Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antharathil Sundari
Antharathil Sundari
Antharathil Sundari
Ebook73 pages26 minutes

Antharathil Sundari

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுந்தரி ஒரு தைரியமான இளம் பெண். எந்த இளைஞனும் அவளிடம் வாலாட்டினால் செருப்படி நிச்சயம். அதற்காக அவளை பழி வாங்க காத்திருக்கும் கூட்டம் ஒரு பக்கம்.

அப்படிபட்ட சுந்தரி ஒரு இளைஞனை விரும்புகிறாள். அந்த இளைஞன் யார்? எதற்காக அவள் வாழ்வில் நுழைந்தான்? இறுதியில் அவள் காதல் கைகூடியதா என்பதை கதைக்குள் சென்று காணலாம்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606543
Antharathil Sundari

Read more from Devibala

Related to Antharathil Sundari

Related ebooks

Related categories

Reviews for Antharathil Sundari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antharathil Sundari - Devibala

    https://www.pustaka.co.in

    அந்தரத்தில் சுந்தரி!

    Antharathil Sundari!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    நான் வரட்டுமா டார்லிங்?

    ம்! செய்!

    மறுபடியும் நாம எப்ப சந்திக்கறம்?

    நாளைக்கு அஞ்சரைக்கு அண்ணா சமாதில. ஓக்கே? சொல்லிக் கொண்டே ஆட்டோவை அழைத்தான். அவளை அதில் திணித்தான். ஆட்டோ நகர கையசைத்து விட்டு, நிதானமாக ரெஸ்ட்ரென்டுக்குள் நுழைந்தான்.

    வெல்கம் மன்மதா! குளிரூட்டப்பட்ட அறைக்குள் அவன் நுழைந்ததும் கோரஸாக கை தட்டலும் பாட்டும் புறப்பட்டது.

    சிரிப்புடன் நிமிர்ந்தான்.

    அவனது நண்பர் கூட்டம்.

    இவ எத்தனாவது காதலி மச்சி?

    கணக்கு வச்சிக்கலை!

    எத்தனை ரூபா இவளுக்குச் செலவு?

    ஒரு மைசூர் சில்க் சேலை... நாலுவாட்டி மசால் தோசை, ஐஸ்க்ரீம், ரெண்டு ராமராஜன் படம்... சுலபமா முடிஞ்சு போச்சு தோளைக் குலுக்கிக் கொண்டு சிரித்தான்.

    நாளைக்கு அண்ணா சமாதியா?

    ஒருவன் கேட்க மற்றவர்கள் குபீரெனச் சிரித்தார்கள்.

    சமாதியில் சந்திப்பதாக அவன் கூறி விட்டால் அந்தக் காதலுக்கு அது முற்றுப்புள்ளி என்று நண்பர்கள் வட்டாரம் அறியும்.

    மதன் பேருக்கு ஏற்றபடி அழகன் நண்பர்கள் மத்தியில் செல்லமாக மன்மதன்.

    25 வயதே நிரம்பிய இளமை தெறிக்கும் இளைஞன். பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியான சலபதியின் ஒரே மகன்.

    அப்பா ஐம்பது வயது கடந்தும் ஓடி ஓடி பணம் சேர்த்துக் கொண்டிருக்க, அதை மின்னல் வேகத்தில் வாலிப விளையாட்டுக்களில் கரைத்துக் கொண்டிருப்பவன்...

    மதனா...

    சொல்லுடா!

    நீ ஆசைப்பட்ட பொண்ணுங்களையெல்லாம் உடனே உன் படுக்கைக்கு கொண்டு வர்றியே! அது எப்படீடா?

    அதாண்டா மதன்! காலரை தூக்கி விட்டுக் கொண்டான் கர்வமாக.

    அது கூட முக்கியமில்லைபா. அப்புறமா ‘அம்போ'னு விடறியே! அப்ப அந்தப் பொண்ணுங்க 'சும்மா' இருக்குமா?

    வேற என்ன செய்ய முடியும்? நானென்ன தசரதச் சக்ரவர்த்தியா? அறுபத்தி நாலாயிரம் பெண்டாட்டி வச்சிக்க பல வகைகள்ள நஷ்ட ஈடு தந்து சரி கட்டிருவேன். என் காதலிகள் இன்னிக்கு மனைவிகள். நானே போய் வாழ்த்திட்டு வருவேன். தட்ஸ் ஆல்!

    ஒரு நாள் மாட்டப் போறே!

    யார்கிட்ட?

    யாராவது ஒரு பெண்கிட்ட.

    அதான் நடக்காது மாமோய்! எந்தப் பொண்ணுக்கு என்ன விலைனு எனக்குத் தெரியும். அதைத் தந்து அவளை சரிக்கட்டிருவேன். என்ன விலை கேட்டாலும் தரக் கூடிய தகுதிகளும் எனக்குண்டு!

    அப்படியா?

    ஆமாம்!

    மன்மதா ஒரு சவால்! உமேஷ் ஆரம்பித்தான்.

    மதன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    கம் அவுட்! சவால்னா சாக்லெட் சாப்பிடற மாதிரி எனக்கு. சீக்கிரம் சொல்லு!

    இரு இப்பவே சொல்ல முடியுமா? எனக்கும் அவகாசம் வேண்டாமா?

    சரி அவுட்லைனைச் சொல்லு!

    உன் அழகு, இளமை, அந்தஸ்த்து எதுக்கும் மயங்காத ஒரு பெண்ணை நாங்க காட்டறம். நீ அவளை உன் வலைல வீழ்த்திக் காட்டணும். முடியுமா?

    "ப்பூ... இதுவா பிரமாதம்?

    Enjoying the preview?
    Page 1 of 1