Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirakugal Murivathillai
Sirakugal Murivathillai
Sirakugal Murivathillai
Ebook132 pages53 minutes

Sirakugal Murivathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகுகள் முறிவதில்லை என்ற இச்சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் இச்சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பற்பல பிரச்சனைகளை மையமாக கொண்டு எழுதப்பட்டவையே.

இச்சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளில் சில, பிரபல தமிழ் வார இதழ்கள், தமிழ் அமைப்புகள் நடத்திய சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்றவைகள் என்பதனை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக சீர்த்திருத்த கருத்துக்களை உடைய இச்சிறுகதைகளை படித்து பாருங்கள். தங்களின் மேலான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி...!

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580177210862
Sirakugal Murivathillai

Related to Sirakugal Murivathillai

Related ebooks

Reviews for Sirakugal Murivathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirakugal Murivathillai - Thanjai Vasanthalakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிறகுகள் முறிவதில்லை

    (சிறுகதைகள்)

    Sirakugal Murivathillai

    (Sirukadhaigal)

    Author:

    தஞ்சை வசந்தலெட்சுமி

    Thanjai Vasanthalakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-vasanthalakshmi

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    ஆசிரியரைப் பற்றி

    1. நின்றும் கொல்லும் தெய்வம்

    2. சொர்க்கமே என்றாலும்

    3. அன்புள்ள அம்மா அப்பாவுக்கு

    4. கொலுசு

    5. ஆம்பளை புள்ள

    6. அம்மானா அம்மாதான்

    7. சிறகுகள் முறிவதில்லை

    8. வெளிச்சத்தை நோக்கி

    9. அபூர்வ ராகங்கள்

    10. வாழும் வரை போராடு

    வாழ்த்துரை

    எழுத்தாளர் தஞ்சை வசந்தலெட்சுமிக்கு இது ஆறாவது நூல். ஏற்கனவே இவர் இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், குறு நாவல் ஒன்றினை வெளியீடு செய்துள்ளார்.

    சிறகுகள் முறிவதில்லை என்ற இச் சிறுகதை தொகுப்பினில் மொத்தம் பத்து கதைகள் அடங்கியுள்ளன. அனைத்து கதைகளுமே முத்து முத்தான கதைகளாகும். ஒவ்வொரு கதையும் ஒரு செய்தினை நமக்கு கூறுவதாகவே உள்ளது. எளிய நடையில் உள்ள இக் கதைகள் அனைத்தும் படிப்பதற்கு விறுவிறுப்பும், சுவையும் நிரம்பியதாய் உள்ளன.

    1. நின்றும் கொல்லும் தெய்வம் சிறுகதை உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாய் கூறுகின்றது. ஒருவன் செய்த தவறுக்கு பல ஆண்டுகள் கழித்து கூட தண்டனை கிடைக்கும் என கூறும் கதை.

    2. சொர்க்கமே என்றாலும் என்ற கதையில் குழந்தையில்லாத தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதும், இருபது ஆண்டுகள் கழித்து உண்மையான பெற்றோர் வந்து அக் குழந்தையை உரிமை கொண்டாடுவதும், வளர்ப்பு பெண் எடுக்கும் முடிவும் சுவையாக கூறப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் அருமை.

    3. அன்புள்ள அம்மா அப்பாவுக்கு கதை இச் சமூகத்திற்கு மிக அவசியமானது. பெற்றெடுத்த தங்கள் குழந்தைகள் மேல் எவ்வித அன்பும், பொறுப்பும் காட்டாத பணக்கார பெற்றோர்., பணம் இருந்தால் போதும் என வாழ்ந்து வருவதும், பாசத்துக்கு ஏங்கும் அவர்களின் பதின்ம வயது பெண் குழந்தை வாழ்க்கையை வெறுத்து எடுக்கும் முடிவும் மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

    4. கொலுசு என்ற இச் சிறுகதையில் ஒரு ஏழைப் பெண் கொலுசுக்காக தன் சிறு வயதிலிருந்தே ஏங்குவதும், அவளுக்கான கொலுசு கிடைக்கும் போது அதனை அவள் அணிந்து கொள்ள இயலாமல் போகும் நிலையையும் ஆசிரியர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இக் கதையில் ஏழைக் பெண் குழந்தைகளின் மன ஏக்கங்களை அப்பட்டமாக ஆசிரியர் படம் பிடித்து காட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

    5. ஆம்பளைபுள்ள என்ற சிறுகதை பெண் குழந்தைகளை வெறுக்கும் கணவனுக்கு, அவனது மனைவி சாட்டையடி கொடுக்கும் சிறுகதை.

    6. அம்மானா அம்மாதான் சிறுகதை பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது... கற்பிழந்த ஒரு இளம்பெண் மீண்டும் கல்வியை தொடர்ந்து வாழ்வின் உயர்நிலைக்கு வர இயலும் எனக் கூறும் சிறுகதை. 2023_ தினமலர் வாரமலர் டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை என்பது குறிப்பிடத் தக்கது.

    7. சிறகுகள் முறிவதில்லை. இத் தொகுப்பின் தலைப்பிற்கான சிறுகதை. அப்பாவி கிராம மக்களின் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தன் மொத்த குடும்பத்தையும் இழந்து பரிதவிக்கும் ஒரு இளைஞனின் கதை. படிக்கும் போதே நெஞ்சில் ஈரம் சுரக்கின்றது.

    8. வெளிச்சத்தை நோக்கி சிறுகதையானது விதவைப் பெண்களின் மறுமணம் பற்றி பேசுகின்றது. மறுமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமே அவசியமானது தான் என்பதனை ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக இக் கதையில் தனக்கே உரிய நடையில் கூறியுள்ளார். இச் சமுதாயத்திற்கு மிக மிக அவசியமான கதையே.

    9. அபூர்வ ராகங்கள். திருமணம் முடித்து தன் இளம் மனைவியை தனியாக விட்டுவிட்டு வருமானத்திற்காக வெளிநாடு செல்லும் ஆண் ஒருவனின் வாழ்வு சீரழியும் கதை. ஒரு ஆணின் பரிசுத்தமான காதலை இக் கதையில் அழுத்தமாக பதிவு செய்துள்ள விதம் அருமை.

    10. வாழும் வரை போராடு. இந் நூலின் இறுதியான சிறுகதை. திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைந்து வாழ்வதற்கான அச்சாரம். இல்லற வாழ்க்கைக்கு புற அழகைவிட அக அழகே இன்றியமையாதது என்பதை சிறப்புற ஆசிரியர் கூறியுள்ளார்.

    இந் நூலை படைத்திட்ட ஆசிரியர் தஞ்சை வசந்தலெட்சுமி அவர்கள், அனைத்து கதைகளிலுமே சமூக கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ள விதம் மிக அருமை. இதேப் போன்று இச் சமுதாயத்திற்கு அவசியமான பல படைப்புக்களை இவர் படைத்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    வாழ்த்துக்களுடன்

    தோழர் ஸ்பார்டகஸ்

    என்னுரை

    சிறகுகள் முறிவதில்லை என்ற இந்த சிறுகதை தொகுப்பு எனது ஆறாவது நூலாகும். ஏற்கனவே இரண்டு நாவல்கள், குறு நாவல் ஒன்று, சிறுகதை தொகுப்பு ஒன்று, சிறார் சிறுகதை தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளேன்.

    2022 ல் என்னால் வெளியீடு செய்யப்பட்ட, மூன்றாம் பாலினத்தவரின் அவலங்களை கூறும் குரோமோசோம் பூக்கள் என்ற எனது குறுநாவல் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பை பெற்று எனக்கு பல விருதுகளையும் பெற்று தந்துள்ளது.

    சிறுகுகள் முறிவதில்லை என்ற இச் சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் இச் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பற்பல பிரச்சனைகளை மையமாக கொண்டு எழுதப்பட்டவையே.

    இச் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளில் சில, பிரபல தமிழ் வார இதழ்கள், தமிழ் அமைப்புகள் நடத்திய சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்றவைகள் என்பதனை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமூக சீர்த்திருத்த கருத்துக்களை உடைய இச் சிறுகதைகளை படித்து பாருங்கள். தங்களின் மேலான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி...!

    அன்புடன்

    தஞ்சை வசந்தலெட்சுமி

    அலைபேசி: 8825495680

    ஆசிரியரைப் பற்றி

    பெயர்: சி.க. வசந்தலெட்சுமி

    பணி: ஆசிரியை

    கல்வித்தகுதி: MA, MA, BEd

    ஊர்: தஞ்சாவூர்

    வயது: 53

    பெற்றோர்: சி.கல்யாணசுந்தரம் & சி.க.கல்யாணி அம்மாள்

    ஆசிரியரை பற்றிய பிற குறிப்புகள்:

    இவருக்கு இது ஆறாவது நூல். இவரது முதல் நூலான குரோமோசோம் பூக்கள் (குறுநாவல்) என்ற நூல் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்துள்ளது.

    பெற்ற விருதுகள்:

    1. அசோகமித்திரன் படைப்பூக்க விருது (2022)

    2. கல்லக்குறிச்சி தமிழ் சங்கத்தின் சிறந்த படைப்பாளிக்கான விருது (2023)

    3. கம்பம் பாரதி கலை இலக்கியப் பேரவை விருது (2023)

    4. பட்டுக்கோட்டை தமிழ் சங்கத்தின் எழுத்தருவி விருது (2023)

    4. உரத்த சிந்தனையின் எழுத்துச் சுடர் விருது (2023)

    5. புதுவை களரி இலக்கிய கழக விருது (2024)

    1. நின்றும் கொல்லும் தெய்வம்

    தொலைக்காட்சி தொடர் ஒன்றில் மூழ்கியிருந்த ராகவன் அவசரமாய் ஒலித்த அலைபேசியை, ஆத்திரமாய் முறைத்தார். எரிச்சலுடனே அலைபேசியை திறந்துப் பார்த்தவர் விழிகள், வியப்பால் விரிந்தன.

    மருமகன் வினோத்தின் எண் அலைபேசி திரையில் ஒளிர்ந்தது. இந்நேரத்துக்கு மருமகன் அழைப்பதன் காரணம் புரியாத ராகவன் அலைபேசியை காதருகே கொண்டுச் சென்றார்.

    ஹலோ...! சொல்லுங்க மாப்பிள்ளை

    மாமா...! இன்னும் விஜி, ஆபிஸ்லேர்ந்து வரலை, வினோத் பதட்டத்துடன் சொல்ல, ராகவன் சற்றே கலவரமானார்.

    மணி ஏழாகுதே வினோத்

    ஆமாம் மாமா...! எப்பவும் சாயந்தரம் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவா. ஆனா இன்னிக்கு இன்னும் அவ வரலை...

    விஜி போன் எதுவும் பண்ணலையா வினோத்...?

    "இல்ல மாமா. வீட்டுக்கு வர லேட்டாச்சுனா,கண்டிப்பா போன் பண்ணுவா...! ஆனா இன்னிக்கு இதுவரைக்கும் அவகிட்டேயிருந்து எந்த ஒரு போனும் வரலை. குழந்தைங்க தனியா இருக்காங்க மாமா. நீங்க கொஞ்சம் என் வீடு வரைக்கும் வாங்க. நான் போய் விஜியோட ஆபிஸ்ல அவளைப் போய் பார்த்துட்டு வர்றேன். ஏன்னு தெரியலை. போனையும் சுவிட்ச் ஆஃப்

    Enjoying the preview?
    Page 1 of 1