Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உனக்கே உயிரானேன்!
உனக்கே உயிரானேன்!
உனக்கே உயிரானேன்!
Ebook107 pages34 minutes

உனக்கே உயிரானேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோவை.
 டெலானிக்ஸ் ரெஜியா மரங்கள் இரண்டு பக்கமும் செழிப்பாய் வளர்ந்து சிவப்பு நிறப் பூக்களை உரித்துக்கொண்டிருந்த சம்பந்தம் ரோடு.
 ஐந்தாவது எண்ணிட்ட பங்களா. இரவு எட்டு மணி. பங்களாவின் ஹாலில் -
 'ப' படிவமாய் போட்டிருந்த சோபாக் களில் வீரராகவனின் அந்த பெரிய குடும்பம் உட்கார்ந்திருந்தது.
 அறுபது வயதைத் தொடப் போகும் வீரராகவனுக்குப் பக்கத்தில் அவருடைய மனைவி சரோஜினி நரை முடி கொண்டையில் - நெற்றிக்கு குங்குமம் இட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்க, எதிர் சோபாக்களில் -
 மூத்த மகன் வெங்கடேஷ்- அவனுடைய மனைவி மிருதுளா...
 இரண்டாவது மகன் லட்சுமணன் அவனுடைய மனைவி அனுசூயா...
 மூத்த மகள் யசோதா - அவளுடைய கணவன் ராஜாராம்…
 எல்லோரும் வீரராகவனின் முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அவர் தம் வாயிலிருந்த தாம்பூலச் சாற்றை வாஷ்பேஸினுக்கு கொடுத்து விட்டு வந்து உட்கார்ந்தார். மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார்.
 "ராம்குமாருக்கு. பொண்ணைத்தர இவ்வளவு பெரிய போட்டி இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை. மிருதுளாவோட தங்கச்சியும் சரி... அனுசுயாவோட தங்கச்சியும் சரி... நம்ம மாப்பிள்ளையோட தங்கச்சியும் சரி- எல்லாருமே கண்ணுக்கு லட்சணமாகத்தான் இருக்காங்க. குணத்திலேயும்... அவங்க காட்டற அடக்க ஒடுக்கத்திலேயும் அப்பழுக்கு சொல்ல முடியாது."
 மாப்பிள்ளை ராஜாராம் குறுக்கிட்டான்.

 "மாமா...

என்ன மாப்ளே...?"
 "என்னோட தங்கச்சி லீலாவுக்கு மத்த பெண்களைக் காட்டிலும் நிறம் கூடுதல். ராம்குமாருக்கு அவதான் பொருத்தமா இருப்பா..."
 லட்சுமணனின் மனைவி அனுசுயா வெடித்தாள்.
 "நிறம் மட்டும் இருந்துட்டா போதுமா...! ராம்குமாருக்கு கிட்டத்தட்ட ஆறடி உயரம். உங்க தங்கச்சி அவரோட இடுப்புக்குக்கூட வரமாட்டாளே...! என்னோட தங்கச்சி பானுவைத்தான் நீங்க பார்த்திருப்பீங்களே... ராம்குமாரோட தோள் பட்டைக்கு வர்ற மாதிரி உயரம்..."
 "உடம்பு வளர்ந்து என்ன பிரயோஜனம்? பொண்களுக்கு பூசின மாதிரி இருந்தாத்தான் அழகா இருக்கும். என்னோட தங்கச்சி ராஜிதான் ராம்குமார்க்கு பொருத்தமா இருப்பா. உடம்பு பொருத்தம் மட்டுமில்லை. ஜாதகப் பொருத்தமும் அவங்க ரெண்டு பேருக்குத்தான் நல்லா இருக்கு..." மிருதுளா சொல்ல லட்சுமணன் அவளைப் புன்னகையோடு பார்த்தான்.
 "அண்ணி! அந்த ஜாதகப் பொருத்த விஷயம் எனக்கும் தெரியும். ராம்குமாரோட ஜாதகத்தைப் பார்த்து உங்க தங்கச்சியோட ஜாதகத்தை கரெக்ட் பண்ணி பொருத்தங்களை உண்டாக்கிட்டீங்க. இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம்... ஆனா..."
 லட்சுமணன் பேசப்பேச கையமர்த்தினார் வீரராகவன்.
 "ஒருத்தர்க்கொருத்தர் வக்கணையா பேசிட்டிருக்கவா உங்களைக் கூப்பிட்டு உட்கார்த்தி வெச்சிருக்கேன்..."
 "சரி... உங்க முடிவு என்னப்பா...?" வெங்கடேஷ் கேட்டான்.
 "இதுல என்னோட முடிவு முக்கியமில்லடா வெங்கடேஷ், ராம்குமார் மனசுல என்ன இருக்குங்கிறதுதான் முக்கியம்."
 "அப்பா... நீங்க நழுவறீங்க...! உங்க கடைசி மகன் மும்பைல வேலைக்குச் சேர்றதுக்காக புறப்பட்ட ராத்திரி அவன் என்ன சொல்லிட்டுப் போனான்னு எனக்குத் தெரியும்..."என்ன சொல்லிட்டுப் போனான்...?"
 "கல்யாண ஏற்பாடுகளை பண்ணட்டுமாடான்னு நீங்க கேட்டீங்க. அவன் அதுக்கு நீங்க பார்த்து எது செஞ்சாலும் சரிப்பான்னு சொன்னான்."
 "இருந்தாலும் அவனைக் கேக்க வேண்டாமா?"
 "எதுக்காக கேட்கணும்...? நீங்க பார்த்து - எது செஞ்சாலும் சரின்னு அவன் சொன்ன பிறகு எதுக்காக கேட்கணும்...?"
 "டேய் வெங்கடேஷ்...! கல்யாணம் கட்டிக்கப்போகிற உன்னோட தம்பிக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கு... அவனையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறமா கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாம்..."
 "சரி, ஒரு காரியம் பண்ணலாம்."
 "என்ன...?"
 "நாளைக்குக் காலையில ஒத்தக்கால் மண்டபத்தில் இருக்கிற நம்ப குல தெய்வமான அங்காளம்மன் கோவிலுக்குப் போவோம். ராஜி, பானு, லீலா மூணு பேரோட பெயர்களையும் சீட்ல எழுதி குலுக்கிப் போட்டு எடுப்போம். யார் பேர் வருதோ... அவங்க ராம்குமாரை கட்டிக்க மத்தவங்க சம்மதம் குடுத்துடணும்..."
 வெங்கடேஷ் - சொல்ல, எல்லோரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223517139
உனக்கே உயிரானேன்!

Read more from Rajeshkumar

Related to உனக்கே உயிரானேன்!

Related ebooks

Related categories

Reviews for உனக்கே உயிரானேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உனக்கே உயிரானேன்! - Rajeshkumar

    1

    மும்பை.

    மஹாலட்சுமி கோயில். காலை 6.00 மணி. கிழக்குத் திசைவானத்தில் சூரியனின் ஆரஞ்சு நிற வெளிச்சம் ஒட்டியிருந்தது.

    கோவில் வாசலில் வந்து நின்ற டாக்ஸியிலிருந்து ராம்குமார் இறங்கினான். கோவில் வாசற்படிகளில் மெல்ல ஏறினான்.

    கோவிலில் கும்பல் அவ்வளவாக இல்லை. அரபிக்கடல் காற்று மெலிதாய் வீசிக்கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த அந்தப் பூக்கடையில் விலை பேசி லில்லி மலர்மாலையை வாங்கிக்கொண்டு தன் ஷூக்களை கழற்றி ஒரு திட்டின் ஓரமாய் வைத்துவிட்டு, கோவிலுக்குள் போனாள்.

    ‘ஓம் மஹாதேவ்யைச வித்மஹே!

    விஷ்ணு பத்ந்யைச நீமஹி!

    தந்தோ லட்சுமி ப்ரசோதயாத்’

    கோவில் தூணில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரிலிருந்து ஒரு இனிமையான பெண் குரல் மகாலட்சுமி துதி பாடிக் கொண்டிருந்தது.

    ராம்குமாருக்கு உடம்பு சிலிர்த்தது. குளிர்ந்த அந்தக் காலை வேளையில் கோயில் சூழ்நிலை மனசுக்குள் ரம்மியமாய் உட்கார்ந்தது. முற்றிலும் சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட - கோவிலின் வெளிப்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு உட்பிராகாரத்திற்குள் அவன் உள்ளே நுழைய முயன்றபோது -

    கோவில் வாசலில் அந்த சத்தம் கேட்டது.

    பெண் குரல்.

    யே... பத்மாஷ்...!

    தொடர்ந்து ஒரு சிறுவன் வீறிட்டு அலறும் சத்தம்.

    மாப் கரோ தீதி... மாப் கரோ...

    ராம்குமார் கோவில் வாசலை எட்டிப் பார்த்தான். பார்த்தவன் திடுக்கிட்டான். ஒரு பன்னிரண்டு வயது சிறுவனின் காதைப் பிடித்து சல்வார் கம்மீஸ் அணிந்த ஒரு அழகான பெண் திருகிக் கொண்டிருக்க - சிறுவனின் கைகளில் ராம்குமாரின் புத்தம் புதிய ஷூக்கள்.

    பதட்டமாய் கோவில் வாசலை நோக்கி ஓடினான். தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கேட்டான்.

    க்யா சமாச்சார்...? யே... மேரா ஷூஸ்...

    அந்தப் பெண் ராம்குமாரிடம் நிமிர்ந்தாள். (என்ன அழகான விழிகள். இரண்டு விழிகளிலும் கொள்ளை கொள்ளையாய் மின்சாரம்...) படபட வென்று இந்தியில் பேசி அந்தச் சிறுவனையும் ஷூக்களையும் காட்டினாள்.

    ராம்குமாருக்கு புரியவில்லை.

    ஸாரி... ஐ டோண்ட் நோ ஹிந்தி. குட் யூ ஸ்பீக் இன் இங்கிலீஷ்...?

    அந்தப் பெண் பளிச்சென்று தமிழில் கேட்டாள்.

    நீங்க மெட்ராஸா...?

    ராம்குமார் திகைத்து ஆமா... என்றான்.

    இந்தி தெரியலைன்னா அது மெட்ராஸ் காரங்களாத்தான் இருக்கும். சொன்னவள் அந்தப் பையனைக் காட்டினாள்.

    நான் மட்டும் பார்க்காம இருந்திருந்தா... இந்நேரம் உங்க ஷூவை இந்தப் பையன் எடுத்துக்கிட்டு ஓடியிருப்பான்.

    தாங்க்ஸ்...

    பையன் இன்னமும் கைகளைக் குவித்து, மாப் கரோ தீதி... மாப் கரோ தீதி... என்று கத்திக் கொண்டிருந்தான்.

    பாவம்! பையனை விட்டுடுங்க...

    என்னது... விட்டுடறதா...?

    ஆமா... ஏதோ இல்லாத கொடுமைக்கு என் ஷூ மேல கையை வச்சுட்டான்.

    இவனை போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டாம்...?

    வேண்டாம்... விட்டுடுங்க...

    அந்தப் பெண் பையன் காதைவிட, அவன் விழுந்தடித்துக்கொண்டு ஓடினான்.

    ராஸ்கல்! இவனெல்லாம் இன்னும் பத்து வருஷத்துல பெரிய கிரிமினலா வருவான்... ஷூக்களை பூக்கடைக்காரன்கிட்டே விட்டு பார்த்துக்கச் சொல்லியிருக்கலாமே நீங்க!

    ஸாரி... எனக்கு இந்தி சரியா பேசத் தெரியாது. மீறிப் பேசினா கேக்கிறவங்க சிரிக்கிறாங்க. அதான் சொல்லிட்டுப் போகலை...

    அழகாய் புன்னகைத்தாள் அந்தப் பெண்.

    மும்பைக்கு வந்து நீங்க எத்தனை நாளாச்சு...?

    ரெண்டு மாசம்...

    இன்னும் ஒரு நாலு மாசம் போனா இந்தி சரளமா பேச வந்துடும்... சொன்னவள் பக்கத்திலிருந்த பூக்கடைக்காரனிடம் திரும்பினாள்.

    ஷூக்களையும் தன்னுடைய ஸ்லிப்பர்களையும் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ராம்குமாரோடு நடந்தாள்.

    உங்களுக்கு நேட்டிவ் மெட்ராஸா...? இல்லை...?

    எனக்கு கோயமுத்தூர்...

    மும்பையில வேலை பார்க்கறீங்களா?

    ஆமா...

    என்ன வேலை...?

    டாமினிக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல அசிஸ்டெண்ட் என்ஜினீயரா ஒர்க் பண்ணிட்டிருக்கேன்... பை த பை நீங்க இவ்வளவு நல்லா தமிழ் பேசறீங்க. உங்க நேட்டிவ் எது...?

    எனக்கு திருநெல்வேலி...

    இங்கே மும்பையில எப்படி...?

    என்னோட அப்பா ஒரு பாங்க் ஆபீசர். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த மும்பைக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. இங்கேயே வந்து செட்டிலாயிட்டோம்.

    இந்தி நல்லா பேசறீங்களே...?

    எனக்கும் மும்பை வந்த புதுசுல இந்தி சுத்தமா தெரியாது. நாள் போகப்போக... பாஷை பிடிபட்டு போச்சு... இப்போ இந்தி மராட்டி ரெண்டுமே தெரியும்...

    ராம்குமார் மறுபடியும் அவளோடு கோவிலின் வெளிப்புற பிராகாரத்தை சுற்றினான்.

    எம்பேர் ராம்குமார். உங்க பேரைக் கேட்டா தப்பா நினைச்சுக்கமாட்டீங்களே?

    பேரைக் கேக்கிறது ஒண்ணும் கிரிமினல் குற்றம் இல்லையே! எம் பேர் பவ்யா...

    படிச்சிட்டிருக்கீங்களா...?

    முடிச்சிட்டேன். போன வருஷம்தான் கறுப்பு கவுனை மாட்டிக்கிட்டு பி.ஏ. பட்டத்தை வாங்கினேன்...

    இருவரும் உட்பிராகாரத்திற்குள் நுழைந்தார்கள்.

    பவ்யா கேட்டாள்.

    இந்தக் கோவிலுக்கு நீங்க அடிக்கடி வருவீங்களா?

    ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஆறு மணிக்கு இங்கே நீங்க என்னைத் தவறாமே பார்க்கலாம்.

    எனக்கு இன்ன கிழமைன்னு கிடையாது. எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்துட்டு போயிடுவேன்.

    இருவரும் கர்ப்ப கிரகத்திற்குள் போய் மாதா மகாலட்சுமியைத் தரிசித்துவிட்டு வெளியே வருவதற்குள் கோவிலில் கும்பல் சேர

    Enjoying the preview?
    Page 1 of 1