பாலகுமாரன் இருவருடனும் நெருங்கிப்பழகியவர். பாலகுமாரனின் சில நாவல்களுக்கு (333 அம்மையப்பன் தெரு, வெள்ளைத்துறைமுகம், ஸ்வர்ண வேட்கை) முன்னுரை எழுதியிருக்கிறார். ஸ்வர்ணவேட்கை நாவல் முற்றுப்பெறும் முன்பே பாலகுமாரன் இயற்கை எய்திவிட்டதால் அவரது குடும்பத்தாரின் ஆசைப்படி அந்த நாவலை முடித்து வைத்திருக்கிறார்.

    கடந்த நான்காண்டுகளில் இவர் எழுதி வெற்றி பெற்ற நாடகங்கள் - அபயரங்கதிலகா, திருஅரங்கண், குறிஞ்சி மற்றும் Never Odd or Even (ஆங்கில நாடகம்) ஆகியவை தியேட்டர் மெரீனாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன.

    டாக்டர் வைகுண்டம் (இரண்டு பாகங்கள்), நெடுமர நிழல் கதைகள், என் அடையாரின் விழுதுகள், திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ், தொட்டுக்கொள்ள வா, தொடர்ந்து செல்லவா, அபயரங்கதிலகா, வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள் மிகப்பரவலாக பாராட்டுப்பெற்ற படைப்புகள். இன்னும் சில படைப்புகளான 108 திவ்ய தேசங்கள் பற்றின கட்டுரைத்தொகுப்பு, அணுவைத்துளைத்தேழ்(விஞ்ஞானக்கட்டுரைகள்), தங்க சாகசம், அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் (நாவல்கள்) உன்னை நீ அறிந்தால், (சுய முன்னேற்றத்தொடர்) மற்றும் நான் கடந்துபோனவை (coming of age bio-fiction) பதிப்புக்குத்தயாராகி வருகின்றன.

    சென்னையின் எந்திரன் சுஜாதா, தேவனும் மெட்ராஸும் என்னும் தலைப்பில் இவரின் ஆடியோ விஷுவல் உரைகள் நல்ல வரவேற்பைப்பெற்றன.

    சிறந்த தொழில் முனைவோர் விருதும், மைலாப்பூர் அகாடமியின் சிறந்த நாடகாசிரியர் விருதும் பெற்றவர்.

    முதலில் சில வார்த்தைகள்

    வாழ்க்கைப்பாதையில் நடந்துபோகும்போது நாம் அவ்வப்போது திரும்பிப்பார்ப்பதுண்டு.

    பார்க்க வேண்டும் என்னும் கட்சி நான்.

    இது ஏதோ செய்த தவறுகளை திருத்திக்கொண்டு ….என்றெல்லாம் அறிவுரைக்காக சொல்லவில்லை. கடந்த வந்த பாதையைத்திரும்பிப்பார்ப்பது ஒரு சுகம். சில சமயம் துக்கம். ஆனால் காலங்கள் தாண்டி வந்தபின் அதை மறுவாழ் செய்வது எப்போதுமே சுகம் தான்.

    நொஸ்டாஜியா (Nostalgia) என்று சொல்லப்படுவது ஒரு கிரேக்க கலப்பு வார்த்தை. நோஸ்டா என்பது வீடு திரும்புதல் என்றும் ஆல்கோஸ் என்பது ஒருவித சோகம் அல்லது ஏக்கம் என்றும் கொள்ள வேண்டுமாம். அந்தக்காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி காசுக்கு சண்டைபோடும் மெர்ஸினரிக்களின் மன நிலையைக்குறிக்க ஒரு பதினேழாம் நூற்றாண்டு மருத்துவம் படிக்கும் இளைஞன் உருவாகிய வார்த்தை ஆங்கிலத்தில் தத்து எடுக்கப்பட்டுவிட்டது.

    இந்த செர்ரிபிளாஸமும் இன்னும் சில பூக்களூம் நான் திரும்பிப்பார்த்த மற்றும் எதிர்கொண்ட ஆசாமிகளையும் நிகழ்ச்சிகளையும் சொல்லும் வ்யாசங்கள். இவை எல்லாவற்றிலும் நான் பங்கெடுத்துக்கொண்டு அல்லது ஒரு பார்வையாளனாகவோ இருந்திருக்கிறேன். அந்த சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியும் துக்கமும் கோபமும் கழிவிரக்கமும் அடைந்திருந்தாலும் இன்று அவற்றை எழுதும்போதும் படிக்கும்போதும் விஞ்சி நிற்பது ஒரு வித சுகமும் சுவாரஸ்யமுமே.

    இந்த்தொகுப்பிலேயே நான் எழுதியிருக்கும் கீழ்க்கண்ட வரிகள் உங்களுக்கு புத்தகத்தின் சாராம்சத்தை சொல்லிவிடக்கூடும்.

    "வழியில் சிலரை உதறி விட்டும் இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டும் காலத்தின் கால்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாமும் அதன் போக்கிலேயே பாவ்லோ நாய் போல போய்க் கொண்டிருக்கிறோம்.

    நம் நேரம் வரும்போது நாமும் உதறப்படுவோம். அது வரை மரங்களடர்ந்த அமைதியான தெருவில் உல்லாஸமான நடைதானே வாழ்க்கையென்று போவோம். அப்படியே சில உத்தமமான நினைவுகளையும் அசை போட்டுக்கொண்டே போவோமே!"

    அழகான முன்னுரை எழுதித்தந்து என்னைப்பெருமைப்படுத்திய பாரம்பரிய கல்கி இதழின் ஆசிரியர் மற்றும் பிரபல எழுத்தாளர் திரு வி எஸ் வி ரமணனுக்கு வார்த்தையில் நன்றிகள் சொன்னால் போதவே போதாது.

    இந்தப்புத்தகத்தை அருமையாக வடிவமைத்து வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கும் நிர்வாகி திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் என் நன்றி.

    பெயிண்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று காண்டிராக்ட் ஆசாமிகள் வீட்டையே ரகளை பண்ணியிருக்கும் ஒரு குழப்பமான பின் காலை நேரத்தில்…

    ஜெயராமன் ரகுநாதன்

    முன்னுரை

    பாரம்பரிய கல்கி இதழின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான திரு. வி.எஸ்.வி ரமணன்:

    இன்னும் இருள் பிரிந்து ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று. தொலைவில் மெல்ல நகர்ந்துபோகும் மேகங்கள். கண்ணெதிரே விரிந்த கடல் அவ்வப்போது காலை முத்தமிட்டுப்போகும் அலைகள். நனைந்த கால்களுடன் அலைகளின் அருகில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். மனம் அமைதியாயிருக்கிறது. கவனத்தைக் கலைத்துக் கடந்த போன ஒரு புதிய பறவையைப் பார்க்கத் திரும்புகிறீர்கள். அதற்கென்ன அவசரமோ வேகமாக பறந்துவிட்டது. அப்போது தான் கவனிக்கிறீர்கள் ஈர மணலில் பதிந்த உங்கள் காலடிச்சுவடுகளில் சிலவற்றைமட்டும் அலைகள் அழிக்காமல் விட்டிருக்கிறது.. அவற்றினுள் அலைகள் சிந்திய கடல் நீர் கூட சிறு குமிழியிட்டுக்கொண்டிருக்கிறது.. ஆழமாக பதிந்த தடங்கள் உடனே அழியாதது தானே என்று எண்ணிக்கொண்டே தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கிறீர்கள்.

    இந்த ஈர மண்ணில் ஆழமாக பதிந்த கால்தடங்கள் போலத்தான் வாழ்க்கைப்பயணத்தில் கடந்த சில காலடிகள் ஈர சிமின்ட்டில் பதிந்த பாதங்களாக மனதில் நிலைத்துவிடும் அவற்றை அவ்வப்போது நினைத்து அசைபோடுவதும் அதை நண்பர்களுடனும் குடும்பத்தினரோடும் பகிர்ந்து கொள்வது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.. ஆனால் அதை ஒரு ரசனையோடு தான் ரசித்தபடியே படிப்பவர்களையும் ரசிக்கும்படி எழுத ஒரு தனி ஆற்றல் வேண்டும். இந்த நூலாசிரியர் ஜெயராமன் ரகுநாதனுக்கு அது வரமாக வசப்பட்டிருக்கிறது.

    ஒருமனிதனின் ஆளுமைவளர்ப்பில் அவனது வாழ்க்கைப்பயணத்திற்குப் பெரும்பங்கிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அவன் திறமையினால் கற்றதும் அனுபவத்தால் பெற்றதும் அழியாச்சுவடுகளாக மனதில் பதிந்து விடுகிறது. ஆனால் எல்லா அனுபவங்களையும் அப்படியே எழுத்தில் வார்த்து விடுவது என்பது எளிதல்ல.

    மாணவப் பருவ வாழ்க்கை எப்போதுமே சுகமான, சுவையான அனுபவங்களைத் தரும். அதிலும் 70-80களின் வாழ்க்கைமுறை இனிமையானது. இன்றுபோல பக்கத்து வீட்டுக்காரனையே பேஸ்புக் நண்பராக அறிந்து கொள்ளும் அவலமும், நேரத்தை தின்னும் வாட்ஸப்பும் பிறக்காத காலம். அந்த கால கட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தை சார்ந்த மாணவனாக தன் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கும் படிப்பில், இதர பள்ளி நிகழ்ச்சிகளில் காட்டிய ஈடுபாடு, ஆசிரியர்களிடம் காட்டிய மரியாதை, பணிவு, அடக்கம் மற்றும் அவனது விடாமுயற்சி, ஊக்கம் போன்றவைகைளைப்பேசுகிறது இந்நூல்.

    தொடர்ந்த வாழ்க்கைப்பயணத்தில் கார்ப்ரேட்

    Enjoying the preview?
    Page 1 of 1