Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paris Bayangaram
Paris Bayangaram
Paris Bayangaram
Ebook108 pages45 minutes

Paris Bayangaram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Paris Bayangaram

Read more from Rajeshkumar

Related to Paris Bayangaram

Related ebooks

Related categories

Reviews for Paris Bayangaram

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paris Bayangaram - Rajeshkumar

    21

    1

    பாரீஸ்.

    சார்லஸ் டிக்காலே ஏர்போர்ட் டெர்மினல் ஏ. ஏர் பிரான்ஸ் பிரான்ஸ் ஃபிளைட் 747, விடிந்தும் விடியாத அந்த வைகறை நோத்தில் - இரண்டு பக்கங்களிலும் சிவப்பு விளக்குகள் பூத்த ரன்வேயில் ஜிவ்வென்று தவ்வி இறங்கியது. எயிலிரான்களிலும் - டெய்ல்பீஸிலும் நீல விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்தன நிமிஷ நேரத்தில் சகல சத்தமும் ஒய்ந்து... விமானம் நிலை கொண்டு நின்றது.

    ஸ்டெப்ஸ் அதன் இடுப்போடு போய் ஒட்டிக் கொள்ள பயணிகள் இறங்க ஆரம்பித்தார்கள். எல்லாமே வெண்ணெய் நிற முகங்கள். அதில் தூக்கம் கெட்ட சிவப்பான கண்கள். விவேக்கும் ரூபலாவும் பதினான்கு பதினைந்தாவது நபர்களாய் இறங்கி - வெள்ளைத் தோல்களுக்கு மத்தியில் நடந்து வந்தார்கள்.

    ஏர்போர்ட் தீபாவளி பண்டிகையின் காலை நோத்தைப் போல் உற்சாகமாய் இருந்தது. காதுகளில் குளிர் அறைந்தது.

    ஏர்போர்டைப் பார்த்தீங்களா? கண்ணாடி மாதிரி இருக்கு... கண்ணாடியில கூட கொஞ்சம் தூசி ஒட்டியிருக்கும். ஆனா இங்கே அந்த தூசியைக் கூட பார்க்க முடியாது போலிருக்கே!- ரூபலா சுற்றும் முற்றும் பார்துக் கொண்டே ஆச்சர்யப்பட்டாள்.

    விவேக் புன்னகைத்தான். உலகத்திலேயே அதி சுத்தமான ஏர்போர்ட் பாரீஸ் ஏர்போர்ட் தான். அதே போல் பாஸஞ்சர்ஸை சிரமப்படுத்தற ஏர் போர்ட்டும் இதுதான்...

    சிரமமா...? என்ன சிரமம்...?

    ஏர்போர்ட் ஆபிஸர்ஸ் யாரும் இங்கிலீஸ் பேச மாட்டாங்க... ப்ரெஞ்ச் தான் பேசுவாங்க...

    ஏன் அப்படி...?

    "அவங்க மொழி மேல ஒரு பற்று தான்...’’

    பேசிக் கொண்டே இமிக்ரேஷன் பகுதிக்கு வந்தார்கள். இமிக்ரேஷன் பகுதியில் உலகையே மூன்று பாகமாக பிரித்து - மூன்று கௌண்டர்கள் வைத்து - ஆட்களை’ வடிகட்டி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். விவேக்கும் ரூபலாவும் காமன்வெல்த் நாடுகளுக்கான பிரிவில் நின்று - விசாரணையை முடித்துக் கொண்டு ஏர்போர்ட் லௌஞ்சுக்கு வந்தார்கள்.

    லௌஞ்ச் வெளிச்சமாய்- ஏர்க்கண்டிஷனின் ஜில்லிப்போடு இருக்க, தத்தம் விமானங்களுக்காக -ரோஜா நிற முகங்களோடு - ஜனங்கள் வினைல் நாற்காலிகளில் பதுமைகளாய் சாய்ந்து - பேப்பர்- பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உணவு டின்களில் ஓட்டை போட்டு ஸ்ட்ராவினால் உறிஞ்சி - கொஞ்சம் கொஞ்சமாய் மென்று கொண்டிருந்தார்கள். பீங்கான் கண்களோடு பிரெஞ்ச் குழந்தைகள் அப்பா அம்மாக்களை படுத்தாமல் உட்கார்ந்திருந்தன. கருநீல யூனிபார்ம்களில் பிரெஞ்ச் போலீஸ் ஆங்காங்கே தெரிந்தார்கள். பிராங்க் நாணயங்களை கையில் வைத்துக் கொண்டு அழகான டெலிபோன் பூத்துகளுக்கு முன்னால் - ஆண்களும் பெண்களும் நீளமான வரிசைகளை வகுதித்திருந்தார்கள்.

    என்ன அழகான ஏர்போர்ட்? மறுபடியும் ஆசரியப்பட்டுக் கொண்டே நடந்தாள் ரூபலா. விவேக்கும் அவளுக்கு பதில் சொல்ல முயன்ற அதே விநாடி -

    யாரோ -

    அவனை உரசுகிற மாதிரி பக்கத்தில் வந்தார்கள். விவேக் திரும்பிப் பார்க்க - அந்த இளைஞன் சிரித்தான். பிரெஞ்ச் இளைஞன். கோரை முடி. மொச்சை மொச்சையாய் மஞ்சள் பற்கள். நீலமும் பச்சையும் கலந்த கண்கள். உடைந்த ஆங்கிலத்தில் கேட்டான்: நீங்கள் மிஸ்டர் விவக்...?

    விவக்கில்லை. விவேக்...

    நான் பங்கால்... ப்ரெஞ்ச் க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர்... அவன் தன் கோட்டுக்கு கையை நுழைத்து - அடையாள அட்டையை எடுத்துக் காட்டினான்.

    ஹலோ...

    ரூபலாவும் ‘ஹலோ’ சொன்னாள்.

    கார் காத்திருக்கிறது. போகலாமா?-சொல்லிக் கொண்டே பங்கால் அவர்களோடு நடந்தான்.

    என்னை எப்படி கண்டு பிடித்தீர்கள்?- விவேக் கேட்டான்.

    பங்கால் சிரித்தான். சிரித்து விட்டு மெல்லிய குரலில் சொன்னான்:

    உங்களைப்பற்றி - ஒரு டாக்குமெண்டரி மாதிரி - வீடியோ கேஸட் ஒன்றை வைத்திருறோம். உலகத்தின் தலை சிறந்த க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர்களை ப்ரெஞ்ச் போலீஸ் மிகவும் மதிக்கும். அவர்களைப் பற்றிய கேஸட்டுகளை போட்டுப் பார்ப்பது - எங்களுடைய டிபார்ட்மெண்டில் முக்கியமான பயிற்சி.

    லெளஞ்சுக்கு வெளியே வந்தார்கள்.

    பாரீஸ் செம்மண் நிறத்தில் விடிந்து கொண்டிருந்தது. கொத்தவால் சாவடியில் குவிக்கப்பட தக்காளிக் கூடைகள் மாதிரி - ஏராளமான கார் குவிந்திருக்க - ரூபலா மலைத்தாள்.

    அடேங்கப்பா...!

    வாயைச் சாத்து ரூபலா. கூட வர்றவன் ஒரு மாதிரியா... நினைச்சுடப் போறான்...

    வாட் டூ யூ ஸே... மிஸ்டர் விவேக்?

    நத்திங்! காரை எங்கே நிறுத்தியிருக்கிறீர்கள் மிஸ்டர் பங்கால்

    "நார்தன் எண்ட்... ப்ளீஸ் கம்... திஸ் சைட்... பங்கால் வேகமான நடையில் விறுவிறுவென்று நடந்தான். கார்கள் அவ்வளவு குவிந்திருந்தாலும் - போக்குவரத்து கசகசப்பு இல்லாமல் - கம்ப்யூடர் சிக்னல்களுக்கு கட்டுப்பட்டு - ஒவ்வொரு காராய் ஹார்ன்களை உபயோகிக்காமல் நகர்ந்து கொண்டிருந்தன.

    பங்கால் ஒரு காரை நெருங்கி - அதன் பின் பக்கக் கதவைத் திறந்து-ப்ளீஸ் கெட் இன்... என்றான்.

    விவேக்கும் ரூபலாவும் அந்த டாட்சன் காரின் பின் சீட்டு போம் மொத்தையில் புதைந்தார்கள் கார்க்குள் மெலிதான செண்ட் மணமும் -ஜில்லிப்பான ஏர்க்கண்டிஷன் காற்றும் இரண்டு பேர்களின் முகங்களையும் மோர்ந்து பார்த்தன.

    பங்கால் ட்ரைவிங் சீட்டுக்கு வந்தான். ஒரு அழகான பெண்ணின் தொண்டை கமறுவது போல - காரின் இக்னீஷியன் கமறியது.

    பார்க்கிங்கை விட்டு கார் நகர்ந்தது.

    எங்களுக்கு எந்த ஹோட்டலில் அறை ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள் மிஸ்டர் பங்கால்?

    "ஹோட்டல் டி-வில்லே...’’

    நிறம்பவும் தூரமா?

    காரில் 110 கி.மீட்டர் வேகத்தில் போனால்... இருபது நிமிஷங்களில் ஹோட்டலைத் தொட்டு விடலாம். பாரீஸின் மிக உயர்ந்த ஓட்டல்களில் டி-வில்லேவும் ஒன்று.

    Enjoying the preview?
    Page 1 of 1