Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranam Vidu Thoothu
Maranam Vidu Thoothu
Maranam Vidu Thoothu
Ebook76 pages25 minutes

Maranam Vidu Thoothu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Maranam Vidu Thoothu

Read more from Arnika Nasser

Related to Maranam Vidu Thoothu

Related ebooks

Related categories

Reviews for Maranam Vidu Thoothu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranam Vidu Thoothu - Arnika Nasser

    அத்தியாயம் -1

    ஹோட்டல் பார்க் ஷெர்ட்டன்.

    அறை எண் 1248.

    அறை வராண்டாவில் பத்துக்கும் மேற்பட்ட ஆடவர்கள் படபடப்பாய் நின்றிருந்தனர். நின்றவர்கள் ஒருவருக்கொருவர் நிற்கும் காரணத்தை கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

    சிகரட் புகைத்தபடி ஒரு ஸபாரி இளைஞன் "நான் டைரக்டர் அங்குசாமிகிட்ட அஸோஸியேட்டாக இருந்தவன். ‘வின்’ படம் மாதிரி ஒரு படம் பண்ணனும்னு ஒரு தெலுங்கு புரடியூஸர் என்னை கான்டாக்ட் பண்ணினார். பெரிய பட்ஜட் படம்.

    பிரமாதமா கதை சொல்லி புரடியூஸரை பாக்கட்ல அள்ளிப்போட்டுக்கனும்னு பாக்ரேன். கைல ஒன்லைன் கதை ரெடி. திரைக்கதையும் வசனமும் பண்ண எழுத்தாளர் முரளிமனோகர் ஒத்துக்கிட்டார்னா படம் சில்வர் ஜூப்ளிதான்!"

    இரண்டாமவர், எனக்கும் சினிமா இன்டஸ்ட்ரிக்கும் துளியும் சம்பந்தமில்லை. நான் முரளிமனோகரின் தீவிர வாசகன். என் மக இருபத்தியேழு வயசாகியும் மெச்சூர் ஆகாம இருக்கா. முரளிமனோகரின் ஆசீர்வாதம் இருந்தா என் மக மெச்சூர் ஆயிடுவா. மெச்சூர் ஆன கையோட இவளுக்கு கல்யாணமும் பண்ணி வச்சிருவேன்!

    உங்க மக எங்கே?

    அதோ படிக்கட்ல அம்மாவோட உக்காந்திருக்கா!

    நீங்க?

    நான் ஸ்வாமி ருத்ரானந்தாவை பார்க்க திருவண்ணாமலை போயிட்டு இருக்கேன். முரளிமனோகரின் சிபாரிசு கடிதம்... இருந்தா ஸ்வாமி நம்மகிட்ட பேசுவாராம். அதனால சிபாரிசுக்கடிதம் வாங்க வந்திருக்கேன்!

    என் பெயர் சந்தானம். வயசு 48 ஆகுது. வாழ்க்கைல ரொம்ப அடிபட்டுட்டேன். முரளிமனோகரை சந்திச்சு பெயரை மாத்தி வாழ்க்கைல பெரிய அளவுல முன்னேறிடலாம்னு பாக்றேன்!

    நான் வளரும் கவிஞன் ஆனந்த். முரளிமனோகரை பார்த்தா நம்பள நாலு டைரக்டர்க கிட்ட சிபாரிசு பண்ணுவாரில்ல?

    குளிர்கண்ணாடி அணிந்த ஜோல்னாப்பை ஆசாமியை அருகில் இருந்தவர் வினவினார், நீங்க?

    நா... நானா? சும்மா...... முரளிமனோகரை பேட்டியெடுக்க வந்திருக்கேன்!

    எந்த பத்திரிகைக்கு?

    நான் ஒரு ப்ரிலான்ஸர்ங்க!

    அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கீங்களா

    இல்லை!

    அப்டின்னா அவர் பேட்டி கொடுக்கமாட்டார்!

    அது என் கவலை!

    தள்ளுவண்டியில் காலை டிபன் வந்து காத்திருந்தது. முரளிமனோகரின் இரு உதவியாளர்கள் காத்திருந்தனர். ஒரு உதவியாளர் கையில் பில்டர் கிங்சைஸ் சிகரட் பாக்கட்கள். இன்னொருவரின் கையில் ஆங்கில தமிழ் தினசரிகள்,

    அறைக்கதவின் உட்புறமாக ஏதாவது அரவம் கேட்கும் போது கதவு திறக்கப்படுவதாய் காத்திருந்தோர் பரபரத்தனர்.

    ஒரு உதவியாளர், அவசரப்படாதிங்க. சார் - தியானத்ல இருக்கார். அவர் தியானத்தை முடிக்க இன்னும் அரை மணி நேரமாகும்!

    மிக மெதுவாக நேரம் கரைந்தது.

    சரியாக 37 நிமிடங்களுக்குப்பின் கதவு லேசாகத்திறந்தது.

    காத்திருந்தோர் அனைவரும் உள்ளே போயினர்.

    இரட்டைப்படுக்கையில் ஒரு 52 வயது சதைத்த ஆசாமி சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். தலைகேசம் சடைசடையாய் தொங்கியது. ஒழுங்கீனமான தாடி. நெற்றி முழுமைக்கும் விபூதி பூசி குங்குமம் நடுவில் அப்பியிருந்தார். கனத்த பேசும் புருவங்கள். இடுங்கிய கண்கள். நாசியில் ரோமங்கள் எட்டி பார்க்கும் முக்கு. அழுக்கடைந்த சேவல் கொண்டை நிறம் கொண்ட மீசை. நிகோட்டின் உதடுகள். வரிசை தவறிய பற்கள், கழுத்தில் கொத்தாய் மைனர் செயின்கள், தன் மீது ஒரு லிட்டர் புருட் நறுமணம் பாய்ச்சியிருந்தார்.

    காபியைக்குடித்தபடியே சிகரட் புகைத்தார்.

    அவருக்கு பக்கத்து மேஜையில் ஸ்வாமி ருத்ரானந்தா புகைப்படம் அமர்ந்திருந்தது.

    முதலில் முரளிமனோகரின் கருணை கடாட்சம் அங்குசாமியின் அஸோஸியேட்டிடம் பாய்ந்தது.

    யேய்... நீ மார்ட்டின் ராஜாதானே?... உன்னை ‘கலிநாயகன்’ • ஷூட்டிங்லயே பாத்து நான் சொல்லல... நீ பெரிய டைரக்டரா வருவேன்னு..... உன்கிட்ட புரடியூஸரை அனுப்ச்சதே நான்தானடா... பக்கத்ல வந்து உக்கார்...’’ ஒரு பக்திபாடலை கண்ணீர் ஒழுக பாடியபடி மார்ட்டினின் தலையைத்தொட்டார். உன் மொதல் படம் சில்வர் ஜூப்ளிடா!"

    திரைக்கதை வசனம் நீங்கதான்... இழுத்தான்.

    "கதை நீயே தயார் பண்ற அளவுக்கு பெரிய ஆளாய்ட்டியா படுவா? MR.

    Enjoying the preview?
    Page 1 of 1