Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ரத்தக்கறை தோட்டாக்கள்
ரத்தக்கறை தோட்டாக்கள்
ரத்தக்கறை தோட்டாக்கள்
Ebook133 pages32 minutes

ரத்தக்கறை தோட்டாக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏர் - வைஸ் - மார்ஷல் ஷெட்டி மற்ற அதிகாரிகளோடு நின்று - வானத்திலிருந்து இறங்குகிற பாராசூட்டையே பயமாய் பார்த்துக் கொண்டிருக்க. லால்கிஷன் ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னார்.
 "ஸார்... கண்ட்ரோல் டவர்க்கும், விமானத்துக்கும் இருந்த தொடர்பு அறுந்து விட்டது."
 "எப்படி திடீர் என்று..."
 "புரியவில்லை..."
 "விமானம் தரை இறங்காமல் போய் விட்டது. அப்போது இந்த பாராசூட்டில் யார் வந்து கொண்டிருக்கிறார்கள்."
 "வல்லப்பாக இருக்கலாம்..."
 "அப்படியானால் விமானத்தை ஓட்டி வந்தது யார்...? இங்கிருந்து வல்லப் புறப்படும் பொழுது - அவர் மட்டும் தானே விமானத்தை ஒட்டிக் கொண்டு போனார். இப்போது இந்த இரண்டாவது நபர் யார்...?"
 பாராசூட் இப்போது பெரிதாய் தெரிந்தது.
 ஷெட்டி மற்ற அதிகாரிகளிடம் திரும்பினார். "பி... அலர்ட். ஒரு வேளை பாராசூட்டில் இறங்குவது 'வல்லப்'பாக இல்லாமலும் இருக்கலாம். வருகிற பேர்வழி எதிரியாய் இருந்து - அவனால் ஏதாவது விபரீதம் நேரும் முன் - அதைத் தாக்க வேண்டும். கால்... த... செண்ட்ரீஸ்..."
 விங் கமாண்டர் உடனே விசிலை எடுத்து ஊத ஆங்காங்கே இருட்டில் பரவியிருந்த செண்ட்ரீஸ் எல். எம். துப்பாக்கிகளோடு பூட்ஸ் சத்தம் ஒலிக்க ஓடிவந்தார்கள். லால்கிஷன் அவசர அவசரமாய் இன்ஸ்ட்ரக்ஷன்கள் கொடுக்க - அவர்கள் இறங்கிக் கொண்டிருக்கிற பாராசூட்டை - குறிவைத்து அரை வட்டமாய் நகர்ந்தார்கள்பாராசூட் நூறடி உயரத்தில் மிதந்தது.
 கொஞ்சம் கொஞ்சமாய் –
 தவ்வி தவ்வி –
 இறங்கியது.
 எழுபது அடி...
 பாராசூட் கயிற்றோடு பிணைக்கப்பட்டிருந்த உருவம் இப்போது மங்கலாய் புலப்பட்டது.
 அறுபது அடி.
 செண்ட்ரீஸ் எல்.எம். துப்பாக்கிகளை தயார் நிலைக்கு கொண்டு வந்து - ட்ரிக்கரின் மேல் விரல்களை வைத்தார்கள்.
 ஐம்பது அடி.
 ஷெட்டியின் இருதயதுடிப்பு உச்சத்திற்கு போயிற்று. கையில் வைத்திருந்த கர்ச்சீப் நெற்றியில் பிசுபிசுத்த வியர்வையை ஒற்றியது.
 நாற்பது…
 முப்பது...
 இருபது...
 பத்து...
 உருவம் தரையில் வந்து விழ - உருவத்துக்குப் பின்னால் பாராசூட் காற்றுக்கு பிரம்மாண்டமாய் உப்பியது.
 முதலில் செண்ட்ரீஸ் 'தப தப'வென்று ஓடி பாராசூட்டை வளைத்தார்கள். அவர்களுக்குப் பின்னே அதிகாரிகள் ஓடினார்கள்.
 பாராசூட் உருவம் அப்படியே கீழே விழுந்து கிடந்ததுஸ்பாட் த லைட்..."
 ஒரு செண்ட்ரி கத்த - உடனே மற்றொரு செண்ட்ரியின் கையிலிருந்த டார்ச் உயிர்பெற்று - வெளிச்சத்தை பிரசவித்தது. பாராசூட்டோடு பிணைக்கப்பட்டிருந்த உருவத்தின் பக்கமாய் வெளிச்சம் திரும்பியது.
 எல்லோரையும் அதிர்ச்சி தாக்கியது

 

Languageதமிழ்
Release dateDec 18, 2023
ISBN9798223816928
ரத்தக்கறை தோட்டாக்கள்

Read more from Rajeshkumar

Related to ரத்தக்கறை தோட்டாக்கள்

Related ebooks

Related categories

Reviews for ரத்தக்கறை தோட்டாக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ரத்தக்கறை தோட்டாக்கள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    இண்டியன் ஏர்ஃபோர்ஸுக்கு சொந்தமான அந்த விமான நிலையம் நள்ளிரவு இருட்டில் நனைந்திருந்தது. ரன்வேயின் விளிம்புகளில் மட்டும் மெல்லிய நீல நிற விளக்குகள் நடப்பட்டு தெரிய - பவுண்டரிகளில் ரத்தத் துளிகளை ஞாபகப்படுத்துகிற மாதிரி சிவப்பு விளக்குகள். கண்ட்ரோல் டவரின் உச்சியில் - கண்ணாடிச் சுவர் அறை மஞ்சள் வெளிச்சத்தில் இருந்தது.

    டெல்லியை விட்டு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பாக் என்னுமிடத்தில் அமைந்திருந்த அந்த விமானநிலையம் கிலோமீட்டர் கணக்கில் பரந்து வியாபித்திருந்தது. சுற்றிலும் ஒரு மரம் கூட கிடையாது. போர்க்காலங்களில் மட்டும் பரபரப்பாய் தெரியும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அந்த விமான நிலையம் இந்த வரியை படிக்கும் போது பரபரப்பாக இருந்தது.

    ராடார் திரை இருந்த அந்த அறைக்குள் - ஏர் - வைஸ் - மார்ஷல், ஏர்-கமாண்டர் சாய்வு நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்து - ராடார் திரையையே உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருக்க - அவர்களுக்குப் பின்னால் க்ரூப் காப்டன் ஒருவரும் - விங்க் கமாண்டர் ஒருவரும் நின்றிருந்தார்கள்.

    மிஸ்டர் லால்கிஷன்...

    ஸார்...

    நேரம் எவ்வளவு...?

    இரண்டு இருப்பத்தைந்து ஸார்...

    விமானம் இன்னமும் ஏன் ராடார் திரைக்கு தட்டுப்படவில்லை...? நமக்கு கிடைத்த தகவல் சரியானது தானா...?

    மிக மிகச் சரியானது ஸார்...

    தகவல் சரியானது என்றால் ஹண்டர்-75 சரியாய் இரண்டு மணிக்கு ராடார் திரையில் தரிசனம் கொடுத்திருக்க வேண்டுமே... நீங்கள் ரிஸீவ் செய்த செய்தியை மறுபடியும் மானிட்டரில் போடுங்கள் பார்க்கலாம்...

    ஏர்-வைஸ் மார்ஷல் சொல்ல அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக எழுந்தார். ஏர் - கமாண்டர் லால்கிஷன்.

    அதே வினாடி-

    ஸ்க்வாட்ரன் லீடர் கோபால்தாஸ் உள்ளே நுழைந்து பூட்ஸ் சத்தம் எழாமல் சல்யூட் செய்தார்.

    என்ன...?

    ஏர் மார்ஷல் ஹாட்லைன் டெலிபோனில் காத்திருக்கிறார்

    ஏர்-வைஸ் மார்ஷல் உடனே எழுந்து - பக்கத்து அறையை நோக்கி வேகவேகமாய் போனார். வெளியே தோளில் சாத்திய மெஷின்கன்களோடு லேசர் பார்வையோடு உலவிக் கொண்டிருந்த சென்ட்டிரிகள் - நின்ற இடங்களிலேயே விரைத்துக் கொண்டு நெற்றிகளுக்கு கைகளைக் கொண்டு போனார்கள். அவர் அதை பொருட்படுத்தாமல் நடந்து – ‘ஹை அஃபிஷியல்ஸ் ஒன்லி’ - என்கிற வாசகம் தெரிந்த வெள்ளை பெயிண்ட் அடித்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்.

    டெலிபோன் காத்திருந்தது.

    ரிஸிவர் எடுக்கப்பட்டது.

    ஸார்... நான் ஷெட்டி...

    நிலைமை என்ன...?

    ராடாரில் இன்னமும் ஹண்டர் புலப்படவில்லை.

    கண்ட்ரோல் டவர்க்கு ஏதாவது செய்தி கிடைத்ததா?

    இல்லை...

    அசம்பாவிதம் ஏதாவது...?

    நடக்க வாய்ப்பே இல்லை... ஸார். ஃப்ளையிங் ஆபீஸர் வல்லப் நூறு கம்ப்யூட்டர்களுக்கு சமமான புத்திசாலி. ‘கழுகின் கூடுகளை பார்த்து விட்டேன். சிறகுகளோடு வருகிறேன்’ - என்கிற சங்கேத செய்தியும் கிடைத்துள்ளது. எந்த நிமிஷத்திலும் வல்லபின் ஹண்டர் விமானம் ராடார் திரையில் தெரியலாம். நாங்கள் இங்கு விழிப்போடு காத்திருக்கிறோம்...

    மிஸ்டர் ஷெட்டி ஏர்-சீஃப்- மார்ஷல் செய்தியை அறிய ஆவலாய் காத்திருக்கிறார். வல்லப் லேண்ட் ஆனதும் அவரை உள்ளே தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்...

    நிச்சயமாய் ஸார்...

    அடுத்த அரைமணி நேரத்துக்குள் உங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன்... - மறுமுனையில் அவர் ரிஸீவரை வைத்துவிட ஷெட்டி ரிஸீவரை அமர்த்திவிட்டு - கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். செண்டரிகள் - மறுபடியும் விறைக்க - அவர் வேகமாய் நடந்து - ராடார் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

    அதிகாரிகள் டீ சப்பிக் கொண்டிருக்க - ராடார் திரை இன்னமும் ஊமையாய் இருந்தது.

    மிஸ்டர் லால்கிஷன்...

    ஸார்...

    "வல்லபின் ஹண்டர் விமானம் இன்னமும் பார்வைக்கு தட்டுப்படாததில் ஏர்

    Enjoying the preview?
    Page 1 of 1