Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolaikku Oru Passport
Kolaikku Oru Passport
Kolaikku Oru Passport
Ebook100 pages37 minutes

Kolaikku Oru Passport

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல ஆண்டுகளுக்கு முன்னால் 'குமுதம்' அரசு கேள்வி பதில் பகுதி!
அதில் ஒரு கேள்வி பதில் இது! கேள்வி: பாஸ்போர்ட்', 'விசா' என்ன வித்தியாசம்?
பதில்: நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்களுக்குக் கோடை விடுமுறை வந்துவிட்டது. விடுமுறைக்கு பெங்களூரில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போக ஆசைப்படுகிறீர்கள்! நீங்கள் ஊருக்கு போவதற்கு அப்பா அனுமதிக்க வேண்டுமே? அப்பா அனுமதி கொடுத்து விட்டார்!
அதுதான் ‘பாஸ்போர்ட்'
சரி! நீங்கள் பெங்களூர் வருவதை உங்கள் அத்தை விரும்ப வேண்டுமே! அத்தையும் உங்களை வரச் சொல்லிவிட்டார்! அதுதான் 'விசா'.
இந்த கேள்வி, பதில் குமுதம் பத்திரிகையில் வந்தபோது எனக்கு 15-16 வயது இருக்கும்!
அப்போதே என் மனதில் பாஸ்போர்ட், விசா பற்றிய ஒரு தெளிவு வந்தது!
பெரிய விஷயத்தை எளிமையாக சொல்வதில் கில்லாடி குமுதம் ஆசிரியரும் உண்மையான ‘அரசு'வுமான திரு எஸ்.ஏ.பி.
'குமுதம்' பத்திரிகை என்பது நான்கு கதர் சட்டை துறவிகள் சேர்ந்தது. கர்ம யோகம் முதல் காமசூத்திரா வரை ஒன்றுகூட விரசமில்லாமல், அழகாக பலருக்கும் சொல்லிக்கொடுத்த ஒரு சுவாரஸ்ய மடம்
'ஆனந்த விகடன் துவங்கப்பட்டது 1926ம் வருடம்! 'குமுதம்' துவங்கப்பட்டது 1949ம் வருடம்!
விகடனைவிட குமுதம் வயதில் 23 இளையதாக இருந்தாலும், வெகு வேகமாக விற்பனையில் விகடனை முந்திவிட்டது!
இதற்குக் காரணம் அதன் விறுவிறுப்பு! சுறுசுறுப்பு! விகடன் சிவாஜி என்றால் குமுதம் எம்.ஜிஆர் எனலாம்!
சிவாஜியில் நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் வெகுஜனம் விரும்பியது எம்.ஜிஆரைத்தானே!
எம்.ஜி.ஆர் படத்தை பார்க்கும்போது படு சுவாரஸ்யமாக இருக்கும்!
உதாரணமாக 'எங்க வீட்டுப் பிள்ளை படம்!
படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது! ஆனால் படத்தை பார்த்து முடித்து ஆற அமர யோசித்தால், இப்படியெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? ஏன் இப்படி காதில் பூ? என்றெல்லாம் நமக்குள் இருக்கும் 'அறிவிஜீவி' காரன் எட்டிப் பார்த்து கேள்வி கேட்பான்!
ஆனாலும் அடுத்த முறை படத்தை ஏதாவது சேனலில் ஒளிபரப்பினால் அந்த அறிவுஜீவிகாரனை விரட்டியடித்து விட்டு படத்தை பார்ப்போம்!
அந்த மாதிரி எழுத்துப்பூர்வமான ஓர் 'எங்க வீட்டுப் பிள்ளை’ தான் பாமா கோபாலனின் 'கொலைக்கு ஒரு பாஸ்போர்ட்' நாவல்!
23.0694 வருடம் மாலைமதியில் வந்த நாவல் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ள மெட்ரோ ரயில் எனலாம்! வேகமான, அதே சமயம் சுகமான வசதியான பயணம் மாதிரிதான் இந்த நாவலை படிக்கும் அனுபவமும்! பாமா கோபாலன் ஒரு சைலன்ட் சகலகலா வல்லவர் என்பேன்!
ஆழமான அதே சமயம் தன்னை எளிமையாக காட்டிக்கொள்ளும் ஒரு முதிர்ச்சியான மனிதர்!
அவருடைய நகைச்சுவை என்பது பட்டாசு மாதிரி உடனே வெடிக்காது! அடுப்பில் தாளிக்கப் போடும் கடுகைப் போல! கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். எப்போது கொதித்து வெடிக்கும் என்பது தெரியாது! அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.
சட்டென்று ஒரு ஜோக் வெடிக்கும்! ஆனால் சற்று நின்று யோசித்தால்தான் அந்த நகைச்சுவையின் ஆழமே புரியும்! பழுத்த ஆன்மிகப் பழம் மாதிரி காட்சியளிக்கும் இந்த மனிதருக்குள் ஒரு நகைச்சுவையான 'வாத்ஸாயனன்' ஒளிந்து கொண்டிருப்பதை இந்த நாவல் முழுவதும் பார்க்கலாம்
கூடவே ஒரு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல் படிக்கிற படபடப்பு! ஒவ்வொரு கதாபாத்திரத்துடனேயே நாமும் பயணிக்கிறோம்!
கூடவே அந்த பாத்திரங்களின் மன மாறுதலை பார்க்கும் போது எரிச்சலும் வருகிறது!
முரளி - அஞ்சனா!
முரளி- கோதை!
இளங்கோ-அஞ்சனா!
சில்மிஷங்களும், அத்துமீறல்களும் வயதைக் குறைத்து ஜன்னலுக்கு வெளியே இந்த வயதிலும் கண்களை அலைபாய விடுகிறது.
திலீபன்-ஜெகன் பாத்திரங்கள் வித்யாசமானவை!
அந்தக் கொலை சம்பவம் ஓர் அற்புதக் கற்பனை!
யார் அந்த இளைஞன்?
கால் யார் அந்தப் பெண்?
ஏன் இந்த இருவரும் அந்த அறையில் கொலை செய்யப் பட்டார்கள்?
புத்தகத்தைப் படித்து முடித்தே ஆக வேண்டும் என்கிற ஆவலை இந்த கேள்வியே தூண்டுகிறது. வழக்கமாக நாவல் எழுதும்போது வலிந்து தங்கள் கற்பனை வளத்தை வர்ணனையில் திணிப்பார்கள். இந்தப் பாசாங்கெல்லாம் பாமா கோபாலனிடம் இல்லை! போகிற போக்கில் அனாயாசமாக அந்த இடத்திற்கு தேவையான அளவோடு இளடை துள்ளலோடு தன் கற்பனையைச் சிதற விடுகிறார்!
முதல் அத்தியாயத்தில் அந்தக் காலை வேளைடை சொல்லும் விதம். 'மணி ஒன்பது அடித்தது. காலை வேளை அவசரம். தண்ணி பிடித்துக் கொள்வதிலிருந்து, ஸ்கூல் போகும் பெண்களின் தலைப் பின்னலில் போராடு தாய்மார்கள், யூனிபார்மில் போகும் சிறுவர்கள், ஸ்கூல் பாட்டு போடலியே என்று சிணுங்குவது. அதே க
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580128505090
Kolaikku Oru Passport

Read more from Bhama Gopalan

Related to Kolaikku Oru Passport

Related ebooks

Related categories

Reviews for Kolaikku Oru Passport

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolaikku Oru Passport - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    கொலைக்கு ஒரு பாஸ்போர்ட்

    Kolaikku Oru Passport

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    முன்னுரை

    அன்புள்ள ஆசிரியருக்கு என்று கடிதங்கள் எழுத ஆரம்பித்தபோது வயது 19. பிரசுரமான பிறகு உற்சாகத்தில் தகவல் துணுக்குள், ஜோக்ஸ், என்று படிப்படியாக வளர்ந்து, சின்னச் சின்ன கட்டுரைகளை வெளிநாட்டு ஆங்கில இதழ்களிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ததும் - பத்திரிகைகளின் ஏகோபித்த ஆதரவுடன் - உற்சாகம் பொங்கியது.

    பிறகு கதைகள் எழுத ஆரம்பித்து, குமுதத்தில் ஒரு பக்கக் கதைகளுக்கு முன்னுரிமை என்று நானாகப் புரிந்துகொண்டு எழுதித் தள்ளினேன்.

    1985 ஆம் ஆண்டு அமுதசுரபியில் சுதந்திரப் பத்திரிகையாளராகப் பணியில் சேர்ந்தேன். ஒன்றரை ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன். பிறகு எதேச்சையாகக் குமுதத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பியது இறை அருள் என்றே சொல்ல வேண்டும். அதன் விளைவாகக் குமுதத்திலேயே பணிபுரியுமாறு அழைப்பு வந்தது. 2002 வரை அங்கு பணிபுரிந்தது என் பொற்காலம்!

    பேட்டிகள், கட்டுரைகள், மாலைமதி நாவல், ஏராளமான சிறுகதைகள் என்று எழுதித் தள்ள முடிந்தது.

    அதற்கு முன்பே 1980 ஆம் ஆண்டு என் திருமணப் பத்திரிகையும், நான் எழுத்தாளரின் கணவனாகப் போகிறேன் என்ற தகவலும் குமுதம் பத்திரிகை மூலம் பிரபலமாயிற்று. மனைவியாக வாய்த்தவளின் மிகச் சிறந்த ஒத்துழைப்பு காரணமாக சிறப்பு நிருபராக ஆனேன்! பிறகு எடிட்டோரியல் கன்சல்டண்ட் என்னுமளவுக்கு உயந்தேன். குமுதம் பக்தி ஸ்பெஷலில் பணியாற்றவும் முடிந்தது இறைவன் செயலே.

    ஆதரவு தந்து ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவுக்கும், சக நிருபர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

    நன்றியுடன்

    பாமா கோபாலன்.

    வாழ்த்துரை

    பல ஆண்டுகளுக்கு முன்னால் 'குமுதம்' அரசு கேள்வி பதில் பகுதி!

    அதில் ஒரு கேள்வி பதில் இது! கேள்வி: பாஸ்போர்ட்', 'விசா' என்ன வித்தியாசம்?

    பதில்: நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்களுக்குக் கோடை விடுமுறை வந்துவிட்டது. விடுமுறைக்கு பெங்களூரில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போக ஆசைப்படுகிறீர்கள்! நீங்கள் ஊருக்கு போவதற்கு அப்பா அனுமதிக்க வேண்டுமே? அப்பா அனுமதி கொடுத்து விட்டார்!

    அதுதான் ‘பாஸ்போர்ட்'

    சரி! நீங்கள் பெங்களூர் வருவதை உங்கள் அத்தை விரும்ப வேண்டுமே! அத்தையும் உங்களை வரச் சொல்லிவிட்டார்! அதுதான் 'விசா'.

    இந்த கேள்வி, பதில் குமுதம் பத்திரிகையில் வந்தபோது எனக்கு 15-16 வயது இருக்கும்!

    அப்போதே என் மனதில் பாஸ்போர்ட், விசா பற்றிய ஒரு தெளிவு வந்தது!

    பெரிய விஷயத்தை எளிமையாக சொல்வதில் கில்லாடி குமுதம் ஆசிரியரும் உண்மையான ‘அரசு'வுமான திரு எஸ்.ஏ.பி.

    'குமுதம்' பத்திரிகை என்பது நான்கு கதர் சட்டை துறவிகள் சேர்ந்தது. கர்ம யோகம் முதல் காமசூத்திரா வரை ஒன்றுகூட விரசமில்லாமல், அழகாக பலருக்கும் சொல்லிக்கொடுத்த ஒரு சுவாரஸ்ய மடம்

    'ஆனந்த விகடன் துவங்கப்பட்டது 1926ம் வருடம்! 'குமுதம்' துவங்கப்பட்டது 1949ம் வருடம்!

    விகடனைவிட குமுதம் வயதில் 23 இளையதாக இருந்தாலும், வெகு வேகமாக விற்பனையில் விகடனை முந்திவிட்டது!

    இதற்குக் காரணம் அதன் விறுவிறுப்பு! சுறுசுறுப்பு! விகடன் சிவாஜி என்றால் குமுதம் எம்.ஜிஆர் எனலாம்!

    சிவாஜியில் நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால் வெகுஜனம் விரும்பியது எம்.ஜிஆரைத்தானே!

    எம்.ஜி.ஆர் படத்தை பார்க்கும்போது படு சுவாரஸ்யமாக இருக்கும்!

    உதாரணமாக 'எங்க வீட்டுப் பிள்ளை படம்!

    படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது! ஆனால் படத்தை பார்த்து முடித்து ஆற அமர யோசித்தால், இப்படியெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? ஏன் இப்படி காதில் பூ? என்றெல்லாம் நமக்குள் இருக்கும் 'அறிவிஜீவி' காரன் எட்டிப் பார்த்து கேள்வி கேட்பான்!

    ஆனாலும் அடுத்த முறை படத்தை ஏதாவது சேனலில் ஒளிபரப்பினால் அந்த அறிவுஜீவிகாரனை விரட்டியடித்து விட்டு படத்தை பார்ப்போம்!

    அந்த மாதிரி எழுத்துப்பூர்வமான ஓர் 'எங்க வீட்டுப் பிள்ளை’ தான் பாமா கோபாலனின் 'கொலைக்கு ஒரு பாஸ்போர்ட்' நாவல்!

    23.0694 வருடம் மாலைமதியில் வந்த நாவல் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ள மெட்ரோ ரயில் எனலாம்! வேகமான, அதே சமயம் சுகமான வசதியான பயணம் மாதிரிதான் இந்த நாவலை படிக்கும் அனுபவமும்! பாமா கோபாலன் ஒரு சைலன்ட் சகலகலா வல்லவர் என்பேன்!

    ஆழமான அதே சமயம் தன்னை எளிமையாக காட்டிக்கொள்ளும் ஒரு முதிர்ச்சியான மனிதர்!

    அவருடைய நகைச்சுவை என்பது பட்டாசு மாதிரி உடனே

    Enjoying the preview?
    Page 1 of 1