Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathamillatha Samuthiram!
Sathamillatha Samuthiram!
Sathamillatha Samuthiram!
Ebook125 pages54 minutes

Sathamillatha Samuthiram!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403452
Sathamillatha Samuthiram!

Read more from Rajesh Kumar

Related to Sathamillatha Samuthiram!

Related ebooks

Related categories

Reviews for Sathamillatha Samuthiram!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathamillatha Samuthiram! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    சத்தமில்லாத சமுத்திரம்!

    Sathamillatha Samuthiram!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சத்தம் - 1

    சத்தம் - 2

    சத்தம் - 3

    சத்தம் - 4

    சத்தம் - 5

    சத்தம் - 6

    சத்தம் - 7

    சத்தம் - 8

    சத்தம் - 9

    சத்தம் - 10

    சத்தம் - 11

    சத்தம் - 12

    சத்தம் - 13

    சத்தம் - 14

    சத்தம் - 15

    என்னுரை

    அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

    இந்த 'சத்தம் இல்லாத சமுத்திரம்' நாவல் உலகில் என்னைப் பற்றி சத்தமாக சொல்ல வைத்த ஒன்று. இது சாவி வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தபோது வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொடுத்ததும் இந்த சத்தம் இல்லாத சமுத்திரம்தான். சாவி வார இதழில் தொடரின் இரண்டு அத்தியாயங்கள் வெளி வந்திருந்த போது ஆசிரியர் சாவி அவர்கள் இரவு நேரத்தில் எனக்கு டெலிபோன் செய்து முழுக்கதையையும் இப்போதே எனக்கு சொல்லிவிடுங்கள். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை என்று சொன்னார். 'சரி' என்று கதையைச் சொல்ல ஆரம்பித்த போது "வேண்டாம் ராஜேஷ்குமார்... நான் வாரா வாரமே படித்துக் கொள்கிறேன். அப்போது தான் ஒரு த்ரில் இருக்கும் என்று சொல்லிவிட்டார். அந்த 'சத்தம் இல்லாத சமுத்திரம்' இப்போது எல்லா அத்தியாயங்களோடும் உங்கள் கைகளில் உள்ளது. படித்து விட்டு உங்கள் கருத்தையும் எனக்கு எழுதுங்கள்.

    மிக்க அன்புடன்

    சத்தம் - 1

    கல்யாணமான புதிதில் புது மனைவியின் இருமல் சத்தம்கூட கணவனுக்கு இனிமையாக இருக்கும்.

    மிஸ் தாமரை...

    அடல்ட்ரேஷனைப் பற்றிக் காரமான வார்த்தைகளால் - வெள்ளைத் தாளைக் கறுப்பாக மாற்றிக் கொண்டிருந்த அந்த அழகான தாமரை நிமிர்ந்தாள். சப்-எடிட்டர் கதிர்வேலன் செக்கச்செவேலென்று வெந்த தாம்பூல வாயோடு நின்றிருந்தார்.

    என்ன ஸார்.

    எடிட்டர் உங்களைக் கூப்பிட்டார்.

    தாமரை பேனாவை மூடி - கையில் எடுத்துக் கொண்டு எடிட்டரின் அறையை நோக்கிப் போனாள். கண்ணாடிக் கதவை நெருங்கிய போது - உள்ளே எடிட்டர் தேவகாந்தன் ரிவால்லிங் நாற்காலியில் அரைவட்டம் அடித்துக்கொண்டே டெலிபோனில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தார்.

    கதவுக்கு வெளியே நிற்கும் தாமரையைப் பார்வையில் வாங்கியதும் - தலைக்கு மேலே இடது கையை உயர்த்தி உள்ளே வரச் சொன்னார்.

    தாமரை கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக - தேவகாந்தன் டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

    இதோ பாருங்க ராஜரிஷி! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ... எனக்குத் தெரியாது. அடுத்த இஷ்யூவில் அன்னெளன்ஸ்மெண்ட் வெச்சுப்பேன், தலைப்புகூட நான் செலக்ட் பண்ணிட்டேன். சரித்திரக் கதை எழுதியே ஆகணும்...

    ...

    தலைப்பா...? கடல் நாகம்

    ‘‘..."

    இந்தத் தலைப்பு வேண்டாமா? அப்ப நீங்களே ஒரு தலைப்புச் சொல்லுங்க...

    ...

    ரெண்டு நாள் கழிச்சு நீங்களே போன் பண்ணி தலைப்பைச் சொல்றீங்களா...? அப்படி வாங்க வழிக்கு...! இன்னிக்கு புதன்கிழமை வெள்ளிக்கிழமை காலை பதினோரு மணிக்கு உங்க போனை எதிர்பார்ப்பேன். போன் வரலை...? கடல் நாகம் அன்னௌன்ஸ்மெண்ட் வெச்சுப்பேன். அப்புறம் அந்த தலைப்புக்கு நீங்க எழுதியே ஆகணும். உங்களுக்கென்ன ஸார்... 'மண்ணாங்கட்டி’ன்னு ஒரு தலைப்பு குடுத்தாக்கூட அதுக்கு தகுந்த மாதிரி அமர்க்களமா எழுதிடுவீங்க...! அப்போ வெள்ளிக்கிழமை உங்க போனை நான் எதிர்பார்க்கிறேன்.

    தேவகாந்தன் ரிஸீவரை வைத்துவிட்டு - தாமரையைப் புன்னகையோடு ஏறிட்டார். ரைட்டர் ராஜரிஷி இந்த தீபாவளிக்கு அவரோட தொடர் கதைதான்... நீ உட்கார்ம்மா...

    தாமரை - அவர்க்கு எதிரே இருந்த வினைல் நாற்காலியில் உட்கார்ந்தாள். அவர் பேப்பர் வெயிட்டை உள்ளங்கையில் அதக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார். வர்ற பதினாலாந் தேதி டெல்லியில் 'ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் மீட்' ஒண்ணு நடக்கப் போறதா நான் ஏற்கெனவே உன்கிட்டே சொல்லியிருக்கேன்...

    ஆமா ஸார்...

    இந்தியாவில் இருக்கிற எல்லா பத்திரிகைகளும்... ஒவ்வொரு ரிப்போர்ட்டரை அந்த பத்திரிகை சார்பா 'பிரஸ் மீட்டுக்கு அனுப்பி வைக்கணும்ங்கிறது ஒரு கட்டாயம்... நம்ம பத்திரிகை சார்பாக யாரை அனுப்பலாம்...?

    இருக்கிற ரிப்போர்ட்டர்களில் சீனியர் கோபால கிருஷ்ணன்தான். அவரையே அனுப்பிடலாம் ஸார்...

    கேட்டுப் பார்த்தேன்மா... அவர்க்கு சைனஸ் ட்ரபுளாம்... டெல்லி குளிர் ஒத்துக்காதாம்...

    அப்படீன்னா சேகர் கிருஷ்ணாவை அனுப்பலாம் ஸார்.

    அனுப்பலாம். ஆனா... அவனுக்கு இங்கிலீஷ் நாலேட்ஜ் புவர்... நீளமான ஒரு சென்டென்ஸ் பேச அவனால ஆகாது... அவன் மெட்ராஸ்ல இருக்கிற நடிகைகள்கிட்டேயும், அரசியல்வாதிகள்கிட்டேயும்... பேட்டி எடுக்கத்தான் லாயக்கு.

    தாமரை மெளனமாய் தேவகாந்தனையே. பார்க்க - அவர் சிரிப்போடு சொன்னார். டெல்லியில் நடக்கப்போகிற 'ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் மீட்’டுக்கு நம்ம பத்திரிகை சார்பா... கலந்துக்கப் போறது நீதாம்மா...?

    ஸ்... ஸார்...

    ஏராளமாய் ஆச்சர்யித்தபடி - நாற்காலியினின்றும் எழ முயன்ற - தாமரையைக் கையமர்த்தினார்.

    உட்கார்ம்மா...! நேத்து சாயந்தரமே நான் முடிவு பண்ணிட்டேன். ஃபிளைட் டிக்கெட்டும் எடுத்தாச்சு... பனிரெண்டாம் தேதி மத்தியானம் ரெண்டரை மணிக்கு ஃபிளைட்

    ஸார்...

    டெல்லியில் பத்து நாள் தங்கப் போறே...?

    ஸார்... வீட்ல பர்மிஷன்...?

    அப்பாகிட்டதானே கேட்கணும்...? கேட்டுட்டேன். உங்கப்பாவும் ஓ.கே சொல்லியாச்சு...

    ஸார்...

    சொல்லும்மா...

    நான் இதுவரைக்கும் டெல்லிக்குப் போனதில்லை...

    இப்ப போ.

    புது இடம்.

    பழகிக்க...! வெரி ஃபர்ஸ்ட் டே தான்... உனக்கு... புது ஊரு. ரெண்டாவது நாள் பழைய ஊர்ன்னு இங்கிலீஷ்ல ஒரு பழமொழி இருக்கு தெரியுமா...?

    ஸார்...?

    என்னம்மா... ஏன் தயங்கறே...?

    "நான் இந்த 'ப்ரஸ் மீட்டு’க்கு போறதினாலே... நம்ம ஆபீஸ்ல இருக்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1