Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Asha - 60 Naal
Asha - 60 Naal
Asha - 60 Naal
Ebook148 pages56 minutes

Asha - 60 Naal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Asha - 60 Naal

Read more from Rajeshkumar

Related to Asha - 60 Naal

Related ebooks

Related categories

Reviews for Asha - 60 Naal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Asha - 60 Naal - Rajeshkumar

    16

    1

    ஆஷா ஹாஸ்டலுக்கு திரும்பியபோது மாலை ஆறு மணி.

    ஒருமணி நேர டவுன் பஸ் பயணம் அவளை வியர்வையில் குளிப்பாட்டியிருந்தது. சேலைக்குள் உள்ளாடைகள் அவஸ்தையாய் தெரிந்தன. பஸ்ஸில் எவனோ ஒரு எருமைக்கடா கழுத்தில் விட்ட சிகரெட் புகை திடீர் திடீரென்று நாறியது.

    ‘போய் முதலில் குளிக்க வேண்டும்!’

    வராந்தாவுக்குள் நுழைந்து வேகவேகமாய் நடைபோட்டவளை ஹாஸ்டலின் அலுவலக அறையிலிருந்து ஜெயம்மாளின் குரல் நிறுத்தியது.

    ஆஷா...!

    நின்று திரும்பிப் பார்த்தாள்.

    மேடம்...

    ஒரு நிமிஷம் வந்துட்டுப் போ...!

    போனாள்.

    ஐம்பது வயது ஜெயம்மாள்தான் அந்த மலர் ஹாஸ்டலின் நிர்வாகி.

    இன்டர்வியூ என்னாச்சு...?

    ப்ச்...! என்றாள் ஆஷா. எனக்கு ஹோப் இல்லை மேடம்...!

    ஏன்...?

    அது ஒரு ‘ஐ வாஷ்’ இன்டர்வியூ. அந்த போஸ்ட்டுக்கு போனவாரமே ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி அந்தப் பொண்ணு வேலை பார்த்துட்டிருக்காம்...!

    ஜெயம்மாள் பெருமூச்சுவிட்டாள். இந்த வேலை எப்படியும் உனக்கு கிடைக்கும்ன்னு நினைச்சேன்.

    நானும் ரொம்பவும் நம்பிக்கையோடுதான் போனேன் மேடம்... அங்கே போய் பார்த்த பிறகுதான் உண்மையான நிலவரமே தெரியுது... சொல்லிவிட்டு நகர முயன்ற ஆஷாவை ஒரு நிமிஷம்...! என்று சொல்லி நிறுத்தினாள் ஜெயம்மாள்.

    மேடம்...!

    இது என்ன மாசம் தெரியுமா...?

    ஜூன் மாசம் மேடம்...

    இந்த ஜூன் மாசத்தோடு நீ வாடகை கொடுத்து ஆறு மாசமாச்சு... இது தவிர மெஸ் பில் வேற...! இப்படியே நாள் போய்ட்டிருந்தா எப்படி ஆஷா...?

    "ஸாரி மேடம்...! எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு... ஒரு ரெண்டு மாசத்துக்குள்ளே எப்படியும் வேலை கிடைச்சுடும் மேடம்...!

    எந்த நம்பிக்கையில் சொல்றே...?

    மேடம்...!

    உனக்கு ஒரு வாரம் டைம் ஆஷா... அதுக்குள்ளே நீ ஒரு வேலையைத் தேடிக்கணும். இல்லேன்னா ஹாஸ்டலை வெகேட் பண்ணிடு...!

    மேடம்...!

    ஸாரி ஆஷா... இந்த ஹாஸ்டலுக்கு நிறைய மெய்ன்டனன்ஸ் செலவுகள் இருக்கு. அந்த செலவுகளையெல்லாம் மீட் பண்ண எங்களுக்கும் பணம் வேண்டியிருக்கு. வாடகைப் பணம் வாங்கிக்காமே தங்க வைக்க இந்த ஹாஸ்டல் தர்ம சத்திரம் கிடையாது...! நீ ஒரு வாரத்துக்குள்ளே ரூமை வெகேட் பண்ணிடு.

    மேடம்...! இன்னும் ஒரு மாசமாவது இங்கே தங்கிக்க...

    நோ...! உனக்கு சரியா ஒரு வாரம் டைம். அந்த கெடுவுக்குள்ளே நீ வேலையைத் தேடிகிட்டா ஹாஸ்டல்ல கண்ட்டினியூ பண்ணலாம். இல்லேன்னா வெகேட் பண்ண வேண்டியதுதான்...!

    மேடம்... வந்து...!

    ஸாரி ஆஷா...! நான் மேற்கொண்டு கடுமையா உன்னைப் பேசறதுக்கு முந்தி நீ போயிடறது பெட்டர்...!

    ஆஷா சில விநாடிகள் தயங்கியபடி நின்றுவிட்டு பின் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள். இதயம் நெருப்பு பற்றிக் கொண்ட மாதிரி தகித்தது. பாதி வராந்தாவைக் கடந்து இருந்தபோது எதிரே வந்த இரண்டு பெண்கள் ஆஷாவைப் பார்த்ததும் மறைமுகமாய் கிண்டல் அடித்துக் கொண்டே நகர்ந்தார்கள்.

    கோமதி! இங்கிலீஷ் லெட்டர்ஸ்ஸில் 15-வது எழுத்தும் 3-வது எழுத்தும் என்ன...?

    இந்த கஷ்டமான கணக்குக்கெல்லாம் எனக்கு விடை தெரியாதடியம்மா...!

    ஆஷாவுக்கு இந்த கிண்டல் பேச்செல்லாம் கடந்த ஆறுமாத காலத்தில் பழக்கமாகிவிட்டது. பொருட்படுத்தாமல் நடந்தாள்.

    இரண்டு வராந்தாக்களைக் கடந்து தன்னுடைய அறையைத் தொட்ட பொழுது ரூம் மேட் மணிமேகலை பட்டுப்புடவையில் எங்கோ புறப்பட்டுப் போக தயாராக இருந்தாள். கண்ணாடி முன் நின்று பௌடரை முகத்துக்கு தீற்றிக் கொண்டிருந்தவள் ஆஷாவைப் பார்த்ததும் கேட்டாள்.

    இன்டர்வியூ என்னாச்சு ஆஷா...?

    பெரிய சைபர்...

    எனக்கு காலையிலேயே தெரியும்...! அந்த கன்சர்ன் எம்.டி. ஒரு ஜொள்ளன். இன்டர்வ்யூ என்கிற பேர்ல கலர் பார்க்கிறதுதான் அவனோட வேலை...! உன்கிட்ட ரொம்பவும் வழிஞ்சிருப்பானே?

    எம்.டி. நீ சொல்ற டைப்தான்...! அது சரி நீ எங்கே கிளம்பிட்டே மணிமேகலை...!

    பேங்க் கொலீக் ஒருத்திக்கு காலையில் மேரேஜ் நடந்தது. சாயந்தரம் ரிசப்ஷன். அதுதான் கிளம்பிட்டிருக்கேன்...

    இந்த பட்டுப்புடவை உன்னோட கலர்க்கு எடுப்பாயிருக்கு.

    மணிமேகலையின் முகத்தில் மிஸ். வொர்ல்ட் பட்டம் கிடைத்த பெருமிதம் பரவியது.

    இது நல்லியில் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது. சாயம் போகவேயில்லை... ஏதோ இன்னிக்குத்தான் எடுத்துட்டு வந்த மாதிரி என்ன ஒரு மினுமினுப்பு பார்த்தியா...?

    விலை எவ்வளவு...?

    ஏழாயிரம்...

    பின்னே...! விலைக்கு தகுந்தமாதிரிதானே புடவையும் இருக்கும்...

    மணிமேகலை கண்ணாடியின் முன் நின்று முழுமையாய் தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டு

    சுவர் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த டம்பப்பையை எடுத்துக் கொண்டாள்.

    நான் வரட்டுமா ஆஷா...?

    ம்...! லேட்டாகுமா...?

    எப்படியும் ஒன்பது மணியாயிடும். ஆர்கெஸ்ட்ரா வேற இருக்கே...!

    மணி மேகலை...! குரலை இழுத்தாள் ஆஷா. அறை வாசலை நோக்கி நகர முயன்ற மணிமேகலை நின்றாள்.

    என்ன...?

    இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே இந்த ஹாஸ்டலை விட்டு வெகேட் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்...

    ஏன்...?

    ஆறுமாச வாடகை பாக்கி. மெஸ் பில் வேற. ஹாஸ்டல் நிர்வாகம் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பாங்க...? ஒரு வாரத்துக்குள்ளே வேலை கிடைக்கலைன்னா காலி பண்ணச் சொல்லிட்டாங்க...!

    காலி பண்ணிட்டு எங்கே போறதா உத்தேசம்...?

    என் ஃப்ரண்ட் பரிமளா போரூர்ல தனியா வீடு எடுத்து தங்கியிருக்கா. போனமாசமே என்னைப் பார்த்து கூப்பிட்டா. அவ ஒரு கம்பெனியில் ரிசப்ஸனிஷ்டா வேலை பார்த்து ஃபைவ் டிஜிட் ஸாலரியில் வசதியா இருக்கா. அவகிட்ட போய் இருந்துக்கிட்டு ஒரு வேலையைத் தேடிக்க வேண்டியதுதான்.

    மணிமேகலை ஆஷாவை கவலையாய் பார்த்தாள்.

    நான் வேணும்ன்னா ஜெயம்மாகிட்டே பேசிப் பார்க்கட்டுமா...?

    "வேண்டாம்...! ஜெயம்மாவோட நிலைமையில்

    Enjoying the preview?
    Page 1 of 1