Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ippadikku...
Ippadikku...
Ippadikku...
Ebook89 pages32 minutes

Ippadikku...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கமுதம் எழுதும் வழக்கம் இளைய தலைமுறையினருக்கு எழுத்து திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி மேலும் ஆழமாக சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் உதவுகிறது. கமதம் எழுதுவதால் அவர்களின் மன அழுத்தம் குறையவும் உதவுகிறது.

நேசிப்பவரிடமிருந்து எதிர்பாராத கடிதத்தைத் திறக்கும் உணர்வை கற்பனை செய்து பாருங்கள்.

எங்களின் நான்காவது புத்தகம் "இப்படிக்கு.." உலக/தேசிய அஞ்சல் தினத்தை கொண்டாடும் வகையில் எழுதப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன், நீண்ட கதைகளாய், வெவ்வேறு தலைப்புகளுடன் கடிதங்களை எழுதினோம்.

"மலரும் நினைவுகள்", "கடவுள் அமைத்து வைத்த மேடை", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" ஆகியவை சில தலைப்புகள்.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580168010467
Ippadikku...

Read more from Uma Aparna

Related to Ippadikku...

Related ebooks

Reviews for Ippadikku...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ippadikku... - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இப்படிக்கு...

    Ippadikku...

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    கடித இலக்கியம் என்றும் வாழும்!

    ருக்மணி வெங்கட்ராமன்

    வனஜா முத்துக்கிருஷ்ணன்

    பத்மாராகவன்

    உஷா கண்ணன்

    ஜெயந்தி பத்ரி

    சுஜாதா கணேஷ்

    உமா ஸ்வாமிநாதன்

    ராஜேஸ்வரி ஐயர்

    கடித இலக்கியம் என்றும் வாழும்!

    ஆதியில் மனிதன் தகவல் தொடர்புக்கு சுவர்களிலும் மரங்களிலும் கீறினான். பின் புறாக்கள் மூலம் தகவல் தொடர்பு வளர்ந்தது. ஒருவகை நாய்கள் தகவல் தொடர்புக்குப் பழக்கப்படுத்தப்பட்ட தகவலும் உண்டு. தகவல்தொடர்பு வளர்ந்தவிதம் தனிப் புத்தகமாக எழுதப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவில் ஆங்கிலேய அரசு வந்தபின் ஏற்பட்ட முக்கியமான திருப்பங்களில் ஒன்று தபால் துறை. தபால் துறையை அறிமுகப்படுத்திவிட்டு ஆங்கிலேயர்கள் சென்றார்கள். தபால் எழுதும் பழக்கம் நீண்ட ஆண்டுகள் நம்மை அரசாண்டது.

    பதினைந்து பைசாவுக்கு விற்கப்பட்ட போஸ்ட் கார்டிலும், 25 பைசாவுக்கு விற்கப்பட்ட இன்லண்ட் லெட்டரிலும் (இங்கிலாந்த் லெட்டர் என்று பலர் உச்சரிப்பார்கள்!) எத்தனையெத்தனை விஷயங்களின் பரிமாற்றம் நடந்திருக்கும் என்பதற்குக் கணக்கேயிராது. நலவிசாரிப்பில் தொடங்கி, திருமண நிச்சயதார்த்தம், பழகிய நினைவுகள் அதுஇதுவென்று பலரின் வாழ்க்கைச் சரிதமே கடிதங்களுக்குள் அடங்கியிருக்கும்.

    இந்த விஷயங்களெல்லாம் வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகமாகாமலே காலாவதியாகிவிடுமோ என்றோர் எண்ணம் (பயமென்றும் சொல்லலாம்) எனக்குள் இருந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கமானது கம்ப்யூட்டர் வந்தபின், மெயில் அனுப்ப ஆரம்பித்ததும் டைப் செய்கிற வழக்கமானது. இன்றோ… வாட்ஸ் ஆப்பில், அதுவும் டைப் செய்யக்கூட சோம்பல் பட்டு குரல் செய்தியாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இளைய தலைமுறையினர் - ஏன், பல முதிய தலைமுறையினரும்கூட. இப்படி, வருங்காலத் தலைமுறையைக் கையினால் எழுதவும், டைப் செய்யவும்கூட மனமற்ற முழுச் சோம்பேறிகளாக்கி வருகிறது விஞ்ஞானத்தின் வளர்ச்சி.

    இத்தகைய ஒரு காலச்சதுரத்தில்தான் நான் பேக்கிடேர்ம் டேல்ஸ் எழுத்தாளர்கள் எழுதிய ‘இப்படிக்கு’ என்ற தலைப்பிலான கதைகளைப் படிக்க நேர்ந்தது. ருக்மணி வெங்கட்ராமன், வனஜா முத்துக்கிருஷ்ணன், பத்மா ராகவன், உஷா கண்ணன், ஜெயந்தி பத்ரி, சுஜாதா கணேஷ், உமா ஸ்வாமிநாதன், ராஜேஸ்வரி ஐயர் என்கிற அஷ்டலட்சுமிகள் எழுதிய சிறுகதைகள். அத்தனையும் கடித வடிவில் எழுதப்பட்ட சிறுகதைகள். சிலர் கதைக்குள் கதையாக ஒன்றிரண்டைக் கூட கடிதங்களில் சொல்லியிருந்தார்கள்.

    கடிதம் என்பது என்ன வகையிலான வடிவத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டுமோ, நாம் எப்படியெல்லாம் எழுதியிருப்போமோ அந்த வடிவத்தைக் கைவிடாமல் கச்சிதமாக எழுதப்பட்டிருந்தன ஒவ்வொரு கதையும். இந்தக் கதைகளை எழுதியவர்கள் அனைவருமே சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த இயல்புத் தன்மை நீர்த்துப் போகாமல் எளிமையாக, அழகாகக் கைவந்திருக்கிறது.

    என் அச்சம் இப்போது ஆனந்தமாக மாறியிருக்கிறது. கடிதக் கலை அழிந்துவிடாது என்றும், வாழும் என்கிற நம்பிக்கையும் உதயமாகியிருக்கிறது. இதுபோன்ற புத்தகங்களைப் படிக்கும் இளைய தலைமுறையினர் மனங்களில் ‘நாமும் கடிதம் எழுதிப் பார்த்தால் என்ன?’ என்றொரு எண்ணம் தோன்றாமலா போய்விடும்…? நடக்கட்டும் அதுவும்.

    கதைகளை எழுதிய எண்மருக்கும், இப்படியொரு அழகான சிந்தனையைக் கருவாக்கி அவர்களை எழுதவைத்த பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    கணேஷ் பாலா.

    (எழுத்தாளர்)

    ருக்மணி வெங்கட்ராமன்

    தமிழின் மீதும், தமிழ் புத்தகங்கள் மீதும் தீரா பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். நுட்பமான எழுத்துக்கு சொந்தக்காரர்.

    ‘பேக்கிடேர்ம் டேல்ஸ்’ நிறுவனத்தினர் மூத்த குடிமக்கள் எண்மரை இணைத்து வெளியிட்ட தொகுப்பு நூல்கள் ‘வல்லமை தாராயோ’, ‘சுட்டும் விழிச்சுடரே’ ஆகிய இரண்டும் புத்தகங்களிலும் இவரது கதைகள் இடம் பெற்றுள்ளன.

    வெளியிடப் போகும் தொகுப்பு நூல் ‘ஆத்திச்சூடி கதைகள்’ புத்தகத்திலும், உலக அஞ்சல் தினத்தை கொண்டாடும் வகையில், வெளியிட இருக்கும் ‘இப்படிக்கு…’ என்ற சிறுகதை தொகுப்பிலும், இவரது கதைகள் உள்ளன.

    மனதின் ஏக்கம்

    சென்னை -88,

    04/10/23.

    என் பிரிய தோழி கலா,

    இங்கு என் குடும்பத்தில் அனைவரும் நலம்.

    நீ எப்படி இருக்க? உன் வீட்டுக்காரர், குழந்தைகள் சௌக்கியமா?

    என் பையனுக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்கிறேன். ஆனால் வரப்போகிற மருமகள் எப்படி இருப்பாளோ? பயமா இருக்கு.

    நல்ல பொண்ணா இருந்தா சொல்.

    அந்த காலத்தில் வெளியே போவதாக இருந்தால் முன்பே மாமியார், மாமனாரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை செய்துவிட்டுதான் வெளியே போவோம். அவங்க சொல்றதைத்தான் செய்வோம். இப்ப அப்படி இல்லை.

    காலம் மாறிவிட்டது. பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். நீயும் உன் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்ச. உனக்கு நல்ல மருமகள்.

    எனக்கு நல்ல மருமகளா, என் பையனுக்கு ஏற்ற பெண்ணா, குடும்பத்தை அனுசரித்து நடந்துக்கிற மருமகளா

    Enjoying the preview?
    Page 1 of 1