Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uzhal Valigal
Uzhal Valigal
Uzhal Valigal
Ebook93 pages32 minutes

Uzhal Valigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உழல் வலிகள்... ஒரு பெரிய இலக்கிய கடல் அல்ல. அதில் இது ஒரு நீர் துளியாயினும் எடையற்ற எரிதழல் போல சில வலிகள் வாசகரை சுடும் தன்மையது. வாசிக்கும் வெகு சிலரையாவது உழல் வலிகள் சுட்டால்..., அதற்கு என் விழி எழுதும் நீர் கோடு நன்றி உரையாகும் என்கிறார். அவர் கதை மாந்தர்கள் நமக்கு பரிச்யமான சக மனிதர்களே ஆயினும் அவர்தம் வலி உணராமலே கடந்தோற்கு இது ஒரு நினைவூட்டலாக நிச்சயம் இருக்கும்.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580178710899
Uzhal Valigal

Related to Uzhal Valigal

Related ebooks

Reviews for Uzhal Valigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uzhal Valigal - Ravi Geeta

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உழல் வலிகள்

    Uzhal Valigal

    Author:

    ரவி கீதா

    Ravi Geeta

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ravi-geeta

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    அம்மா புடவை

    தபால் மனிதன்

    நாறப் பொழப்பு

    மெல்லிசைக் கச்சேரி

    அந்யோந்நியம்

    பிளாட்பாரத்தில் மனிதம்

    புல்வெளிக் காவலன்

    ஊமையன் அழுகை

    எச்சில் சோறும் சட்டமும்

    பிணத்திடம் பாலுணர்வா…?

    வீட்டு புரோக்கர்

    கன்னி சடங்கு

    இடை பரிணாமம்

    பயணிகள்

    சினிமாப் பெட்டி

    கண்ணன் வந்துவிட்டான்…

    நியாயங்கள் அடுத்தவர்களுக்குத் தான்…

    சமர்ப்பணம்…

    ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு அதில் அடுத்தமுறை மை நிரப்பச் செலவழிக்க யோசிக்கக்கூடிய பணச்சுமையை மனதில் நிறுத்தி…

    தன் எழுத்தால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு…

    தஞ்சாவூரில் பூதலூர் என்ற கிராமத்திலிருந்து தன் 17 வயதில் ஒற்றை ஆளாய் மதராசுக்கு வந்து எங்கள் குடும்பத்தை, எங்களையெல்லாம் ஆளாக்கிய என் தகப்பனார் கலைமாமணி மறைந்த மூத்த பத்திரிகையாளர் நவீனன் அவர்களின் பாதத்திற்கு…

    அணிந்துரை

    ரவிகீதாவின் ‘உழல் வலிகள்’ தொகுப்பின் அனைத்துச் சிறுகதைகளையும் வாசித்தேன். தன்னை ஓர் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளாமல் ‘எழுத்துப் பதிவாளன்’ என்று அவர் அழைத்துக்கொள்வது சால பொருத்தமான ஒன்று. ஏனெனில் நிறையச் சிறுகதைகள் ஒரு கதாபாத்திரத்தின், ஒரு சூழ்நிலையின் பதிவைக் குறும்படம்போல நமது கண்முன் நிறுத்துபவையாக அமைந்துள்ளன.

    தபால்காரனாக மட்டுமின்றி ஊருக்கே நேசனாக விளங்கும் ஒருவன், மண்ணெண்ணையைக் குடித்து வாயினால் தீ ஊதும் ஒருவன், ப்ளாட்பாரத்தில் வாழ்ந்தாலும் நேர்மை தவறாத ஒருவன், தவறுகள் செய்தே பழக்கப்பட்டுவிட்ட மனிதர்கள் மத்தியில் புல்லையும், பிராணிகளையும் உயர்திணையாக மதிக்கும் ஒருவன்… இப்படிப் பல குணச்சித்திரங்கள் படித்து முடித்தபின் கல்வெட்டுகளாக உங்கள் மனதில் பதிந்து கொள்கிற வல்லமை பெற்றிருக்கின்றன.

    தொகுப்பில் ரசித்த சிறுகதைகளென்று சொல்வதானால், ‘மெல்லிசைக் கச்சேரி’ முதலிடத்தில். பிரபல நடிகர்கள்போல் வேடமிட்டு நடிப்பவர்களின் வாழ்வியலை அழகாகச் சொல்லிய சிறுகதை. இதற்காக வட்டார வழக்கென்று கொங்கு மொழியை இவர் நுழைத்திருக்க வேண்டாமென்று தோன்றுகிறது. ஏனெனில், ‘பத்ரகாளி’ போன்ற படங்களில் பேசுவதைப் போன்று ஐயர் பாஷை இன்று எந்த வீட்டிலும் காணக் கிடைக்காதது போலவே, இவர் எழுதியிருக்கும் கொங்கு வட்டாரப் பேச்சும் இப்போது கோவையிலேயே காண்பதற்கு அரிதான ஒன்று. சாதாரண மொழி நடையிலேயே எழுதியிருக்கலாம் என்றே தோன்றியது.

    மற்றொரு சிறப்பான சிறுகதை, ‘வீட்டு புரோக்கர்’. கதையைப் பற்றி எதை எழுதினாலும் ஸ்பாய்லராகி விடும் என்பதால் ஒன்றை மட்டும் சொல்லலாம். இன்றைய மனிதர்கள் கவனிக்கத் தவறிவிட்ட ஒரு விஷயத்தை அழகாகத் தொட்டிருக்கிறார்.

    ‘பயணிகள்’ சிறுகதை பெற்றோரைக் கவனிப்பதாக நினைத்துக் கொண்டாலும் அவர்களைத் தவிக்கவிடும் மகன்களின் கன்னத்தில் அறைகிறது. அதேபோல, ‘நியாயங்கள் அடுத்தவர்களுக்குத்தான்’ சிறுகதையும் இயல்பான மனிதர்களின் சிந்தையில் பதியாத ஒரு விஷயத்தைப் பளிச்சென்று ஆணியறைந்தாற் போன்று விளக்குகிறது.

    விட்டால்… தொகுதியிலிருக்கும் மொத்தக் கதைகளையும் விவரித்து, வாசக சுவாரஸ்யத்துக்கு எதிரியாகிவிடுவேன் என்பதை உணர்வதால்… இரண்டு விஷயங்களைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

    ஒன்று… எளிய அடித்தட்டு மாந்தர்கள்தான் தன் கதையின் நாயகர்கள் என்று எழுத்தாளர் ரவிகீதா சொல்லியிருப்பதிலிருந்து அவர் அணுவளவும் பிசகவில்லை. எளியவர்களாகவும், மனிதர்களாகவுமே அவரது கதை மாந்தர்கள் இருக்கிறார்கள்.

    இரண்டாவது… இந்தத் தொகுப்பிலிருக்கும் ‘கன்னி சடங்கு’ என்கிற சிறுகதை முத்துக்களிடையே ஒரு கூழாங்கல். கதையின் மைய இழையான விஷயம் அருவருப்பையே தருகிறது. இது இன்றளவும் நடைமுறை, யதார்த்தம் என்று எழுத்தாளர் சொல்லக் கூடுமேயானால்… அதை எழுதாமல் தவிர்த்திருக்கலாம் என்பதே என் கருத்து. ஒருவேளை அந்தக் கதை உங்களுக்குப் பிடித்துப் போகவும் வாய்ப்புண்டு. உலகம் பலவித ருசிகளால் ஆனதுதானே…

    ‘என் வலிகளை உழல் வலிகளாக உங்களுக்குக் கடத்தியிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கும் எழுத்தாளரின் பேனா, வலியின்றி எழுத்துக்களைக் காகிதத்தில் உழுதிருக்கிறது. தொடர்ந்து இதுபோன்று பல தொகுப்புகள் வெளியிட்டு, எழுத்துலகில் சிறப்பாகப் பிரகாசிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

    பாலகணேஷ்,

    எழுத்தாளர்.

    என்னுரை

    வாசக நெஞ்சங்களுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன்.

    வணக்கம்.

    ஓர் எழுத்துப் பதிவாளனாகிய நான், என் எழுத்திற்குப் புகழாரம் மட்டும் வேண்டுமென்ற கருத்துக்கு முக்கியத்தும் கொடுக்காமல் ஃபெஸ்ட்ஷ்ரிஃப்ட் (festschirift) வகை எழுத்துக்களாக ‘எழுத்துக்களில் கொண்டாட்டத்தை’ மாற்றுக் கருத்துகளையும், விமர்சனங்களையும் ஏற்கும் மனோபாவத்தில் நான்

    இருந்து கொண்டு…

    பிறர் பேசக்கூசும் சில தவிர்க்கமுடியாத தளங்களில் பிரவேசித்து என் ‘எழுத்துக் கொண்டாடத்தை’ உழல் வலிகளாக… என் வலிகளை, உங்களுக்குக் கடத்துகிறேன். எனக்கு இருக்கும் சமூக அக்கறையின் பொருட்டு நான் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் சில நிரடல்கள்தான்… இந்த

    பதிவு.

    உழல் வலிகள் என் முதல் புத்தக வடிவு. இதில் விளிம்புநிலை மக்களே என் கதை மாந்தார்களாக இருக்கிறார்கள். வாசிப்பாளர்களை கேளிக்கைக்கு ஆளாக்க

    Enjoying the preview?
    Page 1 of 1