Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivappu Nimisangal
Sivappu Nimisangal
Sivappu Nimisangal
Ebook179 pages1 hour

Sivappu Nimisangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sivappu Nimisangal

Read more from Rajeshkumar

Related to Sivappu Nimisangal

Related ebooks

Related categories

Reviews for Sivappu Nimisangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivappu Nimisangal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    லண்டன்.

    ஹீத்ரோ ஏர்போர்ட். மெலிதான விடிகாலை. பனி தூவும் ஆகாயம். குளிரை உப்பு மூட்டைத் தூக்கிக்கொண்ட காற்று.

    ரன்வேயில் பாய்ந்து வந்த விமானம் மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் தளர்ந்து - தன் பூதாகரமான உடம்பைத் திருப்பிக் கொண்டு நின்றது. விமானத்தின் இடுப்பில் ஸ்டேர்ஸ் போய் ஒட்டிக்கொள்ள - பயணிகள் இறங்க ஆரம்பித்தனர். தூக்கம் கெட்ட முகங்கள்.

    எல்லாமே வெள்ளைத் தோல்கள்.

    பழுப்பு முடிகள். பீங்கான் கண்கள். சிவப்புக் கன்னங்கள். ஆங்கிலம் குட்டிக் கர்ணம் போடும் நுனி நாக்குகள். சிலுவை டாலர்கள் ஆடும் கழுத்துக்கள். பெண்களின் பாதி திறந்த மார்புகள். தோளில் தொங்கும் 'டச்சப் கிட்'களின் அசைவுகள்.

    இந்த வெளிநாட்டுத்தனங்களுக்கு மத்தியில் - விவேக்கும் ரூபலாவும் தெரிந்தார்கள். ரூபலா பிரமிப்பாய் ஹீத்ரோ விமான நிலையத்தைப் பார்க்க - அவளுடைய விலாவில் ஆட்காட்டி விரலால் குத்தினான் விவேக்.

    ரூபலா... பரக்க... பரக்க... அப்படிப் பார்க்காதே... இதெல்லாம் எனக்கு சகஜம் என்கிற மாதிரி பாரு... மனசுக்குள்ளேயே ஆச்சர்யப்பட்டுக்கோ...

    அம்மாடி... எவ்வளவு பெரிய ஏர்போர்ட்...?

    இப்பத்தானே சொன்னேன்...?

    என்னால் ஆச்சர்யப்படாம இருக்க முடியலையே...?

    ரூபலா தன் அழகான கண்களை விரித்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    சுற்றிலும் ஏராளமான விமானங்கள். வெளிநாட்டு விமானங்கள், தத்தம் நாட்டு தேசிய முத்திரைகளோடு - வெள்ளி உடம்புகளோடு பளபளத்தன.

    ஏர்போர்ட்டுக்கு வெளியே - மழை பெய்கிற மாதிரி லேசான பனி. நிறைய பேர் ஜெர்கின் கோட்டுகளோடு தெரிந்தார்கள். தொலைவில் ஊசி ஊசியாய் கட்டிடங்கள் நின்றிருந்தன.

    விவேக் லக்கேஜ்களை ஒரு சிறிய ட்ராலி வண்டியில் ஏற்றித் தள்ளிக்கொண்டு நடந்தான்.

    இப்போ... நாம் எங்கே போறோம்...?

    இமிக்ரேஷனுக்கு போறோம்...

    (பாஸ்போர்ட் என்பது நம் நாடு தரும் அனுமதி. விசா என்பது அந்த நாடு தரும் அனுமதி. அந்த நாட்டுக்குப் போக அனுமதிப்பதும், அனுமதிக்காததும் அந்தந்த இமிக்ரேஷன் (குடிபெயர்ப்பு) பகுதியில் உட்கார்ந்திருக்கும் அதிகாரியைப் பொறுத்தது...)

    இமிக்ரேஷன் இங்கிருந்து எவ்வளவு தூரம்?

    ரெண்டு கிலோ மீட்டர் போகணும்... ட்ராலியைத் தள்ளு... ரூபலா. இங்கே போர்ட்டர் கிடையாது. நம் கையே நமக்கு உதவி...

    இரண்டு பேரும் சேர்ந்து - அந்த வழுவழுப்பான தரையில் - ட்ராலியை உருட்டிக்கொண்டு போனார்கள்.

    இமிக்ரேஷன் பகுதியை நெருங்கிய போது - அந்த உயரமான - சூட் அணிந்த இளைஞன் எதிர்பட்டான். முகத்தில் இந்தியத்தனம். சுத்தமான தாடை. ரோஸ் நிற உதடுகள்.

    வெல்கம் டூ லண்டன்...

    விவேக் நிமிர்ந்தான். அந்த இளைஞன் தொடர்ந்து ஆங்கிலத்தில் கேட்டான்.

    நீங்கள் மிஸ்டர் விவேக்?

    எஸ்...

    ஐயாம் மேத்யூ... இண்டியன் எம்பஸியில் செக்யூரிடி கார்டாக இருக்கிறேன். உங்களை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துப் போக வேண்டியது என்னுடைய கடமை.

    விவேக் புன்னகைத்தான்.

    என்னை எப்படி அடையாளம் கண்டுகொண்டீர்கள்?

    மேத்யூ பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து - விவேக் - ரூபலா போட்டோவை எடுத்துக் காட்டினான். எம்பஸியில் நேற்றைக்கு இரவே... என்னிடம் இந்த போட்டோவைக் கொடுத்து விட்டார்கள். உங்களை வரவேற்று - ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துப் போய் ஹோட்டலில் தங்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு...

    எந்த ஹோட்டலை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?

    ஹோட்டல் பிக்-பென்

    அது எந்தப் பகுதியில் இருக்கிறது.

    எட்ஜ்வேர்

    நானும் என் மனைவியும் இமிக்ரேஷனை முடித்துக் கொண்டு வருகிறோம். அதுவரைக்கும் நீங்கள் காத்துக்கொண்டிருக்க முடியுமா...?

    ஷ்யூர்... நான் லௌன்ச்சில் ட்யூப் நாற்காலி வரிசையில் காத்திருக்கிறேன்... வாருங்கள்.

    மேத்யூ நகர்ந்து கொள்ள விவேக்கும் ரூபலாவும் இமிக்ரேஷனை நோக்கிப் போனார்கள். ரூபலா சந்தோஷித்தாள்.

    பரவாயில்லையே... நம்ம எம்பஸி... புத்திசாலித்தனமா ஆளை அனுப்பி ரிஸீவ் பண்றாங்களே...

    ரூபலா... சந்தோஷப்படாதே...

    ஏன்...?

    நம்மை... வரவேற்க... வந்திருக்கிற மேத்யூ... எம்பஸியைச் சேர்ந்த ஆள் மாதிரி தெரியலை...

    முகம் மாறினாள் ரூபலா.

    எ... எ... என்ன சொல்றீங்க?

    அவன் பேசுகிற இங்கிலீஷை கவனிச்சியா...? கனடா அஸ்ஸெண்ட்... இவன் நமக்கு சாதகமானவன் இல்லை. நானும் நீயும் இங்கே வரப்போகிற விஷயம் எம்பஸிக்கு மட்டும்தான் தெரியும்... ஆனா நடுவுல யாரோ மோப்பம் பிடிச்சு... வந்துட்டாங்க... இந்த மேத்யூ நம்ம இண்டியன் எம்பஸி ஆள்தானா இல்லையாங்கிறதை இப்போ கண்டுபிடிச்சுடலாம்...

    எப்படி...?

    இமிக்ரேஷன் கௌண்டர்க்கு வா... சொல்றேன்... கௌண்டர்க்குள் நுழைந்தார்கள்.

    ஸ்கர்ட் அணிந்து கண்களில் கூர்மையோடு உட்கார்ந்திருந்த அந்தப் பெண் இரண்டு பேரின் பாஸ்போர்ட் விசாக்களை பார்த்துவிட்டு நிமிர்ந்தாள். கேட்டாள்.

    பர்ப்பஸ் ஆப் விஸிட்...?

    ஹனிமூன்...

    அவள் சிரித்தாள். ஹனிமூனுக்கேற்ற அருமையான சீஸன்... சொல்லிக் கொண்டே பாஸ்போர்ட் விசாவில் எதையோ எழுதி ரப்பர் ஸ்டாம்ப்பைக் குத்தினாள்.

    மேடம்... விவேக் கூப்பிட்டான்.

    எஸ்...

    நான் ஒரு டெலிபோன் செய்துக் கொள்ளலாமா...?

    தாராளமாய்... எதிரேயிருந்த கண்ணாடிக் கூண்டைக் காட்டினாள்.

    கையில் சரியான பென்னி வைத்துக்கொள்ளுங்கள்...

    தாங்க்யூ... விவேக் ரூபலாவை அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு டெலிபோனின் கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக்கொண்டு - தன் பாக்கெட்டில் இருந்த - சின்னஞ்சிறு டயரியை எடுத்து - அம்பாசிடரின் டெலிபோன் நெம்பரை - பால் பாய்ண்ட் பேனாவால் உள்ளங்கையில் குறித்துக் கொண்டு ரிஸீவரை காதுக்கு கொடுத்தான்.

    பட்டன் சிஸ்டம் டெலிபோன் எண்களைத் தட்டிவிட்டு - மறுபக்கம் 'இண்டியன் எம்பஸி' என்ற குரல் வந்ததும் பென்னி நாணயங்களை ஸ்லிட்டில் போட்டான்.

    லைன் உயிர்ப்புக்கு வந்தது.

    எஸ்... திஸ்... ஈஸ்... இண்டியன் எம்பஸி...

    ஐயாம் விவேக்... க்ரைம் பிராஞ்ச் ப்ரம் இண்டியா...

    தொடர்ந்து குரல் ஆங்கிலத்தில் கேட்டது.

    என்ன வேண்டும் உங்களுக்கு...?

    அம்பாஸடரோடு நான் பேச வேண்டும்...

    என்ன விஷயமாய்...?

    அதை அவரிடம்தான் சொல்ல வேண்டும்...

    ஒரு நிமிஷம் லைனில் இருங்கள்... இருந்தான் விவேக்.

    இரண்டு நிமிஷம் கழித்து அம்பாசிடர் பேசினார். மென்மையான குரல்.?

    யார் நீங்கள்...? என்ன வேண்டும்...?

    இண்டியன் சி.பி.ஐ.யிலிருந்து உங்களுக்கு தகவல் வந்திருக்கலாம்... நான் விவேக்... அடாமிக் ரிசர்ச் ஸ்காலர் ஆத்மராம் கான்பரன்ஸ் தொடர்பாக வந்திருக்கிறேன்...

    க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர்?

    எஸ்...

    எப்போது வந்தீர்கள்...?

    இப்போதுதான்...

    எங்கிருந்து பேசுகிறீர்கள்...?

    ஹீத்ரோ ஏர்போர்ட்...

    கஸ்டம்ஸை முடித்துக்கொண்டீர்களா...?

    இல்லை... இனிமேல்தான்...

    கஸ்டம்ஸை முடித்துக்கொண்டு - ஏர்போர்ட் கிழக்கு வாசலில் காத்திருங்கள். நான் காரை அனுப்புகிறேன்...

    ஒரு அதிர்ச்சியான விஷயம்...?

    விவேக் ஆரம்பித்தான்.

    என்ன...?

    எம்பஸி செக்யூரிடி கார்ட் என்று ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறான். பெயர் மேத்யூ என்று சொல்கிறான்...

    அம்பாசிடர்

    Enjoying the preview?
    Page 1 of 1