Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Phone Off Pannittu Pesu!
Phone Off Pannittu Pesu!
Phone Off Pannittu Pesu!
Ebook200 pages6 hours

Phone Off Pannittu Pesu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசிப்பது என்பது தனி சுகம். தரமான சிறுகதைகளை இனம் கண்டு தொடர்ந்து படிப்பது கொடுப்பினை. இதே மாதிரி எழுதுவது என்பதும் சுகம். மற்றவர்களின் கவனத்தை இழுத்துப் படிக்கவைப்பது எளிதான காரியம் அல்ல. படிப்பவர்கள் வேறு வேறு ரகத்தினராக இருப்பார்கள். அவர்களின் உணர்ச்சிகள் பலதரப்பட்டவை. சிந்திக்க வைக்கும் எழுத்துக்கள், சோகத்தை வரவழைக்கும் கதைகள், ஆத்திரமூட்டும் கற்பனைகள் இப்படிப் பலவகையானவை சிறுகதைகள் மூலம் அறியப்படலாம்.

ஆனால்-

ஆனந்தத்தைத் தரும், சிரிப்பூட்டும் கதைகள் என்றால் பெரும்பாலும் எல்லாரையும் ஈர்க்கும். படித்த கதைகளை அல்லது சிறுசிறு பகுதிகளைச் சொல்லி, தான் அடைந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி இரண்டு மடங்காகும். துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால், அது பாதியாகக் குறையும் என்பார்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580128506791
Phone Off Pannittu Pesu!

Read more from Bhama Gopalan

Related to Phone Off Pannittu Pesu!

Related ebooks

Related categories

Reviews for Phone Off Pannittu Pesu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Phone Off Pannittu Pesu! - Bhama Gopalan

    https://www.pustaka.co.in

    போன் ஆஃப் பண்ணிட்டு பேசு!

    சிறுகதைகள்

    Phone Off Pannittu Pesu!

    Sirukathaigal

    Author:

    பாமாகோபாலன்

    Bhama Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    டிரைவ் - இன்-லா

    ஜாதகமே வைபோகமே!

    பிரசாரம் பண்ணலையோ பிரசாரம்!

    மொட்டையாக ஒரு கடிதம்

    நிலம் பெற வேண்டும் நீயென்று!

    காலண்டரின் உபயோகங்கள்!

    ‘ஓசி’க் கீரனாரின் ‘நாசி’ புராணம்!

    இன்று ஞாயிற்றுக்கிழமை!

    வறுக்கப்படாத மீன்கள் சங்கம்!

    பூந்தொட்டியின் பக்கத்தில் கேக்டஸ்?

    'கமிஷன்' அடிப்போர் சங்கத் தலைவர் பராக்!

    போனை ஆஃப் பண்ணிட்டு பேசு!

    வசந்தி புருஷன் வதந்திதாசன்!

    விநோதா விளையாட்டு!

    குண்டு போட்ட குண்டு

    காதலின் நிறம் கறுப்பு!

    அஞ்சு இஞ்ச் இடைவெளி

    தலைக்கு வந்தது தாலியோடு சேர்ந்தது

    காட்சி-1

    காட்சி-2

    காட்சி-3

    நாருடன் போர்!

    ஒரு நாடகம் உருவாகிறது

    கடிதம் சேரக் கூடாது!

    ஒரு காதல் வைத்தியம்!!

    காட்சி-1

    காட்சி-2

    காட்சி-3

    காட்சி-4

    காட்சி-5

    தோடி ஆலாபனை பண்ணத் தெரியுமா?

    ஒரு பிக்னிக்கும் ஒரு பெண் பார்க்கும் படலமும்...

    ப(ல்)லான அனுபவம்!

    கல்யாணப் பரிசு ஒரு கலையல்லவா!

    அடடா! டிஃபன்டா புது டிஃபன்டா!

    அட ஆமாம்!

    முன்னுரை

    வாசிப்பது என்பது தனி சுகம். தரமான சிறுகதைகளை இனம் கண்டு தொடர்ந்து படிப்பது கொடுப்பினை. இதே மாதிரி எழுதுவது என்பதும் சுகம். மற்றவர்களின் கவனத்தை இழுத்துப் படிக்கவைப்பது எளிதான காரியம் அல்ல. படிப்பவர்கள் வேறு வேறு ரகத்தினராக இருப்பார்கள். அவர்களின் உணர்ச்சிகள் பலதரப்பட்டவை. சிந்திக்க வைக்கும் எழுத்துக்கள், சோகத்தை வரவழைக்கும் கதைகள், ஆத்திரமூட்டும் கற்பனைகள் இப்படிப் பலவகையானவை சிறுகதைகள் மூலம் அறியப்படலாம்.

    ஆனால்-

    ஆனந்தத்தைத் தரும், சிரிப்பூட்டும் கதைகள் என்றால் பெரும்பாலும் எல்லாரையும் ஈர்க்கும். படித்த கதைகளை அல்லது சிறுசிறு பகுதிகளைச் சொல்லி, தான் அடைந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி இரண்டு மடங்காகும். துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால், அது பாதியாகக் குறையும் என்பார்கள்.

    அமரர் பேராசிரியர் திரு. நாரண. துரைக்கண்ணன் மேஜையில், பிரசண்ட விகடன் பத்திரிகைக்கான கதைகளும், கட்டுரைகளும் பரப்பப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர்களைத் தட்டிக்கொடுத்து, தன் பத்திரிகையில் சிறுகதைகளைப் பிரசுரித்து ஊக்கம் அளிப்பவர்.

    அப்படி அவருடைய மோதிரக் கையால் (அவர் மோதிரம் அணிந்திருந்தாரா என்று தெரியாது!) குட்டுப்பட்டு, ஆசிபெற்ற எனது முதல் சிறுகதையைப் பிரசுரித்தார்.

    வருடம் 1963, நான் 1943ல் பிறந்தவன். இருபது வயதில் பத்திரிகையில் என் பெயர் பிரசுரமாயிற்று. அந்த வருடம் முதல் 2014ம் ஆண்டுவரை எழுதிக்கொண்டே இருந்தேன். முயற்சி, முயற்சி, விடாமுயற்சி.

    அதன் பிறகும் பல சிறுகதைகளை ‘பிரசண்ட விகடனில்’ பிரசுரம் ஆயின.

    அதன் பிறகு பல பத்திரிகைகள் வெளிவந்தன. புதுப் பத்திரிகை ஒன்று வெளிவந்தால் போதும். உடனே அதை வாங்கிப் படித்து, என்ன மாதிரி கதைகள் பிரசுரிக்கப் படுகின்றன என்று அலசி, அடுத்த நாளே அப்பத்திரிகைக்குக் கதை அனுப்புவது என்பது என் வழக்கம் ஆகிவிட்டது.

    என் தந்தை வழிப் பாட்டி ‘சத்யபாமா’. அவர் வாய் நிறைய ‘கோபாலா’ என்று அழைப்பார். அவர் பெயரில் உள்ள ‘பாமா’ என்பதை, என் பெயரின் முன்னால் சேர்த்துக் கொள்ளலாமே என்று நினைத்து, சேர்த்துக் கொண்டேன்!

    அதே பெயரில் கதைகளை எழுதினேன்.

    எனது கல்லூரி வாழ்க்கையிலும் சரி, அலுவலக சினேகிதர்களிடமும் அடிக்கடி ஜோக்குகள் சொல்லிப் பழக்கமாகி, அமரர் திரு. கி.வா.ஜ.வின் மேடைப் பேச்சுக்களையும் கேட்டுக் கேட்டு, சிலேடையாகப் பேசுவதும் வாடிக்கையானது!

    சிறுகதைகளில், வாசிப்பவரின் மனதை நெருடும் கதைகள் எழுதுவதும், திடுக்கிடவைப்பதும் எளிதான காரியம் என்று சில சமயங்கள் தோன்றும்.

    ஆனால் தினப்படி வாழ்க்கையில் எல்லோருக்குமே பிரச்னைகள் உண்டு என்பதாலும், பத்திரிகைகளைப் படிப்பதும், சினிமா பார்ப்பதும், நண்பர்களுடனும், உறவினர்களிடமும் உரையாடுவதும் பொழுதுபோவதற்காக என்ற பெரிய காரணத்தினால், அச்சமயங்களில் சிரிக்க வைப்பது மிகக் கஷ்டமான செயலாகத் தோன்றும்.

    அதனால் சிரிப்புக் கதைகளை சிறு, சிறு நாடகங்களை எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வந்தது.

    இதில் ஒரு சிரமம். பேசும்போது நம் கை அசைவுகளும், குரலில் ஏற்ற, இறக்கங்களும் சிரிப்பை வரவழைக்கும்.

    எழுத்தில் எப்படிச் சிரிக்க வைப்பது?

    அதற்காக நம் முன்னோடி எழுத்தாளர்களில் சிரிப்புக் கதைகளை ஆவலுடன், அலசல் நோக்குடன் படிக்க ஆரம்பித்தேன். நகைச்சுவை நாடகங்களை விரும்பிப் பார்த்தேன்.

    கல்கி, தேவன், ரா.கி. ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், எஸ்.வி.சேகர், சாவி, அகஸ்தியன் போன்றவர்களின் படைப்புகளை ஊன்றிப் படித்ததன் விளைவாக

    பல சிரிப்புக் கதைகளை எழுதினேன். அவ்வப்போது வெவ்வேறு வகையான கதைகளும் எழுதினேன்.

    இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள்-

    குமுதம், ‘ஜங்ஷன்’, கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், லேடீஸ் ஸ்பெஷல், தினமணி கதிர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் பிரசுரமானவை.

    முதல் நகைச்சுவைச் சிறுகதை-'குண்டு போட்ட குண்டு' வெளியான வருடம் 1967. கடைசிச் சிறுகதை ஆகஸ்ட் 2014. கல்கி- ‘வசந்தி புருஷன் வதந்திதாசன்’

    படிக்கலாம் வாங்க. சிரிக்கலாம் வாங்க.

    பாமா கோபாலன்.

    சென்னை -44

    வாழ்த்துரை

    நெய்ப் பொங்கல் என்றால் வடையும், மலபார் அடை என்றால் அவியலும், தயிர் சாதம் என்றால் ஊறுகாயும் பிணைந்து ஆஜராவது போல கோபாலன் என்றால் டிரெய்லர் பஸ்ஸாக வேதாவும் இணைந்து வந்துவிடுவார் என்பதை கைரேகை, சோழி, நாடி, கிளி ஜோஸ்யங்கள் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம்.

    பல வருடங்களாக எழுத்துலகில் வலம் வரும் இவர்களை செட்தோசை என்றும் சொல்லலாம். அந்தக்கால து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தியாக இவர்களை மிக்ஸ்ஸட் டபிள்ஸ் என்று டென்னில் பரிபாஷையில் சொல்லி, இரட்டை ஜெமினியாக சக்கைப் போடும் சுபாவையும் குறிப்பிட்டு விட்டால் வேறு எந்த காம்போவையும் விட்டுவிடவில்லை என்று தோன்றுகிறது. விடுபட்ட எழுத்தாளத் தம்பதிகள் மன்னிக்கவும்.

    ஒரே கல்லூரியிலும், ஒரே அலுவலகத்திலும் படித்து வேலை செய்து வந்த எங்களின் போது போக்கு வாகீச கலாநிதி கி.வா.ஜ.வின் சிலேடைகளை ரசிப்பதும், அவரைப் போல முயன்று பார்ப்பதும். உதாரணம்: எழும்பூர் ரயில் நிலையம் அருகே அற்பசங்கைக்காக திறக்கப்பட்ட புதிய கட்டணக் கழிப்பிடத்தை தாண்டிச் செல்லும் போது உதிர்த்த சிலேடை, ‘ரயில்வே ஊழியர்களுக்கு கட்டணத்தில் கழிவு உண்டா?’

    கோபாலனுக்கு முருக பக்தி அதிகம். கதைகளில் காமகோடி, ஸ்ரீராமகிருஷ்ணவிஜய பத்திரிகைகளின் தார்மீகம் புதைந்து இருக்கும். கௌரவமான பெண்கள் (மற்றும் ஆண்கள்) முன்னால், அக்கம் பக்கம் கடைக் கண்ணால் பார்த்துக் கொள்ளாமல் தைரியமாக உரக்கப் படிக்கலாம்.

    எழுத்தாளர் ஒருவர் ஜோதிடராகவும் இருப்பது அபூர்வம். அவ்வகையிலான வேதா கோபாலன் பத்திரிகைக்கு அனுப்பிய கதை எப்போது பிரசுரமாகும் என்று இலவு காத்த கிளியாக காத்திராமல் ஜோஸ்யக் கிளியாக, தானே ஆருடம் பார்த்து தெரிந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

    இருவருமாக இணைந்தோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ எழுதிய மாதாந்திர நாவல்களில் சமூகத்துக்கு கட்டாய சேதி சொல்லும் மிரட்டல்கள் இருக்காது. படிப்பவரின் மூளையைத் திகைப்புடன் பெருச்சாளியாகப் பிராண்ட வைக்காது. எளிய வீட்டுச் சமையலாக அமைந்து சௌகர்யமாக ஜீரணமாகிவிடும்.

    இருவரும் எழுதிய புத்தகங்கள், நூறு ஆண்டுகளைக் கடந்த அல்லயன்ஸ் தொகுப்பாக வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. கிரகங்கள் சம்பந்தப்பட்ட ஜோதிடக் கலையைப் பயின்ற வேதா, கணவர் கோபாலனுடன் ராசிக்கார அல்லயன்ஸ் எனும் கிரகத்தில் நுழையும் வாய்ப்பு கிட்டியது, அல்லயன்ஸின் அலுவலகம் நேரெதிரே கபாலீஸ்வரருடன் உடன் உறையும் அன்னை கற்பகாம்பாளின் அருள் அன்றி வேறென்ன?

    ஜே.எஸ்.ராகவன்,

    நகைச்சுவை எழுத்தாளர்

    மேற்கு மாம்பலம்

    டிரைவ் - இன்-லா

    கண்ணாடி கப்பில் இருந்த பொன்னிற உருண்டை, ஜீராவில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. கீழே சாஸரில் ஒரு எவர்சில்வர் ஸ்பூன். ஈஸ்வரன் நாக்கில் நீர் சுரந்தது.

    ஸ்பூனை ஒரு லுக் விட்டார். அருகில் பட்டுப் புடவையில் அமர்ந்திருந்த மனைவி காமாட்சியை ஒரு பார்வை பார்த்தார்.

    குலோப்ஜாமுனை வெட்டப் போறீங்க. அதற்கு என்ன, இப்படி ஒரு பார்வை என்று கேட்டு இடது தோளில் இடித்துக் கொண்டாள் காமாட்சி.

    அவர்களுக்கு அருகே அசட்டுப் பரவசமுடன் அழகே ஓவியமாய், சங்கீதா... இன்றைய மாலைப் பொழுதின் இன்ஸ்டன்ட் கதாநாயகி,

    என்னடி… இன்னும் அவாளைக் காணோம்? மகளைப் பார்த்து அம்மா கேட்க, மம்மி... வெயிட் பண்ண வெக்கறதிலே ஒரு த்ரில் இருக்கு இல்லையா? என்று தன் செர்ரிப் பழ உதடுகளைத் திறந்தாள் சங்கீதா.

    ஸ்… உங்க காதல் வெயிட்டிங் சமாசாரம் வேற, என்னமோ வித்தியாசமா செய்யணுமேன்னு, ஹோட்டலிலே பெண் பார்க்கிற படலம்... ஈஸ்வரன் மெதுவாக ஸ்பூனை எடுத்தார். நாக்கில் நீர் சுரந்தது… ஆரம்பிச்சுடலாமா?

    காமாட்சி ஒரு சுடு பார்வை வீசினாள்.

    ஏன் இப்படிப் பறக்கறீங்க? பிள்ளை வீட்டுக்காராளும் வந்துடட்டுமே... அப்புறமா சாப்பிடலாம். சட்டென்று காமாட்சி ஸ்பூனை எடுத்துக் கொண்டு விட்டாள்.

    ‘பெண்ணாதிக்கம் ஒழிக’ என்று மனசுக்குள் தேர்தல் மைக் பேச்சு போல் அலறிவிட்டு ஹி... ஹி... நீ சொன்னா சரிதான். இன்னிக்கு எனக்கு ஒரு ஜாமுன்தானே? ஷுகர் வேற. என்று முனகினார்.

    அந்த டிரைவ் இன் ஹோட்டலில் வழக்கம் போல மாலைக் கூட்டம். ஸ்கூட்டர்களும், கார்களும் அணிவகுந்து நின்றிருந்தன.

    சில கார்கதவுகளில் ட்ரேக்கள் பொருத்தப்பட்டு வெஜிடபிள் கட்லெட், மசால்தோசை என்று அடுக்கப்பட்டிருந்தன. அப்போது அவன் வந்தான்.

    வாங்க... வாங்க.... மிஸ்டர் சந்திரன் என்று சங்கீதாவே வரவேற்பு அளித்தாள், காதலனுக்கு

    நல்ல ராஜாவாட்டம் சிவப்பு. ஸ்பிரிங் சுருள் முடி… நெற்றியிலே விபூதிக் கீற்று. மூக்குக்குக் கீழே அது என்ன பட்டை மீசை? ச்சே ஜோரா, கட்டம் போட்ட சட்டையை பேண்ட்டில் செருகியிருக்கான். ஸ்கூட்டரை ஓரமா நிறுத்திவிட்டு பாண்ட், சட்டையை அட்ஜெஸ்ட் பண்ணிக்கொண்டு. நிதானமாக வர்றான். படபடப்பு இல்லை.

    இப்படி ஓடிற்று காமாட்சியின் எண்ணங்கள்.

    திஸ் ஈஸ் மை ஃபாதர் மிஸ்டர் கே.ஆர்.ஈஸ்வரன். ‘கே’ ஃபார் கும்பகோணம், ஆர், ஃபார் ராமசாமி. என் தாத்தா பேர். டாடி... திஸ் ஈஸ் மிஸ்டர் சந்திரன். பி.ஈ, எம்.எஸ், ஸாஃப்ட்வேர் இன்ஜினீயர்... என்று ஸாஃப்டாக அறிமுகம் செய்தாள்.

    ஈஸ்வரனும், சந்திரனும் கை குலுக்கிக் கொண்டனர். சந்திரன் கையின் மிருதுத்தன்மை இவருக்குப் பிடித்திருந்தது. ‘மௌஸ்’ தொட்டுத் தொட்டு, என்ன சாஃப்ட் ஹேண்ட்ஸ்!

    ம்... இவங்கதான் என் அம்மா. திருமதி காமாட்சி ஈஸ்வரன். சீஃப் கண்ட்ரோலர் எங்க குடும்பத்துக்கு. அம்மா! இவர்தான் மிஸ்டர் சந்திரன்…

    காமாட்சி ஸ்பூன் கையுடனேயே, நமஸ்காரம் சொன்னாள். ஸ்பூனைக் கீழே வைத்தால் கணவர் லபக்கிவிடுவாரோ என்ற பயம்!

    ஈஸ்வரன் ஆசையுடன் மனைவியிடமிருந்து ஸ்பூனைப் பெற்றுக் கொண்டார். கண்ணாடி கப்பில், உலக உருண்டையாக இருந்த குலோப்ஜாமுனை

    Enjoying the preview?
    Page 1 of 1