Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pattaampoochi Nenjukkulle
Pattaampoochi Nenjukkulle
Pattaampoochi Nenjukkulle
Ebook168 pages1 hour

Pattaampoochi Nenjukkulle

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Pattaampoochi Nenjukkulle

Read more from Arnika Nasser

Related to Pattaampoochi Nenjukkulle

Related ebooks

Reviews for Pattaampoochi Nenjukkulle

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pattaampoochi Nenjukkulle - Arnika Nasser

    20

    1

    பிளாட்டின் கதவைத் தட்டினான் அருண்மொழி, கூடை வடிவ பொக்கேயுடன்.

    கதவு திறந்து பெண்களின் தலைகள் மொய்த்தன.

    அருண்மொழி உள்ளே இழுபட்டான்.

    பிளாட் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டது.

    கலவர முகத்துடன் எழுந்தான் அருண்மொழி.

    அவனைச் சுற்றி மொய்க்கும் பெண்களின் ஸிண்டி கிராபோர்ட், நவோமி கேம்பல், மது சாப்ரே, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா ஸென், ஊர்மிளா மடோங்கர் தென்பட்டனர்.

    அருண்மொழி எனக்குத்தான்!

    இல்லை... எனக்குத்தான்!

    எனக்கே...எனக்கா?

    மொத்தமாக நமக்குத்தான்!

    அருண்மொழியை படுக்கையில் தள்ளி மேலே தொப் தொப்பென்று விழுந்தனர். கோடிக்கணக்கான ரோஜாப் பூக்கள் அருண்மொழி உடலைத் தாக்கின. மயிலிறகு என்றாலும் அதிகம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும் என்று வள்ளுவன் சொன்னது உண்மைதான் பாரம் தாங்காது நசுங்கினான் அருண்மொழி.

    ‘போதும்! போதும்! இதற்குமேல் தாங்கமாட்டேன்!’

    ‘தொப்!’

    வீசப்பட்டது குரைத்தது.

    கனிவான தூக்கம் விடுபட்டது. எழுந்து அமர்ந்தான் அருண்மொழி. தரையில் அவன் வீசியெறிந்த அவனது செல்ல நாய்க்குட்டி ‘மிச்சு!’

    நாணினான் அருண்மொழி.

    பல் துலக்கினான். பத்து மில்லி சூரியகாந்தி எண்ணை எடுத்து பதினைந்து நிமிடம் வாய்க்குள் அடக்கித் துப்பினான். கில்லட் நுரை ஷேவிங் கன்னத்தில் பிதுக்கி ஈஷி சவரம் செய்து கொண்டான். திரவ லைப்பாய் சோப் உபயோகித்துக் குளித்தான். பாலில் இரு கிண்ணத்துக் ‘கெல்லாக்ஸ்’ போட்டு உண்டான். பால் இல்லாத தேநீர் அருந்தினான்.

    கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து ‘ஆன்’ செய்தான்.

    சென்னையில் சமீபத்தில் கட்டப்பட்ட பாலங்களைப் பற்றிய ஒரு அலசல் கட்டுரை டைப் செய்தான் அருண் மொழி

    அருண்மொழி வயது 24. அசத்தும் மாநிறம். உயரம் 5. 11" ஜர்னலிஸம் படித்தவன். கதைகள், கட்டுரைகள், கவர் ஸ்டோரிகள், கவிதைகள் எழுதும் ஆல்ரவுண்டர். ‘மகிழம்பூ’ பத்திரிகையின் உதவி ஆசிரியன். பிரம்மச்சாரி.

    கட்டுரையை ‘பிரிண்ட் அவுட்’ எடுத்தான். தொடர்ந்து இன்டர்நெட்டில் சறுக்கினான். ‘ஆப்’ பண்ணி எழுந்தான் ரிவோல்டா உள்ளாடை. நியூபோர்ட் முழுக்கை சட்டை. லிவ் இன் ஜீன்ஸ், வுட்லேன்ட்ஸ் ஷூ. தோளில் ஜோல்னாப் பை. கண்களில் ரேபான்.

    தலைகேசம் ‘ஷாருக்கான்’ செய்தது. கங்கை அபார்ட்மென்ட்ஸிலிருந்து இறங்கினான். ஆங்காங்கே பிளாட்டின் ஜன்னல் கதவுகள் திறந்தன. திருமணமான பெண்களும் காத்திருந்து இவனை ரசித்தனர் பைக்கை ஸ்டார்ட் செய்தான் அருண்மொழி. வாகனம் எண்பதடி நீள் சாலையில் சீறியது.

    கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அருண்மொழியின் பத்திரிகை அலுவலகம் அமைந்திருந்தது.

    கூர்க்கா விஷ் பண்ணி இரும்புக் கேட்டைத் திறந்து விட்டான்.

    வாகனத்தை வேப்ப மரத்தடியில் ஸ்டாண்டிட்டு நிறுத்தினான். மாடிப்படிகளில் ஏறினான்.

    ஏறும்போதே தரைத்தள கணக்கு பிரிவு பெண்மணி யின் ‘ஹாய்!’ பெற்று ‘ஹாய்!’ வீசினான். எடிட்டோரியலுக்குள் புகுந்தான்.

    ஆங்காங்கே பத்திரிகைப் பணிகள் செய்து கொண்டிருந்த பெண்மணிகள் ஸ்தம்பித்தனர்.

    பிரதான உதவி ஆசிரியை கிறிஸ்டிக்கு எதிரே அமர்ந்தான்.

    ஹாய் கிறிஸ்டி!

    ஹாய் அருண்!

    என்ன கிறிஸ்டி... உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருச்சுன்னு கேள்விப்பட்டேன். யாரந்த துர்பாக்கியசாலி?

    ஏய்... அதிகமா பேசாதே! உன் பொறாமை வயித்தெரிச்சல் எனக்கு புரியுது. ஆஹா? நாம மாய்ஞ்சு ஸைட் அடிச்சவளுக்குக் கல்யாணமா? லேட் பண்ணிட்டோமே... தகுந்த நேரத்துல ‘ஐ லவ் யூ’ சொல்லி இந்த கல்யாண ஏற்பாட்டைத் தடுத்திருக்கலாமே...போச்சே... எல்லாம் போச்சே’ன்னு உன் மனசு புலம்புது! நான் சொல்றது சரியா?

    ஒரு நொடி கிறிஸ்டியை உன்னித்தான் அருண்மொழி. அவளது உரையாடலில் பூடகமான அர்த்தங்கள் பல நெளிந்தோடின

    ஆமா கிறிஸ்டி! அப்படித்தான். நிச்சயதார்த்தத்தை ரத்து பண்ணிட்டு இப்பவே ஓடி வறியா? கோயில்ல மாலை மாத்திப்போம்?

    நான் கிறிஸ்டியன் ஆச்சே?

    சரி... மோதிரம் மாத்திப்போம்

    அரைக்கண்ணை மூடி நாக்கைச் சுழற்றினாள், கிறிஸ்டி படுவா! உன்னை நம்பி ஆற்றில் இறங்கிறதா? அரசனை நம்பி... பழமொழி நிஜமாய்டும், வேண்டாம்ப்பா. இப்ப எனக்கு பார்த்திருக்கிறவனே போதும். (நொடி தாமதித்து) நோமோர் ஜோக்ஸ். நமக்கு சம்பளம் தர்ற தொழிலைக் கவனிப்போமா?

    தாராளமா!

    எங்கே பாலம் பற்றிய கட்டுரை?

    நீட்டினான்.

    அசுர வேகமாய் வாசித்தாள் கிறிஸ்டி.

    என்னப்பா இவ்வளவு டேமேஜிங்கா ஆளும் கட்சியை விமர்சனம் பண்ணியிருக்கே? மணல் லாரி கிணல் லாரி ஏத்திக் கொன்னுடப் போறாங்க!

    சிரித்தான். திரும்ப கட்டுரையை வாங்கினான்.

    இரு எடிட்டர் கிட்ட காண்பிச்சிட்டுத் தரேன்!

    எடிட்டர் மகேஷ் இடதுகையில் சிகரட், வலதுகையில் காபியுடன் வரவேற்றார்...

    வெல்கம் பிளே பாய்!

    நாற்பது வயது மகேஷ் தமிழ் பத்திரிகையுலகின் ‘ட்ரென்ட் ஸெட்டர்!’

    அருண்மொழிக்கும் காபி தருவித்தார்.

    கட்டுரையை கையளித்தான். நிதானமாக வாசித்து முடித்து திருப்தி முகமானார்.

    எக்ஸலன்ட்!

    ஆர்யூ ஷுயுர்?

    யெஸ்!

    கடுமையா இருக்குன்னு கிறிஸ்டி சொன்னா!

    அருண்மொழி! நமக்கும் மத்த பத்திரிகைகாரங்களுக்கும் அடிப்படை வித்தியாசம் இருக்கு. உபதொழில் தொடங்க உரிமம் கேட்டு அரசுகிட்ட நாம கையேந்தி நிக்கறதில்லை. அரசின் எல்லா வரிகளையும் ஒரு பைசா நிலுவை இல்லாம கட்டுகிறோம் வி ஆர் பெர்பெக்ட். நாம் செய்திகளை நக்கீர நோக்கோட வெளியிடணும். பாரபட்சமோ - தயவு தாட்சண்யமோ - கூடாது. மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தணும்!

    நான் இந்த நிறுவனத்தில் பணிபுரிய பெருமைப்படுகிறேன் பாஸ்!

    காக்காய் பிடிக்காதே. உன்னுடைய அடுத்த அஸைன்மென்ட் என்ன?

    அன்றைய ‘ஸ்ரீதரி’ லிருந்து இன்றைய ‘சொல்லாமலே சசி’ வரை நிலவும் சினிமா ட்ரண்டுகளை அலசி ஒரு இருபது வாரக் கட்டுரை பண்ணுகிறேனே...

    "ம்ஹூம் அருண்!’

    அரசுகள் அளிக்கும் மானியங்கள் மக்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும்? என்பதை ஆராய்ந்து ஒரு ஐந்து வார கட்டுரை பண்ணவா?

    ராம்விலாஸ், பாஸ்வான் மீது உனக்கு கோபம்!

    எல்லா அரசியல்வாதிகள் மீதும்!

    இப்ப வேணாம். சில மாசம் ‘கேப்’ விட்டு செய்! உடனடியா வேற எதாவது?

    யோசித்தான் அருண்மொழி.

    காஷ்மீர் கேட்கும் சுயாட்சி பற்றி எழுதவா?

    ஒரு வாரக் கட்டுரை இது. நான் கேட்கிறது 25 வாரத் தொடர்!

    கட்டுரை வடிவமில்லாது நாவல் வடிவமாயும் இருக்கலாமில்லையா பாஸ்?

    ஓ...

    நான் சொல்றதை பொறுமையா கேளுங்க பாஸ்!

    சொல்லு!

    நீலாங்கர் தீவில் தனி நாடு கேட்டு போராடும் இயக்கங்கள் பல உள்ளன. அவைகளில் மிதவாதக் குழு ஒன்று இருந்தது அல்லவா பாஸ்?

    ஆமாம் 1985-1990களில்!

    மிதவாதக் குழுவின் தலைவன் ஆனந்தகீதனை தீவிரவாதக் குழுத் தலைவன் ஜெயக்கொடி பாண்டி பஜாரில் பட்டபகலில் சுட்டுக் கொன்றான் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனந்தகீதனுக்கு ஒரு விதவை மனைவி உண்டு...பெயர் கூட...பெயர்கூட...

    மகேஷிடமிருந்து சீறி வந்தது பதில்.

    அவளது பெயர் சம்யுக்தா!

    ‘சம்யுக்தா’ என்னும் பெயர் மட்டும் அருண்மொழியின் ஆழ்மனதில் பல்வேறு படிமங்களை தோற்று வித்தது.

    அந்த சம்யுக்தாவை பேட்டி காண அவளது, வாழ்க்கை வரலாற்றை வெளியிட எல்லா பத்திரிகைகளும் 1990லிருந்தே கடும் முயற்சி செய்து வருகின்றன பாஸ்!

    ஆமாம்!

    நான் அந்த சம்யுக்தாவை சந்திக்கப் போகிறேன் அவளுடன் நைச்சியமாக பழகி அவளது ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன்.

    இட்ஸ் ஹைலி இம்பாஸிபிள்!

    நீங்களே இப்படி பேசலாமா பாஸ்?

    யதார்த்தமா யோசி அருண்மொழி. அந்த சம்யுக்தா ஒரு மாதிரி ஹிஸ்டீரிக்கா பிஹேவ் பண்றாளாம். இது வரைக்கும் பல பத்திரிகைக்காரங்க அவளை சந்திக்கப் போய் செருப்படி பட்டுருக்காங்க. குறிப்பா ஒரு பத்திரிகைக்காரருக்கு முகத்தில் இருபத்தி நாலு தையல் போடவேண்டியிருந்துச்சாம். தவிர இன்னும் அவ நீலாங்கரை தீவு தீவிரவாதிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்பர் ஒன் ஸ்பாட்ல இருக்காளாம்!

    சிரித்தான் அருண்மொழி, ஐ டோண்ட் கேர் பாஸ்!

    உனக்கு மலர்வளையம் ரெடி பண்ணவா?

    இல்லை... வாழ்த்து பொக்கே ரெடி பண்ணுங்க. இன்னும் சில வாரங்களுக்கு என்னைத் தேடாதீங்க!

    என்ன செய்யப் போற?

    சம்யுக்தாகிட்ட நான் பத்திரிகைக்காரனா போகப் போறதில்ல; அவளை கண்மூடித்தனமா காதலிக்கும் இளைஞனா போகப் போறேன். எந்த வில்லாதி வில்லி பெண்ணுக்கும் மனதில் ஒரு பலவீனமான புள்ளி இருக்கும். அதனைத் தாக்கி வெற்றி பெறுவேன் பாஸ்!

    எதிக்கது தப்பில்ல?

    தப்பில்லை! தப்பேயில்லை!

    சம்யுக்தாவை சந்திக்க மானசீகமாய் ஆயத்தமானான் அருண்மொழி.

    கால் சறுக்கி மரணப் பள்ளத்தாக்குக்குள் பாய்ந்தான் அருண்மொழி. ஆனாலும். அவனது வாய் முணு முணுத்தது.

    ச-ம்-யு-க்-தா!

    பெயர் அமானுஷ்யமாய் இதயத்தின் ஆழத்தில் தித்தித்தது!

    2

    சம்யுக்தாவின் முகத்தில் ரத்தம் சிதறியிருந்தது அவளின் இமைகளுக்கு ஒரு பூட்டு.

    இதழ்களுக்கு ஒரு பூட்டு.

    நெஞ்சுக்கூடு திறந்திருந்தது; வெல்வெட் நிற இதயத்துக்கு ஒரு பூட்டு.

    கால்களை கோர்த்து ஒன்று, கைகளை கோர்த்து ஒன்று. படுத்திருக்கும் சம்யுக்தாவை அவன் நெருங்கினான்.

    யாரந்த இளைஞன்?

    வலது சுட்டு விரலை திறவுகோலாக உபயோகித்து அனைத்து பூட்டுகளையும் திறந்தான். இதயத்தை மூடியுள்ள பூட்டை உதடுகளால் முத்தமிட்டான். தனது நெஞ்சுக்கூட்டை கையாலேயே பிளந்து, தனது இதயத்தை பிடுங்கி சம்யுக்தா இதயத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1