Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suthi Suthi Vandheega...
Suthi Suthi Vandheega...
Suthi Suthi Vandheega...
Ebook241 pages1 hour

Suthi Suthi Vandheega...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்.
சில விஷயங்கள் எங்கே - எப்படி - எதனால் - யாரால் - யாருக்காக - எதற்காக - ஏன் - எந்த மாதிரி - என்று யூகிக்க முடியாமல் அது பாட்டிற்கு நிகழ்ந்து விடுகின்றன. அவற்றை அணைப்போட்டு தடுக்க முடிவதில்லை. முடிந்ததில்லை. முடியப் போவதில்லை.
புயலும் பூகம்பமும் நன்மையை தந்திருக்கின்றனவா?
ஒரு ‘பதினைந்தின்’ மேல் தாக்கிய புயல், அவளது நெஞ்சில் பூகம்பமாகி வெடித்துச் சிதறி எரிமலையாய் கொப்பளிக்கும் விபரீதத்தால்தான் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு!
இது நிஜக்கதை. பெயர்களும் ஊர்களும் கற்பனை.
நன்றி.
அன்புடன்
என். சி. மோகன்தாஸ்
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580132405554
Suthi Suthi Vandheega...

Read more from Nc. Mohandoss

Related to Suthi Suthi Vandheega...

Related ebooks

Reviews for Suthi Suthi Vandheega...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suthi Suthi Vandheega... - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    சுத்தி சுத்தி வந்தீக…

    Suthi Suthi Vandheega...

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    வாழ்த்துரை

    அன்புடையீர், வணக்கம்.

    இந்நூலாசிரியர் திருச்சி மாவட்டத்தில் பிறந்தாலும், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கிணங்க வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு எழுத்துலகில் ஈடுபட்டு மனித நேயத்தை மையமாக வைத்து இந்நூலைப் படைத்திருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

    இதன் தொடர்ச்சியாக வெளியிடப்படும் மலர் சிறப்புடன் வெளிவர என் நிறைவான நல்வாழ்த்துக்கள்.

    தங்கள் அன்புள்ள

    ஜி.கே. வாசன்

    வாழ்த்துச் செய்தி

    அன்புடையீர்,

    திருச்சி மாவட்டத்தில் நம்புக்குறிச்சி எனும் சிற்றூரில் பிறந்த இந்நூலின் ஆசிரியர் திரு. என்.சி.எம். அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் பாரதியாரின் கூற்றிற்கேற்ப சிற்றூரில் பிறந்த இவர் தற்போது குவைத்தில் நேஷனல் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும் தன் பணியை அதோடு முடித்துக் கொள்ளாமல் எழுத்துலகில் நூற்றுக்கும் மேல் நாவல்கள், 300க்கும் மேல் சிறுகதைகள், எண்ணி முடியாத கட்டுரைகள், அறுபது நூல்கள், நான்கு டி.வி. நாடகங்கள் என பலவற்றை படைத்து தனக்கென வாசகர்களின் மனத்தில் ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் என்றால் அது மிகையாகாது.

    திருச்சி சுற்றுப்புறப் பகுதியில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் பிரபலங்களைப் பற்றிய தொகுப்புப் புத்தகமான ஜெயிப்போம் வாருங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பிரபலங்கள் பற்றி கூறியிருப்பது படிப்பவர்களின் வாழ்வில் தொடர்ந்து முன்னேற இது ஒரு படிக்கல்லாக அமையும் வகையில் உள்ளது.

    இந்நூலின் ஆசிரியரான திரு. என்.சி.எம் அவர்களின் பணி தொடரவும் அவரது கற்பனையில் பல நூல்கள் பிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றி

    அன்புடன்

    சு. திருநாவுக்கரசர்

    வாழ்த்துரை

    குவைத்தில் பணிபுரியும் தமிழ் எழுத்தாளரான திரு. மோகன்தாஸ் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது எனது திரைப்படங்களின் நீண்டகால ரசிகராக, ஓர் எழுத்தாளராக, தமிழகத்து கலைஞர்களின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒரு சராசரி அபிமானி - சராசரி நல்லவராக மட்டுமே எனக்குத் தோன்றிற்று.

    Frontliners அமைப்பு மூலம் குவைத் நாட்டுக்கு நான் ஒரு முக்கிய விருந்தினராக அழைத்துச் செல்லப்பட்டு, நாற்பதாண்டு கால சேவைக்காக பாராட்டுப் பெற்ற நேரத்திலே - மோகன்தாசுடன் பழகிய அந்தக் குறுகிய இனிய மூன்று நாட்களுக்குள் மிகப்பெரிய ஓர் உண்மையை நான் புரிந்துகொள்ள முடிகிறது.

    தமிழையும், தமிழ் மணத்தையும், தமிழ்நல்லுலக நாயகர்களின் புகழையும் எந்நேரமும் அந்த அரபிக் காற்றின் நறுமணமாகக் கலந்து நம்மவர்களின் பெருமைகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் இந்த அற்புதத் தமிழனை - திறமையான ஒரு படைப்பாளியை - 24 மணிநேரமும் பம்பரமாய்ச் சுழன்று செயல்படும் ஓர் உழைப்பாளியை-தன்னலம் கருதாத இந்த இளைஞனை, ஒரு சராசரி மனிதனாக மதிப்பீடு செய்துவிட்டதாக நான் வருந்துகிறேன்.

    குவைத்திலிருந்து விமான நிலையத்தில் எனக்கு விடைகொடுத்து அனுப்பும்போது என்னைத் தனது நம் நண்பராகப் பெற்றதைப் பற்றி பெருமையாக இவர் குறிப்பிட்டபோது நான் சொன்னேன்-உன்னை நண்பராகப் பெற்றிருப்பது எனக்குத்தான் பெருமை சாமி! இந்த உணர்வோடு நான் தாயகம் திரும்புகிறேன் என்று.

    இந்த நல்ல உள்ளமும், தொண்டு சிந்தனையும் படைத்த 'அக்மார்க்' மனிதரோடு நட்பு கிடைத்தமைக்கு எனது இனிய அக்மார்க் நண்பர் (T.V.) வரதராஜன் - அவர்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

    இந்த 'அரபிக் காற்று'க்கு

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    அன்பன்

    கே. பாலசந்தர்

    முன்னுரை

    வணக்கம்.

    சில விஷயங்கள் எங்கே - எப்படி - எதனால் - யாரால் - யாருக்காக - எதற்காக - ஏன் - எந்த மாதிரி - என்று யூகிக்க முடியாமல் அது பாட்டிற்கு நிகழ்ந்து விடுகின்றன. அவற்றை அணைப்போட்டு தடுக்க முடிவதில்லை. முடிந்ததில்லை. முடியப் போவதில்லை.

    புயலும் பூகம்பமும் நன்மையை தந்திருக்கின்றனவா?

    ஒரு 'பதினைந்தின்' மேல் தாக்கிய புயல், அவளது நெஞ்சில் பூகம்பமாகி வெடித்துச் சிதறி எரிமலையாய் கொப்பளிக்கும் விபரீதத்தால்தான் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு!

    இது நிஜக்கதை. பெயர்களும் ஊர்களும் கற்பனை.

    நன்றி.

    அன்புடன்

    என். சி. மோகன்தாஸ்

    1

    வாசலில் டிரைவர் பொறுமையிழந்து காரை மூன்றாம் முறையாக துடைத்தான். வாட்ச் பார்த்தான். மாடியை நோட்டமிட்டான். பெரிசு இன்னும் என்ன பண்ணுகிறது?

    சொன்னால் சொன்ன நேரத்திற்கு வரவேணாமா? எட்டு மணிக்கு வெளியே போகணும் ரெடியாயிரு என்றார். இப்போது எட்டரை! லேட்டாகும் என்று தெரிந்திருந்தால் ரெண்டு இட்லியாவது பிட்டு போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.

    வயிறு கபகபத்தது. இதை பற்றியெல்லாம் எஜமானர்களுக்கு என்ன கவலை? இவர்கள் நீட்டாய் குளித்து டிரஸ் பண்ணி, டிபன் முடித்து ஏப்பத்துடன் சௌகர்யமாய் வருவார்கள்!

    நாங்கள் தேவுடு காத்திருக்க வேண்டும். சரியான நாய் பிழைப்பு! எப்போது எங்கே போகணும் என்று தெரியாது. திடீர் திடீரென அழைப்பு வரும். காரிலேயே சுருண்டு கிடக்க வேண்டும். எங்காவது போனாலும் - எப்போது திரும்பி வருவார்கள் என்று சொல்ல மாட்டார்கள்.

    சொன்னால் கௌரவம் குறைந்துவிடுமாம்! இவர்கள் லஞ்ச், டின்னர் என்று பார்ட்டியடிப்பார்கள். பாவப்பட்ட டிரைவர்கள் வயிற்றில் ஈரத்துணியுடன் கிடக்க வேண்டும்.

    அவனது சட்டையில் வியர்வை கப்படித்தது. அரை அவர் டைம் கொடுத்தால் வீட்டுக்கு ஓடிப் போய்விட்டு மாற்றிக் கொண்டு வந்துவிடலாம்!

    விட்டால் தானே!

    வாட்ச்மேன் கேட்டை திறப்பதற்காக தயாராக நின்றிருந்தான். இடையிடையே செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு களை பறித்துக் கொண்டு, தரையை பெருக்கிக் கொண்டு, அந்தப் பகுதியில் உள்ள அத்தனை எடுபிடி வேலைகளும் அவனது பொறுப்பு. அதற்கெல்லாம் முகம் சுளித்தால் அங்கே தங்க இயலாது!

    மாடியிலிருந்து தன் கதர் சட்டையை சரி பண்ணிக்கொண்டு திருப்பதி இறங்கும் போது பரமு மூச்சிரைக்க ஓடிவந்து இந்த மருந்தை கொஞ்சம் வாங்கி வரீங்களா? என்று சீட்டு ஒன்றை நீட்டினாள்.

    எல்லாத்துக்கும் நான்தானா? டிரைவர் இருக்கான்... வாட்ச்மேன்! வேலைக்காரி! இவங்கள்ளாம் என்ன பண்றாங்களாம்!

    திருப்பதி வெறுப்பதியாய் உமிழ, அவள் பின்வாங்கினாள். அறைக்குள்ளிருந்து ஸ்கர்ட், பனியனில் பளபளப்புடன் நின்றிருந்த வாணி அம்மா...! என்று தன் ரிப்போர்ட்டை நீட்டினாள்.

    என்ன?

    அப்பாட்ட கையெழுத்து

    இப்போ வேணாம். ஒரே இடி-மின்னல்!

    அதற்குள் திருப்பதி அவர்களின் கிசுகிசுப்பை கவனித்து என்ன விஷயம்? என்று அதட்டினார்.

    ஒண்ணுமில்லே... வந்து... வாணியோட ப்ராகிரஸ் ரிப்போர்ட்...

    இத்தனை நாழி என்ன பண்ணிகிட்டிருந்தாளாம்! என்று வாட்சைப் பார்த்து

    சரி... சரி கொண்டு வரச்சொல்

    வாணி பவ்யத்துடன் பணிவாய் வந்தாள். அவள் ஒன்றும் படிப்பில் கெட்டியில்லை. உடல் வனப்பிலும் சதைப்பிடிப்பிலும் உள்ள பிடிப்பு படிப்பில் எடுபடாதது அனைவருக்கும் தெரிந்த ரகசியமே.

    முன்பே நீட்டினால் - அப்பா கிளாஸ் எடுத்து அறுப்பார். அதனால் அவர் வெளியே கிளம்பும் நேரம்தான் கையெழுத்து வாங்குவாள்.

    திருப்பதி, அந்த அட்டையை புரட்டிவிட்டு, ஏண்டி உனக்கு இங்கே என்ன குறைச்சல்? டி.வி, கம்ப்யூட்டர், விசிடி, வீடியோ கேம்ஸ்... மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்ன்னு கேட்டதெல்லாம் வாங்கி தரலே? அப்புறம் மார்க் மட்டும் ஏன்...?

    பரமு எல்லாம் வாங்கிக் கொடுத்ததுதான் பிரச்னை! கவனம் அவற்றில் போய் படிக்க நேரமில்லை! என்று முணுமுணுத்தாள்.

    போன தடவைக்கு இந்த முறை ரொம்ப இம்ப்ரூவ்மெண்ட் போல! என்று திருப்பதி அவளை முறைக்க, வாணி நெளிந்தாள். போன தடவை மேத்ஸ், கெமிஸ்ட்ரி மட்டும் தான் குறைவு. இப்போ பிஸிக்ஸ், ஹிந்தியும்கூட! சபாஷ்!

    மேத்ஸ் புரியலேப்பா!

    அப்போ டியூசன் வச்சுக்கோ! என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார்.

    அவர் போனதும் ஏண்டி! உனக்கு மட்டும் ஏன் இப்படி புத்தியை படைத்தான்? என்று பரமு பிடித்துக் கொண்டாள்.

    அக்கா எத்தனை கவனமா படிக்கிறாள்? உன்னை மாதிரி மந்துன்னு இருந்தா அவ கிளாஸ்ல ஃபர்ஸ்ட் வர முடியுமா?

    அப்பாவின் லெக்ச்சர் அஞ்சு நிமிஷம் தான். அம்மாவோ பிடித்தால் உடும்புப்பிடி! ரத்தம் கக்கும்வரை விடமாட்டாள்!

    என்ன நான் சொல்றது காதுல விழுதா?

    உங்களுக்கு அக்கா தான் எப்பவுமே உசத்தி! நான் எது செஞ்சாலும் குத்தம்! நொல்லை-சொள்ளை!

    சும்மான்னாலும் குத்தம் சொல்லணும்னு ஆசையாடி! - அம்சாவை பார்த்தியா...? அவளை பத்தி யாராச்சும் ஏதாச்சும் சொல்ல முடியுமா? எல்லா விஷயத்துலயும் அவ ரொம்ப கரெக்ட்! உன்னை மாதிரி அவ கிளாஸ்க்கு கட் அடிக்கிறதில்லை. படிப்பிலயாகட்டும், நடத்தையிலாகட்டும், பொறுப்போட இருக்கா! இனிமேலாவது அவளை பாத்து கத்துக்க. சும்மா பொறாமைப்பட்டு பிரயோஜனமில்லை. போ...! போய் முறைக்காம ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பார்!

    இன்னும் எத்தனை நாளைக்கு இந்த திருட்டுத்தனமோ தெரியவில்லை! என்று அம்சா-கையில் புத்தகமும், கண்களில் பயமுமாய் ரயில் பிளாட்பாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    எது திருட்டுத்தனம்? நாம ஓப்பனாதான் பழகறோம். இங்கே பார் பல்லாயிரக்கணக்கில் பயணிங்க வராங்க! போறாங்க!

    அதான் உதயன் என் பயமே! வீட்டுல என்னமோ நான் சாதுன்னும் பொறுப்பானவ அடக்கமானவ-யார் முகத்தையும் ஏறிடாதவன்னு நினைச்சுகிட்டு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க! அடுத்த மாசம் ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சதும் என் கல்யாணத்தை முடிச்சிரணுமாம்!

    ஓகோ! என்று உதயன் அப்போது உறுமிக்கொண்டு வந்து அதிர்ந்து நின்ற மின்சார ரயிலைப் பார்த்தான். கூட்டம் குதிப்பதும், அவர்களை தள்ளிக்கொண்டு ஏறுவதும் அப்படியே அள்ளிக் கொண்டு பெட்டி நகர்வதுமாயிருந்தது.

    என்ன சொல்றீங்க...?

    என்ன சொல்லணுங்கிறே?

    நாம் ஜெயிச்சாகணும். ஒண்ணா வாழ்ந்தாகணும்!

    அதான் எப்படின்னு தெரியலே. உங்கப்பா பெரிய தொழிலதிபர். முசுடு. பிறரை மதிக்காதவர். நான் சுமாரான வேலையிலிருக்கிற பிரமாதமான அழகன்

    இந்த திமிருக்கு ஒண்ணும் குறைச்சலில்லை

    சரி. பணத்துக்கு மட்டும்தான் குறைச்சல்ங்கிறியா... முறைக்காதே! நான் என்ன செய்யணும்னு உத்திரவு போடு. நான் வேணுமானா உங்கப்பாட்ட வந்து பேசட்டுமா?

    வேணாம் என்று அவசரமாய் மறுத்தாள். எங்கப்பா கௌரவம் பார்ப்பவர். உங்கள் வேலை-சம்பளத்திற்கு நிச்சயம் கெட்அவுட் தான்!

    அப்புறம்...? என்று உதய் ஐஸ்க்ரீம் வாங்கி நீட்டினான்.

    ஆங்... ஒரு ஐடியா! உங்க தெருவுல அக்கம்பக்கத்து பிள்ளைகளுக்கு நீங்க டியூஷன் எடுக்கறீங்கல்ல...?

    ஆமா

    கமான்யா! இனி எங்க வீட்டுக்கும் டியூசனுக்கு வாங்க! எங்க வீட்டுல ஒரு மக்கு தங்கை இருக்கா! அவளுக்கு டியூசன் எடுக்கிற சாக்கில் உள்ளே நுழைகிறீர்கள்!

    நுழைந்தான்.

    திருப்பதி அத்தனை எளிதில் அவனை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. உதய்யின் எம்.எஸ்.ஸி-படிப்பு-எங்கே வேலை செய்கிறான்? எவ்ளோ சம்பளம் என்றெல்லாம் குடைந்தெடுத்தார்.

    டியூசனுக்கும் சம்பளத்துக்கும் என்ன சம்பந்தம் சார்!

    அம்சா - உஷ்ஷ்... என்று அவனுக்கு சைகை காட்டினாள். திருப்பதி முந்திக்கொண்டு சம்பந்தம் இருக்குப்பா. என் வீட்டுக்கு ஒருத்தன் டியூஷன் சொல்லித் தரவரான்னா-முழுசா இல்லேன்னாலும் ஓரளவுக்கு அவன் வசதி படைத்தவனாக இருக்க வேண்டும்.

    வசதி படைச்சிருந்தா - அப்புறம் - பகல் பூரா ஆபீஸ்ல உழைச்சுட்டு எதுக்கு சார் இங்கே வரணும்?

    இது நல்ல கேள்வி. ஆனா இதெல்லாம் கேட்க வேண்டிய இடம் நானில்லை. என் மகள்! நீ வாத்தியாராகப் போறது எனக்கில்லை - என் மகளுக்குத்தான். அவள்ட்ட நல்லா கேளு கேள்வி கேட்டு கேட்டு படிக்க வை!

    எது சார் உங்க மக இதுவா! என்று உதய் அம்சாவைக் காட்டி கண் அடித்தான்.

    இதில்லை

    இது உங்க மக இல்லியா?

    மகதான்! சரியான ராவடியா இருப்பான் போலிருக்கே! இவ காலேஜ் படிக்கிறா

    காலேஜா... நம்பவே முடியலியே! என்று அவன் அப்பாவி போல கேட்க, அம்சா பலிப்பு காட்டினாள், உதைப்படப் போகிறாய் நீ!

    இதோ பாருப்பா. எனக்கு ஜாஸ்தி பேசினா பிடிக்காது. என் இன்னொரு மக வாணி - அவ பத்தாங்கிளாஸ்! இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்! இதுவரையிலும் என்னோட செல்வாக்குல பாஸ் பண்ணிட்டு வந்திருக்கா. இப்போ அது முடியாதே! அவ - படிப்பை தவிர மத்தது எல்லாத்துலயும் கெட்டி! மேக்கப்புக்கு தினம் நாலு மணிநேரம்!

    அவ்ளோ அசிங்கமா இருப்பாளா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டான். இங்கே நாம் வந்திருப்பது விதாண்டாவாதத்திற்கில்லை. திருப்பதி பகவானின் மனதில் இடம்பிடிக்க!

    உன் சம்பளம், போக்குவரத்தெல்லாம் பின்னாடி பேசிக்கலாம். நீ நாளையே வந்து டியூஷன் ஆரம்பிச்சிரலாம்!

    மறுநாள் உதய் வந்தபோது அம்சா தோட்டத்தில் படிப்பதாக பாவனை பண்ணி உலாத்திக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவளது முகம் மலர்ந்தது. இருந்தாலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாணி மாடியில இருக்கா! என்றாள் விரட்டும் பாணியில் அருகில்

    Enjoying the preview?
    Page 1 of 1