Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athiradi Aattam!
Athiradi Aattam!
Athiradi Aattam!
Ebook139 pages53 minutes

Athiradi Aattam!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Athiradi Aattam!

Read more from Rajeshkumar

Related to Athiradi Aattam!

Related ebooks

Related categories

Reviews for Athiradi Aattam!

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athiradi Aattam! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விவேக்கின் மாருதி ஜென் வி.எக்ஸ். வெள்ளை நிறக் கார் ஃபிப்த் கியரில் ஒரு பெரிய பஞ்சுத் துணுக்காய் மகாபலிபுரம் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் கோகுல்நாத் பின்சீட்டில் ரூபலா. வலதுபக்கம் சவுக்கு மரத்தோப்பும் இடது பக்கம் வங்கக்கடலின் நீலநிறப் பரப்பும் விடாப்பிடியாய் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

    நேரம்: மாலை ஆறுமணி. சூரியன் ஒரு சிவப்பு பந்தாக மாறி சவுக்கு மரங்களுக்கு மத்தியில் விட்டு விட்டு தெரிந்து கொண்டிருந்தான்.

    ரூபலா பின் சீட்டில் உட்கார்ந்தபடியே விவேக்கின் சட்டைக்காலர்ப் பகுதியை மெல்ல சுரண்டினாள்.

    என்னங்க...

    ம்...

    சென்னை சிட்டி லிமிட்டைத் தாண்டி மகாபலிபுரம் ரோட்டுக்கே வந்துட்டோம்... இப்பவாவது சொல்லுங்க. நாம எங்கே போய்க்கிட்டு இருக்கோம்...? நீங்க இவ்வளவு வேகமா காரை ஓட்டி நான் பார்த்தது கிடையாது. எங்கே போறோம் சொல்லுங்க...

    ஒரு பத்து நிமிஷம் பொறு ரூபி...

    நோ...! பொறுக்க முடியாது...! அங்கிள்! நீங்களாவது சொல்லுங்க.

    கோகுல்நாத் தோள்களைக் குலுக்கினார்.

    எனக்கே அது தெரியாதம்மா... உன்னை மாதிரிதான் நானும்.ஒருமணி நேரத்துக்கு முன்னாடி விவேக் போன் பண்ணி ரெடியா இருக்கும்படி சொன்னார். ரெடியா இருந்தேன். கார்ல வந்தார். ஏறிகிட்டேன்.

    விஷயம் என்னான்னு நீங்க கேட்கலையா?

    கேட்டேன்...

    என்ன சொன்னார்...?

    ட்ரிபிள் எக்ஸ்ன்னு சொன்னார்.

    அப்படீன்னா...?

    அது ஒரு கோட் வேர்ட்

    அந்த கோட் வேர்ட்டுக்கு என்ன அர்த்தம்?

    சொன்னா உனக்கு ஆச்சர்யமாயிருக்கும்.

    அங்கிள்...! இவர்கூட வாழ்க்கை நடத்தின பெரும்பாலான நாட்கள் ஆச்சர்யப்பட்டு ஆச்சர்யப்பட்டே அலுத்துப் போச்சு. புதுசா ஆச்சர்யப்பட ஒண்ணுமேயில்லை. சொல்லுங்க. அந்த ட்ரிபிள் எக்ஸ் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்...?

    இப்போ எங்கே போறோம்... யாரைப் பார்க்கப் போறோம்ன்னு விவேக்கிற்கே தெரியாது. இப்படி ஒரு நிலைமையைக் குறிப்பிட்டுச் சொல்ற வார்த்தைதான் ட்ரிப்ள் எக்ஸ்.

    இது என்ன புதுக்கதையா இருக்கு?

    விவேக் சிரித்தான். ஒரு சுற்றுலா பஸ்ஸை ஓவர் டேக் செய்துகொண்டே சொன்னான்.

    ரூபி...! இது புதுக்கதை கிடையாது...! கொஞ்சம் புதிரான கதை. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு கோகுல்நாத் அங்கிளும் நானும் எதைப் பண்ணினாலும் பார்த்துக்கிட்டு இரு. கேள்வி கேட்காதே...

    இதுக்கு நான் வீட்லேயே ரெண்டு பாக்கெட் நொறுக்குத் தீனியோடு டிஸ்கவரி சேனல் பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன்.

    ரூபி...! உன்னை எங்களோடு கூட்டிக்கிட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு. பேசாமே ஒரு பத்து நிமிஷத்துக்கு சமுத்திரத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வா...

    சரி...! அந்த டேப் ரிக்கார்டரை 'ஆன்' பண்ணுங்க. கஜல் கேட்கலாம்...,

    விவேக் ஆடியோ ஸ்விட்ச்சைத் தட்டிவிட சுல்தானா பர்வீனின் கஜல் கொஞ்சியது. கடல் இப்போது நீலநிறம் இழந்து அழுக்கு க்ரே நிறமாய் மாறியிருக்க, கடற்கரையோர ஹோட்டல்களில் விளக்குகள் உயிர் பிடிக்க ஆரம்பித்து இருந்தன. தொலைதூரக் கடலில் ஒரு கப்பல் ஏதோ ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலைப் போல் வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது.

    ரூபலா கஜலில் ஆழ்ந்து வெளியே வேடிக்கை பார்த்து பதினைந்து நிமிஷங்களைக் கழித்திருந்தபோது கார் வேகம் குறைந்து - ரோட்டோரத்தில் இருந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தது.

    ரூபலா எட்டிப்பார்த்தாள்.

    "ஹோட்டல் ஹன்டிங் ப்ளஷர் வெல்கம்ஸ் யூ -என்கிற ரோஸ்நிற எழுத்துக்களோடு வெளிச்சமான நியான் போர்டு தெரிந்தது.

    கார் பார்க்கிங்கில் நிறைய கார்கள் தெரிய ரிவர்ஸ் எடுப்பதற்கு தோதான இடம் பார்த்து காரை நிறுத்தினான் விவேக்.

    என்னங்க... ஹோட்டலுக்கு வந்திருக்கோம்

    கேள்வி கேட்காமே வா...

    எனக்கு மூளையே குழம்பிடும் போலிருக்கே...

    உன்கிட்ட இல்லாத ஒண்ணு எப்படி குழம்பும்?

    பாருங்க அங்கிள்...!

    உனக்கு நான் சர்ட்டிபிகேட் தர்றேன்ம்மா... விவேக் இவ்வளவு ஆக்டீவா இருக்கிறதுக்கும் பேரும் புகழும் கிடைக்கிறதுக்கும் காரணம் நீதான்...

    தேங்க்யூ அங்கிள்...!

    கோகுல்நாத்...! ரொம்பவும் பொய் பேசறீங்க

    அந்த திறந்தவெளி ரெஸ்டாரெண்டில் கேண்டில் லைட் வெளிச்சத்தில் மேஜைகளைச் சுற்றி குடும்பம் குடும்பமாய் உட்கார்ந்து ஃபோர்க்காலும் ஸ்பூனாலும் அயிட்டங்களைத் துண்டாடி வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள். காற்றில்மசாலாமணம்.

    ரூபி...

    ம்...

    இங்கே சிக்கன் டிக்காவும் சிக்கன் நூடுல்ஸும் உலகப் பிரசித்தம்... இந்த ரெண்டையும் ஒரு கை பார்க்கிறதுக்காகவே சென்னையிலிருந்து வர்றாங்க...

    ஒரு பேரர் தலையில் டர்பனோடு எதிர்ப்பட்டார்.

    ஹௌ மெணி பர்சன்ஸ் ஸார்...?

    த்ரீ...

    கம் திஸ் சைட் ஸார்...

    டர்பன் ஒரு செயற்கைப் புன்னகையோடு மேஜைகளுக்கு நடுவே நடந்து போய் வெள்ளை விரிப்பு போர்த்திய வட்டமான மேஜை ஒன்றைக் காட்டினார்.

    ப்ளீஸ்...பீ...பீட்டட் ஸார்...

    நாற்காலிகளை நகர்த்திப் போட மூன்று பேரும் உட்கார்ந்தார்கள். தங்க எழுத்துக்களில் பிரிண்ட் செய்யப்பட்ட மெனு கார்டை அவர்களுக்கு முன்பாய் வைத்துவிட்டு ஆர்டர் புக்கோடு பால்பாயிண்ட் பேனாவை பிதுக்கிக் கொண்டார் பேரர்.

    விவேக் ரூபலாவைப் பார்த்தான்.

    "நானே

    Enjoying the preview?
    Page 1 of 1