Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abayarangathilaka
Abayarangathilaka
Abayarangathilaka
Ebook129 pages44 minutes

Abayarangathilaka

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தஞ்சைப்பெரிய கோவிலின் வடக்கு வாசல் கோபுரத்தில் தொப்பி போட்ட ஆசாமியின் சிலை இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சரி, பார்க்காவிட்டாலும் பாதகமில்லை. அட்டையில் ஃபோட்டோவையாவது பார்த்து விட்டு இந்த சரித்திரக் கதைக்குள் புகுந்து சரித்திர அமுதத்தை நுங்குங்கள்!!

யார் இந்த தொப்பி ஆசாமி? நம் நூற்றாண்டுத்தொப்பி அணிந்த இவன் உருவம் எப்படி அன்றே செதுக்கிய சிலையில்...? இந்த முடிச்சைப்பிடித்து யோசித்து கற்பனையில் எழுப்பப்பட்டதே இந்த புதினம்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580135905744
Abayarangathilaka

Read more from Jayaraman Raghunathan

Related to Abayarangathilaka

Related ebooks

Related categories

Reviews for Abayarangathilaka

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abayarangathilaka - Jayaraman Raghunathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அபயரங்கதிலகா

    மேடை நாடகமாக்கப்பட்டு அமோக வெற்றி பெற்ற

    எதிர்கால சரித்திர நவீனம்

    Abayarangathilaka

    Author:

    ஜெயராமன் ரகுநாதன்

    Jayaraman Raghunathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayaraman-raghunathan-1

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்பது

    பத்து

    பதினொன்று

    பன்னிரெண்டு

    பதிமூன்று

    பதிநான்கு

    பதினைந்து

    பதினாறு

    பதினேழு

    பதினெட்டு

    பத்தொன்பது

    இருபது

    பின்னுரை - 1

    பின்னுரை – 2

    முன்னுரை

    காவிரி நனைத்துச்சோறுடைத்த சோழ தேசம்…

    அந்தப்பொன்னி நதியாலேயே காப்பற்றப்பட்டதாகச்சொல்லப்படும் பொன்னியின் செல்வன் என்றும் அருள் மொழி வர்மன் என்றும் பேர் பெற்ற உடையார் ராஜராஜ சோழன்… ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் தமிழ் நாகரீகத்தை உலகுக்குப்பறைச் சாற்றிக் கொண்டிருக்கும் கற்றளி… ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப்பெரிய கோவில்…

    இதை வைத்து பேராசிரியர் கல்கியும் பாலகுமாரனும் மாபெரும் சரித்திர நவீனங்களை நமக்குத் தந்திருக்கின்றனர். அவர்கள் போட்டுக்கொடுத்த ராஜ பாட்டையில் நானும் ஒரு சின்ன முயற்சி செய்திருக்கிறேன்.

    தஞ்சைப்பெரிய கோவிலின் வடக்கு வாசல் கோபுரத்தில் தொப்பி போட்ட ஆசாமியின் சிலை இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

    சரி, பார்க்காவிட்டாலும் பாதகமில்லை. அட்டையில் ஃபோட்டோவையாவது பார்த்து விட்டு இந்த சரித்திரக் கதைக்குள் புகுந்து சரித்திர அமுதத்தை நுங்குங்கள்!!

    யார் இந்த தொப்பி ஆசாமி?

    நம் நூற்றாண்டுத்தொப்பி அணிந்த இவன் உருவம் எப்படி அன்றே செதுக்கிய சிலையில்...?

    இந்த முடிச்சைப்பிடித்து யோசித்து கற்பனையில் எழுப்பப்பட்டதே இந்த புதினம்.

    "ஏன்யா சரித்திரக் கதைங்கறே! அதுக்கு ஆதாரம், சான்றுகளெல்லாம் கிடையாதா என்று சிலர், சரி பலர், கேட்பீர்கள்.

    இந்த புதினத்தின் சரித்திர சான்றுகளுக்கு சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தாரின் பிற்காலச்சோழர்கள், அருளுடைச்சோழ மண்டலம் – N . சேதுராமன் படிக்கலாம். கூடவே Laskar, Rejaul (September 2014). Rajiv Gandhi's Diplomacy: Historic Significance and Contemporary Relevance படித்தால் இலங்கையின் நிலவரங்கள் இந்தக்கதையில் வரும் நிகழ்ச்சிகளுக்கு பின்புலமாக இருப்பதை அறியலாம். ஆனால் ஆதாரங்கள் குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை புதினத்தின் கடைசியில்தான் எழுதப்போகிறேன். அதைப்படிக்கும்போதுதான் நான் இங்கே சொல்ல வரும் விஷயம் முழுமை பெறும்!

    இந்த நாவலின் சுருக்கம் மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு பெரிய வெற்றி பெற்றது என்னும் தகவலைச்சொல்லி...

    வெயிலுமில்லாத மழையுமில்லாத ஒரு காலைப்பொழுதில்…

    ஜெயராமன் ரகுநாதன்

    தொடர்புக்கு:

    jraghu1956@gmail.com

    ஒன்று

    அவனுக்கு மூச்சிரைத்தது. தண்ணீர் தண்ணீர் என்று உடலின் ஒவ்வொரு பாகமும் கெஞ்சியது. ஓடி வந்த தூரம் அப்படி! ஓடி வந்த உயிர் காக்கும் அவசரமும் அப்படியே. கடற்கரைக்காற்று குளிருடன் மீன் நாற்றத்தையும் கலந்து வீசியது. கிருஷ்ணபட்ச்சத்து நிலா வானத்தில் அசௌகரியமாக ஒருக்களித்தபடி தவழ எங்கும் அமைதி. அலை ஓசை மட்டும் காதுக்குள் குடைச்சலாக சப்தித்துக்கொண்டிருந்தது.

    ஒரு படகு கிடைத்தால் கூட தென் இந்தியா ஒதுங்கிவிடலாம் எனகிற நப்பாசையில் அவன் கடல் அலைகளில் கால்களை நனைத்தபடி நடந்தான். தூரத்தில் ஏதோ வாகன சப்தம் நெருங்கி வர வர, அவனின் அட்ரினாலின் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தது.

    சுற்று முற்றும் கூர்ந்து கவனித்தான். சன்னமாக, வெகு சன்னமாக, அலைகளின் ஓசையையும் மீறி க்ளக் க்ளக் சப்தம். மட மடவென கடலில் இறங்கி சப்தம் வந்த திசை நோக்கி தோராயமாக நடந்தான். இடுப்பளவு தண்ணீர் வரும்போது ஒரு சின்ன படகு தென்பட்டது. அதில் ஒரு இளம் பெண்!

    உடனே செவ்வரளி போன்ற சிவந்த முகம், மை படர்ந்த கருவிழிகள், வில்லென வளைந்த புருவத்தின் வியப்பு, செதுக்கின மூக்கு செம்பவள இதழ், கழுத்துக்குக்கீழே…. என்றெல்லம் வர்ணனை செய்வதற்கு முன்பு விஸ்வகர்மா யாதவைப்பற்றி சொல்ல வேண்டும்.

    விஸ்வகர்மா யாதவ் ஒரிசாவைச்சேர்ந்தவனாக இருந்தாலும் அவனின் பெற்றோர் ஆந்திராவுக்கு குடிபுகுந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஸ்ரீகாகுளத்தில் ஒரு காலேஜ் பிரின்சிபாலாக வேலைபார்த்த விஸ்வகர்மா யாதவின் தந்தைக்கு ஒரே குறை பிள்ளையாண்டான் ஒழுங்காகப்படிக்காமல் ஸ்போர்ட்ஸ் அத்லெடிக்ஸ் என்று சுற்றி வருவதுதான்.

    விஸ்வகர்மா யாதவ் இது வரை எட்டு பேரை கொலை பண்ணியிருக்கிறான். எட்டு பேருமே ஊடுருவல்காரர்கள் என்று சொல்லப்படும் உளவுக்காரர்கள். அதெப்படி தெரியும் என்று கேட்டால் பெரியவர் எங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்காது என்பார்.

    ஒரு வேளை தப்பான ஆளை உளவாளி என்று கொன்று விட்டால்?

    அல்பாயுசு!

    சிரிக்காமல் சொல்வார்.

    பெரியவர் 1986இல் ஏமனில் சாகசம் புரிந்த கதை விஸ்வகர்மா யாதவ் தன அக்கா பிள்ளைகளுக்கு சொல்லியிருக்கிறான். ஜனவரி 13 1986 ஏமனில் மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடித்தது. வெளிநாட்டவர்களை அப்புறப்படுத்த எலிசபெத் மகாராணியே தன்னுடைய பிரிட்டானிகா கப்பலை அனுப்பி, அதை அடையும் முயற்சியில் சக உளவாளி அமெரிக்கன் ஜார்ஜ் கேஸி என்பவனை தன் தோளில் சுமந்து ஒரு பார்ஜ் என்னும் பெரும் படகில் ஏற்றி பிரிட்டனிகாவில் கொண்டு சேர்த்த சாகசம் புரிந்தவர் பெரியவர். அதற்காகவே பிரத்தியோகமாக அழைக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.

    இந்த சினிமாவில் வர மாதிரி உளவாளிகளை பிடித்து நாற்காலியில் கட்டி மூஞ்சியில் தண்ணீர் அடித்து உண்மைகளை கக்க வைக்க வைக்கிறது எல்லாம்…?

    எல்லாமே அந்த இயான் ஃப்ளெம்மிங் பண்ணின கந்தரகோளம். MI 5 என்று எப்போதும் தப்பாகவே சொல்லப்படுகிற MI 6 தான் ஜேம்ஸ் பாண்ட் வேலைகளை பண்ணுகிறது. மற்றபடி அதன் தலைவி ஒரு வயதான பெண், அவளுக்கு அழகான செக்ரடரி, பாண்ட் அவளை முத்தமிட முயற்சி எல்லாம் சுவாரஸ்யமான ஜல்லி, அவ்வளவுதான்.

    MI 5 முழுவதுமாகவே உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உளவுத்துறை. வெளி நாட்டு பிரிட்டிஷ் கான்ஸ்லேட்டுகளிலும் . MI 5 ஆசாமிகள் இருப்பார்கள். அவர்களின் வேலை இங்கிலாந்தின் உள்நாட்டு பாதுகாப்பை ஒட்டியதாகவே இருக்கும். அதே மாதிரி இந்தியாவின் ரிஸர்ச் அண்ட் அனாலிஸிஸ் விங் எனப்படும் ரா பற்றியும்

    Enjoying the preview?
    Page 1 of 1