Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivekin Viswaroopam
Vivekin Viswaroopam
Vivekin Viswaroopam
Ebook99 pages51 minutes

Vivekin Viswaroopam

Rating: 1.5 out of 5 stars

1.5/5

()

Read preview

About this ebook

முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் விமானம் கடத்தப்படுகிறது. அந்த பயணிகளில் விவேக்கும் ஒருவன்.

சொல்லவும் வேண்டுமா... இந்த கதையில் விவேக்கின் அதிரடி ஆட்டம், விஸ்வரூபம் எந்தளவு இருக்கும் என்பதை?

திக் திக்...விநாடிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

புரட்டுங்கள் பக்கங்களை.... ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580100407152
Vivekin Viswaroopam

Read more from Rajesh Kumar

Related to Vivekin Viswaroopam

Related ebooks

Related categories

Reviews for Vivekin Viswaroopam

Rating: 1.5 out of 5 stars
1.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivekin Viswaroopam - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    விவேக்கின் விஸ்வரூபம்

    Vivekin Viswaroopam

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ஏர்ஃபிரான்ஸ் 747 விமானம் டெல்லி ஏர்ஃபோர்ட்டின் விஸ்தாரமான ஏர்வேயில் - விசுவாசமான ஒரு பெரிய பறவையைப் போல் காத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் நின்ற ஹிந்துஸ்தான் பெட்ரோலிய வேன் ஒன்று - பாலி ட்யூப்பின் வழியாக - 747க்கு வாஞ்சையோடு பெட்ரோல் புகட்டி - வயிற்றை நிரப்ப - பயணிகள் லௌன்ஞ்சில் - அறிவிப்புக்காகக் காத்திருந்தார்கள்.ட்யூட்டி அறையில் உட்கார்ந்து - சிகரெட்டை சாம்பலாக்கிக் கொண்டிருந்த பைலட் பகாடியா கவலையான கண்களில் - எதிரில் உட்கார்ந்திருந்த – கோ-பைலட் தேவன் வர்மாவைப் பார்த்தார். பெருமூச்சு விட்டார்.

    ம்... நான் எதிர்பார்த்தது நடக்கலை...

    என்ன எதிர்பார்த்தீங்க காப்டன்?

    பார்க் உட்கார்ந்திட பகாது - சிகரெட்

    747 ஃப்ளைட் கான்சலாகும்ன்னு நினைச்சேன்.

    ஏன்...?

    வளைகுடா நாடுகளில் போர் பதட்டம் அதிகமாயிட்டே வருது... எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம். வருகிற பத்து மணி நேரப் பயணத்தை முடிக்கிறதுக்குள்ள பதைபதைத்துப் போகணும். ரிஸ்கி ஜர்னி.

    வளைகுடா நாடுகளில் போர் வரும்ன்னு நீங்க நினைக்கறீங்களா காப்டன்...?

    கண்டிப்பா...

    எனக்கு நம்பிக்கையில்லை காப்டன்... இரண்டாவது உலகப் போரினால் நேர்ந்த கொடுமைகள், அவலங்கள் எல்லா நாட்டினர்க்கும் தெரியும். போர் என்பது இனிமேல் உலக நாடுகளுக்கு மத்தியில் சாத்தியமில்லை. காரணம் போர் என்று ஒன்று வந்தால் - இனிமேல் அணு ஆயுதப் போர்தான். போரில் தோற்றவனும் கவலைப்பட முடியாது... ஜெயித்தவனும் சந்தோஷப்பட முடியாது. ஏனென்றால் யாருமே உயிரோடு இருக்க மாட்டார்கள்.

    ஐ அக்ரீ... ஆனால்... போர் என்று வந்துவிட்டால் அந்தப் பயம் போய்விடும்... வளைகுடா நாடுகள் யுத்தத்தைத் தவிர்க்கும்ன்னு எனக்குத் தோணலை... - சொன்ன பகாடியா - சிகரெட்டின் கடைசி செ.மீ நீளத்தில் இன்னொரு சிகரெட்டை புதிதாய்ப் பற்ற வைத்துக் கொண்டார்.

    கோ-பைலட் தேவன் வர்மா பிளாஸ்க்கின் மூடியைத் திறந்து உள்ளே சூடாய் இருந்த கறுப்புக் காப்பியை - இரண்டு அட்டை டம்ளர்களில் ஊற்றிக் கொண்டே கேட்டார்.

    ஃப்ளைட் 747 லண்டன் போய்ச் சேர்வதற்குள் - ஏதேனும் பிரச்சனையைச் சந்திக்கும்ன்னு நினைக்கறீங்களா காப்டன்...?

    மே... பி... வளைகுடா ஆகாய எல்லைகளைக் கடக்கிற வரைக்கும்... ஃப்ளைட்டுக்கும் நமக்கும் உதறலான நிமிஷங்கள்தான்... இன்றைக்கென்று பார்த்து - ஃப்ளைட் 747-இல் நிறைய வி.ஐ.பீஸ்... ட்ரிப் ஷீட்டைப் பார்த்தியா தேவன்...?

    நாட் பட் கேப்டன்...

    இண்டியாஸ் க்ரேட் சயிண்டிஸ்ட் டாகுர். வொர்ல்ட் ஃபேமஸ் பரத நாட்டிய டான்ஸர் ஹேமா - அரவிந்த், க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர் விவேக், நோபல் பிரைஸ் ஹோல்டர் மதர் மேரி. இண்டியாஸ் ரிச்சஸ்ட் பர்ஸன் ஸோலன்கி, ஹிந்தி சினிஃபீல்டில் நெம்பர் ஒன் ஹீரோ... ராஜ்தாவன்... ஃபார்மர் சீஃப் மினிஸ்டர் ஆஃப் கர்நாடகா... டென்னிஸ் ப்ளேயர்ஸ் சுரேஷ் க்யான், ரமேஷ் க்யான்...

    மை குட்னஸ்... 747 என்னிக்குமே இவ்வளவு வி.ஐ.பீஸை ஒண்ணா சுமந்ததேயில்லை... மொத்தம் எவ்வளவு பாஸஞ்சர்ஸ் கேப்டன்...?

    இருநூத்து நாற்பத்தெட்டு...

    ஏர் ஹோஸ்டஸ் யார் யாரு...?

    அஜிதா... ரமா மேனன்... கீதாஞ்சலி...

    மூணுக்கு ரெண்டு பரவாயில்லை...

    வெள்ளுடுப்பு யூனிபார்மில் ட்ராஃபிக் ஆபீஸர் அறைக்குள் எட்டிப் பார்த்தார். கேப்டன்...! ஏ.ஓ... உங்களைக் கூப்பிட்டார்...

    ராஜேஷ்குமார்.

    எதுக்கு...?

    ஏதோ நட் ஷெல் ந்யூஸ்...

    மனுஷன் அறுத்துடுவாரே...! சொன்ன பகாடியா கையிலிருந்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் இட்டுத் தேய்த்து விட்டு எழுந்தார். தேவன்! நீ ஃப்ளைட்டுக்குப் போ... ரம்பத்தை ராவிட்டு வந்துடறேன்...

    பகாடியா வெளியே வந்தார். விமான நிலைய லௌன்ஞ்ச் பயணிகளால் நிரம்பியிருந்தது. சில பேர்களின் கழுத்தில் ரோஜா மாலைகள். கைகளில் பாலீதின் பேப்பர்களில் சுற்றப்பட்ட பொக்கேக்கள். புன்னகை உறைந்துபோன உதடுகள். இந்தி ஆங்கிலம் கலந்த உரையாடல்கள்.

    747-இல் தானே பயணம்...?

    ஆமாம்...

    இன்சூர் பண்ணிக் கொண்டாயிற்றா...?

    "ம்... என் விமானப் பயணம் முடியும் வரை கை போனால் எவ்வளவு? கால் போனால் எவ்வளவு? கண் போனால் எவ்வளவுன்னு ஒரு பட்டியல் குடுத்திருந்தார்கள். உடம்பில் இருக்கின்ற அத்தனை உறுப்புகளுக்கும் சேர்த்து - இன்சூர் செய்து கொண்டேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் கூட

    Enjoying the preview?
    Page 1 of 1