Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek Never Out
Vivek Never Out
Vivek Never Out
Ebook171 pages1 hour

Vivek Never Out

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek Never Out

Read more from Rajeshkumar

Related to Vivek Never Out

Related ebooks

Related categories

Reviews for Vivek Never Out

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek Never Out - Rajeshkumar

    19

    1

    விவேக் Vs வன்முறை

    விவேக் நெவர் அவுட்.

    "அட...!" என்றாள் ரூபலா. கையில் ‘சயின்ஸ் ஈஸ் சயின்ஸ்’ என்ற தலைப்பிட்ட புத்தகம். கண்களில் எக்க்கச்சக்க வியப்ப்பு.

    ஜப்பானின் சமீபத்திய - லாப்டாப் கம்ப்யூட்டரில் உன்னிப்பாய் இருந்த விவேக் திரும்பிப் பார்க்காமலேயே கேட்டான். சுவர்க்கடிகாரத்தில் மணி சாயந்தர 6.05.

    என்ன ரூபி... ‘அட’...!

    இந்த புத்தகத்தில் அணுகுண்டைப்பற்றி ஒரு நியூஸ் போட்டிருக்காங்க... ஆச்சரியமாயிருக்கு...

    என்னையும் கொஞ்சம் ஆச்சரியப்பட வெய்யேன்.

    நியூஸைப் படிக்கட்டுமா...?

    ம்... படி...

    அணுகுண்டு வெடிக்கும்போது காதைப் பிளக்கும் அளவுக்கு இடியோசை போல் சத்தம் கேட்கும் என்று மக்களில் 99% பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தப்பு. அணுகுண்டு வெடிக்கும்பொழுது மிகப்பிரகாசமான வெளிச்சம் மட்டும்தான் தெரியும். சத்தம் கேட்காது. வெளிச்சத்தை ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குள் இருந்து பார்த்தால் கண்பார்வை போய்விடும்.

    நியூஸ் உண்மைதான்... ரூபி! அதனால்தான் அணுகுண்டு சோதனைகளை நடத்தற நாடுகள் பூமிக்கு அடியிலோ அல்லது கடலுக்கு அடியிலோ பாதுகாப்பாய் நடத்தும். பட், போர்ன்னு வந்துட்டா எதிரி நாடுகளின் வெட்டவெளியில்தான் அணுகுண்டுகளைப் போடுவாங்க...

    என்னங்க... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை வந்துட்டா பரஸ்பரம் அணுகுண்டுகளை வீசிக்குவாங்களாமே உண்மையா...?

    போர் வந்தாத்தானே...?

    போர் வராதா...?

    வராது...

    எப்படிச் சொல்றீங்க...? ரெண்டு பேரும் எல்லையோரத்தில் தினசரி ஏதாவது ஒரு காரணத்துக்காக துப்பாக்கி சண்டை போட்டுக்கிட்டுதானே இருக்காங்க...?

    அதெல்லாம் சின்னச் சின்ன சலசலப்புகள். பெரிய யுத்தம் என்னிக்குமே வராது. ரெண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்க்கிற விதமா இந்தியா கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு போயிருக்கே...?

    போய் கிரிக்கெட் விளையாடினா... அவுங்க காஷ்மீர் பிரச்னையை விட்டுடுவாங்களா என்ன...?

    சரியா சொன்னீங்க மேடம்...?

    அறைக்கதவுக்கு வெளியே விஷ்ணுவின் குரல் கேட்டது. தொடர்ந்து தலை மெல்ல எட்டிப்பார்த்தது.

    நான் உள்ளே வரலாமா... மேடம் ?

    அதான் வந்துட்டியே...! வாசல் கதவு திறந்தா இருந்தது...?

    ஆமா... மேடம்...! நான் காம்பௌண்ட் கேட்டுக்குள்ளே, நுழையும்போதே வாசல்கதவு ‘பப்பரப்பா’ன்னு திறந்துகிடந்தது. என்னடா... மேடத்துக்கு பொறுப்புணர்ச்சி கம்மியாயிடுச்சேன்னு கவலைப் பட்டுக்கிட்டு வந்தேன்...

    டேய்...!

    ஸாரி மேடம்....! பாஸ்க்கு பொறுப்புணர்ச்சி கம்மியாயிடுச்சேன்னு கவலைப்பட்டுகிட்டே வந்தேன்.

    டேய்...!

    ஸாரி பாஸ்...! எனக்கு பொறுப்புணர்ச்சியே சுத்தமா கிடையாது. ஏதாவது ஒரு டுடோரியல் காலேஜ்க்குப்போய் கத்துக்கலாம்னு இருக்கேன்.

    ரூபலா விவேக்கிடம் திரும்பினாள். என்னங்க இவன் இப்போ இங்கே எதுக்காக வந்திருக்கான்னு தெரியுமா...?

    எதுக்கு...?

    இப்ப மணி 6.10. நாம வழக்கமா ஸ்நாக்ஸும் டீயும் சாப்பிடற நேரம். எப்படியோ மூக்குல வேர்த்து வந்துட்டான்.

    அபாண்டம்... அபாண்டம்...!

    நிச்சயமா நீ அதுக்காக வரலை....?

    பின்லேடன் மேல சத்தியமா இல்லை மேடம்.

    பின்னே எதுக்காக இங்கே மூக்கை நீட்டியிருக்கே?

    மேடம்... இசையில் நீங்க யாரோட விசிறி?

    கஜல் ஸிங்கர்ஸ் ‘காமினி - யாமினி’ சிஸ்டர்ஸ்க்கு

    அவுங்க ‘ப்ரோகிராம்’ இன்னிக்கு மியூஸிக் அகாடெமி ஹாலில் ஏழுமணிக்கு நடக்க இருக்கு. அது தெரியுமா உங்களுக்கு....?

    ரூபலாவின் விழிகள் வியப்பில் விரிந்தன.

    என்னது...! கஜல் ஸிங்கர்ஸ் ‘காமினி - யாமினி’ சிஸ்டர்ஸோட மியூஸிக் ப்ரோக்ராம் இன்னிக்கு மியூஸிக் அகாடமியில் இருக்கா?

    ஆமா.... மேடம்... பார்த்தீங்களா மூணு வி.ஐ.பீஸ் காம்ப்ளிமெண்ட்ஸ் டிக்கெட்ஸ். ஃப்ரண்ட் ரோ ‘ஏ’ சீரியலில் 14, 15, 16 சீட்ஸ் நமக்கு...

    ரூபலா அந்த வண்ணமயமான காம்ப்ளிமெண்ட்ஸ் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டே சொன்னான்.

    விஷ்ணு...! இன்னிக்குத்தான் நீ ஒரு புத்திசாலித் தனமான காரியத்தைப் பண்ணியிருக்கே...

    அத்தி எப்பவாவது பூக்கறது உண்டு மேடம்.

    உனக்கு மசாலா டீ கொண்டு வரட்டுமா?

    வெறும் டீ மட்டும்தானா மேடம்?

    வேற என்னடா வேணும் உனக்கு... வெஜிடபிள் பப்ஸ் கொண்டு வரட்டுமா....?

    நான் என்ன நினைச்சேனோ அதை நீங்களே சொல்லிட்டீங்க மேடம்... வெஜிடபிள் பப்ஸை சிங்கிள் நம்பரில் கொண்டு வந்துடாதீங்க மேடம். டபுள் நம்பரில் கொண்டு வாங்க. நியூமராலஜிபடி அதுதான் என்னோட வயித்துக்கு ஒத்துக்கும்...

    ரூபலா எழுந்து கிச்சனை நோக்கிப் போக விவேக் பார்த்துக் கொண்டிருந்த லாப்-டாப்பை மூடிவிட்டு விஷ்ணுவை ஏறிட்டான்.

    உனக்கு ஏதுடா... இந்த காம்ப்ளிமெண்ட்ஸ் டிக்கெட்ஸ்?

    என்ன பாஸ் இது...! நான் க்ரைம்பிராஞ்சில் ஒரு இன்ஸ்பெக்டர்! ஏதோ பிக்பாக்கெட் பேர்வழி மாதிரி விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க...? நான் என்ன திருடிட்டா வந்திருப்பேன்...?

    சரி! உனக்கு இந்த டிக்கெட்ஸை யார் கொடுத்தாங்க...?

    சபா செக்ரட்ரி தீர்த்தராமன் பாஸ்! மேடத்துக்கு இந்த கஜல் மியூசிக் பிடிக்குமேன்னுதான் அவர் டிக்கெட்ஸ் கொடுத்தப்ப பேசாமே வாங்கிட்டேன்.

    எனக்குத்தான் காம்ப்ளிமெண்ட்ஸ் டிக்கெட்ஸ் பிடிக்காதுன்னு தெரியுமில்லையா....?

    தெரியும் பாஸ்! அதையும் தீர்த்தராமன்கிட்டே சொன்னேன். அவர் கேட்கலை.

    சரி..! இது எந்த பர்ப்பஸுக்காக நடத்தபடுகிற மியூஸிக் ப்ரோக்ராம்...?

    உடல் ஊனமுற்றோர் நல வாழ்வுக்காக! இந்த மியூஸிக் ப்ரோக்ராமுக்கு சீஃப் கெஸ்ட் யார் தெரியுமா பாஸ்?

    யாரு...?

    பிரபல கிரிக்கெட் வீரர் பிரணவ் கோஷ்...!

    கூட்டம் பயங்கரமா இருக்குமே!

    கேட்கணுமா...! கஜல் ஸிங்கர்ஸ் மியூஸிக் ஃபீல்டில் ஃபேமஸ். பிரணவ் கோஷ் இந்திய கிரிக்கெட் டீமின் காப்டன். வர்ற மாசம் பாகிஸ்தானோடு மோதப் போகிற இந்த பரபரப்பான நேரத்துல பிரணவ் கோஷ் அதிரடி ஃபேமஸ். மியூஸிக் அகாடமிக் ஹால் இன்னிக்கு குலுங்கப் போகுது.

    என்னது... இந்த மியூஸிகல் ப்ரோக்ராமுக்கு சீஃப் கெஸ்ட் பிரணவ் கோஷா...? அப்படீன்னா கண்டிப்பா நாம இந்த ஃபங்க்ஷனுக்குப் போறோம். ரூபலா சொல்லிக் கொண்டே சமையலறையினின்றும் வெளிப்பட்டாள். கையில் ஒரு ட்ரே. அதில் இரண்டு வெஜிடபிள் பப்ஸ். ஒரு கப் டீ.

    விஷ்ணு ட்ரேயை வாங்கிக் கொள்ள விவேக் சொன்னான். ரூபி...! அவ்வளவு கூட்டத்துல நாம போகணுமா?

    டிக்கெட்டுதான் இருக்கே...

    எனக்குத்தான் காம்ப்ளிமெண்ட்ஸ் டிக்கெட்ஸ் பிடிக்காதே...!

    சரி... அது உடல் ஊனமுற்றோருக்காக நடத்தப்படுகிற ப்ரோக்ராம். அந்த ப்ரோக்ராமுக்கு இப்போ போவோம். அந்த சபா செக்ரட்ரியைப் பார்த்து ஒரு ரெண்டாயிரம் ரூபாய் ‘டொனேட்’ பண்ணிடுங்க... ஒரு நல்ல விஷயத்துக்கு பணம் கொடுத்த மாதிரி இருக்கட்டும்

    இது ஓ.கே....! விவேக் எழுந்தான்.

    அடுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1