Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mutham - Oru Diary - Oru Kalyanam
Oru Mutham - Oru Diary - Oru Kalyanam
Oru Mutham - Oru Diary - Oru Kalyanam
Ebook158 pages1 hour

Oru Mutham - Oru Diary - Oru Kalyanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னையும் பாலாவையும் பார்ப்பவர்கள் “நெஜமாகவே ரெண்டு பேருக்குமே “எழுதத் தெரியுமா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். எழுதத் தெரிந்த இரண்டு பேர் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்பதே பலரது சந்தேகம். எங்களை விடுங்கள், தங்கள் எழுத்தில் தனித்தனி நடையழகுடன் கணவனும், மனைவியும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்க முடியும் என்று அசத்திக்கொண்டிருக்கும் வேதா கோபாலனையும், பாமா கோபாலனையும் பார்த்து பிரமியுங்கள்.
அந்த தம்பதியுடன் எழுத்தாளர்களாக அறிமுகம் துவங்கி, நண்பர்களாக அடர்த்தியாகி, இன்றுவரை ஆரோக்கியமாக வளர்கிறது எங்கள் உறவு.
சிறியவர், பெரியவர், முதியவர், புதியவர் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி, யாரையும், எதற்கும் பாராட்டும் அவர்களுடைய பெரிய இதயங்களைக் கண்டு நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இங்கே பதிய வந்தது அதைப் பற்றி அல்ல. உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகக்கூட வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.
மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமானபின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமா கோபாலன்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடை போல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.
தமிழ்ப் பதிப்பகங்களில் தலைமையானதோர் இடத்தில் இருக்கும் அல்லயன்ஸ் பதிப்பகம் இக்கதையைப் பதிப்பதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும் இவருக்கு?
பாமா, ஜமாய்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஜமாயுங்கள்.
மிக்க அன்புடன்,
சுரேஷ் (சுபா)
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580128505123
Oru Mutham - Oru Diary - Oru Kalyanam

Read more from Bhama Gopalan

Related to Oru Mutham - Oru Diary - Oru Kalyanam

Related ebooks

Reviews for Oru Mutham - Oru Diary - Oru Kalyanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Mutham - Oru Diary - Oru Kalyanam - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    ஒரு முத்தம் - ஒரு டைரி - ஒரு கல்யாணம்

    Oru Mutham - Oru Diary - Oru Kalyanam

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    முன்னுரை

    சிறுகதைகளையே எழுதிக்கொண்டிருந்த வேளையில், நாவல் எழுதிப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் மனதில் முளைவிட்டது. 1977ம் ஆண்டு இறுதியில் குமுதம் 'மாலைமதி' என்ற மாத நாவலை வெளியிட்டனர். சுமார் 106 பக்கங்கள் நாவல் மட்டும். தொடர்ந்து படித்துக்கொண்டே வந்தேன்.

    எப்பப் பாரு கதைகளை மட்டும் எழுதறீங்க; ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது? என்று, அப்போது எங்கள் பேட்டையிலேயே குமுதத்துக்குக் கதைகளை எழுதிவந்த பெண் எஸ்.வேதாவைக் கேட்டேன். சுறுசுறுப்பின் மொத்த வடிவமாக இருக்கும் 23 வயதான அவர், உடனேயே செயலில் இறங்கி விட்டார்.

    விளைவு?

    'நீ வெறும் பெண்தான்' என்ற தலைப்பில் அவருடைய நாவல் வெளியாகிவிட்டது!

    மாலைமதியில் 1977ல் முதல் நாவலாக அமரர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய 'இன்னொருத்தி' வந்தபோது, தொடர்ந்து ஜ.ரா.சுந்தரேசன், புனிதன், சுஜாதா, போன்ற பிரபலங்களின் பதிலடி தருவதுபோல், வேதா அவர்களின் நாவல் பிரசுரமானபோது, ஆச்சர்யத்தின் உச்சிக்குப் போனேன்.

    ஆஹா! என் முதல் நாவலும் விரைவில் வர வேண்டும் என்ற ஆவலில் 1980 ஜனவரி பொங்கல் திருநாளில்

    பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து ஐந்து நாட்கள். எழுத்து, எழுத்து... ஜனவரி மூன்றாம் வாரம் நாவலை குமுதம் ஆபீஸில் சேர்த்துவிட்டேன். அப்... பாடி!

    பிரசுரமாகும் மாலைமதியின் பின் அட்டையிலோ, உள்பக்க அட்டையிலோ அடுத்த மாத மாலைமதியின் விளம்பரம் இருக்கும். பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம், நான் ஆபீஸில் இருக்கும் போது, என் தந்தை டெலிபோனில் கூப்பிட்டார்.

    குமுதம் ஆபீஸிலிருந்து கடிதம் வந்து இருக்கிறது. உன்னை பத்திரிகை ஆபீஸுக்கு வரச்சொல்லி...

    உடம்பில் இறக்கைகள் இல்லாத குறை! ஆபீஸில் பர்மிஷன் கேட்டு, (எழும்பூரில் ஆபீஸ்) பஸ் பிடித்து, புரசைவாக்கம் சென்றேன்.

    ஏற்கெனவே, குமுதத்தில் சில சிறுகதைகள் பிரசுரம் ஆகியிருந்தன. (முதல் கதை 1969ல் மெரீனாவில் பேசுவது எல்லாம் மேரேஜில் முடியுமா?)

    மதியவேளை. சுமார் மணி 3 இருக்கும். வாட்ச்மேன், டெலிபோன் ஆபரேட்டர் அனுமதி பெற்று, திரு. ரா.கி. ரங்கராஜனைச் சந்தித்தேன்.

    வந்த விவரம் சொன்னேன்.

    அட! நேற்றுதான் லெட்டர் போட்டோம். பலே. உங்கள் நாவல் எடிட்டரால் படிக்கப்பட்டு விட்டது. அது சம்பந்தமாக... என் மனம் குதி போட்டது. முகத்தில் மலர்ச்சி.

    அவர், மேசை மீது பரப்பியிருந்த கதைகளின் நடுவிலிருந்து, எனது நாவலை எடுத்தார்.

    கதையின் கடைப் பகுதியில் பரபரப்பு இருக்க வேண்டியதுதான். ஆனால், கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை எழுதினால், வாசகர்களுக்கு சுவாரசியம் கூடும். அது முக்கியம். இன்னிக்கு வியாழக்கிழமை. நாளை வெள்ளி மாலை 5 மணிக்குள் எழுதித் தந்துவிடுங்கள். இந்தாருங்கள், பக்கம் 79லிருந்து உங்கள் கையெழுத்துப் பிரதியை எடுத்துச் செல்லுங்கள். ஐந்து, ஆறு பக்கங்கள் அதிகமானால் பாதகமில்லை என்று சொல்லி நாவலின் கடைசிப் பகுதியைக் கொடுத்தார்.

    என் மனதுக்குள் பரபரப்பு. நாளை மாலைக்குள் சுமார் 40 பக்கங்கள்!

    சரி சார்... வாங்கிக் கொண்டேன்.

    நாளை மாலை 5 மணிக்குள் வரணும். மார்ச் மாத மாலைமதி இது. என்றார்!

    இனிய அதிர்ச்சி.

    மீண்டும் என் அலுவலகம் திரும்பி, மாலை சுமார் 7 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன். மின் வண்டியில் வரும் போதெல்லாம் நாவலே மூளைக்குள் சடுகுடு விளையாடியது.

    அப்போது திரு.ரா.கி. ர. சொன்ன வரிகள் ரீப்ளே ஆனது.

    ஒருவன் தப்பிக்க காம்பவுண்டு சுவரில் ஏறிவிட்டான். அவன் மனதில் குதிக்கலாமா, வேண்டாமா? பின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இப்படித்தானே யோசிப்பான்? ஒரு பிரச்னை என்று வரும்போது அப்படி யோசிப்பதுதான் இயல்பு! பாயின்டைப் பிடிச்சுட்டீங்களா?

    வீட்டில் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, சாப்பிட்ட பிறகு எழுத உட்கார்ந்தேன்.

    முதலில் அவரிடமிருந்து வாங்கி வந்த நாவலின் இறுதிக் கட்டப் பகுதியை ஆழ்ந்து படித்தேன். அதற்கே அரை மணி நேரம் ஆனது!

    இரவு சுமார் 11.30 மணிக்கு எழுதி முடித்தேன். இரு முறை படித்துப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது.

    வெள்ளிக்கிழமை காலை, போன் மூலம் என் ஆபீஸுக்கு அனுமதி கேட்டுக்கொண்டு, நேரே குமுதம் அலுவலகம் சென்று விட்டேன்.

    திரு. ரா.கி.ரவைச் சந்தித்து, புதிதாக எழுதப்பட்டிருந்த பகுதியைக் கொடுத்தேன்.

    மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தார். சில இடங்களில் உன்னிப்பாய் படித்தார்.

    பேஷ்... பேஷ்... ம்... நாவலின் மையக்கருவைச் சொல்லுங்க என்றார்.

    தன்னை அவமானப்படுத்திய பெண்ணை இருட்டில் முத்தமிடுகிறான் வில்லன். அதைப் பயன்படுத்தி அவளுடைய திருமணத்தைத் தடுக்கப் பாடுபடுகிறான்..

    பலே பலே. ஒரு தலைப்பு சொல்லுங்கள். சில வினாடிகள். மௌனம். ஒரு முத்தம், ஒரு டைரி, ஒரு கல்யாணம்.

    ரொம்ப நல்லா இருக்கு... அப்போது அறைக்குள் திரு. பால்யூ நுழைந்தார்.

    பால்யூ! மார்ச் மாத மாலைமதி ஆசிரியர் இவர்தான். 'மாயா'விடம் அட்டைப் படத்துக்கு காட்சி சொல்லிடுங்க.

    உற்சாக ஊற்று பெருகிற்று. இப்படி உருவான நாவல் இது.

    நீங்கள் எழுதின நாவல்களையும் பிரசுரம் செய்து, புத்தகமாக வெளியிடுகிறேன் என்று அன்புடன் சொன்ன அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

    35 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவலை, நூற்றாண்டுகண்ட நிறுவனத்தார் பிரசுரம் செய்வது மிகப் பெருமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. படியுங்கள், ரசியுங்கள்.

    -பாமா கோபாலன்

    வாழ்த்துரை

    என்னையும் பாலாவையும் பார்ப்பவர்கள் நெஜமாகவே ரெண்டு பேருக்குமே எழுதத் தெரியுமா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். எழுதத் தெரிந்த இரண்டு பேர் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்பதே பலரது சந்தேகம். எங்களை விடுங்கள், தங்கள் எழுத்தில் தனித்தனி நடையழகுடன் கணவனும், மனைவியும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்க முடியும் என்று அசத்திக்கொண்டிருக்கும் வேதா கோபாலனையும், பாமா கோபாலனையும் பார்த்து பிரமியுங்கள்.

    அந்த தம்பதியுடன் எழுத்தாளர்களாக அறிமுகம் துவங்கி, நண்பர்களாக அடர்த்தியாகி, இன்றுவரை ஆரோக்கியமாக வளர்கிறது எங்கள் உறவு.

    சிறியவர், பெரியவர், முதியவர், புதியவர் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி, யாரையும், எதற்கும் பாராட்டும் அவர்களுடைய பெரிய இதயங்களைக் கண்டு நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.

    இங்கே பதிய வந்தது அதைப் பற்றி அல்ல. உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகக்கூட வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.

    மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமானபின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமா கோபாலன்.

    ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடை போல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.

    தமிழ்ப் பதிப்பகங்களில் தலைமையானதோர் இடத்தில் இருக்கும் அல்லயன்ஸ் பதிப்பகம் இக்கதையைப் பதிப்பதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும் இவருக்கு?

    பாமா, ஜமாய்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஜமாயுங்கள்.

    மிக்க அன்புடன்,

    சுரேஷ் (சுபா)

    ஒரு முத்தம் - ஒரு டைரி - ஒரு கல்யாணம்

    1

    'ஆசையைப் பாரு ஆசையை...' என்று அவள் அழகு காட்டி, முகம் சுளித்தால் ஓவியத்தில் அவளை வரையக் கைகள் பரபரக்கும். இதயம் துடிதுடிக்கும்.

    'அடேங்கப்பா! அந்தப் படத்திலே அவ்வளவு செக்ஸா?'

    Enjoying the preview?
    Page 1 of 1