Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravum Pirivum
Uravum Pirivum
Uravum Pirivum
Ebook192 pages1 hour

Uravum Pirivum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த புதினத்தில் காதல், இயற்கையை நேசிக்கும் இனிய இதயம், மண் ஆசையால் பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் பெற்றோர், குடிப்பழக்கத்தால் சிதைந்து போகும் குடும்ப வாழ்க்கை, குடி நோயாளிகள் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மனோதத்துவ ஆலோசனைகள் என்று சொல்லப்பட்ட விதம் அருமை! வாருங்கள் வாசித்து பயன் பெறுவோம்!

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580167309985
Uravum Pirivum

Related to Uravum Pirivum

Related ebooks

Reviews for Uravum Pirivum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravum Pirivum - Kavingar Ponsingh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறவும்... பிரிவும்

    Uravum Pirivum

    Author:

    கவிஞர் பொன்சிங்

    Kavingar Ponsingh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-ponsingh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என் இதயத்தில் பிறந்த... சில எண்ணச் சிதறல்கள்...

    என்னுரை

    உறவும்... பிரிவும்

    சமர்ப்பணம்

    மனித நேயம்

    மத நல்லிணக்கம்

    மகளிர் முன்னேற்றம்

    மரம் வளர்ப்பு

    மாசற்ற சுற்றுச் சூழல்

    மன்னிக்கும் மனப்பாங்கு

    சமத்துவம், சமாதானம்

    அன்பு, பொறுமை,

    மொழிப்பற்று, தாய்நாட்டுப்பற்று

    மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம்

    ஆகிய நல்ல மாண்புகளை ஊட்டி வளர்த்த என் பாசமிகு தாய், தந்தையருக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.

    பொன்சிங்...

    வாழ்த்துரை

    கவிஞர் பொன்சிங் அவர்களின் கவிதைகள், கதைகளின் வழியே பயணிக்கும் போது அதில் ஓர் தொலைநோக்குப் பார்வை மிளிர்வதை உணர முடிகின்றது. உறவும் பிரிவும் என்ற இந்த புதினத்தில் காதல், இயற்கையை நேசிக்கும் இனிய இதயம், மண் ஆசையால் பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் பெற்றோர், வரதட்சணை கொடுமையின் கூரிய பற்களால் ஓர் குடும்பத்தில் ஏற்படும் சூறாவளி, குடிப்பழக்கத்தால் சிதைந்து போகும் குடும்ப வாழ்க்கை ஆகியனவற்றை எளிய நடையில் வாசகர் மனதில் பதியும்படி படம் பிடித்துக் காட்டியுள்ளார். குடிநோயாளிகள் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மனோதத்துவ மருத்துவர்களின் ஆலோசனைகளை வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது. போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுதலை பெற்று கெளரவமாக வாழ வழிவகைகள் சொல்லியுள்ள பாங்கை ஒரு டாக்டர் என்ற முறையில் பாராட்டுகின்றேன்.

    கவிஞர் பொன்சிங் அவர்களின் இலக்கிய பணி இனிதே தொடர எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

    இவண்

    டாக்டர்.அ.சுப்ரமணியன், MBBS

    செந்தில் கிளினிக்,

    வையம்பட்டி, திருச்சி.

    வாழ்த்துரை

    கவிஞர் பொன்சிங் அவர்களின் முதல் படைப்பு உண்மை உறங்கும் நேரம் என்ற கவிதைத் தொகுப்பு. கவிஞரின் கவிதைகளைச் சுவைத்து மகிழ்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு உறவும் பிரிவும் என்ற இந்த புதினத்தை மீண்டும் பரிசளித்துள்ளது பாராட்டத்தக்கது. இதில் தவழ்ந்து செல்லும் போது காடுகள், இயற்கை வளங்கள் அழிவதைக் கண்டு மனம் கசந்து கதாசிரியரின் கண்கள் பனிப்பது வாசகர்களின் இதயத்தை தொடுவதோடு நில்லாமல் சிந்திக்கவும் தூண்டுகின்றது. மாசற்ற சுற்றுச் சூழல் அமைந்திட நேசக்கரம் நீட்டுகின்றார்.

    புதினத்தின் தலைப்பு உறவும் பிரிவும் என்றிருந்தாலும் தமிழ் இலக்கிய பணியில் பொன்சிங் அவர்களுக்கு பிரிவே இல்லை என்று சொல்லலாம். உறவும் பிரிவும் என்ற இந்த இனிய படைப்பு தமிழ் நெஞ்சங்களைத் தாலாட்டும் என்பதில் ஐயம் இல்லை. உறவு என்று ஒன்று இருந்தால் பிரிவும் துன்பங்களும் தொடர்கதைதான். உறவில்லாமல் சுவையில்லை. அதே சமயம் பிரிவு ஒரு மனிதனை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. பொன்சிங் அவர்களின் இலக்கிய உறவுகள் மென்மேலும் தொடர, இலக்கிய உலகில் வெற்றிகளை குவிக்க தமிழ்த்தாய் அருள் மழை பொழிய வேண்டுகின்றேன்.

    இவண்

    வே.ஜெயபால் I.R.S

    உதவி ஆணையாளர்,

    வருமானவரித்துறை,

    உதகமண்டலம்.

    என் இதயத்தில் பிறந்த... சில எண்ணச் சிதறல்கள்...

    எல்லா காலகட்டத்திலும் வெவ்வேறு வகையான எழுத்துக்கள் வெளிவருகின்றன. புதுமைப்பித்தன் காலத்தில் கூட சில அரசு அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் எழுதிய நாவல்கள், வாசகர்களின் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றது. இதற்கு ஆதரவுதான் ஆணிவேர்.

    நம்மோடு பணி ஆற்றும் சக ஊழியர்கள் வெறும் இளநிலை, முதுநிலை உதவியாளராகவோ, மேலாளராகவோ பணியாற்றி 58 வயதில் ஓய்வு பெற்று பென்சனுக்கு நடப்பவராக இன்றி, தன் வாழும் காலத்தை எழுத்தில் பதிவு செய்திருக்கின்றார் என்பதுதான் எனது இனிய நண்பர் பொன்சிங் அவர்களின் சிறப்பு. எழுத்தாளன் என்பவன் வேற்று உலகத்திலிருந்து வந்த மனிதன் அல்ல. அவன் நம்மில் ஒருவன்தான். ஆனால் அவன் ஓர் வித்தியாசமானவன். காரணம் தன்னுடன் வாழ்பவர்களைப் பார்த்து அவர்களின் சுக துக்கங்களை, ரகசிய வேதனைகளை, மனமிரட்சியை, யாரும் அறியாத உள்மனதை அவன் மட்டுமே எழுத்து வடிவில் பிரதிபலிக்கின்றான்.

    பொன்சிங் அவர்கள் ஸ்டேட்பாங்க் மேனேஜர் மட்டும் எனில் எனது நட்பை வெறும் கைகுலுக்கலோடு முடித்து கொண்டிருப்பேன். அவர் ஓர் எழுத்தாளன்... படைப்பாளி என்பதால் மட்டுமே இந்த ஸ்நேகமும்... தோழமையும்...

    இலக்கிய உறவுக்கு பிரிவு ஏது

    என்றும் அன்புடன்

    பவா. செல்லதுரை

    மாநில குழு உறுப்பினர்,

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினர்.

    என்னுரை

    நான் மனிதனை புனிதனாக்க புத்தனல்ல

    மகாத்மாவாக மாற்ற காந்தியல்ல

    குறைந்தபட்சம் மனிதன்

    மனிதனாக வாழ வேண்டும்.

    சாதி சமயப் பூசல்

    சாவைத் தழுவ வேண்டும்

    இனிய தமிழக்கு இருகரம் கூப்பி

    மனித நேயத்திற்காக

    மனம் திறந்து பேசுகின்றேன்.

    இந்தப் புதினத்தை படித்து கொண்டிருக்கும்... உங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

    நான் மரங்களை நேசிக்கிறேன் - மரம் நட

    நல்ல மனங்களை யாசிக்கிறேன்.

    என்றும் உங்கள்

    பொன்சிங்

    உறவும்... பிரிவும்

    கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு திடுக்கிட்டேன்! இந்த நேரத்தில் யாராக இருக்கும்? மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவருகில் வந்து நின்றேன், சந்தனமும் ஜவ்வாதும் கலந்த இரம்மியமான ஓர் வாசனையை என்னால் உணர முடிந்தது!

    குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். முற்றத்தில் முழுநிலவின் ஒளி மெதுவாய் படர்ந்து ஓர் இதமான குளிரை காற்றில் தவழவிட்டது.

    அப்பாவும் அண்ணனும் எங்களைப் பார்த்து விட்டுப்போய் ஒருவாரம் கூட ஆகவில்லை. அவர்களாய் இருக்க முடியாது. அப்பாவையும் அண்ணனையும் தவிர எங்கள் வீட்டிற்கு யாரும் இரவு நேரத்தில் வரமாட்டார்கள். அதுவும் மணி 11 க்கு மேல் இருக்கும். கதவைத் தட்டுவது யாராக இருக்கும்? மனதில் சற்று குழப்பமாக இருந்தது. பயம் கலந்த குரலில் யாரது என்று கேட்டேன்.

    சாந்தி நான்தான் உன் அத்தான் என்று பதில் வந்தது... அதே அன்பு கலந்த குரல் மூன்று ஆண்டுகளாய் அந்தக் குரலைக் கேட்கத்தான் தவம் கிடந்தாள் சாந்தி. அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் செந்தில் முருகன்!. அவளது கணவனின் குரல் போன்று இருப்பதை அறிந்து ஒரு நிமிடம் அவளுக்கு என்ன சொல்வதென்றே தோன்றவில்லை... நெஞ்சு படபடத்தது... போர்ட்டிகோ லைட்டை போட்டு வியூ மிரர் லென்ஸ் மூலம் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள்! ஆம் - அவளது கணவன்தான்! ஒரே ஆச்சரியம் அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி சாந்தியின் இதயத்தைத் தொட்டது.

    கதவைத் திறந்து அத்தான் உள்ளே வாங்க... ஏன் தயக்கம்? சாந்தியின் கண்களில் ஆனந்த வெள்ளம்... பேசமுடியாமல் வார்த்தைகள் தடுமாறியது... உடல் முழுவதும் ஓர் பரவசம் படர்வது போன்ற உணர்வு.

    அத்தான் எங்களை மறந்து எப்படித்தான் இந்த மூன்று ஆண்டுகளைக் கழித்தீர்களோ? அப்படி நாங்கள் என்ன பாவம் செய்தோம்? குழந்தைகள் இருவரும் உங்கள் நினைவால் ஏங்கிய நாட்கள் எத்தனை எத்தனையோ. அப்பாவை பார்க்காமல் சாப்பிடமாட்டோம் என்று அடம்பிடித்த நாட்கள் தான் எத்தனை எத்தனை, குழந்தைகளை எழுப்பி அப்பா வந்து விட்டார் எனச் சொல்லத் துடித்தாள்.

    அதற்குள் செந்தில் முருகன் தான் கொண்டு வந்திருந்த அழகிய வெள்ளைநிற பட்டுப்புடவையை பையிலிருந்து எடுத்து பிரித்தான். அதன் ஊதா நிற பார்டர் கண்ணைக் கவரும் வண்ணம் ஜொலித்தது. சாந்தியின் கைகளில் கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னான் செந்தில். எத்தனையோ பரிசுப்பொருட்கள் கொடுத்தாலும் பெண்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஆனால்! கணவன் அன்புடன் வாங்கி வரும் பட்டுப்புடவை என்றாலே ஓர் அலாதி இன்பம்தான். பட்டுப்புடவையை கைகளில் வாங்கிக்கொண்ட சாந்தியின் முகத்தில் புன்னகைப் பூக்கள் பூத்தது. அந்த நீலவானில் நீந்தும் வான் மதியின் வதனம் சாந்தியின் முகத்தில் பளிச்சிட்டது.

    இமை கொட்டாமல் அந்த அழகு தேவதையின் முகத்தையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தான் செந்தில்.

    சாந்திக்கு ஆச்சரியமாய் இருந்தது காரணம் செந்தில் முருகன் வெள்ளைநிற சபாரியில் இருந்ததுதான். செந்தில் எப்பொழுதும் விதவிதமான வண்ணங்களில்தான் உடை அணிய விரும்புவார். வெள்ளைநிற பாண்ட் சர்ட் அணிந்து அவள் இதுவரை பார்த்ததில்லை. அந்தப் பட்டுப்புடவையில் ஓர் தேவதைபோல் ஜொலித்தாள் சாந்தி. அவள் தலை நிறைய மதுரை மல்லியை வைத்துவிட்டான் செந்தில். அவனது கால்களில் விழுந்து வணங்கி எழுந்தவளைத் தன் மார்போடு சேர்த்து மெல்ல அணைத்துக்கொண்டான்... சற்று நேரம் மௌனம் நிலவியது.

    இதற்காகத்தானே பிள்ளைகளை எழுப்பவேண்டாம் என்று.... செல்லமாக சிணுங்கினாள் சாந்தி. அது நிசப்தமான அந்த இரவின் மௌனத்தைக் கலைத்தது.

    இன்று என்ன தேதி பார்த்தாயா சாந்தி?... லேசான புன்னகையுடன் கேட்டான் செந்தில். அவனையே உற்றுநோக்கிய சாந்தி அடடே 09.09.99 இன்று நமது திருமண நாள்," திருமண நாளன்று வீட்டிற்குச் செந்தில் முருகன் வந்தது மேலும் ஆச்சரியத்தை தந்தது சாந்திக்கு!

    பசியோடு வந்திருப்பீர்கள் தோசை வார்த்துத் தரட்டுமா? அத்தான்.

    வேண்டாம் சாந்தி நேரமாகி விட்டது... நான் வருகிறேன்...

    அத்தான்... இப்பொழுதுதான் வந்தீர்கள் அதற்குள் போகின்றீர்களா? உங்களை விடமாட்டேன். இனி என்னால் ஒரு நிமிடம் கூட உங்களைப் பிரிந்திருக்க முடியாது. கணவனின் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கதறி அழுதாள் சாந்தி. அவள் கண்களில் புரண்ட காவிரிக்கு அணைப்போட இயலவில்லை.

    நேரம் வந்துவிட்டது சாந்தி! நான் கண்டிப்பாய் போய்த்தான் ஆகவேண்டும்! என்னை விட்டு விடு! என்று அவள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டான் செந்தில் முருகன்.

    அத்தான் போகவேண்டாம். எங்களோடவே இருங்கள். பிள்ளைகளை எழுப்பி விடுகின்றேன்... அவர்கள் உங்களைப் பார்க்கட்டும். இந்தப் பிஞ்சு முகங்களை மறந்துவிட்டா போகின்றீர்கள்? என்று கெஞ்சினாள்.

    ரம்யா, சௌமியா அப்பா வந்துவிட்டார்! அப்பாவை பாருங்கள்! என்று குழந்தைகளை எழுப்பினாள். குழந்தைகள் இருவரும் அம்மாவின் குரல் கேட்டு எழுந்து அப்பா எங்கே? அப்பா எங்கே? அப்பா எங்கம்மா என்று அழுதார்கள். குழந்தைகள் அழுகின்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தாள் சாந்தி. பிறகுதான் தெரிந்தது அவள் கண்டது கனவென்று!

    அந்த இரவு முழுவதும் அவளால் தூங்கவே முடியவில்லை. அழுத கண்ணீரைத் துடைக்கவும் ஆறுதல் சொல்லவும் அவளுக்கு யார் இருக்கின்றார்கள்? மனசு மிகவும் பாரமாயிருந்தது. செந்திலோடு வாழ்ந்த அந்தப் பசுமையான நினைவுகள் அவள் நெஞ்சத்தில் மோதி அலைபாய அன்று பொழுது விடியும்வரை அவள் இமைகள் மூடவில்லை. இதயம் பாரமாக இருக்கும் போது இமைகள் மூடுமா?

    வாரம் முழுவதும் மழை. மழை பெய்தால் ஊட்டியில் குளிர் இரண்டு மடங்காகிவிடும்... போதாக்குறைக்கு பலமான காற்று திசைமாறி வீசும். துணிமணிகளைத் துவைத்து காயப்போட முடியாது. வீட்டுக்கு உள்ளேயே கயிறு கட்டி அதில் துவைத்த துணிகளை காயப் போட்டுக்கொண்டிருந்தாள் சாந்தி. ரம்யாவிற்கு ஐந்து வயது, சௌமியாவிற்கு மூன்று வயது, இருவரும் தொலைக்காட்சியில் சக்திமான் தொடரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    துணிகள் காய்ந்து விட்டது, ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1