Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Boodha Kannadi Samy!
Boodha Kannadi Samy!
Boodha Kannadi Samy!
Ebook214 pages1 hour

Boodha Kannadi Samy!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையிலும் புனைவுத் தன்மை இல்லாமல் யதார்த்தமான நிகழ்வுகள். மனதின் ஆழம் வரை சென்று தொடும் உரையாடல்கள், வர்ணனைகள்.

ஜே.வி.யின் உரையாடல்கள் எளிமையாக இருந்தாலும் அதில் ஒரு வலிமை ஒளிந்திருப்பது, பாலுக்குள் நெய் மறைந்திருப்பதற்குச் சமமாகவே நினைக்கிறேன். அதேபோல் வர்ணணைகளும் படிப்பவர்களுக்கு ஒரு விஷுவல் எஃபெக்ட் தருவதைச் சொல்லாமல் இருக்க முடியாது. புத்தகம் நெடுகிலும், ஒவ்வொரு சிறுகதையிலும் வர்ணணைகள் காட்சிகளாக மாறி, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தருகின்றன.

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580170310274
Boodha Kannadi Samy!

Read more from J.V. Nathan

Related to Boodha Kannadi Samy!

Related ebooks

Reviews for Boodha Kannadi Samy!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Boodha Kannadi Samy! - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூதக் கண்ணாடி சாமி!

    (சிறுகதைகள் தொகுப்பு)

    Boodha Kannadi Samy!

    (Sirukathaigal Thoguppu)

    Author:

    ஜே.வி. நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. தர்மம்

    2. து ற வு

    3. நியாயங்கள்

    4. கரகாட்டக்காரி!

    5. வ யி று

    6. விஸ்வரூபம்

    7. பூதக் கண்ணாடி சாமி!

    8. சாயங்காலம் ரெடியா இருங்க அப்பா!

    9. ஊர்க் கட்டுப்பாடு

    10. ‘அப்பா சொன்னாங்க...!’

    11. காட்பாடி எக்ஸ்பிரஸ்

    12. நிழல் மரங்கள்

    13. நான் வைகைப்புயல் பேசறேண்ணே...!

    14. வி ரு ந் து

    15. அப்பா... அப்பா!

    16. ஜாமிட்ரி பாக்ஸ்

    17. மேனா மினுக்கி

    18. ஞானத்தைத் தேடி…

    19. ஜன்னலில் தொங்கிய கண்ணாடி!

    20. ப சி

    1500 கிரைம் த்ரில்லர் நாவல்களுக்கு மேல் எழுதி, இன்னும் சளைக்காமல் பல நூல்களை எழுதிக் கொண்டிருப்பவரும், எண்ணற்ற தமிழ் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மர்ம நாவல் சக்ரவர்த்தியும், என் இனிய நண்பருமான திரு ராஜேஷ்குமார் அவர்கள் இந்தத் தொகுப்பு நூலுக்கு அளித்துள்ள

    அணிந்துரை

    E:\Priya\Book Generation\Ammavin petty\78-min.jpg

    ராஜேஷ்குமார்

    கோயம்புத்தூர்-641046.

    உரைகல்

    ஒரு சிறுகதையின் ஆரம்ப வரியிலேயே ஒரு வாசகனை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் திறமை, அரிதாக ஒரு சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே வாய்க்கின்ற ஒன்று. அந்த அரிதான எழுத்தாளர்களில் ஒருவர்தான் ஜே.வி.நாதன். கடந்த 40 வருட காலமாக அவர் எழுத்துலகில் வெற்றிகரமாக பவனி வருவதற்கு இந்தத் திறமை ஒன்றே போதுமான காரணமாக அமைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

    ஒரு சிறுகதை சிறந்த சிறுகதை என்றோ, முத்திரைக் கதை என்றோ பெயர் பெற வேண்டுமென்றால், அதன் ‘கரு’ ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஜே.வி.நாதன் எழுதிய எல்லாக் கதைகளிலுமே சோடை போகாத ஒரு ஆரோக்கியமான ‘கரு’ ஒளிந்து கொண்டிருப்பதை ஓர் அதிசயமாகவே பார்க்கிறேன். அறுபது வயதைத் தாண்டியவர், மறுபடியும் இருபது வயதுக்கு வந்து இன்னமும் இந்த எழுத்துலகில் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    எழுத்துத் துறையில் நான் எழுத வந்த காலகட்டத்தில் ஜே.வி.நாதன் என்கிற பெயர் ஏதாவது ஒரு வார இதழிலோ அல்லது நாளிதழிலோ வெளிவந்து என்னுடைய பார்வையில் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும். அவருடைய எந்த ஒரு கதையைப் படித்தாலும் சரி, அதில் சமுதாய நலன் சார்ந்த விஷயமோ, அல்லது குடும்ப நலன் சார்ந்த விஷயமோ அறச் சீற்றத்தோடு வெளிப்படுவதைக் கவனித்து வியந்து போயிருக்கிறேன். இந்த 2020-களிலும் வியந்து கொண்டிருக்கிறேன். அவருடைய கதைகளைப் படித்துவிட்டு, இது போன்ற கதைகளை நாமும் எழுத வேண்டுமென்று நினைத்து முயற்சியும் செய்திருக்கிறென்.

    இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் பல்வேறு வார இதழ்களில் பிரசுரமாகிப் பிரகாசித்தவை. அதில் சிலவற்றை நான் படித்து ஜே.வி.யை செல்போனில் அழைத்து, சுடச் சுடப் பாராட்டியும் இருக்கிறேன்.

    இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையிலும் புனைவுத் தன்மை இல்லாமல் யதார்த்தமான நிகழ்வுகள். மனதின் ஆழம் வரை சென்று தொடும் உரையாடல்கள், வர்ணனைகள்.

    திருப்பதி உண்டியலில் இந்த நாலு பவுன் நகையைப் போடறதை விட, ஏழை ஜனங்களின் வயித்துப் பசியைப் போக்க உதவினா வெங்கடாஜலபதி சந்தோஷம்தான் படுவார்னு யோசிச்சேன் (‘தர்மம்’)

    திவ்யா... பயப்படாதே... நீ மும்பைக்கு என் கூட வரப் போறதில்லை. நான் ஒரு முட்டாள். என் வயது, மெச்சூரிட்டி, பெருமை எல்லாத்தையும் மறந்து கண நேரப் பேதலிப்பில் என் மகள் போலிருக்கும் உன்னிடம் தப்பாகப்பேசி விட்டேன். என்னை மன்னிச்சுடு திவ்யா

    உங்ககிட்டே நிறையப் பணம் இருக்கு. எதையுமே நீங வாங்கிக்க முடியும். ஆனா புண்ணியத்தை வாங்க முடியுமா எப்பவுமே மகளுக்கு அப்பா ஸ்பெஷல்தான் (அப்பா...அப்பா)

    ஜே.வி.யின் உரையாடல்கள் எளிமையாக இருந்தாலும் அதில் ஒரு வலிமை ஒளிந்திருப்பது, பாலுக்குள் நெய் மறைந்திருப்பதற்குச் சமமாகவே நினைக்கிறேன்.

    அதே போல் வர்ணணைகளும் படிப்பவர்களுக்கு ஒரு விஷுவல் எஃபெக்ட் தருவதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

    புத்தகம் நெடுகிலும், ஒவ்வொரு சிறுகதையிலும் வர்ணணைகள் காட்சிகளாக மாறி, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தருகின்றன.

    ஒரு எழுத்தாளர் பத்து வருட காலம் ‘NON STOP’ ஆகத் தொடர்ந்து எழுதுவதே ஒரு பெரிய சாதனை. ஆனால், ஜே.வி. அவர்கள் கடந்த 40 ஆண்டுக் காலமாய் எழுதிக் கொண்டே இருக்கிறார். இந்தக் ‘களைப்பில்லா உழைப்பு’ இறையருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அவரோடு பயணித்த பல சம காலத்து எழுத்தாளர்கள், தங்களின் எழுதுகோல்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் ஜே.வி. என்ற குதிரை மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிற்து. எழுத்துலகில் நிச்சயமாக இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படும்.

    இந்தச் சிறுகதைகள் தொகுப்பை ஒரு பத்துப் பேர் படித்தால் அதில் குறைந்த பட்சம் ஏழு பேராவது ஜே.வி.நாதனின் மற்ற படைப்புகளைத் தேடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கைதானே ஒரு படைப்பாளியின் வெற்றி. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

    தமிழகத்தின் தலை சிறந்த படைப்பாளிகளில், நான் மிகவும் மதிக்கும் திரு வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள், ஒருமுறை என்னோடு அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜே.வி.யைப் பற்றிச் சொன்ன ஒரு வாக்கியம் இப்போது நினைவுக்கு வருகிறது.

    ஜே.வி.நாதன் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல... அகண்ட வாசிப்புக்குச் சொந்தக்காரர். அவர் படிக்காத புத்தகம் கிடையாது.

    அவர் சொன்னது உண்மைதான்.

    அந்த அகண்ட வாசிப்புதான் ஜே.வி.யைப் புடம் போட்டு ஓர் அற்புத எழுத்தாளராய் உருவாக்கியிருக்கிறது.

    தமிழ் எழுத்துலகில் ஒரு சாதனையைச் சத்தமில்லாமல் செய்து முடித்துவிட்ட ஜே.வி., இன்னமும் ஓர் நாற்பது ஆண்டுகள் எழுதிக் கொண்டே ஆரோக்கியமாய் மகிழ்ச்சியாய் தம் துணையோடு நூறு வயதைக் கடந்தும் வாழ இறையருளை வேண்டுகிறேன்.

    இது பேராசை அல்ல.

    நடக்கப் போகிற நிஜம்.

    மிக்க அன்புடன்,

    ராஜேஷ்குமார்

    1. தர்மம்

    சிறப்புச் சிறுகதை, குமுதம் 10-6-2020

    பக்கத்தில் சைக்கிள் ரிக்ஷா மாதிரியான ஒரு திறந்த வண்டி. பெரிய அலுமினிய தேக்சாக்களில் ஆவி பறக்கும் உணவு. ஒரு நாள் வெஜ் பிரியாணி, இன்னொரு நாள் காய்கறிகள் போட்டு சாம்பார் சாதம், அடுத்த நாள் புளி சாதமும், தயிர் சாதமும் என்று பாக்கு மட்டைத் தட்டில் நிறைவாகப் போட்டு இளம் வயதுப் பெண்கள் சிலர் கொடுக்க, அதை இரு கைகளாலும் ஏந்தி மூன்று அடி இடைவெளி விட்டு நின்று அவளருகில் வரும் ஏழை மக்களுக்குப் பணிவோடு வழங்கி வந்தாள் ஆஸ்மி.

    வந்தவர்களில் எவராவது முகக் கவசம் அணியவில்லை என்றால், ஆஸ்மியின் உதவிக்கு அங்கு நிற்கும் பெண்கள் இருப்பு வைத்திருக்கும் ஏராள முகக் கவசங்களில் ஒன்றை அவருக்கு இலவசமாக வழங்கி மாஸ்க் போடாம வெளியில் நடமாடக் கூடாது ஐயா, தெரியுமில்லே? என்று அன்புடன் கூறுவார்கள்.

    கையில் சேமிப்பாக இருந்த பணத்தில் இதுவரை உணவு வழங்கியாயிற்று. நாளைக்கு என்ன செய்வது? மனசில் கவலை லேசான வலியாய் வந்து உட்கார்ந்தது.

    உதவியாளர்கள் கொடுத்த உணவுத் தட்டை வாங்கி கியூ வரிசையில் இடைவெளி விட்டு நின்று, நகர்ந்து நகர்ந்து வந்து கைகூப்பி அவளை வணங்கி வாயாற வாழ்த்தியவர்களுக்கு இயந்திரம் போல் ஆஸ்மி கொடுத்தாள். மகிழ்ச்சியோடு உணவுத் தட்டை வாங்கி நகர்ந்தார்கள் குடிசை வாசிகள்.

    நாளை உணவு வழங்கும் செலவுக்குப் பணம் இல்லை என்றாலும் அல்லாஹ் கைவிட மாட்டார். நிச்சயம் உதவுவார். இந்த இருட்டுக் காலம் முடியும் வரை என் உயிரைக் கொடுத்தாவது இந்த ஏழை மக்களுக்கு நான் அவர்களின் பசியைப் போக்குவது நிச்சயம் என்று மனதில் ‘நிய்யத்’ செய்து கொண்டாள் ஆஸ்மி.

    ***

    காட்டு பாவா தெரு முனையில் ஆஸ்மியின் வீட்டை ஒட்டியிருந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் நஸீம் பாய் சிலம்பப் பள்ளி நடத்தி வந்தார். மாவட்டத்திலேயே சிலம்பம் சுழற்றுவதில் நஸீம் பாய்க்கு இணை சொல்ல யாரும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.

    அம்மன் கோயில் திருவிழாக்களில் ‘சிறப்பு’ என்று வாண வேடிக்கைகள், சிலம்பச் சண்டைப் போட்டிகள் என்று அமர்க்களப் படும். நஸீம் பாயும் அவருடைய சீடர்களும் வருகிறார்கள் என்றால், நல்லூர்ப் பெருமணம் கிராமத்து முத்து கோஷ்டியினரும் வருவார்கள். ஊர்க் கோடிப் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, தில்லையம்மன் கோயில் வரை சுமார் நூறு அடி தூரத்துக்கு ஒரு முறை நின்று இரு கோஷ்டிகளும் ஜதை போட்டு மோதுவார்கள். நஸீம் பாய் ஆளுயரக் கம்புகள் இரண்டின் முனையில் துணி சுற்றி, எண்ணெய் ஊற்றித் தீ வைத்து இரட்டைக் கம்பைச் சுழற்றினார் என்றால், எங்கும் தீ ஜ்வாலை சுழன்று பிரமிக்க வைக்கும். திறந்த வாய் மூடாமல் கூட்டம் பார்த்து ரசிக்கும். அதே மாதிரி சிலம்ப விளையாட்டில் ‘குறவஞ்சி’ என்ற வகை ஆட்டத்தில் எதிராளியைத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட விடுவதில் நஸீம் பாய் பெயர் பெற்றவர்.

    பகலில் அவர் தன் வெற்றிலைக் கொடிக்கால் விவசாய வேலைகளைக் கவனிக்க வயலுக்குச் சென்று விடுவார். வீராணம் ஏரியின் கிளையான ராஜன் வாய்க்காலில் பிரிந்து அந்த ஊர் வழியே ஓடும் பாசிமத்தான் ஓடையை ஒட்டி அவருடைய ஒன்றரைக் காணி கொடிக்கால் இருந்தது. நல்ல வருமானம்.

    நல்ல இடத்தில் மகள் ஆஸ்மியைத் திருமணம் செய்து கொடுத்தார் நஸீம் பாய். ஊரே திரண்டு வந்து வாழ்த்தியது. யார் கண் பட்டதோ, மூன்றே மாதத்தில் இன்னும் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண் ஒருத்தியை மணக்கும் நோக்கத்தில் ‘தலாக்’ சொல்லிப் பிரிந்து விட்டான், ஆஸ்மியின் கணவன். இந்த வேதனை நஸீம் பாயை நோயில் தள்ளியது. ஆஸ்மியைத் தவிக்க விட்டுவிட்டு நஸீம் பாய் இறந்து போனார்.

    வீரம் மிக்க தந்தையின் மறைவு வருத்தினாலும் ஆஸ்மி, சீக்கிரம் சமாளித்து எழுந்தாள். அப்பா சிலம்பம் சொல்லிக் கொடுத்த அதே இடத்தில் பெண்களுக்குச் சிலம்பம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். நிறைய இளம் பெண்கள் வந்தார்கள். குறைவான கட்டணம் வசூலித்தாள்.

    இந்த நேரத்தில்தான் கொரோனா ஊரடங்கு, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கெடுபிடிகள். ஏழைகளுக்கு உணவளிப்பது நல்ல செயல்தான்... ஆனல் பணம் வேண்டுமே? யோசித்து ஒரு முடிவு செய்தாள். தனக்கென்று அப்பா விட்டுச் சென்ற ஒன்றரைக் காணி நிலத்தில் பாதியை விற்று விடலாம் என்பதே அவளுடைய முடிவு.

    மேல வீதியில் தண்டபாணிச் செட்டியார் என்று ஒரு செல்வந்தர் இவளுடைய வெற்றிலைக் கொடிக் காலை வாங்க முன்வந்தார். பெங்களூருவில் கணிணித் துறையில் வேலை பார்க்கும் அவருடைய மகன் பிற்காலத்தில் விவசாயம் பண்ணும் நோக்கம் இருப்பதால், மலிவாகக் கிடைத்தால் வாங்கிப் போடலாம் என்று சொன்னானாம்.

    முக்கால் காணி நிலம், ஐந்து லட்சம் பேசி, நாலரை லட்ச ரூபாய் என்று முடிவானது. பணம் மகனிடமிருந்து வர வேண்டும் என்றார் செட்டியார். சீக்கிரம் வந்துவிடும் என்றார்.

    ஆஸ்மிக்கு நாளையப் பொழுதை எப்படிப் போக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

    அன்று காலை பதினோரு மணிக்கு உணவு வழங்கல் துவங்கி சீக்கிரமே முடிந்து விட்டது. உடன் வந்த சிலம்பப் பள்ளி சீடப் பெண்களிடம் உணவுப் பாத்திர்ங்களைத் தன் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும்படிச் சொல்லிவிட்டு மேலவீதியை நோக்கி நடந்தாள் ஆஸ்மி.

    அடடே, சிலம்பப் பள்ளிக்கூட வாத்தியாரம்மாவா? வாம்மா வா! உட்கார்ம்மா! என்றார் தண்டபாணிச் செட்டியார். அவருடைய மனைவி தனம்மாள் சிரித்த முகத்தோடு ‘வாம்மா ஆஸ்மி, தாகத்துக்கு என்ன சாப்பிடறே… காபி, பால்?" என்று அன்போடு கேட்டாள்.

    இல்லைங்க. நான் நோம்பு இருக்கறதால் எதுவும் சாப்பிட மாட்டேன் என்றாள் ஆஸ்மி.

    அட, ஆமால்ல. நான் ஒரு மடச்சி. மறந்து போய் கேட்டுப்புட்டேன். ஆமா, உன்னைப் பத்தி ஊரே புகழ்ந்து பேசுதே தாயி! விளங்கியம்மன் கோயில் தெருவில் இருக்கிற சந்து மக்களைத் தத்து எடுத்துக்கிட்டு தினம் சாப்பாடு போட்றியாமேம்மா. ஒன்னை நினைச்சால் எனக்கு உடம்பே சிலிர்த்துப் போவுது தாயி. நீ செய்றது சாதாரண விஷயமில்லேம்மா, மிகப் பெரிய தர்மம்!

    ஆஸ்மி சங்கடத்துடன் நின்றாள். என்னமோ செய்யணும்னு தோணுச்சு செய்றேன் ஆண்ட்டி. உங்க ஆசீர்வாதம்!

    "அது என்ன ஆஸ்மி, சாதாரணமாச் சொல்லிப்புட்டே? எவ்வளாவோ பணம் இருக்கறவங்க செஞ்சுடறாங்களா? அஞ்சு ரூபாயைக் கொடுத்துட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறானுவ. நீ செய்றதுதான்மா உண்மையான தர்மம். பசிச்ச வயிற்றுக்குச் சோறு போடறவங்க

    Enjoying the preview?
    Page 1 of 1